20

20

கருணாநிதியைக் கண்டித்து போஸ்டர்கள் – பரபரப்பு

20-poster-tamilnadu.jpgவிடு தலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படவில்லை. அதனால்தான் இன்று நாடு நாடாக இலங்கைத் தமிழர்கள் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி, யாருக்குத் தெரியும் இந்த மெளன வலி என்ற தலைப்பில் முரசொலியில் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தமிழின உணர்வாளர்கள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஈழ விடுதலைப் போரை கொச்சைப்படுத்தும் கலைஞரே, உங்கள் அறிக்கை மெளனத்தின் வலியா, துரோகத்தின் மொழியா என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழின உணர்வாளர்கள், மதுரை என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் பெரியார் படமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர்களை போலீஸார் உடனடியாக அகற்றி விட்டனர்.

20-poster-tamilnadu.jpg

இந்தியா, இலங்கை முதல் டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவு

20112009.jpgஇலங் கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெரும் இக்கட்டான நிலையில் தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா கடுமையாகப் போராடி வெற்றி தோல்வியின்றி  முடித்து விட்டது.

இன்று சச்சின் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தினார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் 30,000 ஓட்டங்களைக் கடந்து அவர் புதிய சாதனை படைத்தார். தனது 20வது வருட கிரிக்கெட் வாழ்க்கையை புதிய சாதனையுடன் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இன்று சச்சின் பெற்றது 43வது டெஸ்ட் சதமாகும்.

இப்போட்டியில் முக்கிய நிகழ்வுகளாவன.

– மொத்தம் 6 பேர் சதம் அடித்தனர். டிராவிட் (177), டோணி (110), தில்ஷான் (112), பிரசன்னா ஜெயவர்த்தனே (154), கெளதம் கம்பீர் (114), சச்சின் (100).

– மஹேல ஜெயவர்த்தனா இரட்டை சதம் எடுத்தார்.

– சச்சின் ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் 30 ஆயிரம்  ஓட்டங்களைக் கடந்து புதிய சாதனை படைத்தார்.

– 72 ஆண்டு காலமாக இருந்து வந்த 6வது விக்கெட் இணைப்பட்ட சாதனையை ஜெயவர்த்தனாவும், பிரசன்னா ஜெயவர்த்தனாவும் முறியடித்தனர்.

– மஹேல ஜெயவர்த்தனா டெஸ்ட் போட்டிகளில் 9000 ஓட்டங்களைக் கடந்தார்.

India 426 & 412/4 (129.0 ov)
Sri Lanka 760/7d
India 2nd innings 

G Gambhir  c Prasad b Herath  114 
V Sehwag  c Mathews b Herath  51
R Dravid  lbw b Welegedara  38
A Mishra  c Dilshan b Mathews  24 
SR Tendulkar  not out  100  
 VVS Laxman  not out  51  
 Extras (b 12, lb 9, w 2, nb 11) 34     
      
Total (4 wickets; 129 overs) 412 (3.19 runs per over)
Did not bat Yuvraj Singh, MS Dhoni*†, Harbhajan Singh, Z Khan, I Sharma 
Fall of wickets1-81 (Sehwag, 16.6 ov), 2-169 (Dravid, 40.1 ov), 3-209 (Mishra, 55.6 ov), 4-275 (Gambhir, 79.6 ov) 
        
 Bowling
 UWMBCA Welegedara 21 1 76 1
 KTGD Prasad 13 0 56 0  
 HMRKB Herath 40 6 97 2
M Muralitharan 38 6 124 0  
AD Mathews 15 6 29 1
 TM Dilshan 1 0 2 0 
 NT Paranavitana 1 0 7 0

Match details
Toss India, who chose to bat
Series 3-match series level 0-0
Player of the match DPMD Jayawardene (Sri Lanka)
 Umpires DJ Harper (Australia) and AL Hill (New Zealand)
TV umpire AM Saheba
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire SD Ranade

சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் -‘லங்கா’ பத்திரிகை: பொன்சேகாவுக்கு மேலதிக பாதுகாப்பு – ஹுலுகல்ல

031109sarathfonseka.jpgகூட்டுப் படைகளின் பிரதானியாகக் கடமைபுரிந்து ஓய்வுபெற்ற சரத் பொன்சேகாவை கொலை செய்ய அரசு முயற்சிப்பதாக வெளியிடப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும், மக்கள் விடுதலை முன்னணி ஆதரவான ‘லங்கா’ பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல இக்கருத்தினை வெளியிட்டார்.

“சரத் பொன்சேகாவைக் கொலை செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாகப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு அரசாங்கத்துடன் தொடர்பிருப்பதாக நேரடியாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமையானது பாரதூரமான விடயமாகும். ஆகையால் இதனை தீர விசாரிக்க வேண்டியுள்ளது.  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாகக் குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியரின் விளக்கமும் தேவைப்படுகின்றது. அவ்வாறானதொரு செய்தி தமக்குக் கிடைக்குமிடத்து, அவர் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்திருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

உயர்தரத்திலான இராணுவ அதிகாரி ஒருவர் ஓய்வுபெற்றதும் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட மேலதிகமான பாதுகாப்பை சரத் பொன்சேகாவுக்கு வழங்கியுள்ளதாகவும், அவரது வேண்டுகோளுக்கிணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஹுலுகல்ல மேலும் தெரிவித்தார்.

அனோமாவும் ராஜினாமா

anoma.jpgமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இதனை இராணுவத் தரப்பு உறுதி செய்துள்ளது.

ரணவிரு சேவா என்ற படைவீரர்கள் நலத்திட்ட அதிகார சபையின் தலைவராக அனோமா பொன்சேகா இதுவரை காலமும் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிப் பேர் தற்போது முகாம்களை விட்டுச் சென்றுவிட்டனர் – ஐ.நா. அகதிகள் நிறுவனத் தலைவர்

mahinda-and-holmes.jpgஇலங்கை யின் வடக்கே அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் இருந்தவர்களில் பாதிப் பேர் தற்போது முகாம்களை விட்டுச் சென்றுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேயப் பணிகளுக்கான தலைமை அதிகாரி ஜான் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

இந்த முகாம்களுக்கு விஜயம் செய்து திரும்பியுள்ள ஜான் ஹோம்ஸ் இது விடயம் தொடர்பாக இலங்கை அரசு அளித்து வரும் விபரங்களை உறுதிப்படுத்தினார். ஒரு லட்சத்து முப்பத்தி ஐயாயிரம் பேருக்கும் குறைவானர்கள் தான் அங்கு எஞ்சியிருப்பதாக ஜான் ஹோம்ஸ் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பாதுகாப்புடன் மீளத் திரும்ப வேண்டும் என்பதையும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதையும் இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

மஹேல – பிரசன்ன உலக சாதனை;

mahela_prasanna.jpgஅகமதா பாத் டெஸ்டில் இலங்கை அணியின் 6வது விக்கெட்டான மஹேல – பிரசன்னா ஜயவர்தன ஜோடி புதிய உலக சாதனை படைத்தது. இந்த ஜோடி 351 ஓட்டம் குவித்தது. இதன் மூலம் 72 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது. இதற்கு முன்பு 1937ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பிங்கின்டன் – பிராட்மேன் ஜோடி 346 ஓட்டம் குவித்ததே சாதனையாக இருந்தது.

mahela-jayawardene.jpgமஹேல 275 ஓட்டங்களை குவித்து இந்தியாவுக்கு எதிராக சாதனை புரிந்தார். இதற்கு முன்பு 1999ம் ஆண்டு கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக 242 ஓட்டம் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 2வது அதிகபட்ச எண்ணிக்கை எடுத்தது. 1997ம் ஆண்டு அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 952 ஓட்டம் குவித்து இருந்தது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட துடுப் பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 ஆயிரம் ஓட்டங்களைத் தாண்டிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை தட்டிக் கொண்டார்.

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத் சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்திய அணி சார்பாக காம்பீர் ஆட்ட மிழக்காமல் 74 ஓட்டங்களுடனும் மிஸ்ரா ஆட்ட மிழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடினர்.

இதேவேளை ஷெவாக் 51 ஓட்டங்களுடன் டிராவிட் 38 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து சென்றனர். பந்து வீச்சில் வெலகெதர, ஹேரத் தலா ஒரு விக்கெட்டை யும் வீழ்த்தினர். இன்று 5வது நாள் ஆட்டம் இன்று தொடரும்.

இலங்கைக்கு மருந்து விநியோகிக்கும் நான்கு இந்திய கம்பனிகளுக்கு தடை

இந்தியாவிலுள்ள நான்கு மருந்து உற்பத்தி கம்பனிகளின் உற்பத்திகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

இந்தக் கம்பனிகளின் உற்பத்திகள் யாவும் அரசாங்க ஆஸ்பத்திரிகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதுடன், அக்கம்பனிகளின் உற்பத்திகளைத் தனியார் ஆஸ்பத்திரிகள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.

அரசாங்க ஆஸ்பத்திரிகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்களின் பெறுமதியை அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குள் மீளப் பெற நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நோயாளர்களுக்குப் பயன்படுத்தப்படவிருந்த ஊசி மருந்து குப்பிகளுக்குள்ளும், சேலைன் போத்தலினுள்ளும், கண்ணாடித் துகள்களும், பிளாஸ்ரிக் துண்டுகளும் இருந்தமை அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையிட்டு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சு இந்த ஊசி மருந்து குப்பிகளையும், சேலைன் போத்த லையும் உற்பத்தி செய்து இலங்கைக்கு விநியோகித்த இந்தியாவின் ஆறு கம்பனி களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையின் அடிப்படையில் இந்தியாவின் நான்கு மருந்துப் பொருள் உற்பத்தி கம்பனிகளிலிருந்து அடுத்த இரு வருடங்களுக்கு எந்தவொரு மருந்துப் பொருளையும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற் கேற்ப அக்கம்பனிகள் உற்பத்தி செய்யும் மருந்துப் பொருட்களின் இலங்கை பதிவுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இக்காலப் பகுதிக்குள் இக்கம்பனியினர் தங்களது உற்பத்திகளின் தரத்தை உறுதி ப்படுத்துவது அவசியம் என அமைச்சு குறித்த கம்பனிகளிடம் கேட்டிருக்கின்றது.

பெல்கோ பார்மா, வின்ஸ் பயோ புரடெக்ட் லிமிட்டட், கிளிச் மருந்து பொருள் கம்பனி, யுமெடிகா லெபோரட்டரி தனியார் நிறுவனம் ஆகிய நான்கு கம்பனிகளின் உற்பத்திகளே இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யத்தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதன்படி பெல்கோ பார்மா நிறுவனத்தின் 18 வகையான ஊசி மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரி கூறினார்.

ஊ. சே. நிதி: மாவட்ட காரியாலயங்களிலும் விண்ணப்பிக்கலாம்

ஊழியர் சேம இலாப நிதியத்திற்கென தனியான புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருவதால் ஊழியர் சேமலாப நிதியினைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பவர்கள் தத்தமது மாவட்டக் காரியாலயங்களில் தமது விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு தொழிலமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதிய அலுவலகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலும் பின்னர் அது நாரஹேன்பிட்டியிலும் இயங்கி வந்ததுடன் தற்போது தற்காலிக மாகத் தொழிலமைச்சில் சிறிய தொரு பிரிவில் இயங்கி வருகிறது.புதிய கட்டட நிர்மாணம் முடியும் வரை மாவட்ட அலுவலகங்களில் நமது சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவித்துள்ளார்.

180 நாட்கள் தொடர் பணி புரிந்த அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் – தற்காலிக, சமயாசமய, ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றுவோர் தகுதி

anura.jpg180 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பணிபுரிந்துள்ள தற்காலிக, சமயா சமய மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கு அரசாங்க துறையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்கள் அரச மற்றும் மாகாண பொதுச் சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நியமிக்கப்படுவார்கள்.

அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத் துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 25 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் நன்மை அடையவுள்ளனர். இவர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என நிதி மற்றும் அரச வருவாய்த்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக நிரந்தர நியமனம் வழங்கப்படாது உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி திட்டமிடல் அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று (19) கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, இது குறித்து மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தின் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக பல்வேறு ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், அவற்றில் சில ஆட்சேர்ப்புகள் திறைசேரியின் முழுமையான அனுமதியின்றியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே தற்காலிக சமயாசமய, மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கும் அரச துறையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினூடாக சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படும்.

இதன்படி, 2009 ஒக்டோபர் 31ம் திகதியாகும்போது தொடர்ச்சியாக 180 நாட்கள் பணிபுரிந்த, குறித்த பதவிக்குரிய தகைமைகளைக் கொண்ட 45 வயதுக்கு குறைவான ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்.

குறித்த நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களின் அடிப்படையில் இவர்களுக்கு நியமனம் வழங்கப்படும். எதிர்வரும் காலங்களில் ஏற்படும் வெற்றி டங்களுக்கு ஏற்ப இவர்களுக்கு நியமனம் வழங்கி, மேலதிகமாக உள்ள ஊழியர் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் என்பவற்றில் பணிபுரியும் தற்காலிக, சமயா சமய மற்றும் ஒப்பந்த அடிப் படையிலான ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்குவதற்கான அதிகாரம் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, இனிமேல் திரைசேறியின் உரிய அனுமதியின்றி தற்காலிக, சமயாசமய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் நெருங்குவதால் அரசியல் நோக்கத்திற்காக அரசாங்க ஊழியர் களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவோ அல்லது கொடுப்பனவுகளை அதிகரிக்கவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொரு காலப்பகுதியிலும் அரசாங்க அத்தியாவசிய தேவைகளுக்காக சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்கு பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படுவது வழமையானது. இதில் அரசியல் நோக்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்ற மக்களின் சுகாதாரம்; தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு வடக்கு ஆளுநர் உத்தரவு

chandrasiri_governer.jpgவடபகுதியில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களின் சுகாதாரத்தை பேணும் வகையிலும், மழை காலமாதலால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி வடமாகாண சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வவுனியாவிலுள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை வழங்கினார். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும், மீள்குடியேற்றம், அபிவிருத்தி உட்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், விவசாய நடவடிக்கைககளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது.

மாந்தை மேற்கு பகுதியில் உடனடியாக 7000 வீடுகளை கட்டுவதற்கான துரித வேலைத்திட்டமொன்றையும் ஆரம்பிக்குமாறும் அதிகாரிக்கு பணிப்புரை விடுத்தார். அத்துடன் விவசாயம், சுகாதாரம், கல்வி, கூட்டுறவு, நீர்ப்பாசனம், நீர்வழங்கல், மின்சாரம், போன்ற சகல துறைகளிலும் கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வடமாகாணத்திலுள்ள சகல அரச ஊழியர்களும் தத்தமது பிரதேசத்திற்கு திரும்பும் வகையில் போக்குவரத்து ஏற்பாடுகளும், அனுமதிகளும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

மீளக்குடியமர்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள், தமது பொருட்களை கொண்டு செல்வதற்காக கெண்டர் ரக 2 வாகனங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் தேவைகளுக்கென 700 துவிச்சக்கர வண்டிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

அடம்பன் மற்றும் திருக்கேதிஸ்வரம் ஆஸ்பத்திரிக்கு தாதியர் மற்றும் ஊழியர்கள் வந்து செல்வதற்கென துவிச்சக்கர வண்டிகளும் பெற்றுக் கொடுக்கப் படவுள்ளன. அத்துடன் இப்பகுதியில் டெங்கு, மலேரியா தடுப்புக்கென நடமாடும் நோய்த்தடுப்பு பிரிவொன்றும் ஏற்படுத்தப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது வடமாகாண பிரதம செயலாளர் வீ. சிவசாமி, கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதிஸ்வரன் உட்பட வடமாகாண அமைச்சுக்களின் செயலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.