November

November

சீனத் தூதுவரின் வடக்கு விஜயத்தால் வெகுண்டெழுந்த யாழ் பல்கலைக் கலைப்பிரிவும் சைக்கிள் கஜாவும்:

மாவீரர்நாள் எதிரொலிப்புகள் – மாவீரர் நாளை வைத்து இனவாதத்தீயை வளரத்துவிட வடக்கிலும் தெற்கிலும் பாரி முயற்சி:

 

 

 

 

 

சீனத் தூதுவரின் வடக்கு விஜயத்தால் வெகுண்டெழுந்த யாழ் பல்கலைக் கலைப்பிரிவும் சைக்கிள் கஜாவும்:

 

 

 

 

1. பாதைகள் திறக்கப்படும் காணிகள் விடுவிக்கப்படும் பாதுகாப்புச் செயலாளர் யாழில் அறிவித்தார்: “நாம் ஏற்கனவே சில வீதிகளை விடுவித்துள்ளோம். காணிகளையும் விடுவிப்போம்” என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார். ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட நேற்று யாழ் வந்திருந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அரசபடைகளும் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, நிலைமைகளை விரைவில் வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

மரணித்துப்போன பயங்கரவாதிகளுக்கு அநுர அரசு புத்துயிர் கொடுக்கக்கூடாது. – சரத் வீரசேகர மற்றும் உதய கம்மன்பில

வடக்கு, கிழக்கில் நவம்பர் 26, 27 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை தற்போதைய அரசு உடன் கைது செய்ய வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைக்  குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில், “மரணித்துப்போன பயங்கரவாதிகளுக்கு அநுர அரசு புத்துயிர் கொடுக்கக்கூடாது.

நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியினருக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தமைக்காகப் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினத்தையும், மாவீரர் தினத்தையும் பகிரங்கமாக அனுஷ்டிக்கத் தமிழ் மக்களுக்கு அநுர அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தெற்கில் உள்ள மக்கள் அநுர அரசின் தான்தோன்றித்தனமான இந்தத் தீர்மானத்துக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும்.’’ என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடக்கு – கிழக்கில் பெரும் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்துப் முகப்புத்தகத்தில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்களைக் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். அஞ்சலி நிகழ்வுகளுக்காக வழங்கப்பட்ட அனுமதியினை சாதாரண மக்கள் வரம்புமீறி பயன்படுத்தும்படிக்கு அதனை தங்களின் அரசியலுக்காக மக்களின் உணர்வுகளை தூண்டி வழமை போல் சிறீதரன் எம்.பி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் குளிர்காய்ந்துள்ளனர். கடந்த காலங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளின் போது சமூக வலைத்தளங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் உள்ளிட்டோரின் படங்களை பகிர்ந்தவர்கள் கைதாகியிருந்ததுடன் இன்றுவரை பலர் விடுதலையானார் சூழ்நிலை காணப்படுகிறது. அடிப்படை உரிமை என்ற வகையில் கருதப்படும் நினைவேந்தல் நிகழ்வுகள் கூட அரசியல்வாதிகளின் தவறான நடைமுறைகளால் இனிவரும் காலங்களில் இறுக்கமான சூழலுக்குள் தள்ளப்படலாம் என்ற அச்சத்தை பலரும் வெளியிட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவரது நியமனம் தொடர்பாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்னவினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் மரணம் !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சளி அதிகரிப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் விசாரணைகளை கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையில் இதய வால்வுகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இதயம் செயலிழந்தமையாலேயே இந்த தாய் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோடிகளில் புரளும் யாழ்ப்பாணத்தின் தனியார் கல்வி நிறுவனங்கள் – சீரழியும் இலவசக் கல்வி!

யாழில் ஒரு மாணவன் ஏஎல் வரை கற்கத் தனியார் கல்வி நிலையங்களுக்கு எட்டுக்கோடி செலவிடப்படுகிறது! – பெயரளவில் இலவசக் கல்வி!

கல்வி ஆர்வலர் சமூக செயற்பாட்டாளர் என் சச்சிதானந்தன்

 

சீனத் தூதுவரின் வடக்கு விஜயத்தால் வெகுண்டெழுந்த யாழ் பல்கலைக் கலைப்பிரிவும் சைக்கிள் கஜாவும்:

சீனத் தூதுவரின் வடக்கு விஜயத்தால் வெகுண்டெழுந்த யாழ் பல்கலைக் கலைப்பிரிவும் சைக்கிள் கஜாவும்:

சீனத் தூதுவர் கீ செங்கொங்கின் வடக்கு கிழக்கு விஜயம் தமிழ் தேசியவாதத்தை வெகுண்டெழ வைத்தது. இந்தியாவின் உயிர்காக்கும் இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள தமிழ் தேசியவாதம் மின்னதிர்ச்சி கொடுக்கப்பட்டது போல் வெகுண்டெழுந்தது. முள்ளிவாய்க்காலில் விளக்கேற்றிவிட்டு காத்து மழைக்குள் மாட்டிக்கொள்ளாமல் தலைநகருக்குச் சென்ற கஜேந்திரகுமார், “சீனத் தூதவர் கூறியது இனவாதக் கருத்து” என்று கொதித்துப் போய் வார்த்தைகளை விட்டுள்ளார். தமிழ் மக்கள் ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்ததை வரவேற்று கருத்து வெளியிட்டதையே பொன்னம்பலம் கஜேந்திரன் இனவாதக் கருத்து என்று குற்றம்சாட்டியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “சீனத் தூதுவர் தனது பதவிக்கு பொருத்தமில்லாத விடயங்களில் தலையிடுகின்றார்” என்றும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் குற்றம்சாட்டினார். அமெரிக்கத் தூதுவரையும் இந்தியத் தூதுவரையும் இலங்கை விவகாரங்களில் தலையிடுமாறு கெஞ்சுகின்ற கொழும்பில் வதியும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் பெற்ற வாக்குகளிலும் பார்க்க குறைந்த வாக்குகளையும், சுயேட்சைக் குழுவில் போட்யிட்டு தோல்வியடைந்த கௌசல்யா நரேன் பெற்ற விருப்பு வாக்குகளிலும் குறைவான விருப்பு வாக்கைப் பெற்றே பாராளுமன்றம் சென்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மக்களிடம் தங்களுக்கு 10 ஆசனங்கள் வழங்க வேண்டும் என்று கேட்ட கஜேந்திரகுமாரின் இரண்டு ஆசனங்களில் ஒன்றைப் பிடுங்கி விட்டு ஒரு ஆசனத்தை மட்டுமே யாழ் மக்கள் அவருக்கு விட்டுவைத்துள்ளனர்.

சீனத்தூதுவரின் விடயத்தால் கொதித்த மற்றைய தரப்பு ரகுராம் துறைத்தலைவராக இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு. தங்களுடைய பேராசிரியர் பட்டங்களை பணம் கொடுத்து, இந்தியாவில் உள்ள போலிச்சஞ்கிகைகளில் வெளியிட்டு பட்டம் பெறும் பேராசிரியர்களின், பாலியல் துஸ்பிரயோகங்களில் முன்னிலை வகிக்கும் பேராசிரியர்களின் கையில் உள்ள யாழ் பல்கலையின் கலைத்துறை மாணவர்கள் சீனத்தூவர் மீது குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

மாவீரர் தினத்தை நினைவு கூற அனுமதி வழங்கிய ஜனாதிபதி அனுரகுமாரவுக்கு நன்றி – செல்வம் அடைக்கலநாதன்

மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

 

மக்களின் மனதில் உள்ள சோகங்களை அவர்களை நினைவு கூறுகிற இந்த சந்தர்ப்பத்தையும் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்கிய ஜனாதிபதிக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கடந்த காலங்களில் நாங்கள் பார்க்கின்ற போது மாவீரர் நினைவேந்தலின் போது பொலிஸார் மற்றும் இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணம் காணப்பட்ட நிலையில்,இம்முறை மாவீரர் தின நினைவேந்தலின் போது ஒரு சில இடங்களில் பொலிஸாரினால் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது.

 

எனினும் இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் ஜனாதிபதிக்கும்,தற்போதைய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.என அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்களுக்காக மாவீரர்களின் பெயரால் புறக்கணிக்கப்பட்ட தாய் !

அரசியல் பழிவாங்கல்களுக்காக மாவீரர்களின் பெயரால் புறக்கணிக்க்பட்ட தாய்: “என்னை விளக்கேற்ற வருமாறு அழைத்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்” எனக் குற்றம்சாட்டுகின்றார் மூன்று மாவீரர்களின் தாய் நடராசா சீலாவதி. பூநகரியைச் சேர்ந்த இவர் கப்டன் சிவரூபன், வீரவேங்கை சிவரூபன், வீரவேங்கை இளமயில் ஆகியோரின் தாயார். 26.11.2024 அன்று மாலை 6.55 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தொடர்பு கொண்டு: “நீங்கள் மூன்று மாவீரர்களின் தாயா?” என வினவி மூன்று பிள்ளைகளின் விபரங்களையும் கேட்டு அறிந்து கொண்டார். அதன் பின்னர் “நாளை (27) கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நீங்கள் பொதுச் சுடரேற்ற வேண்டும் வருகை தாருங்கள்” என்று கேட்கத் தாயாரும் மழைகாற்றையும் தூரத்தையும் பொருட்படுத்தாமல் சம்மதித்துள்ளார்.

மாவீரர் நாளன்று மாலை 6.05 மணிக்கு விளக்கேற்றும் நேரம் இவர் சரியாக 5 மணிக்கே கனகபுரம் துயிலுமில்லத்திற்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கு நின்றவர்கள் தங்களை ஏற்பாட்டுக் குழு எனத் தெரிவித்து “நாங்கள் வேறொருவரை ஏற்பாடு செய்துவிட்டோம்” எனத் தெரிவித்து அந்த மாவீரர்களின் தாயைத் திருப்பி அனுப்பிவிட்டனர். இவரை சிறிதரனின் நிகழ்வுக்கு ஏற்பாடுசெய்தவர். காக்கா என அறியப்பட்ட முன்னாள் தளபதி. அவர் குமரன் பாலனோடு பேசி சீலாவதியை விளக்கேற்ற ஏற்பாடு செய்தார். குமரன் பாலன் தமிழரசுக் கட்சியில் நின்ற இன்னுமொரு போளாளி. தற்போது சமத்துவக் கட்சியுடன் நிற்கின்றார். இத்தாயார் குமரன் பாலன் மூலமாக வந்த தொடர்பு என்பது தெரியவந்ததுமே சிறிதரன் மாவீரர் விளக்கையேற்ற மூன்று மாவீரர்களின் தாயை கிள்ளுக் கீரையாக தூக்கி எறிந்துவிட்டு மூன்று மாவீரர்களை இழந்த தந்தையொருவரை கொண்டுவந்து விளக்கேற்றினார். ஏவ்வாறு சிறிதரன் போன்ற அரசியல் வாதிகளால் மாவீரர்களின் குடும்பங்கள் தேவைக் கேற்ப பயன்படுத்துப்படுகின்றது என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணம்.

சீலாவதி ஒரு சிங்களப் பெண். நடராசாவைத் திருமணம் செய்து 5 பிள்ளைகளைப் பெற்று ஐவருமே போராட்டத்தில் இணைந்தனர். “எனது குடும்பத்தில் 5 பிள்ளைகள் இயக்கத்தில் இணைந்தார்கள் இதில் மூன்று பேர் வீரச்சாவு. ஏனைய இருவரில் ஒரு மகளை இயக்கமே, இயக்கத்திலிருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்பியிருந்தனர். அவர் 2009 ஆம ஆண்டு கிபிர் தாக்குதலில் இறந்துவிட்டார். மற்றயவர் திருமணம் செய்து வாழ்ந்து வரகின்றார். நானும் எனது கணவரும் பேரப்பிள்ளை ஒன்றை வளர்த்து வருகின்றோம். கணவர் கள்ளு கடைக்கு முன்னாள் வடை விற்று வருகின்ற பணத்தில்தான் மிகுந்த வறுமைக்குட்பட்டு வாழ்ந்து வருகின்றோம்” எனக் கூறுகின்றார் சீலாவதி.

 

அன்று காலை சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் நடந்த மாவீரர் நிகழ்வில் சிங்களப் பெண்ணாக தமிழனைத் திருமணம் செய்து தனது ஐந்து பிள்ளைகளையும் தமிழீழத்திற்காக போராட அனுப்பியவர், விளக்கேற்றினார்.

‘இது தாண்டா அரசாங்கம்’ அனுர அலையில் அகப்பட்ட தமிழ் தேசியத் தலைமைகளை சந்திரசேகர் அலை அடித்துச் செல்கிறது: 

‘இது தாண்டா அரசாங்கம்’ அனுர அலையில் அகப்பட்ட தமிழ் தேசியத் தலைமைகளை சந்திரசேகர் அலை அடித்துச் செல்கிறது:

தமிழ் தேசியவாதத்திற்கு கிலுகிலுப்பில்லாமல் போன மாவீரர்நாள்:

1. ‘இது தாண்டா அரசாங்கம்’ அனுர அலையில் அகப்பட்ட தமிழ் தேசியத் தலைமைகளை சந்திரசேகர் அலை அடித்துச் செல்கிறது: வல்வெட்டித்துறையில் புயலால் படகுகள் சேதமடைந்தது தொடர்பில் கடற்தொழில் அமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டு காணொலியும் பதிவிடப்பட்டது. அறிவிக்கப்ட்ட 30 நிமிடங்களில் நடந்தவை:

 

 

 

 

வல்வெட்டித்துறை மீனவர்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தங்களில் ஒருவராகக் கண்டு குதூகலித்தனர். இரத்த உறவுகளிலும் பார்க்க வர்க்க உறவு வலியது என்பதை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று வல்வெட்டித்துறையில் வைத்து நிரூபித்துள்ளார். ஆனால் இராமலிங்கம் சந்திரசேகர் ஒரு மலையகத் தமிழன் என்பதை குதர்க்கமாகக் காட்ட அவருக்கு தோட்டக்காட்டு வேலைகள் தான் பொருத்தமானது என அமெரிக்காவிலிருந்து பேராசிரியர் கீதபொன்கலன் ஐபிசிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். தமிழ் தேசியத்தின் அடுத்த தலைவராக வரத்துடிக்கும் ஐபிசி பாஸ்கரனின் ஊடகம் தீவிர தமிழ் தேசிய ஊதுகுழலாக இயங்குகின்றது. இவர்கள் இராமலிங்கம் சந்திரசேகரை கடற்தொழில் அமைச்சராக நியமித்தது பற்றி இப்படிக் கூறுகின்றனர்:

 

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண  கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

பிரபாகரனை தேசியத் தலைவர் என்றவர்களுக்கு அவருடைய சமூகத்தில் கை நனைக்க விருப்பமில்லை. இதுவென்ன தேசியம்?

பிரபாகரனை தேசியத் தலைவர் என்றவர்களுக்கு அவருடைய சமூகத்தில் கை நனைக்க விருப்பமில்லை. இதுவென்ன தேசியம்?

இடதுசாரிச் செயற்பாட்டாளர் நல்லதம்பி ஜெயபாலன்