10

10

விளிம்புநிலையில், பலவீனமான நிலையில் பணியாளர்களாக உள்ள vulnerable பெண்களை மேய்கின்ற காமுகன்களைப் பாதுகாக்கும் உமா சந்திரபிரகாஸ் – பெண்ணியம் பேசி தமிழ்ப் பெண்களை ஏமாற்ற முடியாது! : க சுதந்திரா

உமாவால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட குடும்பி என்றழைக்கப்படும் நல்லூரில் இயங்கும் லக்ஸ் விடுதியின் உரிமையாளர் வெற்றிவேலு ஜெயேந்திரன் ஒரு மோசடிப் பேர்வழியும், பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஒரு துர்நடத்தையாளன். ஐக்கிய மக்கள் சக்தியில் குடும்பிக்கு யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளர் பதவியை வாங்கிக் கொடுத்த உமாசந்திரா பிரகாஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தையும் குடும்பியின் காம விடுதியில் அமைத்துக் கொண்டார்.

தன்னை பெண்ணியவாதியாகவும், சமூக செயற்பாட்டாளராகவும் காட்டிக் கொண்டு அரசியல் நிகழ்வுகளில் ஓடித் திரியும் சுயலாப அரசியல்வாதியான இவர், தன்னுடைய மைத்துன்னான 66 வயதான குடும்பியுடன் 22 வயதுடைய தந்தையை இழந்த இளம்பெண்ணை இணைத்து வைத்துள்ளார். இத்துணைக்கும் அந்த இளம் பெண் குடும்பியின் ஒன்றுவிட்ட சகோதரனின் மகள். தந்தையை விபத்தில் இழந்து, தாயாரின் பாதுகாப்பில் இருந்த பெண். அந்த இளம் பெண்ணின் தகப்பனார் ஒரு முன்னாள் போராளி. அந்த முன்னாள் போராளியின் மரண வீட்டில் பெரியப்பா உறவுமுறை கொண்டாடிக் கொண்டு நுழைந்த குடும்பி தன்னுடைய வழமையான திருவிளையாடலை நடத்தி முடித்துவிட்டான்.

இந்த விவகாரம் சுண்ணாகம் பொலிஸ் நிலையம் வரை சென்றது. சைக்கிள் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் சுகாஷ் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பம் சார்பில் சட்டத்தரணியாக நியமிக்கப்பட்ட போதும், சுகாஷ் தானே பொலிஸ் நிலையம் வராமல் தனது பிரதிநிதியாக வேறு ஒரு சட்டத்தரணியை அனுப்பி விட்டு, வழக்கிலிருந்து மெதுவாக கழன்று கொண்டார். பணத்தை வாங்கிய சுகாஷ்சை இது விடயமாக பல தடவை தொடர்பு கொண்டும் எந்தப் பலனும் இல்லை. கடைசியில் உமாசந்திரா பிரகாஷின் அரசியல் செல்வாக்கு மற்றும் தலையீட்டால் குடும்பி தப்பிவிக்கப்பட்டான்.

போனவருடம் சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து குடும்பி ஜெயா, தான் தான் அந்த இளம் பெண்ணின் சட்ட பூர்வமான பாதுகாவலன் என்று கையொப்பம் இட்டு கூட்டிச் சென்றான். தற்போது தன்னுடைய பெறாமகளை உமா சந்திரபிரகாஷின் ஆசீர்வாதத்தோடு சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் திருமணம் செய்து அரசியல் கூட்டங்களில் சமூகமளிக்கின்றான்.

ஐக்கிய மக்கள் சக்தி யாழ்மாவட்ட அமைப்பாளர் ‘குடும்பி ஜெயா’ யார்?

இந்த காமக் கொடூரன் உமாசந்திரப் பிரகாஷின் மச்சான். பல மோசடி வழக்களில் இருந்து பிரான்ஸ் பாரிஸிலிருந்து இலங்கைக்கு தப்பி வந்தவன். பிரான்ஸ் லாக்கூர்னேயில் இன்றுவரை அடியாட்கள் உதவியுடன் சிவன் கோயில் ஒன்றை நடத்தி வருகிறான். அவனது முதல் மனைவி மொரிசியஸ் நாட்டைச் சேர்ந்த பெண். அப்பெண்மணியுடன் அவனுக்கு ஒரு மகன் உண்டு.

பிரான்சில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு 2005 இல் இலங்கைக்கு தப்பி வந்து தனது பிறந்த திகதி, பிறந்த ஆண்டு மற்றும் பெயர் என்பவற்றை ஆள் மாறாட்டம் செய்து கொண்டு உமாசந்திர பிரகாஷின் உதவியுடன் சுதந்திரமாக நடமாடுகிறான். முதல் மனைவியையும் பிள்ளையையும் மொரிஸியசிற்கு அனுப்பிவிட்டான்.

இலங்கை வந்த குடும்பியின் காம வலையில் முதலில் சிக்கியது இரட்சண்ய சேனை கன்னியாஸ்திரி. அந்தப் பெண்மணியுடன் ரக்கா லேனில் ஒரு வீட்டை வாங்கி, குடும்பம் நடத்திய குடும்பி, ஒரு கட்டத்தில் அப்பெண்மணியின் சகோதரிகளிடமும் தனது பாலியல் சேட்டையை தொடர, அந்த உறவு முடிவுக்கு வந்தது. அந்த கன்னியாஸ்திரி குடும்பம் ரக்கா லேனிலிருந்து வீதிக்கு விரட்டப்பட்டார்கள். அந்தக் கன்னியாஸ்திரி குடும்பம் மலையகத்தில் பண்டாரவளையை பூர்வீகமாக கொண்டவர்கள். இனக் கலவரத்தோடு வடக்கில் குடியேறியவர்கள். பொருளாதார ரீதியான பின்தங்கிய விளிம்பு நிலைக் குடும்பம். அவர்களுக்கு குடும்பியை தட்டி கேட்கும் திராணி இருக்கவில்லை. அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

அடுத்து, 23 வயதே நிரம்பிய கொழும்பில் பிரபல பாடசாலையில் உயர்தரத்தை முடித்து விட்டு மேற்படிப்பை தொடர காத்திருந்த பெண்ணை அபகரித்துக் கொண்டான். அந்த இளம்பெண் பெற்றோருடன் தங்கியிருந்த தொடர்மாடிக் குடியிருப்பில் வீடு வாங்கி இருந்த குடும்பி, அந்த இளம்பெண்ணின் குடும்பத்தாருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, அந்த இளம்பெண்ணுக்கு தான் ‘அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன். நீ என்னை அங்கிள் என்று கூப்பிடலாம்’ என அறிமுகமாகிக் கொண்டான். உண்மையிலேயே அப்பெண்ணின் தந்தைக்கும் குடும்பிக்கும் கூட ஒரே வயது தான். அந்தப் பெண்ணின் குடும்பம் முழுமையாக அவனை நம்பியது.

இந்நிலையில், பிரான்ஸில் சிறையிலிருந்த போது எழுதிய ‘கம்பிகள் ஊடாக’ என்ற நூலுக்கு எழுத்துப் பிழை பார்க்க, திருத்த என்று அடிக்கடி அந்த இளம் பெண்ணை தனது குடியிருப்புக்கு அழைத்தான் குடும்பி. அந்தப் பெண் எதிர்பார்க்காத வேளையில் அவளைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததோடு, அல்லாமல் இறுதியில் அப்பெண் அவனையே திருமணம் முடிக்க வேண்டியேற்றப்பட்டது. திருமணம் முடித்து நாலு வருடங்களில் இரண்டு ஆண் குழந்தைகளுடன் அந்த இளம்பெண்ணும் நடுவீதியில் நிறுத்தப்பட்டார். குடும்பியின் கம்பிகள் ஊடாக என்னும் தன்னுடைய நூலில் தான் எத்தனை பெண்களை இதுவரை காதல் வலையில் விழுத்தி, துஸ்பிரயோகம் செய்துள்ளேன் என சுயதம்பட்டம் அடித்துள்ளான்.

அந்தப் பெண்ணின் பராமரிப்பு வழக்கிற்கு தமிழரசுக் கட்சி வேட்பாளர் எம். ஏ. சுமந்திரனே சட்டத்தரணி ஆவார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வந்த விவாகரத்து வழக்கில் ஈபிடிபி வேட்பாளர் செலெஸ்ரினே சட்டத்தரணி. சமீபத்தில் தான் பத்தாண்டு இழுபறிக்கு பின் விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது. ஆனால் நிதிப் பிரிப்பு இன்னும் முடியவில்லை. அனுமார் வாலக நீள்கிறது.

உமாசந்திரா பிரகாஷின் மைத்துனனின் லீலைகள் அத்துடன் முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் காம விடுதி நடத்தி வந்த குடும்பியின் அடுத்த வலையில் வந்து சிக்கினார் இன்னுமொரு 27 வயதேயான இளம்பெண். இவர் தந்தையை இழந்தவர். தாயாரின் பாதுகாப்பில் இருந்தவர். அப்பெண் யாழ் சிவில் மையத்தின் தலைவர் அருண் சித்தார்த்துக்கு உறவுப் பெண். அந்த இளம் பெண்ணுடன் பத்தாண்டுகள் கொக்குவிலில் வாங்கிய வீட்டில் குடும்பம் நடத்தியதில் ஒரு பெண் குழந்தையும் உண்டு. கைக் குழந்தையோடு இறுதியாக அவனுடன் வாழ்ந்த பெண்ணையும் கைவிட்டு விட்டு தற்போது பெறாமகளுடன் கொழும்பில் தங்கியுள்ளான்.

விவாவகரத்து முடிந்தவுடன் திருமணம் செய்வதாக கூறி வந்த குடும்பி, வழமை போலவே புதிதாக ஒரு இளம்பெண்ணை கவர்ந்து கொண்டு கூட வாழ்ந்த பெண்ணை நிர்க்கதியாக்கிவிட்டான். இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளரான குடும்பிக்கு நல்லூரிலுள்ள கட்சி அலுவலகத்துக்கு பெண்கள் திரண்டு வந்து சாணி அபிஷேகம் செய்ததும் நடந்தேறியது. இச்சம்பவத்தின் போது உமாசந்திரா பிரகாஷ் கட்சி அலுவலகத்தில் இல்லாதமையால் குடும்பியால் பாதிக்கப்பட்ட பெண்களின் கோபத்திலிருந்து தப்பிக் கொண்டார்.

குடும்பி ஜெயா ஒரு மோசமான பாலியல் குற்றவாளி. அதற்கு பல ஆதாரங்கள். உண்டு. அவன் தனது லக்ஸ் விடுதியில் வைத்து பல இளம்பெண்கள் மீது பாலியல் சீண்டல் மற்றும் சுரண்டலில் ஈடுபட்டுள்ளான். ஆள்மாறாட்டம் செய்து தனது உண்மையான அடையாளத்தை மறைத்துக் கொண்டு காணி அபகரிப்பு, அடி தடி மற்றும் வரி ஏய்ப்பு என அனைத்து குற்றங்களிலும் ஈடுபடும் ஒரு குற்றவாளி. முன்னாள் அமைச்சர் மறைந்த மங்கள முனசிங்கவின் மனைவியிடமிருந்து மோசடியாக அபகரித்த நல்லூர் காணியிலேயே லக்‌ஷ் விடுதி இயங்கி வருகிறமை யாழ் மாநகரசபை அறிந்த பரகசியம். உமாசந்திரப் பிரகாஷ்க்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இப்படியாக அபகரித்த காணிக்கு யாழ்ப்பாண சட்டத்தரணிகள் கூட கள்ள உறுதி முடித்துக் கொடுத்துள்ளார்கள்.

இப்படியான ஒரு குற்றவாளியை தனது அரசியல் சுயலாபத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தது மட்டுமல்லாமல் விளக்குமாறுக்கு பட்டுக் குஞ்சலம் போன்று அமைப்பாளர் பதவியை வேறு உமாசந்திரா பிரகாஷ் வாங்கி கொடுத்துள்ளார். தரகு வேலை செய்வதில் உமாவை மிஞ்ச யாராலும் முடியாது. மகிந்த ராஜபக்ச குடும்பத்தோடும் நெருங்கிய நட்புடன் இருப்பவரே உமாசந்திரப் பிரகாஷ். இவர்களுடைய இன்னுமொரு நட்பு அங்கஜனுக்கு சகோதரி முறையான பவதாரணி. இவர்களுடைய இன்னுமொரு சகோதரனே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு மாட்டிய ராஜன். இவர்கள் எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்று. இப்போது பவதாரணி தமிழர் விடுதலைக் கூட்டணியை இயக்குகின்றார். அங்கஜனின் தந்தை ராமநாதன் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவின் ரவுடி அரசியல் பங்காளி. அதன் மூலம் பணம்ஈட்டி முகவர் வேலைகள் செய்து வந்தவர். அவர்களுடைய அடுத்த பரம்பரையும் அதனையே செய்கின்றது. ஆனந்தசங்கரியின் ஆயுள் இன்றைக்கோ நாளைக்கோ என்றிருக்க பவதாரணி மொட்டுக்கட்சி இனி மொட்டை விரிக்காது என்று தெரிந்ததும், ஆனந்தசங்கரியைத் தூக்கிப்பறிக்க வந்து ஒட்டிக்கொண்டுவிட்டார்.

ஒரு மோசமான பாலியல் குற்றவாளிக்கு அரசியலில் முகவரி ஏற்படுத்திக் கொடுத்த உமாசந்திரா பிரகாஷ் போன்ற பெண் அரசியல்வாதிகள் பாராளுமன்றம் போய் பெண்கள் உரிமைக்கு என்ன செய்ய முடியும். உமா அரசியலுக்கு வந்த வரலாறை தோண்டத் தோண்ட பல அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும் காத்திருந்தன.

சக்தி தொலைக்காட்சி, வானொலி, வீரகேசரி என பல ஊடகங்களில் மாறி மாறி வேலை செய்து வந்த உமா கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியங்கள் தொடர்பான விடயங்களில் தனது கட்டுரைகளை எழுதியுள்ளாராம். உமாவின் எழுத்துக்கும் செயலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. குடும்பி ஜெயா போன்ற ஒரு பாலியல் மோசடி குற்றவாளியை அரசியலுக்கு கொண்டு வந்து சமூக அங்கீகாரம் வாங்கி கொடுத்து தமிழர் கலாச்சார முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளார்.

உமா அரசியலில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக கொழும்பில் பாமன்கடை தொகுதியில் போட்டியிட்டு தெரிவானார். அப்போது நீலப் புடவையில் தோன்றும் உமா கட்சி தாவியவுடன் இப்போது பச்சை புடவையில் தோன்றி வருகிறார்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் சாவகச்சோரி தொகுதி மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். உமா சந்திரபிரகாஷ் கட்சி தாவுவதிலும், சேலைநிறத்தை மாற்றி மாற்றி கட்டுவதில் மட்டுமல்ல இளம் பெண்களை காமுகர்களுக்கு இரையாக்குவதிலும் கெட்டிக்காரி. குடும்பியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவிடமும் உமா சந்திரப்பிரகாஷ் இடமும் நேரடியாக முறையிட்டும் அதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. மாறாக உமாசந்திரா பிரகாஷ் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தானே குறுக்கு விசாரணையில் இறங்கியதுடன் குடும்பி ஜெயாவுக்கு ஆதரவாக நியாயம் கேட்டதாகவும் அந்தப் பெண்கள் கூறுகிறார்கள். அப் பெண்களிடம் உமாசந்திரா பிரகாஷ் உங்கள் அனைவருக்கும் குடும்பி நகைகள் மற்றும் வீடு வாங்கிக் கொடுத்திருப்பதாகவும் இதைவிட வேறு என்ன வேண்டும் என்று கேட்டதாகவும் கூறுகிறார்கள்.

இந்த விவகாரத்தில் நக்கினோர் நாவிழந்தார் என்பது போல ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்தின் மனைவிக்கும், கிருணிக்காவுக்கும் மற்றும் உமாசந்திராவுக்கும் குடும்பி ஜெயா இந்தியாவிலிருந்து சேலைகள் கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இன்னுமொரு பெண் அரசியல்வாதியான கிருணிகா இந்த விடயம் தொடர்பில் தனது நெருங்கிய நண்பர்களோடு அங்கலாயத்த போது கூறியதாவது: ”குடும்பி தொடர்பில் பல முறைப்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்தும் பெண்ணுரிமை அமைப்புகளிடமிருந்தும் வந்த போதும் கட்சி மேலிடம் தொடர்ந்து குடும்பியை கட்சியில் வைத்திருப்பது புரியாத புதிராக உள்ளது” என கூறியுள்ளார். கிருணிகாவே தண்டணை பெற்ற குற்றவாளி. பிறகு மக்கள் ஐக்கிய சக்தி யாரைத் தான் வேட்பாளராக நிறுத்தும்.

பெண்கள் பிரிதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் குறைந்த பட்சம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை சாத்தியமாக்க வேண்டுமெனில் நேர்மையான, ஊழலற்ற, தைரியமான மற்றும் அரசியல் அறிவுடைய பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

ஒரு ஆணின் பின்னணியில் பின்கதவால் அரசியலுக்கு வந்த உமாசந்திரா போன்ற யாழ்ப்பாண வெள்ளாளிய மேல்த்தட்டு வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிற்கப்போவதில்லை.

உமாசந்திரபிரகாஷின் பின்னணி குடும்பியுடன் முடியவில்லை. இலங்கை நாணய தாள்களை காலில் போட்டு மிதித்த கோமாளி தியாகி அறக்கட்டளை தியாகேந்திரனும் உமாவின் இன்னுமொரு மைத்துனன் ஆகும். தியாகிக்கும் அரசியல் ஆசை இல்லாமல் இல்லை. யாழ்ப்பாணத்தை கொடுங்கோ நான் சொர்க்கபுரியாக்குகிறேன் என ரணிலுக்கு அழைப்பு விடுத்தவர் தான் இவர். உமாசந்திர பிரகாஷ், தியாகி மற்றும் குடும்பி என மூன்று பேரும் குடும்பமாக யாழ்ப்பாண மக்களை ஆட்டையைப் போடவே கங்கனம் கட்டியுள்ளார்கள். தியாகி அறக்கட்டளையால் நடத்தப்பட்ட சிறுமிகள் இல்லம் மூடப்பட்ட கதையும் இவர்களின் அரசியல் செல்வாக்கால் மூடி மறைக்கப்பட்டது.

தியாகி அடித்த கோமாளிக் கூத்தால் நீதிமன்றில் வழக்குகளை எதிர் கொண்டு வருகிறார். தற்போதைக்கு தியாகி பாம்பு புற்றுக்குள் தலையை இழுத்துக் கொண்டமாதிரி பம்முகிறார். உமாசந்திர பிரகாஷ் தேர்தல் செலவுகள் எல்லாம் குடும்பியின் பாரிஸ் சிவன் கோயில் புரட்டாதி சனிக்கு, ஏமாளி புலம்பெயர் தமிழர்கள் எரித்த எள்எண்ணை வருமானத்திலேயே நடக்கின்றது. சாராசரி ஒவ்வொரு சனிக்கிழமையும் பாரிஸ் சிவன் கோயிலில் 20,000 இலிருந்து 25,000 யூரோக்கள் வருமானம் ஈட்டப்பட்டதாக அறியமுடிகிறது.

குடும்பி ஜெயா பாரிஸ் சிவன் கோயிலில் ஈட்டும் வருமானத்தை இலங்கைக்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனையான உண்டியல் மூலம் எடுத்து உமாசந்திரப் பிரகாஷ்ஷின் அரசியலுக்கு தண்ணியாக இறைக்கிறார். கைமாறாக உமாசந்திரபிரகாஷ் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குடும்பி மீதான வழக்குகளில் சிறைக்கு செல்லாமல் காப்பாற்றி வருகிறார்.

குடும்பியன் ஆள் அடையாள அட்டை மோசடி வழக்கு பல வருடங்களாக மோசடிப் பிரிவில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளின் தலையீட்டால் குடும்பி இவ்விசாரணைகளில் இருந்து தப்பி வருகிறான்.

ஊழலுக்கு எதிரான புதிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தான் இழுபட்டு செல்லும் இந்த மோசடி வழக்குக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

பெண்ணியவாதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுகிறோம் என மார்தட்டும் பெண்கள் அமைப்புகளிடமும் குடும்பியின் பாலியல் சுரண்டல் தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வந்த போது அவர்கள் கூறிய கருத்து வெட்கக்கேடானது: உமாசந்திர பிரகாஷ் ஒரு பெண் அரசியல்வாதி. பெண்கள் அரசியலில் சாதிப்பது கடினம். இந்த விடயத்தை பெரிதாக்க வேண்டாம். அதன் மூலம் உமாசந்திர பிரகாஷின் அரசியல் எதிர்காலம் பாதிக்கும் என கூறி உமாவை காப்பாற்ற முயன்றார்கள்.

இப்படியான போலி பெண்ணியவாதிகள் பெண்களுக்கு மிகப் பெரிய அபாயம். இந்த குடும்பி – உமாசந்திரா விவாகரத்தில், உமாச்சந்திர பிரகாஷ்க்கு வாக்காலத்திற்கு வந்த அங்கயனின் ஒன்றுவிட்ட சகோதரி பவதாரணி, குடும்பியால் கைவிடப்பட்டு கைக்குழந்தையோடு நிர்க்கதியாக நிற்கும் இளம்பெண்ணின் குடும்பத்தினரை அணுகி உமாசந்திரபிரகாஷ் தேர்தலில் வெல்லும் வரை பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பவதாரணியும் ஒரு பெண்ணியவாதி என்ற போர்வையில் நடமாடுகிறார். அவர் முன்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனக்காக தேர்தல் வேலைகளை செய்த கணவனை இழந்த ஒரு பெண்ணை நீச்சல் ஆடையை அணிய வற்புறுத்தியதோடு நிற்காமல் அந்தப் பெண்ணை நீச்சலுடையுடன் தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் பயந்து பதறி கதறி அழுது தனது புகைப்படங்களை அழிக்கும் படி மன்றாட அதை அழித்ததாக பாதிக்கப்பட்ட மற்றும் அந்த சம்பத்தில் நேரடி சாட்சிகளாக இருந்தவர்கள் வாக்குமூலம் தந்துள்ளார்கள்.

பெண்ணியவாதிகள் என்ற போர்வையில் நடமாடும் போலிகள் கையில் அரசியல் அதிகாரமும் சென்றால் ஆண்களின் அந்தப்புரங்களுக்கு இவர்களே பெண்களை அனுப்பி வைப்பார்கள்.

அப்படியென்றால் ஈழத்தமிழர்களில் அர்ப்பணிப்போடு நேர்மையாக மக்கள் பணி செய்யக் கூடிய பெண்களே இல்லையா? ஏன் இல்லை. தங்கள் இன்னுயிர்களை துச்சமென மதித்து தம் இனத்தின் மண்மீட்புக்கென அர்ப்பணிப்போடு ஆயுதம் ஏந்திப் போராடிய பல பெண்கள் இருக்கிறார்கள். விடுதலை யுத்தம் மௌனிக்கப்பட்ட பின் தடுப்புகளில் இருந்து விடுதலையாகி வந்தவர்கள் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்தவர்கள் என முத்திரை குத்தப்பட்டு சமூகத்தின் மூலைகளில் ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு பதில் ஆணாதிக்க வர்க்கத்திற்கு சேவைகள் புரியும் உமாசந்திரா பிரகாஷ் மற்றும் பவதாரணி போன்ற போலிகள் மேலெழுந்து கண்கட்டி வித்தை காட்டுகிறார்கள்.

தமிழ் மக்களுக்காக போராடிய முன்னாள் பெண் போராளிகளின் குரல்கள் நசுக்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் இறுதி யுத்தத்தின் பின் புலம்பெயர்ந்து சென்றுவிட புலம்பெயர முடியாத பெரும்பாலானோர் தமது அன்றாட வாழ்க்கையை நடத்தவே பெரிதும் கஸ்டப்படுகிறார்கள். அவர்களைத் தமிழர் அரசியலில் முன்னிறுத்த தமிழ் அரசியல் கட்சிகளும் தயாராக இல்லை. சமூக வலைத்தள பதிவுகளில் தமிழ் ஆண் அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடித்து இலகுவாக வேட்பாளராக நிற்கும் சமூக வலைத்தள பெண் போராளிகளுக்கு கிடைத்த வாய்ப்பு நிஜ பெண் போராளிகளுக்கு கிடைக்கவில்லை.

பெரும்பாலும் வன்னிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்களே இறுதியுத்த காலத்தில் அதிகளவில் போராட்டத்தில் இருந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானோரின் குடும்பபின்னணி உறுதியான பொருளாதாரத்தை கொண்டிருக்கவில்லை.

உமாசந்திரா, பவதாரணி போல தேர்தலில் செலவு செய்ய வசதி கிடையாது. உமாவுக்கு ஒரு குடும்பி மச்சான். பவதாரணிக்கு ஒரு அங்கயன் தம்பி, இராமநாதன் மாமா என யாரும் இல்லை.

அனைத்து தகுதிகளும் உள்ள முன்னாள் பெண் போராளிகள் அரசியலில் ஈடுபட முன்வந்தால் துர்நடத்தையுள்ள ஆண்களுக்கு முதுகு சொறியும் உமாசந்திர பிரகாஷ் போன்ற மேட்டுக்குடி பெண்களை அதிகாரத்திற்கு வராமல் தடுத்து ஆரோக்கியமான மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கலாம். அங்கே பெண்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் சகல உரிமைகளோடும் தலைநிமிர்ந்து வாழலாம்.

இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசு ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என மக்களுக்கு உறுதி அளித்துள்ளனர். அதற்கான துரித நடவடிக்கைகளை அந்த அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களும் குறிப்பாக தமிழ் மக்களும் தாங்கள் யாரைத் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புகின்றோம் என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். நல்லூர் கந்தன் அருளோட்சும் நல்லூரில் காமவிடுதியில் கட்சித் தலைமையகத்தைக் கொண்ட சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தனர். நல்லூரை யாழ்ப்பாணத்தை அந்தப்புரமாக்கும் இவர்களுக்கு வாக்களிப்பது எமக்கு நாமே மண் அள்ளிப் போடுவதாகும். சுத்தி சுத்தி சுப்பற்ற கொல்லேக்க என்பது போல மக்களைச் சுரண்டிப் பிழைக்கும் கும்பலின் பரம்பரையாட்சி தமிழ் மக்கள் மத்தியில் தொடர அனுமதிக்கக் கூடாது.

தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குகளால் இவர்களுக்கு பதிலளிப்பார்கள் என நம்புவோம்.

“வடக்கு மக்களின் காணிகள் அனைத்தையும் விரைவில் அவர்களிடம் வழங்குவோம்“ – வவுனியாவில் ஜனாதிபதி அனுரகுமார

அரசாங்கத்திடம் இருக்கும் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு வழங்குவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

அத்துடன் சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கமைய அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்வோம் எனவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.

வவுனியாவில்  இன்று (10) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த தேர்தலில் பிரச்சாரத்திற்காக இந்த மாவட்டத்துக்கு வந்தார். வன்னி மக்கள் ஓரளவு வாக்கை அவருக்கு வழங்கியிருந்தனர்.

இந்த தேர்தலில் அவர் வருவாரா? அதேபோல எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வந்தார். இந்த தேர்தலுக்கு அவர் இங்கு வருவாரா? வரவில்லை. ஏன்? அவர்கள் அவர்களது வெற்றிக்காக மாத்திரமே தேர்தலில் நின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் வன்னியில் எமக்கு வீழ்ந்த 21 ஆயிரம் வாக்குகளும் எமது வெற்றிக்கு பாரிய ஒரு பங்களிப்பையும் சக்தியையும் வழங்கியிருந்தது.

வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்திடம் இருக்கிறது. அந்தக்காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு நாங்கள் வழங்குவோம். எங்களுக்குத் தெரியும் இங்கு யுத்தம் ஒன்று நடந்தது பல்வேறு அநீதிகளுக்கு முகம்கொடுத்தோம்.

இன்று அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைய விரைவில் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதியளிக்கிறேன். இது சமத்துவமான ஒற்றுமையான ஆட்சி. இதனை தென்பகுதி எதிர்க்காது.

ஆனால் அன்று அப்படி அல்ல வடக்கில் இவ்வாறு ஒன்று நடந்தால் தென்பகுதி அதற்கு எதிராக இருந்தது. எங்களை பிரித்து அரசியல் செய்தார்கள். நாங்கள் இன்று அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.

வடக்கின் மீன்வளத்தை பெரிய அளவில் வேறு நாடுகள் வந்து சூறையாடுகின்றன. எமது மீன்வளம் அழியும்வாறாக அதனை செய்கின்றனர். நாங்கள் அரசு என்ற வகையில் எமது கடற்றொழிலாளர்களின் உரிமைக்காக வடக்கில் வாழும் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

சூரியஒளி இன்று மதிப்பு வாய்ந்துள்ளது. அது எமது சக்தி. அதனை துண்டு துண்டாக விற்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இந்த ஒப்பந்தங்களை எல்லாம் நாங்கள் மீளாய்வு செய்யவேண்டும். இந்த வளங்களை நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக பயன்படுத்த வேண்டும்.

கேரள கஞ்சா, உட்பட போதைப்பொருள் பிரச்சினை இங்கு இருக்கிறது. அவற்றை தடுக்க வேண்டும். எனவே புதிய ஒரு நிலைக்கு இந்த நாட்டை அழைத்துச் செல்லவேண்டும்.

அத்துடன் எமது முதலாவது வரவுசெலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு நிச்சயம் இருக்கும்“ என தெரிவித்தார்.

வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்காதீர்கள் – மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை !

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகியிருப்பதையோ அல்லது செல்லாத வாக்களிப்பதையோ தவிர்த்து, உரிய முறையில் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, வாக்காளர்களை வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,

வாக்கு எமது உரிமை, எமது சக்தி, எமது குரல், அது எமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றது.

இந்த உரிமையை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

லெபனான்  மீது இஸ்ரேல்  வான்வழித் தாக்குதல் – 40 பேர் பலி !

லெபனான்  மீது இஸ்ரேல்  நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் நேற்றையதினம்  கடுமையாக குண்டுவீசி தாக்கியது. கடந்த வெள்ளிக் கிழமையில் இருந்து கடலோர நகரமான டயரில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த நகரில் இருக்கும் பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டு இருந்தது. எனினும், வெள்ளிக்கிழமை தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் சார்பில் எந்த உத்தரவும் வெளியிடப்படவில்லை.

உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகள் இடம்பெற்றுள்ளதாக லெபனான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தாக்குதலுக்குப் பிறகு மீட்கப்பட்ட மற்ற உடல் பாகங்களை அடையாளம் காண டி.என்.ஏ. சோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) மற்ற நகரங்களில் நடந்த தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஹிஸ்புல்லா மற்றும் அதன் கூட்டு அமைப்புகளைச் சேர்ந்த ஏழு மருத்துவர்கள் உள்ளடங்குகிறார்கள். இதே போல் வரலாற்று நகரமான பால்பெக்கைச் சுற்றியுள்ள கிழக்கு சமவெளிகளில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.

லெபனானில் கடந்த ஆண்டு இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 3136 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13, 979 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 619 பேர் பெண்கள் மற்றும் 194 குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் செயற்படுவதை இடைநிறுத்தியது கத்தார் !

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் பணயக்கைதிகள் விடுதலை ,யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள் போன்றவற்றில் அனுசரணையாளராக செயற்படுவதை கத்தார் இடைநிறுத்தியுள்ளது.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான  விருப்பத்தை வெளிப்படுத்தினால் மாத்திரமே மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதாக கத்தார் தெரிவித்துள்ளது.

கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் செயற்படுவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அமெரிக்க அதிகாரிகள்  தெரிவித்துள்ள நிலையிலேயே கத்தாரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹமாசினை தனது அரசியல் அலுவலகத்தினை மூடுமாறு கத்தார் கேட்டுக்கொள்ளவேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கத்தார் அதற்கு இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் கத்தாரின் வெளிவிவகார அமைச்சு இதனை நிராகரித்துள்ளது.ஹமாஸ் அமைப்பும் இதனை நிராகரித்துள்ளது.

ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான இணக்கப்பாட்டினை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள கத்தார் கடந்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளின் போது  இரு தரப்பும் இணக்கத்திற்கு வராவிட்டால் அனுசரணை முயற்சிகளை இடைநிறுத்தப்போவதாக தெரிவித்திருந்தது என கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கொழும்பில் 300 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி – 59 பேர் கைது !

கொழும்பில் பலர் இணைந்து மேற்கொண்ட நிதி மோசடியை கணிணி குற்ற விசாரணை பிரிவினர் கண்டுபிடித்துள்ளதுடன் 59 பேரை கைதுசெய்துள்ளனர்.

நிதிமோசடி திட்டத்திற்கு தலைமைதாங்கிய இருவர் உட்பட 59 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வெளிநாட்டவர்களை இலக்குவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டதுடன் சுமார் 300 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த வேவ்டெக் என்ற நிறுவனம் வெளிநாட்டவர்களிடம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளது என சிஐடியினரிடம் தென்கொரிய தூதரகம் வியாழக்கிழமை முறைப்பாடு செய்திருந்தது.

வர்த்தகமுயற்சி என்ற பெயரில் தென்கொரியாவை சேர்ந்த ஒருவரிடம் 300 மில்லியன் மோசடி செய்துள்ளனர் என தென்கொரிய தூதரகம் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தது.

வர்த்தக முயற்சியொன்றில் முதலீடு செய்வதாக தெரிவித்து தென்கொரிய பிரஜையொருவரிடமிருந்து ஒருமில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் பெற்றுக்கொண்டவர்கள் பின்னர் அதனை திருப்பிக்கொடுக்கவில்லை என தென்கொரிய தூதரகம் தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட சிஐடியின் சிசிஐடி பிரிவினர் கொழும்பு ஹவெலொக் வீதியில் ஆடம்பர தொடர்மாடியொன்றிலிருந்து மேற்கொள்ளப்படும் மோசடி குறித்து கண்டுபிடித்தனர்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 57 பேர் இலங்கையர்கள் உட்பட 59 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 27 பேர் பெண்கள் அவர்களில் இருவர் கர்ப்பிணிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஐந்துமொழிகளில் பேசும் திறமை மிக்கவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் இதன் பின்னர் பெண் சட்டத்தரணியொருவரும் இந்த நடவடிக்கைகளிற்கு முகாமையாளராக செயற்பட்டு வந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யபட்ட ஊழியர்கள் தங்களிற்கு ஐடி தொழிலில் வேலைவாய்ப்பு என தெரிவித்தே வேலைக்கு சேர்த்தார்கள் ஆனால் தங்களை வேலைக்கு சேர்ப்பதற்கு முன்னர் ஜப்பானிய கொரிய ஜேர்மனிய மொழிகளில் தங்களிற்கு திறமையுள்ளதா என்றே பரிசோதித்தார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் தங்கள் ஆடம்பர அலுவலகத்திற்கு 9 மில்லியன் செலுத்திவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

தங்களுடைய பிரச்சினைகளையே அறியாதவர்கள் எப்படி மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கப் போகின்றார்கள்? – மாவடி ஏஆர் சிறிதரன் !

தங்களுடைய பிரச்சினைகளையே அறியாதவர்கள் எப்படி மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கப் போகின்றார்கள்? கலைஞர் ஆய்வாளர் மாவடி ஏஆர் சிறிதரனுடன் உரையாடல்

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்க கூடிய ஒரே அணி தமிழரசுக்கட்சி தான் – எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் ஒருமாதகாலத்துக்குள்ளேயே சறுக்குவதற்கு ஆரம்பித்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப்பொருளில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மக்கள் மன்றம் நேற்றைய தினம் (9) யாழ். கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சி பழம்பெரும் கட்சியாகும். தற்போது மாற்றம் தேவை என்று கூறுபவர்கள் பழம்பெரும் கட்சியை விட்டுவிட்டு புதிய கட்சிக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள். அது உண்மையான மாற்றம் அல்ல.

அடையாளம் மாற்றாத அரசியல் மாற்றமே உண்மையான மாற்றமாகும். நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தேசம் என்கிற அடையாளத்தினை வழங்கியது எமது கட்சியாகும். அதன் காரணத்தினால் தான் எமது கட்சியின் ஸ்தாபகரை தந்தை செல்வா என்று அழைக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றோம். அவ்வாறான நிலையில் ஏனைய கட்சிகள் தற்போது தான் சமஷ்டி பற்றி பேசுகின்றார்கள். அவ்வாறான நிலையில் நீண்டகாலமாக சமஷ்டியை வலியுறுத்தும் எமக்கு வாக்களிப்பதில் என்ன தவறுள்ளது.

அதேநேரம், தமிழரசுக் கட்சி பொருத்தமான மாற்றங்களை செய்துகொண்டுதான் வருகிறது. உதாரணமாக, யாழ்.தேர்தல் மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் ஒன்பது வேட்பாளர்களில் இருவரைத் தவிர ஏனைய எழுவரும் பாராளுமன்ற தேர்தல் களத்துக்கு புதியவர்கள்.

அதேபோன்று அவர்களில் இரண்டு பெண் வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக, பெண் வேட்பாளர்கள் ஆணை மையப்படுத்திய வகையில் தான் தெரிவு செய்வார்கள். ஆனால் இம்முறை உண்மையான செயற்பாட்டாளர்களை நாம் அடையாளம் கண்டு நிறுத்தியிருக்கின்றோம்.

அதேவேளை, நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறியுள்ள ஜனாதிபதி பதவியேற்று ஒருமாதத்துக்குள்ளேயே தனது செயற்பாடுகளில் இருந்து சறுக்க ஆரம்பித்துவிட்டார். மதுபான சாலைகளுக்கான சிபார்சுக்கடிதங்களை வழங்கிய அரசியல்வாதிகள், அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்களின் பட்டியலை அவர் தற்போது வரையில் வெளிப்படுத்தவில்லை.

ஜனாதிபதி அநுர, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஏற்கனவே எமது பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட இடைக்கால அறிக்கையினை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கவுள்ளதாக எழுத்துமூலமாகவே தனது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளார்.

இடைக்கால அறிக்கையை நாம் தயாரித்து அதனை வெளியிடுவதற்கு தயாரானபோது, அப்போது அநுரகுமார எம்மிடத்தில் வருகை தந்து கூறினார்… இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராகவும், மாகாண சபை முறைமைக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தியவர்கள் நாங்கள். ஆகவே இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கம் சம்பந்தமாக நாம் கட்சிக்குள் ஆராய வேண்டும் என்று எனக்கும் சம்பந்தனுக்கும் கூறினார்.

அதனையடுத்து, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் அவரை நாங்கள் அழைத்துச் சென்று அவரது கூற்றில் நியாயம் உள்ளது. கால அவகாசத்தினை வழங்குவோம் என்று கூறினோம். ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அநுர குறிப்பிட்டார்.

அரசாங்கம் சறுக்க ஆரம்பித்துள்ளது. அதனை கையாள வேண்டியுள்ளது. இடைக்கால அறிக்கையை முன்னோக்கி நகர்த்த வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கும் செயற்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக பலமான அணியொன்றை வடக்கு, கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் அனுப்ப வேண்டும். அந்த அணியானது தமிழரசுக் கட்சியாகவே இருக்க வேண்டும் என்றார்.

 

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் – ஜனாதிபதி  அனுரகுமாரதிசநாயக்க

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் என ஜனாதிபதி  அனுரகுமாரதிசநாயக்க உறுதியளித்துள்ளார்.

லசந்தவிக்கிரமதுங்க வாசிம்தாஸ்ரீஜூதீன் பிரகீத் எக்னலிகொட விவகாரங்கள் குறித்து விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை அரசாங்கம் நீதியின் முன் நிறுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் தேர்தல் பேரணியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை முடிவிற்கு கொண்டுவருவோம் என தெரிவித்துள்ளார்.

அனைவரினதும் உயிர்களும் பெறுமதியானவை என அவர் தெரிவித்துள்ளார்.

சுண்ணாகம் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் – விரைந்து செயற்பட்ட சிறிபவானந்தராஜா !

நேற்றையதினம் சுன்னாகத்தில் வாகனமொன்றின் மீது இருவர் மதுபோதையில் வந்து மோதிய சம்பவத்தை தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் இரண்டு மாத குழந்தையின் தாய் தந்தை உறவினர்கள் சிலரின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் தூக்கியெறிந்த பொலிஸார் தாயையும் தந்தையும் கடுமையாக தாக்கினார்கள் என தாயார் தெரிவித்திருந்த நிலையில் இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததது.

இந்த நிலையில் சுன்னாகம் சம்பவத்துடன் தொடர்புடைய இரு பொலிஸார் பணி இடை நீக்கம் – தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் Dr. சிறிபவானந்தராஜா பொலிஸ் மாஅதிபருடன் தொடர்பு கொண்டு உடன் நடவடிக்கை.

நேற்றைய தினம் சுன்னாகம் பகுதியில் அமைதியின்மைக்கு காரணமான இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மக்கள் மீது மது போதையில் வந்தோர் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டை தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் Dr. சிறிபவானந்தராஜா அவர்கள் உடனடியாக பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கட்சி மேலிடத்துக்கும் கொண்டு சென்றார். உடனடியாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இருந்தார்.

அவரின் வேண்டுகோளுக்கிணங்க, இரு பொலீஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பணத்தில் இருந்து மேலதிக விசாரணைகாக, உயர் மட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, மேலதிக பொலிஸார் சுன்னாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த, தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் Dr. சிறிபவானந்தராஜா மக்களுக்கான நீதியை பெற்றுத் தருவதில் தேசிய மக்கள் சக்தி ஒரு போதும் பின்னிற்காது என்றும், மேலதிக விசாரணைகளின் பின் தொடர்புபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அதுவரை மக்களை அமைதி காக்கவும் வேண்டினார். இந்த தேர்தல் காலத்தில் இப்படியான சம்பவங்களை வைத்து சில அரசியல் கட்சிகள் குளிர்காய முற்படுவது வெட்கக்கேடானது என்றும் தெரிவித்தார்.