05

05

என்பிபி, தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம்!

என்பிபி, தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம்!

என்பிபிக்கு வாக்களித்து தமிழர்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும்!

தோழர் சுகு சிறிதரன் முன்னாள் ஈபிஆர்அல்எப் போராளி)என்பிபி,

கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு பிரதமரிடம் மக்கள் கோரிக்கை!

முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி நேற்றையதினம்(04) மாலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் ஹரினி அமரசூரியவை கேப்பாப்புலவு மக்கள் சந்தித்து மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளினை மீட்டுத் தருமாறு கோரிய தமது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றினை வடமாகாண ஆளுநர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலரிடம் கடந்த மாதம் ஒப்படைத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் , “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம் புதுக்குடியிருப்பு தனியார் பேருந்து நிலைய வளாகத்தினுள் இடம்பெற்ற நிலையில் அக்கூட்டத்தில் சிறப்பு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரியகலந்து கொண்ட நிலையில் கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மக்கள் கையளித்திருந்தனர்.

குறைக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொகை – உயிருக்கு ஆபத்து என சந்திரிக்கா பண்டாரநாயக்க பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம்!

அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

 

தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்களை குறைப்பது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேமசிறி, ஒக்டோபர் 31ஆம் திகதி வழங்கிய குறித்த கடிதத்தில், தனது மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கையை 50ல் இருந்து 30 ஆக குறைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முறையே 243 மற்றும் 200 மற்றும் 109 நபர்களை கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த அளவுகோலின்படி தனக்கு மட்டும் 30 மெய்ப்பாதுகாவலர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது தனக்கு புதிராகவே இருப்பதாகவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தாம் தான் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் எனவும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

நீங்கள் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் பொதுச் சொத்தை உங்கள் விருப்பப்படி பயன்படுத்த முடியாது. – அனுர குமார திசாநாயக்க

நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

நம் நாட்டுக்கு அரசியலில் ஒரு தரம் வேண்டும். அரசியல்வாதி நினைத்ததைச் செய்யலாமா? இல்லை. அதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது.

 

அரசியல்வாதி ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் செயல்பட வேண்டும். அரசியல்வாதி சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். அரசியல்வாதி நாகரீகமான சட்டத்தில் இருக்க வேண்டும்.

 

பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்க வரியை முறையாக செலுத்தாமல் சுங்கச்சாவடியில் இருந்து ஓட்டிச் செல்லும் வாகனங்கள். சில வாகனங்களைப் பார்த்தால், அவை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அதுதான் நம் நாட்டின் அரசியல் கலாச்சாரம். எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்துக்கு உயிர் கொடுக்கிறோம். நாங்கள் அதை செய்கிறோம்.

நீங்கள் நமது நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் பொதுச் சொத்தை உங்கள் விருப்பப்படி பயன்படுத்த முடியாது. அப்படிப்பட்ட அரசியல் எங்களுக்கு தேவையில்லை. என்றார்.

உகாண்டாவில் ராஜபக்ச க்களின் பணம் தொடர்பில் நாம் கூறவில்லை- டில்வின் சில்வா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பி.யின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இதன்படி, அந்த தரப்பினர் சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவளித்தனர்.

எனவே, தேர்தல் தொடர்பில் அவர்களுடன் எந்தவித கலந்துரையாடலிலும் தற்போது ஈடுபடவில்லை என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்ட பணம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டை முன்வைத்ததாக எழுந்த கூற்றுகளை மறுத்த டில்வின் சில்வா, அத்தகைய கூற்றுக்கள் ஐக்கிய மக்கள் சக்தியால் தான் முன்வைக்கப்பட்டதாக கூறினார்.

கொள்கலன்களில் அமெரிக்க டொலர்கள் இங்கு அச்சிடப்பட்டு உகாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவே தாம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

அனுர தரப்பு பாதுகாப்பை குறைத்தாலும், மக்கள் என்னை பாதுகாத்துக் கொள்வார்கள் – மகிந்த ராஜபக்ச

அரசாங்கம் தமக்கான பாதுகாப்பை குறைத்தாலும், மக்கள் தன்னை பாதுகாத்துக் கொள்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

அண்மையில் மகிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

 

தனது பாதுகாப்பில் தான் அதிக கவனம் செலுத்துவதில்லை. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தான் அதிருப்தி அடையவில்லை என்றும் மகிந்த தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தினால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதாக மகிந்த தெரிவித்துள்ளார்.

 

அரசாங்கத்திற்கு வேறு வேலையில்லாமல் பல குற்றச்சாட்டு சுமத்தி விசாரணைகளை நடத்தி வருகின்றது. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தாலும் அதனை விட்டுவிட்டு இவற்றினை செய்கின்றது.

 

பழைய கோப்புகளை தூக்கிக் கொண்டு சுற்றுவதை விட்டுவிட்டு மக்களின் வாழ்க்கை சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமாக சொகுசு காரை பயன்படுத்திய விவகாரம் – முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் கைது !

சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இன்று (04) கங்கொடவில நீதிமன்றில் ஆஜராகியிருந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய அவர், கைது செய்யப்பட்டார்.