பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் – தெரிவாகாத மூன்று லட்சம் மாணவர்களுக்குமான வழிகாட்டி – #Pathfinde
சமூக செயற்பாட்டாளர் மருத்துவ கலாநிதி அருள் கோகிலன் உடன் ஒரு கலந்துரையாடல்
பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் – தெரிவாகாத மூன்று லட்சம் மாணவர்களுக்குமான வழிகாட்டி – #Pathfinde
சமூக செயற்பாட்டாளர் மருத்துவ கலாநிதி அருள் கோகிலன் உடன் ஒரு கலந்துரையாடல்
புலிகளின் கட்டுப்பாடு மிக கடுமையாக இருந்தது. தங்கள் திசைமாறும் எனக் கருதப்படும் வேறு தமிழர்ச் சிறுகட்சிகள், அமைப்புகள், தனிநபர்கள் கூட ஒழிக்கப்பட்டனர்.
இதனால் பல தமிழர் இயக்கங்கள் அழிக்கப்பட்டன (ஊர்மாறன், TELO, EPRLF, PLOTE ஆகியவை). இதுவே சகோதரப்படுகொலைக்கு வழிவகுத்தது — ஒரு மக்கள் போராட்டம் பலவீனமாக்கப்பட்டு, ஒரே ஆதிக்கம் கொண்ட இயக்கமாக மாற்றப்பட்டது.
கஜாவின் முன்னணியைக் கைவிடும் தமிழ் மக்கள் ! தமிழ் கட்சிகளும் கைவிடும் அபாயம் !
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் அரசியல் கண்ணாடியாக உண்மையைப் பிரதிபலித்து நிற்கின்றது. சமூக வலைத்தளங்களும் பாரம்பரிய ஊடகங்களும் கட்டமைத்த பிம்பங்களை இத்தேர்தல் முடிவுகள் தகர்த்து எறிந்துள்ளது என்றால் அது மிகையல்ல. ‘அபிவிருத்தி என்பது சலுகை எங்களுக்கு சலுகை வேண்டாம் உரிமை தான் வேண்டும் என்று கோரி’ தமிழ் மக்களின் முன்னேற்றத்ததைத் தடுத்து வந்தன இந்தத் தமிழ் தேசியக் கட்சிகள். ஆனால் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளின் அடிப்படை என்ற அபிவிருத்தி என்பதை மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டு அதற்கேற்ப வாக்களித்துள்ளனர். தமிழ் மக்களின் மனோநிலையை G L Tharshan னின் இக்காணொலிப் பதிவு மிகத் தெளிவாக முன்வைக்கின்றது.
இனவாதக் கருத்துக்களை கக்கி உரிமை தவிர வேறேதும் சலுகை வேண்டாம் என்ற கோடீஸ்வரர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தையிட்டி காணிப் பிரச்சினைக்காக ஒவ்வொரு பௌர்ணமியும் போராடி வருகின்றது. உரிமைப் பிரச்சினை, காணிப் பிரச்சினையை முன்வைத்து தன் அரசியல் வாக்கு வங்கியைக் கட்டமைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி இத்தேர்தலில் மிகுந்த பின்னடைவைச் சந்தித்தது. இக்கட்சியானது உதிரிகளான பலரையும் ஒன்றிணைத்து தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் ஒரு சவாலாக இருப்பதாக கற்பிதம் செய்திருந்தது.
தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடிப் பிரதிநிதிகள் போலவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலை தாங்களே முன்னெடுப்பதாகவும் இவர்கள் தங்களைத் தாங்களே நம்ப ஆரம்பித்துவிட்டனர். அதற்கும் ஒருபடி மேலே போய் தேசியத் தலைவருக்குப் பின் அடுத்த தேசியத் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பிரச்சாரப் பிரங்கியான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்தார்.
ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கீழ் நிலைக்குத் தள்ளியுள்ளது. 2018 பெப்ரவரியில் நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் 0.69 வீத வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வாக்கு வங்கி 0.68 வீத வாக்குகளாகக் குறைந்தது. 85,000 வாக்குளை 2018 இல் பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் 71,000 வாக்குகளையே பெற்று வடக்கு கிழக்கில் 4வாது இடத்துக்கு தள்ளப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்னமும் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடுவது போல் பெரும்பாலும் குடா நாட்டிற்குள்ளேயே செயல்படும் ஒரு கட்சியாகவே இன்றும் உள்ளது.
சுமந்திரனுக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதலை நடாத்தி வந்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தங்களுடைய பரம்பரை எதிரியாக உள்ள தமிழரசுக் கட்சியை அதன் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரனை நிராகரிக்க வேண்டும் என்பதையே அவர் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டிருந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அவர்களுடைய பிரதான ஆதரவுத்தளமான புலம்பெயர் தமிழர்களும் மேற்கொண்டு வந்தனர். ஆனால் வாக்குரிமையைக் கொண்ட களத்தில் வாழும் மக்கள் தங்கள் வாக்குகளை தமிழரசுக் கட்சிக்கும் சமந்திரனுக்கும் ஆதரவாகத் திருப்பி உள்ளனர். 2018 தேர்தலில் 2.73 விகித வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி கடந்த வாரம் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் 2.96 விகித வாக்குகளைப் பெற்றுள்ளது.
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சியாக கூட்டணியாகப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கடந்த வாரம் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் தனித்தப் போட்டியிட்ட போதும் கணிசமான வாக்குகளை அவர் பெற்றிருந்தனர். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 0.85 வீத வாக்குகளைப் பெற்று 106 ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது. அதே போல் தேசிய மக்கள் சக்தியும் கடந்த காலங்களில் எவ்வித ஆசனங்களும் இல்லாமல் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று வடக்கு கிழக்கின் இரண்டாவது பெரும் கட்சியாக தன்னை நிலைப்படுத்தி உள்ளது. எம் ஏ சுமந்திரனின் தேர்தல் வியூகம் அவர் இழந்த பலத்தை மீளப் பெறுவதற்கு வாய்ப்பைக் கொடுத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியுடைய அரசியல் செயற்பாடுகள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் தமிழ், சிங்களக் கட்சிகள் எதிர்கால அரசிலை தலைமுழுக வேண்டும் என்கிறார் ஒரு பெரியவர். அவரின் கணிப்பின் படி தேசிய மக்கள் சக்தி மிக மெதுவாக ஆனால் ஸ்தீரமாக முன்னேறுகின்றது.
அவர்களைக் கையாளும் ஆற்றல் தமிழ் தேசியக் கட்சிகளிடம் போதாமையாக இருப்பதை ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சிக்கும் – தமிழ் காங்கிரஸ்க்கும் இடையே உள்ள பரம்பரைப் போட்டியும் தனிநபர் தாக்குதலும், இவ்விரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சூழ்நிலையைக் கடினமாக்கி உள்ளது. அதனால் எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. இதனை ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர்கள் யாழ் மாநகர சபையில் ஈபிடிபி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் கூட இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக குருசாமி சுரேன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
நாளாந்த பயணம் – இறுதிப் பயணமாகிறது ! 21 பேர் மரணம் ! இலங்கையின் வீதிகள் மரணவாயில்களா ?
மே 11 கொத்மலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயப்பட்டுள்ளனர். இவ்வாவான விபத்துக்கள் நாளாந்த நிகழ்வுகளாகிவிட்டாலும் ஒரே விபத்தில் இவ்வளவு பெரும்தொகையானவர்கள் கொல்லப்பட்டது அண்மையில் நிகழ்ந்த கொடூரமான விபத்தாக மாறியுள்ளது. வழமையாக ஒரு விபத்தில் ஓரிருவரே கொல்லப்பட்டு வந்தனர். இலங்கையில் விபத்துக்கள் தற்செயலானவையல்ல. அவை தினமும் எதிர்பார்க்கப்படுபவையாக உள்ளது. இதற்கு கடந்த தசாப்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் மோசடிகள் முக்கிய காரணங்களாக இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் மலையகத்தில் நிகழ்ந்த மற்றுமொரு விபத்தில் வீதிப் பாவனைக்குரிய நிலையில் இல்லாத பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு பள்ளத்தில் வீழ்ந்தில் சிலர் கொல்லப்பட்டனர். இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்பற்ற – வீதிகள், மோசடியான வீதிப் பாவனைக்குரிய சான்றிதழ்கள், சரியான முறையில் பயிற்றுவிக்கப்படாத அல்லது லஞ்சம் கொடுத்து பெறப்படும் வாகன அனுமதிப் பத்திரங்கள், வீதிப் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காத சாரதிகள் இவ்வாறு பல்வேறு காரணங்கள் இந்த விபத்துக்களுக்கு காரணமாகின்றது. அந்த வகையில் பொருத்தமற்ற வாகனச் சோடிணைகள் அகற்றப்பட்டுள்ளது. ஏனைய விடயங்கள் தொடர்பில் கூடுதல் இறுக்கங்கள் கொண்டுவரப்பட வேண்டும். வீதிப் போக்குவரத்து மிகக் கடுமையாக்கப்பட வேண்டும். நாளாந்த பயணங்கள் இறுதிப்பயணங்களாகக் கூடாது. 2024 இல் மட்டும் 2541 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளனர். 2019இல் 3,097 ஆக இருந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் இது இன்னமும் குறைக்கப்பட வேண்டும்.
மேலும் மரணங்களைத் தவிர உடல் ஊனங்கள் மற்றும் குடும்பத்தின் பொருளாதார இழப்பு, மனநிலை பாதிப்பு, எதிர்காலம் என மதிப்பிட முடியாத பல துன்பியலுக்கு இந்த விபத்தக்கள் காரணமாகின்றன. இலங்கை போன்ற 22 மில்லியன் சனத்தொகை கொண்ட ஒரு நாட்டுக் இந்த விபத்துக்களும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதாரப் பாதிப்புகளும் மிக அதிகம். 70 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1,650 பேர் வரையானவர்களே வீதி விபத்துக்களில் இறந்துள்ளனர்.
இலங்கையில் இன்று இடம்பெற்ற விபத்தில் இந்த 21 பேரைத் தவிரவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலும் ஐந்து பேர் வரை கொல்லப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விபத்து மரணங்கள் தொடர்பில் இருக்கின்ற சட்டங்களை இறுக்கமாக அமுல்படுத்துவதுடன் தேவைப்பட்டால் புதிய சட்டவிதிமுறைகளைக் கொண்டுவரவேண்டும். மேலும் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்தி சாரதிகளுக்கான தொடர்ச்சியான பயிற்சிமுறைகளை அமுஸ்படுத்த வேண்டும். வாகன வரியும் அதிகரிக்கப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பானதாக்க வேண்டும்.
ஒற்றுமை மட்டும் போதாது – அபிவிருத்தியும் முக்கியம் ! சுமந்திரனை வைத்து அல்ல கட்சியின் கொள்கை அடிப்படையிலேயே உள்ளூராட்சி கூட்டுக்கள் அமையும் !
டிரிஎன்ஏ பேச்சாளர் குருசாமி சுரேன் எதிர்கால உள்ளூராட்சி சபைகள் கூட்டணிகள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட உரையாடல்..!
சீரோவில் இருந்து ஹீரோவான என்பிபி வருகையால் தமிழ் தேசியக் கட்சிகள் அபிவிருத்தி பற்றியும் சிந்திக்கின்றன !
அரசியல் சமூக செயற்பாட்டாளர் சோலையூரான் என அறியப்பட்ட முருகவேள் யோகராஜாவுடன் ஒரு உரையாடல்..
முதிர்ச்சியடையாத அணுவாயுதங்களை கொண்ட இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம்: இடையில் சிக்கித் தவிப்பது அப்பாவி மக்கள் !
இந்தியா பாகிஸ்தான் இரு நாட்டு காஷ்மீர் எல்லைப்பகுதிகளிலும் எப்போதுமே ஒருவிதமான போர்ப் பதற்றம் நீண்ட காலமாக நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் தீவிரவாதிகளுக்கும் இந்தியா இந்திய ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை அவ்வப்போது நடந்துள்ளது.
இப்படியானவொரு பதற்றச் சூழலில் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியாவால் தடை செய்யப்பட்ட இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய பாகிஸ்தான்
எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலும் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு இந்தியா மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரை அண்டிய பகுதிகளில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக கூறிக் கொண்டு இந்திய இராணுவம் மே 7 ஆம் திகதி காலை 2 மணி அளவில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 இடங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் அரசாங்கத்தை நேரடியாக குற்றம் சாட்டும் ஆளும் பிஜேபி அரசாங்கம் பாகிஸ்தான் மீதான அதனது இராணுவநடவடிக்கைக்கு “ஆபரேஷன் சிந்தூர்” எனப் பெயரிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 52 பேர் காயமடைந்து உள்ளனர் என ஷெபாஸ் ஷரீஃப் தலைமை தாங்கும் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது . பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இந்தியாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
அதேநேரம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இந்தியா தவறிழைத்து விட்டதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் பிரதமர். இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் என நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார். பாகிஸ்தானும் தனது இராணுவம் ஐந்து இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், சில இந்திய வீரர்களை சிறைபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்தியா தன்னால் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா பாகிஸ்தானில் தளம் அமைத்து இயங்குவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் ஆதரவளித்து வருவதாக தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகிறது.
தென்னாசியப் பகுதியில் சூழ்ந்துள்ள போர் பதற்றம் உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாட்டு இராணுவம் மற்றும் விமானப் படைகள் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் மாறி மாறி போர் ஒத்திகைகளிலும் ஈடுபடுகின்றன. இரு நாட்டு அரசாங்கங்களும் தத்தமது நாட்டு மக்களை போர்ப் பதட்டத்தில் தள்ளியுள்ளன.
வழமையாக இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினாலே இந்தியா பாகிஸ்தான் போர் நடப்பது போன்றே ஆரவாரங்கள் நடக்கும். அப்படியிருக்க உண்மையான போரின் ஒத்திகைகள் தொடங்கிவிட்ட நிலையில் பரஸ்பரம் இரு நாட்டு ஊடகங்களும் சமுக ஊடகங்களும் வெறுப்பையும் பிரிவினைவாதத்தையும் பகையையும் பரப்பி வருகின்றன. சமூக ஊடகங்களில் நிறைய போலியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மேலும் இந்தியா – பாகிஸ்தான் மோதலால் ஆசிய விமான போக்குவரத்து வழித்தடத்திலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்படத் தக்கது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள மோதல்
காரணமாக, பல ஆசிய விமான நிறுவனங்கள், ஐரோப்பா நோக்கி இயக்கப்படும் தமது விமானங்களின் போக்குவரத்து வழித்தடங்களை மாற்றியமைத்துள்ள நிலையில், சிலவற்றை இரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளன.
முதிர்ச்சியடையாத அணுஆயுத சக்தி கொண்ட இந்த இரு நாடுகளுக்கிடையே கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு இப்போது பெரும் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்களிலும் இந்திய மற்றும் பாகிஸ்தானிடையேயான போர் ஒத்திகைச் செய்திகள் இடம்பிடித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் பிராந்தியத் தலைவர் இருநாடுகளையும் உச்சபட்ச பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதேமாதிரி 2023 இல் ஒக்டோபர் 7 ஆம் திகதி பாலஸ்தீன விடுதலைப் போராளிகளான ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல்ப் பகுதியில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பாலஸ்தீன பகுதியான ஹாஸா பள்ளத்தாக்கில் பெரும் போரில் ஈடுபட்டு வருகிறது. ஹாஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஹாஸாவில் மிகப் பெரிய மனிதவலம் உலகத்தின் முன் நடந்தேறி வருகிறது.
மேலும் இந்தியா பாக்கிஸ்தான் இடையிலான போர் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுத்தக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பல பொருட்களை இறக்குமதி செய்யும் இலங்கைக்கு அதில் தடங்கள் ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.ஏற்கனவே இலங்கை அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் என பொருளாதார நெருக்கடியில் சிக்கி மெதுவாக மீண்டு வர முயற்சிக்கின்றது. இலங்கை மட்டுமல்ல பாகிஸ்தானும் கூட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளவொரு நாடாகும். அந்தவகையில் இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளையும் போர்ப் பதற்றத்தை தணித்து அமைதிப்பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைகளை தீர்க்கும்படி மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இரு நாட்டு மக்களின் விருப்பமும் அதுவே என சமூகச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் நீதியாகவும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் இடம்பெற்றன!
அகில இலங்கை ரீதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடந்து முடிவடைந்துள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குக்குப் பதிவுகள் மாலை 4 மணிவரை நடைபெற்றன.
அந்தவகையில் வாக்களிப்பு மிகவும் சுமூகமாக நடைபெற்றது. ஏற்கெனவே நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தேர்தல்கள் போன்றே வன்முறைகள் பெரிதும் அற்ற தேர்தல்களாக உள்ளூராட்சித் தேர்தல்களும் அமைந்திருந்ததாக கண்காணிப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் மீண்டும் 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெற்றிருக்க வேண்டும்.
ஆனால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி இடர்கால ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தாது பிற்போட்டு வந்தார். மேலும் உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படும் என அறிவித்து வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இருந்த போதும் ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த துணியவில்லை.
எவ்வாறாயினும் ரணில் விக்ரமசிங்க மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியாகவே வந்திருந்தார். அதனால் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்கு முன்னர் ரணில் தனது அதிகாரத்தை நிலை நாட்ட ஜனாதிபதித்தேர்தலை நடத்தினார்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என இரண்டிலும் வெற்றி பெற்று அநுரகுமார திஸ்ஸநாயக்க தலையில் என்பிபி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது . “ நாடு அநுரவோடு” என்ற சுலோகத்துடன் இலங்கையில் முதன்முறையாக ஒரு ஆயுதப்போராட்டத்தை நடத்திய இயக்கம் என்பிபியாக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
என்பிபிக்கு இலங்கையில் வாழ்கிற அனைத்து இன மக்களின் வாக்குகளும் கிடைத்தன. என்பிபி ஒரு தேசிய கட்சியாக தனித்து தேர்தல்களில் போட்டியிட்டு பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது.
மீண்டும் உள்ளூராட்ச்சித் தேர்தலில் என்பிபி தனித்து அனைத்து சபைகளிலும் “ வெற்றி நமதே ஊர் எமதே” என்ற சுலோகத்துடன் போட்டியிட்டுள்ளது. வடக்கு கிழக்கை பொறுத்தவரையும் கூட தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் செயற்ப்படும் கட்சிகளும் பல்வேறு வகையில் தமது தேர்தல் கூட்டணிகளை உருவாக்கிக் கொண்டு இது தமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் தேர்தல்கள் என்று கூறி இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கு உள்ளூர் சபைகளின் அதிகாரம் தமிழர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு சிங்களகட்சியின் கீழ் உள்ளூராட்சி மன்றங்கள் தமிழ்ப் பிரதேசங்களில் செல்வது தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு விழும் சாவு மணி எனக் கூறி உள்ளூராட்சித் தேர்தலில் குதித்திருந்தன.
இதன்படி இன்று 13 759 வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல்கள் நடைபெற்றன.
வாக்காளர்களில் 16 ,854 ,298 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். 341 உள்ளூர் ஆட்சி மன்றங்கள் உள்ள நிலையில் இம்முறை 339 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே தேர்தல்கள் நடைபெற்றன. இதில் கல்முனை மாநகர சபை மற்றும் அல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 28 மாநகர சபைகள் 36 நகர சபைகள் 275 பிரதேச சபைகள் என 339 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன.
அந்தவகையில் 339 உள்ளுராட்சி சபைகளுக்கு 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 75589 பேரில் 8257 பேரை தெரிவு செய்வதற்காக மக்கள் தமது ஜனநாயக கடமையை சரிவரச் செய்திருந்தனர்.
அதிகளவான வாக்காளர்களைக் கொண்ட பிரதேசமாக கொழும்பு மாநகர சபை காணப்படுவதாகவும் இதில் 394 533 வாக்காளர்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட பிரதேசமாக ஹப்புத்தளை நகர சபை காணப்படுவதாகவும் இதில் 3051 வாக்காளர்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
நடந்து முடிந்துள்ள தேர்தல் நிலவரப்படி நண்பகல் இரண்டு மணி வரை முக்கியமான மாவட்டங்களைப் பொறுத்தவரை 50 வீதத்திற்கு குறைவான வாக்களிப்பு வீதமே பதிவாகியுள்ளது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் 38 சத வீதமும் , யாழ்ப்பாணத்தில் 34 சதவீதமும், கிளிநொச்சியில் 39 சதவீதமும், மட்டக்களப்பில் 38 சதவீதமும், களுத்துறை 45 சதவீதமும், அநுராதபுரம் 40 சதவீதமும், பதுளையில் 48 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அந்தவகையில் நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குகள்
5783 நிலையங்களில் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இத்தேர்தலில் தேர்தல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கில் உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் 4450 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்ச்சி மன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் படிப்படியாக வெளிவரவுள்ளன. இத்தேர்தல் முடிவுகள் கடந்த காலக் காட்டிலும் மிகுந்த எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளன. பொருளாதார நெருக்கடியின் போது ஆட்சியை மக்கள் ஊழலுக்கு எதிரான என்பிபியிடம் ஒப்படைத்திருந்தனர். ஆறுமாதகாலமாக ஆட்சி புரியும் என்பிபி மீதான நம்பிக்கை மக்களிடம் எந்தளவு உள்ளது என்பதை இத்தேர்தல் முடிவுகள் கட்டியம் கூறவுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் தேசியத் தலைமைகளின் சட்டத்தரணிகளின் ஈகோ – அகம்பாவம் தான் தமிழரின் நிலைக்குக் காரணம் ! தமிழரசுக் கட்சி ஆதரவாளர் இளைப்பாறிய பேராசிரியர் எஸ் சிவகுமார் மனம் திறந்து உரையாடுகின்றார்.
Watch Full Video : https://youtu.be/pOekfSbaCQo?si=MzNS1mhpjIOkFJrJ
யாருடைய வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் ! எக்கட்சி தோற்கின் எக்கட்சி வெல்லும் !
தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் எழுபதுக்களில் தமிழ் மக்களிடம் பெருத்த அடியைவாங்கி வாக்கு வங்கியை இழந்தது. இழந்த வாக்கு மீளக் கைப்பற்ற அன்று இனவாதத்தைக் கக்கினர். தாங்கள் மீண்டும் மண்கவ்விவிடக் கூடாது என்பதற்காக தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினனர். அதன் உத்தியாக தமிழீழப் பிரகடனம் செய்தனர். அன்று இடதுசாரிகளுடன் ஆட்சியை அமைத்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு பல்கலைக்கழகத்தை அமைத்ததை மிகக் கடுமையாக எதிர்த்தனர்.
இன்றுவரை யாழ்ப்பாணத்தின் பெயர் சொல்லும் துரையப்பா ஸ்ரேடியம் – மைதானம் நியூ மார்க்கற் என்பன துரையாப்பா காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவை. அன்று மக்களுடன் மிக நெருக்கமாக இருந்த அல்பேட் துரையப்பாவுக்கு இயற்கை மரணம் இல்லை என தமிழ் தேசியம் முழங்கியது. இன்றைய பா உ அர்ச்சுனாவின், பா உ சிறிதரனின் ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் மோசடிக்கும்பல் போல் அன்று துரையப்பா பெண்களை சிங்களவர்களுக்குக் கூட்டிக்கொடுக்கிறார் என்ற பொய்ப் பிரச்சாரங்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டன.உணர்ச்சிவசப்பட்ட விவேகமற்ற புலிகளின் தலைவர் பிரபாகரன் துரையப்பாவை தமிழ் தேசியத்தின் பெயரால் படுகொலை செய்தார். அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் தனக்கு உத்தரவு போட்டவர்களையும் பிரபாகரன் படுகொலை செய்ய நேரிட்டது.
வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளாவிட்டால் வரலாறு எம்மை மோசமாகத் தண்டிக்கும் என்பதை அண்மைய வரலாறும் மீள வலியுறுத்துகின்றது. தலைவர்கள் மட்டுமே மாறிய தமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸம் 2024 செப்ரம்பர் ஜனாதிபதித் தேர்தலிலும் நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியடைந்தன. பெரினவாதத்தை ஜேவிபி அடக்க தமிழனவாதம் ஊற்றெடுத்தது.
தமிழ் காங்கிரஸின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை தேசியத் தலைவர் என்றார் அதன் முக்கிய பிரமுகர் ‘வண்டு முருகன்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் கனகரத்தினம் சுகாஸ்.
நீங்கள் கரன்ட் தூண் என்றால் நாங்கள் கரண்ட் தொட்டா அடிச்சிடுவம் என்றவர் பா உ சிறிதரன். தற்போது ரோகன விஜய வீரவின் மானத்தைக் காப்பாற்றியவன் தமிழன் ஆனால் ஜேவிபி எங்கள் மானத்தை உருவுகின்றது என்று குமுறுகின்றார் பா உ சிறிதரன்.
மோசடி இணையத் தளங்களின் தமிழ் தலிபான்களின் தலைவராகியுள்ள பா உ அர்ச்சுனா மாவீரர்களிலும் பிரபாரனிலும் ஒட்டுண்ணியாகப் பற்றிக்கொண்டு தன்னுடைய பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்.
இதையெல்லாம் தாண்டி வட்டுக்கொட்டையில் என்பிபி – ஜேவிபி இலும் தாங்கள் ஒருவோட்டுக் குறைவாக எடுத்தாலும் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கனகரத்தினம் சுகாஸ் சவால் விட்டுள்ளார். ஜேவிபி யை சவப்பெட்டிக்குள் அனுப்புவோம் எனவும் அவர் கூறுகின்றார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஊடகவியலாளர் சந்திப்பில் தங்களை யாழ் மக்கள் நிராகரித்தால் தையிட்டி விகாரை விடயத்திலிருந்து தாங்கள் ஒதுங்குவோம் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து தேர்தலில் தோல்வியைச் சந்தித்த தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் 1970க்களில் தோல்விக்குப் பின் வேண்டாத திருமணம் செய்து கொண்டது போல இப்போது மீண்டும் ஜேவிபியை – என்பிபியை தொற்கடிப்பதற்காக இணைய முயற்சிக்கின்றனர். தேர்தலுக்கு முன் இணையாவிட்டாலும் தேர்தலுக்குப் பின்னாவது இணைந்து உள்ளுராட்சி சபையைக் கைப்பற்றலாம் என எண்ணுகின்றனர்.
தமிழ் தேசியக் கட்சிகள் சுழல் பந்து வீச்சு, வேகப் பந்துவீச்சு, குறளிப் பந்துவீச்சு, குறுக்கால பந்து வீச்சு என்று பலவகையில் பந்து வீசினாலும் அது சமூக வலைத்தளங்களைத்தள கொசிப்புக்கு அப்பால் மக்களுடைய மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஏழு மாதங்களில் தேசிய மக்களின் சாதனைப் பட்டியல் மிக நீண்டதாகவே உள்ளது. வடக்கு – கிழக்கு கடற்கரையை ஆக்கிரமிக்கும் இந்தியப் படகுகளின் நடமாட்டம் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்படுகின்றது. அரச அலுவல்கள் கணிசமான அளவு திறம்படச் செயற்படுகின்றது. பாதைகள், காணிகள் விடுவிக்கப்படுகின்றது. மக்கள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்துள்ளனர். அண்மையில் விடுவிக்கப்பட்ட பாலாலி – வயாவிளான் வீதியில் பஸ் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதை வரவேற்க பலர் கூடியுள்ளனர். அவ்வீதியின் பஸ் போக்குவரத்தை 1990க்களில் மேற்கொண்ட பெரியவர் அதனை வரவேற்கின்றார்.
நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களுக்கு பல செய்திகளைச் சொல்லும். கிராமங்களின் அபிவிருத்தி அதன் எதிர்காலம் என்பன நாளைய தேர்தல் முடிவுகளில் வெளிப்படும். தமிழ் தேசியம் முழுவீச்சில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் தேர்தலில் தங்கள் பரப்புரைகளை முடுக்கி விட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் சக்தியின் பிரதான வேட்பாளர் பேராசிரியர் கபிலன் வெற்றி பெற்றால் அவரை பதவியேற்க விடாமல் வழக்குத் தொடுத்து அவரது வெற்றியைப் பறிப்பேன் என சுமந்திரன் சபதமிட்டுள்ளார். எம் ஏ சுமந்திரனை தமிரசசுக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என பொன்னம்பலம் கஜேந்திரகுமார் கங்கணம் கட்டியுள்ளார். ஆனாலும் இருவரதும் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளதால் அவர்கள் மீண்டும் வேண்டாத திருமணத்தைச் செய்ய முனைந்துள்ளனர். இன்னுமொரு விவாகரத்துக்கு முத்தாய்ப்பு செய்கின்றனர்.
இவற்றுக்கு பதலளித்த அமைச்சர் சந்திரசேகரன் தமிழ் மக்களின் மனங்களை வென்றவராக மிக நிதானமாகவே பதிலளித்துள்ளார். அதில் அவர் தமிழ் தேசியம் பேசுகின்ற அதே பொழியாடல்களைத் தவிரத்து இருக்கலாம். ‘நொண்டி’ போன்ற சொற்றொடர்கள் ஊனமுற்றவர்களை அவர்களின் பெற்றோரை புண்படுத்துவதாக அமைந்ததாக ஊனமுற்ற பிள்ளையின் தந்தையும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ரட்ணசிங்கம் அனஸ்லி தேசம்நெற்க்கு தெரிவித்தார்.
அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தி பா உ மீது தமிழ் தேசியம் மிகப்பாரிய அளவிலான அவர்களது உருவம், பேச்சு வழக்கு மற்றும் சமூகப் பின்னணிகளை வைத்து உடற்கேலிகள் செய்துவருகின்றனர். அதனால் வாக்காளர்கள் தமிழ் தேசியக் கட்சிகளில் இருந்து தங்களை அந்நியப்படுத்திச் செல்வதையே காணக்கூடியதாக உள்ளது. தமிழ் தேசியத்திற்கு தமிழ் மக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லையோ என்றே எண்ணத் தோண்றுகின்றது. அமைச்சர் சந்திரசேகரனும் தேசிய மக்கள் சக்தியும் தமிழ் மக்களும் ஒரே மொழியில் உரையாடுவதாகவே தோண்றுகின்றது. வரும் புதின் கிழமை யாருடைய வெற்றி என்பதும் இக்கட்சி தோற்கின் எக்கட்சி வெல்லும் என்பதும் தெரியவிந்துவிடும்.