02

02

நிர்வாக சேவை பதவி உயர்வுகளில் 60 வீதமானவர்கள் தமிழர்கள் !

நிர்வாக சேவை பதவி உயர்வுகளில் 60 வீதமானவர்கள் தமிழர்கள் !

இலங்கை நிர்வாக சேவை தரம் 1 ஐச் சேர்ந்த 23 அதிகாரிகள் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நிர்வாக சேவை விசேட தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு பதிவி உயரத்தப்பட்ட 23 பேரில் 14 அதிகாரிகள் தமிழர்கள் ஒருவர் முஸ்லீம் எட்டுப்பேர் சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நியமனம் நேற்று முதல் அமுலுக்கு வர தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பதவி உயர்வு பெறுவோர் பட்டியலில் எஸ்.சிவசிறி, எஸ்.முரளிதரன், எஸ்.அச்சுதன், கே.சிறிமோகனன், என்.மணிவண்ணன், என்.சிவலிங்கம், ரி.திரேஸ்குமார், ஏ.சோதிநாதன், சுபாகினி மதியழகன், எஸ்.சத்தியசீலன், பி.தயானந்தன், வை.பரந்தாமன், எம். சிறிஸ்காந்தகுமார் மற்றும் வி.மதுமதி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மே தினத்தில் வலிகாமம் வடக்கில் காணிகள் விடுவிப்பு !

மே தினத்தில் வலிகாமம் வடக்கில் காணிகள் விடுவிப்பு !

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த தனியார் காணிகள் 40.7 ஏக்கர் நேற்று தொழிலாளர் தினமன்று முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காணி அனுமதிப் பத்திரங்களை யாழ் மாவட்ட மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத்தால் யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம. பிரதீபனிடம் கையளித்துள்ளார். இந்நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் , காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் மற்றும் மாங்கொல்லையில் 15.13 ஏக்கரும் வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் ஒட்டகப்புலம் கிராமத்தில் 20 ஏக்கரும் பொதுமக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. விரைவில் காணி உரிமையாளர்கள் தமது காணிகளை சென்று பார்வையிட்டு அடையாளப்படுத்த முடியும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அநுரவுக்கு ரெட் அலேர்ட் ( red Alert ) கொடுங்கள் சஜித் கோரிக்கை!

அநுரவுக்கு ரெட் அலேர்ட் ( red Alert ) கொடுங்கள் சஜித் கோரிக்கை!

உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து அநுர அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கும் படி தலவாக்கலையில் நேற்று நடைபெற்ற மேதின கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ அறை கூவல் விடுத்துள்ளார். தற்பொழுது மின்சாரக் கட்டணத்தை குறைத்துள்ள அநுர அரசு தேர்தல் முடிய மின்சார கட்டணத்தை அதிகப்படுத்தவுள்ளதாக தமக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது எனவும் சஜித் தெரிவித்துள்ளார். மக்களுக்கு உப்பைக் கூட பெற்றுக் கொடுக்க முடியாத மக்களை ஏமாற்றும் காட்டாட்சி நடத்தும் அநுர அரசுக்கு பாடம் கற்பிக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கும்படி கோரினார். தலவாக்கலையில் நடந்தது மேதின கூட்டமா? அல்லது உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டமா ? என மக்கள் முழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக மாணவன் தற்கொலை ! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு !

பல்கலைக்கழக மாணவன் தற்கொலை ! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு !

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கற்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது மனமுடைந்த மாணவர் ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தற்கொலை செய்து கொண்டார். கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவருக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமே அவரது தற்கொலைக்கு வழிவகுத்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேவேளை, கடந்த இரண்டு வருடங்களாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் தனது மகன் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக சரித்தின் தந்தை குற்றம் சாட்டினர்.

பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் இவ்வாறான வதையை பகிடி வதை என்று அழைப்பதே தவறு என்று இது மோசமான வதை எனவும் கொழும்புப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் லண்டன் தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

நல்லை ஆதீன குரு சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் !

நல்லை ஆதீன குரு சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் !

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம் பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தனது 68வது வயதில் நேற்று இயற்கை எய்தினார். கொழும்பில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய உடல் இன்றே தகனம் செய்யப்படும் எனத் தெரியவருகின்றது.

சுந்தரலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட நல்லூரை சொந்த இடமாகக் கொண்ட இவர் 1970 களின் ஆரம்பத்தில் நல்லை ஆதீன முதலாவது குருமகா சந்நிதானத்தில் துறவறம் பெற்று ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர
தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் என்ற நாமம் பெற்றார். 1981ஆம் ஆண்டு முதலாவது
குருமகா சந்நிதானம் சமாதி நிலையைஅடைந்தமையை தொடர்ந்து, நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானமாக பட்டம்சூடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலிருந்து காங்கேசன்துறைக்கான போக்குவரத்து கட்டணம் குறைப்பு !

தமிழகத்திலிருந்து காங்கேசன்துறைக்கான போக்குவரத்து கட்டணம் குறைப்பு !

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் 8000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.இந்த சேவை வாராந்தம் 6 நாட்கள் முன்னெடுக்கப் படுகின்றன எனவும் குறிப்பிடப்டுகின்றன.

மேலும், இதுவரையில் இருவழி பயணக் கட்டணமாக 8,500 இந்திய ரூபாய் அறவிடப்பட்ட நிலையில், குறித்த கட்டணம் தற்போது 8,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கோடைகால விடுமுறையை முன்னிட்டு பயணக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மின்சாரக்கட்டண அதிகரிப்புக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க மறுத்துள்ளார் !

மின்சாரக்கட்டண அதிகரிப்புக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க மறுத்துள்ளார் !

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தை 50 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிவு சமர்பித்தமை குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தனது முடிவை அறிவித்துள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பங்கேற்றிருந்தார் எனினும் ஜனாதிபதி அந்த முன்மொழிவுக்கு தனது ஒப்புதலைத் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட முன்மொழிவை ஆணைக்குழு முற்றிலுமாக நிராகரித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் இலங்கை மின்சார சபை நிதி ரீதியாக நிலையற்றதாக மாறும் அபாயம் உள்ளது என்றும், மேலும் சர்வதேச நாணய நிதியம் (IMF) மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.

48 மணி நேரத்தில் நான்கு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதியது ! இருவர் உயிரிழப்பு 40 பேர் வரை காயம் !

48 மணி நேரத்தில் நான்கு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதியது ! இருவர் உயிரிழப்பு 40 பேர் வரை காயம் !

கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் , கொழும்பிலிருந்து கதுருவெல நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் பொலன்னறுவை – ஹபரனை பிரதான வீதியின் மின்னேரிய இராணுவ முகாமுக்கு அருகில் இன்று மே 1 ஆம் திகதி பிற்பகலே இரண்டு பேருந்தும் நேருக்கு நேர் மோதி உள்ளது. இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பேருந்துகளிலும் காயமடைந்த பயணிகள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடல்பில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேமாதிரி பெலியத்த பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையிலும், பெலியத்தவில் உள்ள வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிள்ளையானுடன் தொடர்பு கொள்ள முயன்ற ரணிலின் பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு !

பிள்ளையானுடன் தொடர்பு கொள்ள முயன்ற ரணிலின் பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு !

ரணிலின் 23 வருட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரியான தலைமை காவல் பரிசோதகர் அசோக ஆரியவன்ஸ யாழ்ப்பாணம் காங்கேஸ்சன்துறை காவல் நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் துறையால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலுள்ள பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முற்பட்டமைக்காகவே ஆரியவன்ஸவுக்கு தண்டனையாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

காலியான கதிரைகளுடன் மேதினத்தை கொண்டாடிய தமிழரசுக் கட்சி !

காலியான கதிரைகளுடன் மேதினத்தை கொண்டாடிய தமிழரசுக் கட்சி !

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.ஏ. சுமந்திரன் அணியினர் யாழில் தமது பலத்தை காட்ட கூட்டிய கூட்டத்தில் மிகக் குறைந்த ஆதரவாளர்களையே காண முடிந்தது. ஏனைய தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் மேதினக் கூட்டம் மற்றும் பேரணி என விஷப்பரீட்சையில் இறங்காது சுதாரித்துக் கொண்டனர். தமிழரசுக் கட்சியில் யாழிலில் மே தின கூட்டத்தை கூட்டி தனது வாக்கு வங்கியின் இலட்சணத்தை படம் போட்டுக் காட்டி விட்டது.