24

24

தமிழர்களுக்கு நினைவேந்தல் நடாத்துவதற்கு முழுமையான அனுமதி உண்டு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  தெரிவித்தார்.

யாழில் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை இம்முறை எவ்விதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் அனுஷ்டிக்க முடியும்.

அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மக்கள் சுதந்திரமான முறையில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க முடியும். அது அவர்களின் உரிமை. அதற்கு அரசு தடை எதுவும் போடாது“ என தெரிவித்தார்

பாராளுமன்றத் தேர்தல்; தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிகழ்ந்த இரண்டாவது தோல்வி – பேராசிரியர் கீதபொன்கலன் கருத்து

பாராளுமன்றத் தேர்தல்; தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிகழ்ந்த இரண்டாவது தோல்வி – பேராசிரியர் கீதபொன்கலன் கருத்து

 

புரட்சிகரமான மாற்றத்தைப் புரிந்துகொண்ட வடக்கு மக்களுக்கு தலை வணங்குகிறோம் – ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிப்பு

 

யாழ் மையவாத அரசியல் தனக்கு ஒவ்வாதவர்களை விரட்டியடிக்கும். அன்று துரையப்பாவுக்கு நடந்தது இன்று சுமந்திரனுக்கும் நடந்துள்ளதுள்ளது என்கிறார் இடதுசாரி அரசியற் செயற்பாட்டாளர் ந. ஜெயபாலன்

 

இலங்கைக் கான நான்காம் கட்ட நிதியை விடுவித்துள்ளது ஐஎம்எப் . 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு அனுமதி

 

மக்களை துன்பப்படுத்தி ஐ.எம்.எப் கடன்களை செலுத்த முற்படுவது என்.பி.பியின் முதலாளித்துவச் சிந்தனைப் போக்கையே வெளிப்படுத்துகின்றது. – தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் முக்கியஸ்தர் சேனன் குற்றச்சாட்டு

 

மாவீரர் தினத்தில் எதிர்ப்பரசியல் ஒன்றை முன்னெடுக்க இருந்த வாய்ப்புகளையும் இல்லாமல் செய்துள்ள புதிய அரசு – மாவீரர் தினத்திலும் சோபையிழந்தது தமிழ் தேசியம்

இலங்கைத் தமிழர்கள் தமிழீழத்தை கைவிட்டாலும் புலம்பெயர்ந்தவர்களும் தமிழகத்துச் சீமானும் தான் தமிழீழம் கேட்கின்றார்கள்! வே பிரபாகரனின் முன்னாள் தளபதி சின்னத்துரை ராகவன்

யாழ் நல்லூரடியில் சட்டத்தரணி வீட்டில் களவாடப்பட்ட ஒரு கோடி நாற்பது லட்சம் பெறுமதியான பணமும் நகைகளும் மீட்பு

2024 சிவஜோதி ஞாபகார்த்த விருது தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்காக மாத்தள சுனேத்த ஹாமத்துரு தேரோவுக்கு

தேசம் திரை தலைப்புச் செய்திகளை காண கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

 

 

 

கிளிநொச்சி மாவட்டத்திற்கு காலபோக பயிர்ச்செய்கைக்கான இலவச மானிய உரத்திற்கென 454.49 மில்லியன் ரூபாய் நிதி !

அரச கொள்கைகளுக்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2024/2025 ஆண்டு காலபோக பயிர்ச்செய்கைக்கான இலவச மானிய உரத்திற்கென 454.49 மில்லியன் ரூபாய் நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் கிளிநொச்சி, உருத்திரபுரம், இராமநாதபுரம், அக்கராயன்குளம், புளியம்பொக்கனை, முழங்காவில், பூநகரி, பரந்தன், கண்டாவளை, பளை ஆகிய கமநல சேவை பிரிவுகளுக்கென குறித்த நிதி ஓதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது.

முதற்கட்டமாக ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபா வீதமும் இரண்டாம் கட்டமாக ரூபா 10,000 வீதமும் விவசாயிகளின் கணக்கிலக்கங்களுக்கு வைப்பிலிடப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக கண்டாவளை கமநல சேவை பிரிவிற்கு 1249.2467 ஏக்கருக்கு 12492467 ரூபாவுமாக வைப்பிலிடப்பட்டுள்ளது.

இந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2024/2025 ஆண்டு காலபோக பயிர்ச்செய்கைக்கான இலவச மானிய உரத்திற்கென முதற்கட்டத்தில் மொத்தமாக 272,818,048.50 ரூபாவும் இரண்டாம் கட்டத்தில் 181,669,857.00 ரூபாவுமாக மொத்தமாக 454,487,905.50 ரூபாய் நிதியானது அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் தங்களது கணக்கிலக்கங்களில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொகையானது வைப்பிலிடப்பட்டுள்ளதா என்பதனை உறுதிபடுத்திக்கொள்வதோடு பெற்றுக்கொள்ளாத விவசாயிகள் தங்களது கமநல சேவை நிலையங்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதானது, எமது நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது – சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்குற்பட்ட 330 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3ஆம் கடன் தவணை தொடர்பில் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர்  தெரிவிக்கிறார்.

 

 

 

 

மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று(23) முற்பகல் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பான விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

 

 

 

 

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 4 வருட காலப்பகுதியைக் கொண்ட நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் நாட்டின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

 

 

 

 

இந்த கலந்துரையாடல்களின் பிரதிபலனாக ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீடடர் ப்ரூவர் தெரிவித்தார்.

 

 

 

 

ஊழியர் மட்ட இணக்கப்பாடு தொடர்பான உடன்படிக்கை அங்கீகாரம் பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் நிறைவேற்று சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

 

 

 

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடுகளுக்கு அமைய இந்த ஆண்டு ஜூன் மாத இறுதி வரையிலான இலக்குகள் குறிப்பிடத்தக்க அளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், செப்டெம்பர் அளவில் வேலைத்திட்டத்தின் செயற்றிறன் வலுவாகக் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக பெரும்பாலான கட்டமைப்பு ரீதியான இலக்குகள் தாமதத்துடனேனும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கூறினர்.

 

 

 

 

புதிய அரசாங்கத்திற்கான மக்கள் ஆணை, ஊழல் இன்றி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கானது எனவும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தினர்.

 

 

 

 

வறிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதெனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

 

 

 

 

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கான மீளாய்வுக்காக கடந்த 17 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்ட ஆவணத்தை ஜனாதிபதி அனுர குமார நடைமுறைப்படுத்தவேண்டும் – ரணில் விக்கிரமசிங்க

இந்தியாவும் இலங்கையும் கடந்த வருடம் கைச்சாத்திட்ட ஆவணத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பிடிஐக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நானும் பிரதமர் மோடியும் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தில் இரண்டுநாடுகளிற்கும் இடையில் எந்தஎந்த துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுக்கவேண்டும் என்பது குறித்து நாங்கள் தெரிவித்துள்ளோம்,திசநாயக்க முன்னோக்கி செயற்படவேண்டும் இதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என நான் கருதுகின்றேன் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

வடக்கு மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது, இன்று (23) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலில் அண்மையில் புதிதாக கடற்தொழில் அமைச்சராக பதவியேற்றிருக்கும் இராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekar) கலந்து கொண்டிருந்தார் .

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

இதன் போது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை படிப்படியாக தான் முன்னெடுப்பதாக  மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கு கடற்தொழில் அமைச்சர் உறுதி அளித்தார்.

இதேவேளை, யாழ் . போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம்  நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் , வைத்தியசாலையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு , சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தியிடம் நேரடியாக கேட்டறிந்த அவர், சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்ளவதாக உறுதி அளித்தார்.

அத்துடன், சுகாதார அமைச்சர் வைத்தியர்.நளின்த ஜயதிஸ்ஸ விரைவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன்மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இலங்கையின் எரிசக்தி துறையில் ஏகோபித்த உரிமையை பெறுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், உறுதியான திகதி உள்ளிட்ட விடயங்கள் இதுவரையில் இறுதிப்படுத்தப்பட வில்லை. எவ்வாறாயினும், இலங்கையின் பார்வையில் ஜனாதிபதியின் இந்திய விஜயம் மிகவும் முக்கியமானதாகும்.

இதற்கு பிரதான காரணம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டெல்லி விஜயத்தை ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

இலங்கை – இந்திய இணைப்புத் திட்டங்களை அடிப்படையாக கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து இருதரப்பு பேச்சுக்களில் முக்கிய விடயமாக கருதப்படும்.

குறிப்பாக, ரணிலின் காலத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் ஒப்பந்தம், திருமலை பொருளாதார வலயத் திட்டம், மன்னாரில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் பணியை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கியமை உட்பட கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி திட்டமும் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் இந்த ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்திருந்தார்.

மேலும் இலங்கையின் எரிசக்தி துறையில் ஏகோபித்த உரிமையை பெறுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னர் இவ்வாறான அறிவிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையானது இருதரப்பு பேச்சுக்களில் இந்திய முதலீடுகள் தொடர்பில் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் விடயங்களாக இருக்கும்.

மறுபுறம், இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை இந்தியா கடந்த காலத்திலிருந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு இந்தியாவுக்கு எரிச்சல் ஊட்டும் விடயமாகவே உள்ளது.

இதனாலேயே, இலங்கையுடன் சீனா நெருக்கமாகச் செயற்படுவதற்கும், சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைவதற்கு சீனா அனுமதிப்பதற்கும் இந்தியா எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

2015ஆம் ஆண்டிலிருந்து இந்தியா பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இத்தகைய எதிர்ப்புகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும், சில சந்தர்ப்பங்களில் ஆட்சி மாற்றங்களுக்கு கூட இந்த எதிர்ப்புகள் வழிவகுத்தன.

இதனாலேயே இந்த டிசம்பர் மாதம் வரை சீனக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

எனவே, ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது, சீன விவகாரம் மற்றும் இருதரப்பு இணைப்பு திட்டங்களின் எதிர்காலம் போன்ற தலைப்புகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

அதே போன்று சீன – இந்திய நெருக்கடிகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீண்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.