தமிழ்பேசும் மக்களின் அரசியல் கட்சிகள் பலமாகவும் ஜக்கியத்துடனும் செயற்படும்போது தான் ஆளும் வர்க்கத்திடம் இருந்து உரிமைகளை பெற்றுகொள்ள முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணை பொதுச்செயலாளார் நிசாம் காரியப்பர் ரிபிசியில் வியாழக்கிழமை (12 Nov 09) நடைபெற்ற விசேட அரசியல் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்
இந்த அரசாங்கம் சிறுபான்மைக்கட்சிகள் மற்றும் இனவாத கட்சிகள் அனைத்தையும் சின்னாபின்னமாக்கி சிதறடித்த தனது அரசியல் தேவைகளைகளை பூர்த்தி செய்து ஜனநாயக போக்குகளை நிராகரித்து செயற்படுகின்ற நிலையில் தான் ஒரு ஜக்கிய கூட்டமைப்பை உருவாக்கவேண்டிய தேவை ஏற்பட்டது எனவும் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணைப் பொதுச்செயலாளார் நிசாம் காரியப்பர் அதன் அடிப்படையில்தான் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்
சர்வகட்சி குழுவில் பலவிடயங்கள் பேசப்பட்டு அவை ஒரு இணக்கப்ப்ட்டுக்கு வந்தபோதிலும் அதனைக் கூட ஜனாதிபதி நடைமுறைப்படுத்த வில்லை எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி முறையினை இல்லாது ஒழிப்பதாகக் கூறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் மங்களசமரவீர போன்றவர்கள் ஆதரவு வழங்கிய அடிப்படையியே ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டார் எனவும் ஆனால் அவர் வழங்கிய வாக்கு உறுதியினை செயற்படுத்தத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு பாரளுமன்றத்தில் அதிநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை தற்போதும் இல்லாமால் செய்யமுடியும் எனவும் அப்படி செய்ய முன்வருவாரானால் ஜக்கிய தேசியக்கட்சி முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் விடுதலை முன்னணி போன்றகட்சிகள் முழுமையான ஆதரவினை வழங்கும் எனவும் அதன் போது ஒரு ஜனாதிபதி தேர்தல் அவசியம் அற்றது எனவும் தெரிவித்தார்.
இதே போன்று ஜக்கிய தேசிய கட்சியின் பொதுவேட்பாளராக கூறப்படுகின்ற அல்லது கருதப்படுகின்ற ஜெனரல் சரத்பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக தெரிவுசெய்யபட்டால் அதிநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை இல்லாமால் செய்வாரா என்று கேட்கப்பட்ட பொழுது அப்படி அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டு அதிநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிக்காவிட்டால் பாரளுமன்றத்தில் ஒரு சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது எனவும் ஏன் எனில் எந்த கட்சியிலும் அதிகாரம் செலுத்துவதற்க்கு அவர்க்கான அங்கீகாரம் இல்லை எனவும் தெரிவித்தார்.
வடகிழக்கு மாகாணம் இணைக்கபட வேண்டும் ஆனால் அது நிபந்தணையுடன் இணைக்கபட வேண்டும் அத்தோடு தமிழ்பேசும் அரசியல் கட்சிகள் இத்தருணத்தில் இணைந்து செயற்படவிட்டால் தமிழ்பேசும் மக்களின் வளங்கலும் நிலங்களும் திட்டமிட்டு பறிக்கபடுவதையும் தவிர்க்கமுடியாது எனவும் எச்சாரித்தார் தமிழ்தேசியத்தின் தேவைகளை சிங்களமக்கள் மத்தியில் கெண்டுசெல்ல தமிழ் தலைமைகள் தவறிவிட்டனவா என கேட்கபட்டபோது தமிழ் தேசியத்தின் தேவைகளை சிங்களமக்கள் மத்தியில் கொண்டுசெல்ல முயற்சி செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் போன்றவர்களை இனவாதிகள் திட்டமிட்ட கொலைசெய்து தமிழ் தேசியத்தின் தேவைகளை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வதை நிராகரித்தனர் எனவும் சுட்டிகாட்டினார்
ஜெனரல் சரத்பொன்சேகா போன்றோர் இரானுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்க்கு இப்பொழுது வாய்ப்பு இல்லை என கூறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணை பொதுச்செயலாளார் நிசாம் காரியப்பர் இப்பொழுது இரானுவ ஆட்சிபோன்றே உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துனை பொதுச் செயலாளார் நிசாம் காரியப்பரருடன் அரசியல் அவதானி மயில்வாகனம் சூரியசேகரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் ஒன்றியத்தின் பிரித்தானியா கிளையின் முன்னால் தலைவர் நஜாமுகமட் ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம் ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் செ ஜெகநாதன் மற்றும்ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் கலந்துரையாடினர்.