போராட்டத்தின் வலிகளை உணராத கோமாளியின் பன்னாடைத் தனமான கிளுகிளுப்புப் பேச்சுக்கள் !
எண்பதுக்களில் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் 2009 வரையான நீண்ட நெடிய பாதையைக் கொண்டது. அப்போராட்டம் பற்றிய விமர்சனங்கள் பல இருந்தாலும் அதில் செய்யப்பட்ட அர்ப்பணிப்புக்களை யாரும் கொச்சைப்படுத்தி விட முடியாது. போராட்டத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் மக்களையும் தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டும், மக்களைப் போராட்டத்தின் பங்குதாரர்களாக்க வேண்டும் என்பது எந்த வகையான போராட்டத்தினதும் அத்திவாரமாக இருந்தது. அதற்காக மக்களுடன் நெருங்கிப் பழகுவது, மக்களோடு மக்களாக வாழ்வது, அவர்களிடமே வாங்கி உண்பது இதுவெல்லாம் விடுதலைப் போராட்டங்களின் முக்கிய இயல்புகள்.
ஆனால் போராட்டத்தையே கூகுளில் தேடிக் கற்றுக்கொண்ட ஒரு உதவாக்கரைக் கூட்டம் தற்போது உருவாகி வருகின்றது. இதனையெல்லாம் கேவலமானதாக சித்தரிக்கின்றனர். ஊசி அர்ச்சுனா யாழ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பா உ இளங்குமரனைக் குத்திப் பேசும் போது நீ வீடு வீடாகப் போய் கொடிவித்து எம்பி யான மாதிரியோ மாதிரியோ. நான் எம்பிபிஎஸ் என்று தன்னுடைய வர்க்க குணாம்சத்தை வக்கிரமாக வெளிப்படுத்தினார்.
மக்களோடு மக்களாக பணியாற்றாததாலேயே தமிழ் தேசியம் தனது கடைசி மூச்சில் உள்ளது. ஆனால் ஊசி அர்ச்சுனாவோ மக்களோடு மக்களாக பணியாற்றுவதை கேவலமாக சித்தரிக்கின்ற தனது மனநிலையைப் பொது வெளியில் கூச்சமின்றிச் சொல்கின்றார். அர்ச்சுனா போன்ற குறைவருத்தியுடையவர்களால் தமிழ் தேசியம் தலைமை தாங்கப்படுவதால் சாதாரண மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுள்ளனர். கொழுத்துகின்ற வெய்யிலில் வெள்ளைக்காரன் விட்டுவிட்டுப் போன அடிமைத்தனத்தின் குறியீடான ரையைக் கட்டிக்கொண்டு குரைப்பதால் தான் தமிழ் மக்கள் இதுகள் தங்களைக் கடித்துவிடும் என்ற அச்சத்தில் தள்ளியே நிற்கின்றனர்.
இதற்குள் ஊசி அர்ச்சுனா விடும் இன்னுமொரு உல்டா என்ன வென்றால் நான் அரசியலை விட்டுவிட்டுப் போனால் டொக்டர் தொழில் இருக்கு, இலங்கையில் இல்லாவிட்டால் வெளிநாட்டுக்கு சென்று சொகுசாக செற்றிலாகி விடுவேன் என்பதாகும். ஊசி அர்ச்சுனா நீங்கள் வெளிநாடுகளில் வந்து வேலை செய்வதற்கு உங்களுடைய முன்னைய வேலையிடத்திலிருந்து நற்சான்றிதழ் இருக்க வேண்டும். அதை எந்த மருத்துவமனை உங்களுக்கு வழங்கும். தற்போது உங்களுடைய பரீட்சையிலும் நீங்கள் பெயிலாகிவிட்டீர்கள்.
மருத்துவருக்கு நல்ல பண்புகள் இருக்க வேண்டும். உங்கள் மீது வழக்குகள் மட்டும் தான் இருக்கின்றது. அதில் அரைவாசி வழக்குகள் மருத்துவர்களால் போடப்பட்டுள்ளது. மேலும் அர்ச்சுனா வெளிநாட்டுக்கு வந்தால் சில தொழில் பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நோயாளிகள், சக ஊழியர்கள் அவர்கள் கக்கூஸ் கழுவுவர்களாக இருந்தாலும் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். நீ என்ன படிச்சனி, எம்பிபிஎஸ் படிச்ச என்னிலும் பார்க்க உனக்கு கனக்கத் தெரியுமோ என்றெல்லாம் கேட்க முடியாது.
அர்ச்சுனா தன்னுடைய யூரியூப்பை நம்பி மக்கள் விரோதியாகாமல் தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும். இதுவரைக்கும் தன்னுடைய அரசியலுக்கு இன்னொருவரை வென்றெடுக்க வக்கற்ற ஒருவராகவே அர்ச்சுனா இருக்கின்றார். அவரோடு பயணிப்பார் என்று நம்பப்பட்ட கௌசல்யா நரேந்திரன் தற்போது வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளார். அவருக்கு உண்மையில் என்ன நடந்தது. ஒரு சட்டத்தரணியாக கௌசல்யா நரேந்திரன் மக்களிடம் வந்து பேச வேண்டும்.