24

24

செய்தித்துறையில் புதிய பரிணாமம் முதலாவது AI நாளிதழ் விற்பனைக்கு !

செய்தித்துறையில் புதிய பரிணாமம் முதலாவது AI நாளிதழ் விற்பனைக்கு !

இத்தாலியில் “இல் போக்லியோ” நாளிதழ் முழுவதும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியிடப்பட்டுள்ளது.

இத்தாலியிலிருந்து வெளிவரும் “இல் போக்லியோ” நாளிதழ் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது.

இந்த 4 பக்க நாளிதழில் தலைப்புகள், செய்திகள், தொகுப்புகள், எழுத்துகள் என அனைத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டது என்றும் செய்தியாளர்கள் தாங்கள் சேகரித்த செய்தியை சொன்னால் மட்டும் போதும், மற்றதையெல்லாம் அது பார்த்துக் கொள்ளும் என்றும் நாளிதழின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் ஒப்பந்தம் !

தமிழரசுக் கட்சியும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் ஒப்பந்தம் !

 

தேசிய மக்கள் சக்தியை தனித்து நின்று வென்றுவிட முடியாது என்பதில் நாட்டின் அனைத்துப் பகுதியில் உள்ள எதிர்க்கட்சிகளும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துள்ளன. அதனால் பல்வேறு கூட்டணிகளையும் அமைப்பதில் அவர்கள் மிகத் தீவிரமாக உள்ளனர். ஆனால் கூட்டணி அமைத்தாலும் மக்கள் இவர்களை நம்புவார்களா என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பி வருகின்றனர்.

இப்பின்னணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் ஒரு புரிந்தணர்வு உடன்பாட்டை எட்டியுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணிகளான கட்சியின் செயலாளர்கள் எம் ஏ சுமந்திரனும் நிசான் காரியப்பரும் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திடுள்ளனர். வடக்கில் முஸ்லீம் காங்கிரஸ் வெற்றிபெறும் பிரிவுகளில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் விந்தணு வங்கி !

இலங்கையில் விந்தணு வங்கி !

 

இலங்கையில் முதலாவது விந்தணு வங்கி கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்துள்ளார்.

இந்த விந்தணு வங்கி மூலம், குழந்தை பேறு இல்லாத பெண்கள் குழந்தைகளைப் பெறுவதற்குத் தேவையான விந்தணுவைப் பெற முடியும். இவ் நடைமுறை மிகவும் இரகசியமாகவும் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையிலும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் வைத்தியர் அஜித் தண்டநாராயணா கூறினார்.

அதிகரிக்கும் போதையுடன் கூடிய முகநூல் களியாட்ட விருந்துகள் !

அதிகரிக்கும் போதையுடன் கூடிய முகநூல் களியாட்ட விருந்துகள் !

சீதுவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட கிடிகொட பெல்லானவத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு நடைபெற்ற பேஸ்புக் விருந்து சுற்றி வளைக்கப்பட்டு, 15 யுவதிகள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து ஐஸ், கேரளா கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 12 சிறுமிகள் மற்றும் 47 இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழ் தேசிய பிற்போக்குவாதிகள் தமிழ் அரசியல் பரப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் !

தமிழ் தேசிய பிற்போக்குவாதிகள் தமிழ் அரசியல் பரப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் !

மூத்த ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களுடனான உரையாடல்

ஆபத்து வரும் போது மீட்பராக ரணில் வருவார் !

ஆபத்து வரும் போது மீட்பராக ரணில் வருவார் !

நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் எவ்வித நிபந்தனையும் இன்றி தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகவே இருக்கின்றார் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

வஜிர அபேவர்தன மேலும் கருத்து தெரிவிக்கையில், 1994ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவரானதிலிருந்தே ரணில் விக்கிரமசிங்க இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றார். எனவே தற்போது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அவ்வாறானவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சமூகத்தில் எந்தவொரு சமூகத்தினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. எனவே முதலில் இந்த அறிக்கையை முழுமையாக வாசிக்குமாறு சகலரையும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

 ‘கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா?” என்போர் பாலஸ்தீனியர்களைக் கொல்பவர்களிடம் நீதி கேட்கின்றனர் !

‘கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா?” என்போர் பாலஸ்தீனியர்களைக் கொல்பவர்களிடம் நீதி கேட்கின்றனர் !

 

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதியையும் பொறுப்புக் கூறலையும் வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினரால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா? கொடுப்பனவை கொடுப்போம் என சொல்வது கொலையை மறைக்கவே, சர்வதேச நீதி கிடைக்குமா உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹாசாவில் கண் முன்னால் நடந்து கொண்டிருக்கின்ற இனப்படுகொலையை நிறுத்த முடியாத மற்றும் பாலஸ்தீன படுகொலை பங்காளர்களாகிய சர்வதேசத்திடம் ஈழத்தமிழர்கள் நீதி பெற்றுத் தரும்படி கோருவது அறிவீனம் என அவதானிகள் கூறுகின்றனர்.

டிஜிட்டல் மயமாகும் குற்றவாளிகளின் தகவல்கள்!

டிஜிட்டல் மயமாகும் குற்றவாளிகளின் தகவல்கள்!

 

நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவின் (CRD) தகவலின் படி, மேநீதிமன்றத்தில் தண்டனை பெற்ற நபர்களின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கல் அமைப்பில் உள்ளிடப்பட்டுள்ளன. இந்த செயல்முறையின் மூலம் பல குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

தையிட்டியில் புதிய கட்டிடம் பிக்குகளின் மடாலயம் ! 

தையிட்டியில் புதிய கட்டிடம் பிக்குகளின் மடாலயம் !

 

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரை காணியில் மேலுமொரு சட்டவிரோத கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடம் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு விகாரதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த கட்டடத்தில் பௌத்த மத வழிபாடுகள் இடம்பெற்றன.

இதற்கு வழமை போலவே எதிர்ப்பு தெரிவித்து தையிட்டி காணி உரிமையாளர்கள், அரசியல் தரப்புக்கள், பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் உண்மையிலேயே இது சட்ட விரோதமானது என்பதை சட்டப்படி நிரூபிக்கும் வகையில் வழக்குகளைப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாரில்லாமல் உள்ளனர். தேர்தல் காலங்களுக்கான கோஸமாக தையிட்டியும், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டங்களும் மாறியுள்ளது. சட்டம்பிக் கட்சிகள் கூட ஒரு வழக்கைப் பதிவு செய்யத் தயாரில்லை.

நேற்றைய போராட்டத்தின் போது பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. பொலிஸார் கைவிலங்குகளுடனும் துப்பாக்கிகளுடனும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்துவது போல் செயற்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

திஸ்ஸ விகாரைப் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும் என்று பௌத்தசாசன அமைச்சர் சுனில் செனவி அறிவித்திருந்த நிலையில், விகாரை வளாகத்தில் மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம் கட்டப்பட்டுள்ளமை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கட்டடம் புதிதாக தான் கட்டப்பட்டதா? அல்லது ஏற்கனவே விகாரை கட்டும் போதே பிக்குகளுக்கு என கட்டிய மடமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தையே தடுத்து நிறுத்துவதற்குத் திராணியற்ற இந்த அரசாங்கம், எவ்வாறு திஸ்ஸ விகாரையை அப்புறப்படுத்தி, மக்களின் காணிகளை மக்களுக்கு உரியதாக்கும் என்ற பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

தமிழகத்திலுள்ள அகதிகளை மீண்டும் இலங்கை அழைத்துவர ஆளுநர் முனைப்பு!

தமிழகத்திலுள்ள அகதிகளை மீண்டும் இலங்கை அழைத்துவர ஆளுநர் முனைப்பு!

 

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள மூன்று இலட்சத்திற்கும் அதிகமான ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. அப்போது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிக்கையில், இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்ப வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என்றார். நாடு திரும்புவர்களுக்கான உதவிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என தெரிவித்தார்.

அத்தோடு ஏற்கனவே இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பியவர்களிடம் அவர்களது குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். ஒபர் சிலோன் நிறுவனத்தின் திட்டத் தலைவர் செல்வி சின்னதம்பி சூரியகுமாரி, தமது நிறுவனத்தால் இந்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்பார்ப்புத் தொடர்பிலும் விவரித்தார். இலங்கையிலிருந்து 4 கட்டங்களாக இந்தியாவுக்கு 334,797 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர் என்றும் தற்போது தமிழகத்தில் 103 முகாம்களில் 58,104 பேர் இருக்கின்றனர் என்ற தரவுகளையும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் தெரியப்படுத்தினர். தற்போது தமிழகத்தில் முகாம்களிலுள்ள 58,104 பேரில், 50,620 பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டனர். 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கு மாகாணத்துக்கு 14,531பேர் வருகை தந்துள்ளனர் என்றும் ஆளுனர் சுட்டிக்காட்டினர்.

எப்படியாயினும் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கின்ற இலங்கை அகதிகள் நாடு திரும்பும் விடயத்தை இரு நாட்டு தலைவர்களும், அதிகாரிகளும் மற்றும் தொண்டு நிறுவனங்களும் மட்டுமே முடிவு செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட இலங்கை அகதிகளுடைய கருத்துக்களும் மற்றும் அவர்களுடைய விருப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இலங்கை அகதிகள் குடியுரிமை இல்லாது பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் வாழ்கிறார்கள். அப்படியானால் அவர்களும் நாடு திரும்ப கூடிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தமிழகத்தில் இரண்டு தலைமுறையாக அகதியாக வாழ்கிற தமிழர்களில் பெரும்பாலானோர் தாம் இலங்கை திரும்ப விருப்பம் இல்லை என்று கூறி விட்டார்கள். பெரும்பாலானோர் திபெத் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கியது போன்று தமக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் உத்தியோக பூர்வமாக முகாம்களில் 58 104 பேர் தங்கியுள்ளனர். அவர்களின் அகதி முகாம் வாழ்க்கையை முடிவுக் கொண்டு வந்து, அவர்கள் நாடு திரும்பினாலும் அவர்கள் மீண்டும் இலங்கையில் அகதி முகாம்களில் தான் தங்க வைக்க வேண்டும். இலங்கை திரும்பும் அகதிகளுக்கு வாழ சொந்தமாக அரசாங்கம் வீடு மற்றும் காணி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.