என்பிபி க்கு மாற்றாக தெற்கிலோ வடக்கிலோ முற்போக்கான தலைமைகள் இல்லை ! அதனால் வடக்கில் 50 வீதத்திற்கு அதிகமான ஆசனங்களை என்பிபியே கைப்பற்றும்
ஈபிஆர்எல்எப் முன்னாள் போராளிஇ சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரானுடன் நேர்காணல்
என்பிபி க்கு மாற்றாக தெற்கிலோ வடக்கிலோ முற்போக்கான தலைமைகள் இல்லை ! அதனால் வடக்கில் 50 வீதத்திற்கு அதிகமான ஆசனங்களை என்பிபியே கைப்பற்றும்
ஈபிஆர்எல்எப் முன்னாள் போராளிஇ சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரானுடன் நேர்காணல்
ஆபிரிக்க பெருங்கண்டத்தில் இரண்டாவதாக பெண் ஜனாதிபதி – 72 வயது நெடும்போ !
ஆபிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில் தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (வயது 72) 58 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இத்தேர்தலின் மூலம் நமீபியா நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் ஆபிரிக்காவின் 2-வது பெண் அதிபர் என்ற பெருமையை நெடும்போ பெற்றுள்ளார். நபீபியா என்ற ஒரேயொரு நாடே ஜேர்மனியின் காலனித்து ஆட்சியின் கீழிருந்த நாடாகும்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பணம் வழங்கினால் பதவி பறிபோகும் – எச்சரிக்கிறது பெஃப்ரல் !
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தைப் பின்பற்றி தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட வேண்டியது சகல வேட்பாளர்களினதும் பொறுப்பாகும் என பெஃப்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
பெப்பரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், தங்களது பிரதேசங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாம் தகுதியானவர் என வேட்பாளர் நிரூபிக்க வேண்டும். அத்துடன், ஊழல் இன்றி பொது சொத்துக்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படக்கூடியவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தநிலையில் தேர்தலில் வெற்றிபெற்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகத் தெரிவான ஒருவர், பிரசாரத்தின்போது, பொதுமக்களுக்குப் பணம் வழங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்படுமாயின் அவர் தமது பதவியை இழக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்கிற்கு தடை !
இலங்கையில் ஸ்டார்லிங்க் சேவை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஸ்டார் லிங்க்” இணைய சேவையின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் உறுதிசெய்யப்படும் வரை, இணைய சேவையை நாட்டில் நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் அனுமதி வழங்காது என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் பிரமிட் மோசடி – நிதி பற்றிய அறிவின்மையே காரணம் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர் !
பிரமிட் போன்ற மோசடிக்குள் சிக்கிவரும் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி தொடர்பான கல்வியறிவு இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
உங்கள் கையில் பணம் இருந்தாலும், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும், மோசடிக்கு ஆளாக நேரிடுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. நிதி கல்வியறிவு மற்றும் அதைப் பற்றிய அறிவு இல்லாமை மக்கள் ஏமாற்றப்படுவதற்கான பிரதான காரணம் என கூறியுள்ள மத்திய வங்கி ஆளுநர், மக்களின் நிதி கல்வியறிவை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
இலட்சத்தை தாண்டிய வீட்டுவன்முறை முறைப்பாடுகள் !
இலங்கையில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் அதிகமாக அடிக்கடி பதிவாகி வருவதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரேணுகா ஜெயசுந்தரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கடந்த 2024ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான வழக்குகள் 2,252 பதிவாகியுள்ளன. பாலியல் அத்துமீறல்களுக்கு மேலதிகமாக, வீட்டு வன்முறை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இது தொடர்பில் ஆண்டுதோறும் சுமார் 130,000 புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. பரவலான குறைவான அறிக்கையிடல் காரணமாக அந்த புள்ளிவிபரங்கள் பிரச்சினையின் உண்மையான அளவைக் குறைவாகக் குறிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பாராளுமன்ற உறுப்பினராக சுயேட்சைக்குழுவில் தெரிவான அர்ச்சுனா இராமநாதன் வீட்டுவன்முறைகளில் ஈடுபட்டவர் என பா உஅர்ச்சுனாவின் முன்னாள் மனைவியின் சினேகிதி தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார். பா உ அர்ச்சுனா அவரது முன்னாள் மனைவியோடு வாழ்ந்த கொக்குவில் வீட்டின் அயலவரான மாகாணசபை உறுப்பினரும் அடிக்கடி தகராறுகளும் சத்தங்களும் கேட்பதாகத் தெரிவித்து இருந்தார்.
தந்தை குடித்துவிட்டு வந்து தனது தாயை அடிப்பதாக ரிக்ரொக் சாளினி தன்னுடைய பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சமூகத்தில் பெண்கள் மிகமோசமான வீட்டு வன்முறைக்கு ஆளாவதற்கான பல ஆதாரங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது. மேலும் பெண்கள் பொது வெளியிலும் சமூகவலைத்தளங்களிலும் உளவியல் ரீதியாகவும் வஞ்சிக்கப்படுகின்றனர். இதனால் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளது. அண்மையில் செய்கைமுறைக் கருத்தரிப்பின் மூலம் தாய்மை அடைந்த ஆசிரியயை மனம் நோகும் வண்ணம் கிண்டல் கேலி செய்ததால் அவர் மன உழளச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பா உ அர்ச்சுனா, அர்ச்சுனா அடியான் மற்றும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி ஆகியன பெண்களை விபச்சாரிகள் என்று முத்திரை குத்தி அவர்களின் நிர்வாணப் படங்களை பொதுவெளியில் உலாவவிட்டு வருகின்றனர். இது பெண்களுக்கு எதிரான மிக மோசமான வன்முறையாக உள்ளது.
மீண்டும் பாராளுமன்றம் போகாமல் ஓயமாட்டேன் – டக்ளஸ் தேவானந்தா
உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக கடந்த சில வருடங்களாக சிந்தித்த போதிலும், கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை சவாலாக எடுத்து செயற்பட்டு வருவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களைப் போன்று விடயங்களை முன்னெடுப்பதற்கான அரசியல் அதிகாரம் தற்போது இல்லை. ஆனாலும் அண்மைய அரசியல் பின்னடைவை சவாலாக எடுத்து அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சில இடங்களையாவது கைப்பற்றுவதனூடாக மட்டுமே எதிர்கால அரசியல் செயற்பாடுகளை தக்க வைத்துக்கொள்ள முடியும். இதில் ஈபிடிபி எவ்வளவுதூரம் வெற்றிபெறும் என்பது மே 6இல் தெரியவரும்.
இந்தியாவின் அனைத்து முதலீடுகளையும் இழக்கும் நிலையில் இலங்கை – எச்சரிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க !
இந்திய கூட்டு நிறுவனமான அதானியுடன் மன்னாரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தவறியதை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார்.
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புக்கான பல வழிகளை நான் ஆராய்ந்தேன். துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய அரசாங்கம் மன்னாரில் அதானி புதுப்பிக்கத்தக்க திட்டத்தைத் தொடரத் தவறிவிட்டது என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அதானி பசுமை எரிசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை என்றார். இந்தப் போக்கு அனைத்து இந்திய முதலீடுகளையும் மோசமாக பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழரசுக் கட்சியின் உள்ளுராட்சி வேட்பாளர் ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கியுள்ளார் !
யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளராக கடமையாற்றும் இ. தனுசன் என்பவர் அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பான காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு வழங்கியிருந்தார். முறைப்பாட்டுக்கு அமைவாக தாக்குதலை மேற்கொண்ட இ. தனுசன் என்ற முகாமையாளருக்கு துணைபோன தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் நேற்றைய தினம் அச்சுவேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைதான மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட இ. தனுசன் தலைமறைவாகியுள்ளார். நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தையிட்டியை வைத்து இனக்கலவரத்தை ஏற்படுத்த சிங்கள – தமிழ் அரசியல் தலைமைகள் தீவிர முயற்சி !
சிங்கள பௌத்த நாட்டில் தையிட்டி திஸ்ஸ பௌத்த விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இனவாதிகளுக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுகிறது. இது அரசாங்கத்தின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சரத் வீரசேகர, தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது. வடக்கில் பௌத்த மத உரிமைகள் மறுக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தை இனவாதிகளுக்கு அரசாங்கம் வழங்கி விட்டதா ? என்று எண்ணத்தோன்றுகிறது. இதனை மறைப்பதற்காகவா, தலதா மாளிகை உற்சவம் நடத்தப்படுகிறது . அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையில் பௌத்த மதம் போதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
தையிட்டி விகாரை அமைக்கப்பட்டது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காத தமிழ் தேசிய சட்டத்தரணிகளின் கட்சிகள் தேர்தல் காலங்கள் என்றவுடன் தையிட்டியையும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களையும் அரசியலாக்கி வருகின்றனர். இதன் வெளிப்பாடாக ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 23 இல் தையிட்டி விகாரை முன்பாக ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது தெரிந்ததே. இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் இனவாத அரசியல் நீக்கம் செய்யப்பட்டு வருவதை விரும்பாத சிங்கள – தமிழ் இனவாத சக்திகள் தங்கள் வாக்கு வங்கிக்காக ஒரு இனக்கலவரத்தையும் சில உயிர்ப்பலிகளையும் எதிர்பார்த்து தவம் கிடக்கின்றனர்.