21

21

தொடரும் இராணுவ வீரர்கள் மீதான கைது – நாமல் ராஜபக்ச அதிருப்தி !

தொடரும் இராணுவ வீரர்கள் மீதான கைது – நாமல் ராஜபக்ச அதிருப்தி !

 

பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய அரசாங்கம் எடுத்த முடிவு நியாயமற்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடியவர்கள் குறித்து அரசாங்கம் ஒரு பரந்த கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு சட்டப்பூர்வமாக பணிநீக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

மிருசுவில் படுகொலையாளிக்கு வெளிநாட்டு பயணத் தடை !

மிருசுவில் படுகொலையாளிக்கு வெளிநாட்டு பயணத் தடை !

 

2000 டிசம்பரில் யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில், 8 பொது மக்கள் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், 2020 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுனில் ரத்நாயக்கவை மன்னித்து விடுவித்திருந்தார்.

இந்நிலையில், மிருசுவில் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும், எதிர்த்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதையடுத்து மிருசுவில் படுகொலை தொடர்பாக சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.

மே 06 – உள்ளூராட்சி சபைத் தேர்தல் !

மே 06 – உள்ளூராட்சி சபைத் தேர்தல் !

 

இலங்கையிலுள்ள 337 உள்ளூராட்சி சபைளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமானது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.27 மாநகர சபைகள், 36 நகர சபைகள் 274 பிரதேசசபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

வேட்புமனு தாக்கல் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுமென ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, தற்போது அதற்கான திகதி மே 06 தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இளையோரை மீட்டெடுக்க சனசமூக நிலையங்கள் உத்தவேகத்துடன் இயங்க வேண்டும் !

 

இளையோரை மீட்டெடுக்க சனசமூக நிலையங்கள் மீண்டும் உத்தவேகத்துடன் இயங்க வேண்டும் என அளவெட்டி தெற்கு கலைவாணி ஜனசமூக நிலைய முன்றலில் உருவாக்கப்பட்ட சரஸ்வதி சிலையை சமயாசாரப்படி திறந்து வைக்கும் நிகழ்வின் போது வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய ஆளுநர், இளையோரை சமூகப் பணிகளிலும், கலைத்துறை, விளையாட்டுத்துறைகளில் ஈடுபடுத்தவேண்டும். அவர்களின் திசைமாற்றச் செய்யவேண்டும். சமூகப்பிறழ்வான செயற்பாடுகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான இத்தகைய வழிகளை இவ்வாறான கிராமமட்ட மக்கள் அமைப்புக்கள்தான் முன்னெடுக்க முடியும். என ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார்.

 

எட்டு மில்லியன் இலங்கை ஊழியப் படையில் பத்து வீதம் பேரே வரி செலுத்துகிறார்கள் ! 

எட்டு மில்லியன் இலங்கை ஊழியப் படையில் பத்து வீதம் பேரே வரி செலுத்துகிறார்கள் !

 

சுமார் 8 மில்லியன் பேர் ஊழியப் படையில் இருந்தபோதும், சுமார் 800,000 பேர் மட்டுமே வரி வலையின் கீழ் வருவது ஏன் என்று அரசாங்க நிதி பற்றிய குழு நிதி அமைச்சின் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் மார்ச் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. அதில் தனிநபர் வருமான வரிக்கான (PIT) விடுப்பை ஆண்டுக்கு 1.2 மில்லியன் ரூபாவிலிருந்து 1.8 மில்லியன் ரூபாவாக திகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமாரின் திடீர் கூட்டணி – புனிதர்கள் எல்லாம் மாறிவிட்டார்கள் என்கிறார் சுமந்திரன் ! 

கஜேந்திரகுமாரின் திடீர் கூட்டணி – புனிதர்கள் எல்லாம் மாறிவிட்டார்கள் என்கிறார் சுமந்திரன் !

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பொ.ஐங்கரநேசன், தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கம், என்.ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி மற்றும் கே.வி.தவராசா தலைமையிலான ஜனநாயக தமிழரசு கூட்டணி ஆகியன தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது சகலரும் அறிந்ததே.

இக்கூட்டணி தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையில், ஒருதலைப் பட்சமாக எந்த விதமான நியாயமும் இல்லாமல் கொள்கையளவிலே இணக்கப்பாட்டை ஏற்படுத்துகின்ற பேச்சுவார்த்தையை தமிழரசுக் கட்சி முறித்ததாக ஆதங்கம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆசனம், பதவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொள்கையில் உறுதியாகப் பயணிக்கக் கூடிய எம்மைப் பலப்படுத்துவதுதான் காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்புதிய கூட்டணி தொடர்பில் குறிப்பிட்ட எம்.ஏ.சுமந்திரன், “இவ்வளவு காலமும் தாங்கள் மட்டுமே புனிதமானவர்கள் என்று தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து ஒரு சிலரோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால் இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம் ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம். அப்படியாக அல்லது பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் அந்தந்த சபைகளையும் சபைகளில் வேறு யாருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது என்பதை பொறுத்து நாங்கள் தீர்மானிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்களவர்களால் எனக்கு ஆபத்து இல்லை. முஸ்லீம்களால் தான் ஆபத்து’ – எம்.பி அர்ச்சுனா !

சிங்களவர்களால் எனக்கு ஆபத்து இல்லை. முஸ்லீம்களால் தான் ஆபத்து’ – எம்.பி அர்ச்சுனா !

 

அரசியலை விட்டு விலகினால் 2009ஆம் ஆண்டு இருந்த அரசியலுக்கு உள்ளேயே தமிழ் மக்கள் மீண்டும் சென்று விடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் தனக்கு சிங்களவர்களால் ஆபத்து இல்லை சிறுபான்மை இனத்தால் தான் பாதிப்பு என்று மறைமுகமாக முஸ்லீம்களைச் சுட்டிக்காட்டினார்.

அங்கு மேலும் பேசிய அவர், சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் என்னால் வழக்கு தொடர முடியும். ஏனெனில் 77 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் சபாநாயகர் பேச விடாது தடுத்துள்ளார். என்.பி.பி அரசாங்கத்திற்கு நான் உயிரோடு இருப்பதில் பிரச்சினை இருக்கின்றது. குறிப்பாக சிங்கள மக்களினாலோ அல்லது வேறு நபர்களாலோ எனக்கு பிரச்சினை இல்லை. சிறுபான்மை இனத்தவர்களாலேயே அதிக பிரச்சினை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை வரவேற்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இனியாவது அர்ச்சுனா தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்வார் என எதிர்பார்க்கிறோம் , நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பினை தூண்டி விடக்கூடாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 “அர்ச்சுனா ஆணாதிக்க சீழ் பிடித்த யாழ்ப்பாண சிந்தனையின் ஒரு துளி விஷம்” – அருண் சித்தார்த் ஆவேசம் !

“அர்ச்சுனா ஆணாதிக்க சீழ் பிடித்த யாழ்ப்பாண சிந்தனையின் ஒரு துளி விஷம்” – அருண் சித்தார்த் ஆவேசம் !

அண்மையில் எம்.பி அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் பெண் ஒருவரை பெயர் குறிப்பிட்டு விபச்சாரி என சுட்டியது தொடர்பில் மௌபிம ஜனதா கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், யாழ் மையவாத, சாதிய, சனாதன, பழைமைவாத, ஆணாதிக்க சீழ் பிடித்த மூளையின் அசிங்கமான சிந்தனைமுறை வெளியே துப்பிய புழுக்களாக இந்த சொற்களை நான் கருதுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் குறிப்பிட்ட அருண் சித்தார்த், விபச்சாரி என்னும் சொல் காட்டுமிராண்டிகளின் சொல். ஏனென்றால் அது ஆணைக் குற்றவாளியாக அறிவிப்பதில்லை. அச்சொல்லுக்கு ஆண்பால் கிடையாது. ஒரு விளிம்புநிலைப் பெண்ணை அவளது பெயர் விலாசத்துடன் இந்நாட்டின் உயரிய சபையான சட்டவாக்கும் சபையில் முழு உலகும் பார்க்க விபச்சாரி என்று சொல்லும் தைரியத்தை இந்த நபருக்கு வழங்கியது யார் அல்லது எது? மன வலிமை குறைந்த ஒரு சமான்ய பெண்ணாக இருந்தால் அவளைத் தற்கொலைக்குத் தூண்டும் மிக மோசமான (statement) பேச்சு இது. அவளை நேசிக்கும் சகோதரர்களும் ஆண்களும் இருந்தால் இதைச் பேசிய நபரைக் கொலை செய்யத் தூண்டும் மிகக் கேவலமான கீழ்த்தரமான பேச்சு இது. என தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுவிப்பு! காணிகள் விடுவிப்பு ! வீதிகள் விடுவிப்பு ! நாளையே நடக்கலாம் ! அமைச்சர் சந்திரசேகர் !

அரசியல் கைதிகள் விடுவிப்பு! காணிகள் விடுவிப்பு ! வீதிகள் விடுவிப்பு ! நாளையே நடக்கலாம் ! அமைச்சர் சந்திரசேகர் !

 

யாழ்ப்பாணத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாழ் பல்கலைக்கழக திட்டமிடல் துறை விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் அறிவிக்கப்பட்டுள்ளார். கபிலன் ஏற்கனவே யாழ் மாநகரின் வடிகாலமைப்புத் தொடர்பில் ஆய்வுகளைச் செய்து வந்தவர். அவை தொடர்பில் முன்னைய அரசாங்கங்களிடம் அவற்றை சமர்ப்பித்தும் அவை கருத்திலெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திட்டமிடல் தொடர்பில் புலமை மிகுந்த ஒருவரை என்.பி.பி முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளமை சாலப் பொருத்தமானது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதல்வர் வேட்பாளர் கபிலன், என்.பி.பியின் வேட்புமனுக்கள் யாழில் அனைத்து இடங்களிலும் எவ்வித விலக்கலும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டமை நாங்கள் எங்களுடைய மக்களுக்காக எவ்வளவு பொறுப்புணர்வோடு இவற்றைத் தயாரித்துள்ளோம் என்பதைக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சந்திரசேகர் வடக்குக்கு அரசாங்கம் பெரும் நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் நாங்கள் கிராமம் கிராமமாக அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார். மேலும் காணிகள் விடுவிப்பு மற்றும் மக்களுக்கு வழங்கிய விரைவில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

போட்டியிடாமலேயே மண் கவ்விய ஊசி, சங்கு , மான் குறூப் – யாழ் உட்பட வடக்கு கிழக்கில் வீடா ? திசைகாட்டியா ?

போட்டியிடாமலேயே மண் கவ்விய ஊசி, சங்கு , மான் குறூப் – யாழ் உட்பட வடக்கு கிழக்கில் வீடா ? திசைகாட்டியா ?

 

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பல முன்னணி தமிழ்தேசிய மற்றும் அரசியல்வாதிகளின் கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமலேயே மண் கவ்வியுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் ஊசி கட்சி சார்பாக களமிறங்கிய சுயேட்சைக்குழுவின் வேட்பு மனுக்கள் பருத்தித்துறை நகரசபை தவிர்ந்த யாழ்ப்பாணத்தின் அனைத்து சபைகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகர சபையில் முதல்வர் வேட்பாளர் கௌசல்யா நரேன் வேட்புமனுவில் கையெழுத்திடாமையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்த பணம் அனுப்புமாறு அர்ச்சுனா கோரியதையடுத்து புலம்பெயர் தமிழர்கள் பலர் அவருக்கு பணம் அனுப்பியிருந்தனர். வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்களின் கட்டுப்பணம் மீள அவர்களிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில் அர்சுனா அவற்றை புலம்பெயர் தமிழர்களுக்கு திருப்பி அனுப்புவாரா எனவும் பலர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனு யாழ்.மாநகர சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மணிவண்ணனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. வலிகாமம் தெற்கு, பருத்தித்துறை பிரதேச சபையிலும் அவர்களுடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சங்குச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் வேட்புமனுக்கள் யாழ் மாநகர சபை உட்பட பெருமளவான இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி நகர சபை, காரைநகர் பிரதேச சபை, ஊர்காவற்றுறை பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வலி.மேற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை ஆகிய இடங்களிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே நிராகரிப்பு தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உயர் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ள அதேவேளை தமிழ்க் கட்சிகள் சார்பாக நான் நீதிமன்றில் ஆஜராக மாட்டேன் என சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்புமனுக்கள் பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் களமிறக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்கள் வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தி, தமிழரசு கட்சி ஆகிய இரு கட்சிகளினது வேட்பு மனுக்கள் மட்டுமே அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனவே யாழில் திசைக்காட்டியா..? வீடா என்ற போட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.