மிருசுவில் படுகொலையாளிக்கு வெளிநாட்டு பயணத் தடை !
2000 டிசம்பரில் யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில், 8 பொது மக்கள் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், 2020 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுனில் ரத்நாயக்கவை மன்னித்து விடுவித்திருந்தார்.
இந்நிலையில், மிருசுவில் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும், எதிர்த்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதையடுத்து மிருசுவில் படுகொலை தொடர்பாக சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.