20

20

கள்ள மணல் ஏற்றிய – டிப்பரைக் காப்பாற்றிய கார் – கிளிநொச்சியில் சம்பவம் !

கள்ள மணல் ஏற்றிய – டிப்பரைக் காப்பாற்றிய கார் – கிளிநொச்சியில் சம்பவம் !

கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த டிப்பரை மடக்கிப் பிடிக்க முயற்சித்த சாவகச்சேரி பொலிஸாருக்கு, வீதியில் சென்ற கார் ஒன்று இடையூறு விளைவித்தது.

தர்மபுரம் – கல்லாறு பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு (18) சட்டவிரோதமாக மணலை ஏற்றிவந்த டிப்பரை சாவகச்சேரி பொலிஸார் துரத்திச் சென்றனர். இதன்போது பொலிஸாரது வாகனத்துக்கும், மணல் ஏற்றிவந்த டிப்பருக்கு இடையே குறுக்கு மறுக்காக வீதியில் பயணித்த கார் ஒன்று டிப்பரை தப்பிக்க வைக்க முயற்சித்தது.

இந்நிலையில் அந்த டிப்பர் வீதியில் மணலை கொட்டிவிட்டு தப்பிச் சென்றது. குறித்த காருக்கும் மணல் ஏற்றிச் சென்ற டிப்பருக்குமிடையே தொடர்பு காணப்படும் என சந்தேகிக்கப்படுகிறது.

வடக்கின் நெதர்லாந்து நான்கு வைத்தியசாலைகள் மீது ஆளுநர் நேரடிக் கவனம் !

வடக்கின் நெதர்லாந்து நான்கு வைத்தியசாலைகள் மீது ஆளுநர் நேரடிக் கவனம் !

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்க வைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இவை கடந்த காலங்களில் திறந்து வைக்கப்பட்டாலும் அவற்றின் தேவைப்பாடுகள் முழுமைப்படுத்தப்படாமையால் வினைத்திறனுடன் செயற்படமுடியாத நிலைமை காணப்படுகின்றது. ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சவாலாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவற்றை எவ்வாறு தீர்த்து இவற்றை இயங்க வைக்கலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டது !

மகிந்த ராஜபக்சவின் அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டது !

பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாக்கல் செய்த அடிப்படை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முறையான மதிப்பீட்டின்றி தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் தமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது என உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

எங்களிடம் வீசி எறிய பணமில்லை – அதனால் ஒதுங்குகின்றோம் – ஆனந்த சங்கரி !

எங்களிடம் வீசி எறிய பணமில்லை – அதனால் ஒதுங்குகின்றோம் – ஆனந்த சங்கரி !

தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது என தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது அலுவலகத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஆனந்த சங்கரி,

நாங்கள் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடவில்லை. அதற்கான பணமும் எங்களிடம் இல்லை. நடைபெற உள்ள தேர்தல் தான் முக்கியமான ஒரு தேர்தலாக அமையும். இப்போது வெளியிடங்களில் இருந்து வந்து கோடிக்கணக்கிலே பணத்தை கொட்டி தீர்த்து இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். என்னுடன் பேரம் பேசியதாக கூட சொல்லுகின்றார்கள். என்னிடம் இவ்வாறு தேர்தலில் வீசி எறிய பணம் இல்லை. ஆனால் அரசியலுக்காக இல்லாமல் அனைவருமே ஒன்று திரண்டு ஓரணியிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்க முன் வர வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

ஏறுமுகத்தில் இலங்கையின் பொருளாதாரம் – என்பிபி ஆட்சி வலுப்பெறுகின்றது !

ஏறுமுகத்தில் இலங்கையின் பொருளாதாரம் – என்பிபி ஆட்சி வலுப்பெறுகின்றது !

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட வேகமாக உயர்வடைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்தது, இது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் வலுவான உள்நாட்டு செயல்பாட்டைக் குறிப்பதாக ப்ளூம்பெர்க் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2024 டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4% உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத் துறை கடந்த செவ்வாயன்று தெரிவித்திருந்தது. முன்னதாக பொருளாதார வல்லுநர்களால் கணிக்கப்பட்ட 5.3% விரிவாக்கத்தை விட இது அதிகம் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட கடன் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை வலுப்படுத்த உதவுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்தப் பொருளாதார மீட்சியைச்சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதியம், தொழிற்சங்கங்கள் நாட்டின் பொருளாதார மீட்சியைக் கருத்தில் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ரூபாயின் பெறுமதியும் அதிகரித்துள்ளது. பொருளாதாரச் சுட்டிகள் அனைத்தும் இலங்கையின் புதிய அரசு ஸ்தீரத்தன்மையுடன் செயற்படுவதையே எடுத்துக் கொட்டுகின்றது. தற்போதைய அரசின் ஆட்சியில் மீண்டும் பொருளாதார நெருக்கடியோ, அல்லது எரிபொருளுக்கு வரிசையில் நிற்கும் நிலையோ ஏற்பட வாய்ப்பில்லை என்றே பொருளாதார ஆய்வாளர்கள் எதிர்வுகூறுகின்றனர்.

 

சரணடைந்தார் தேசபந்து – ஆயிரத்துக்கும் அதிகமான மதுபான போத்தல்கள் மீட்பு !

சரணடைந்தார் தேசபந்து – ஆயிரத்துக்கும் அதிகமான மதுபான போத்தல்கள் மீட்பு !

 

பல நாட்களாக தலைமறைவாக இருந்து மாத்தறை நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.

அதில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள குழுவொன்று ஹோகந்தர பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபரின் வீட்டை சோதனையிட்டது. அங்கு 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 மது போத்தல்களும், 1009 மதுபான போத்தல்களும் காணப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு வெலிகமாவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் தேடப்பட்டமை குறிப்பிடத்தக்

வடக்கு தொழிற்சாலைகளில் வடபகுதி மக்களுக்கே !

வடக்கு தொழிற்சாலைகளில் வடபகுதி மக்களுக்கே !

ஆனையிறவு உள்ளிட்ட சகல தொழிற்சாலைகளும் மீள ஆரம்பிக்கப்பட்டு, வட பகுதி மக்களுக்கு மாத்திரம் தொழில்வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய ஸ்ரீதரன் எம்.பி முன்வைத்த, சில விடயங்களுக்குப் பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

ஆனையிறவு உப்புத் தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஆனையிறவு உப்பு சந்தைக்கு விற்பனைக்கு விடப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர் சுனில், ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை பண்டார வன்னியனின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.

SK கிருஷ்ணாவுக்கு இப்போதைக்கு விடுதலையில்லை – அடக்கி வாசிக்கும் யூடியுப்பர்கள் !

SK கிருஷ்ணாவுக்கு இப்போதைக்கு விடுதலையில்லை – அடக்கி வாசிக்கும் யூடியுப்பர்கள் !

 

வீடு ஒன்றினுள் வீட்டாரின் அனுமதியின்றி அத்துமீறி வீடியோ எடுக்க முற்பட்ட யாழ்ப்பாண யூடியூப்பர் SK கிருஷ்ணா, எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அவர் கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி பண்டத்தரிப்பு பகுதிக்கு சென்றவேளை சில்லையூர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் கைதாகியிருந்த கிளிநொச்சி யூடியுபரான DK கார்த்திக் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அண்மைய நாட்களில் உதவி செய்வதாக ஈழத்து யூடியுப் சேனல்களில் பதிவேற்றப்பட்ட பலருடைய வீடியோக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

வலம்புரியில் நடந்த தாக்குதல்: அர்ச்சுனாவின் முகநூல் பதிவுக்கு எதிராக 500 மில்லியன் மானநஸ்ட்ட வழக்கு !

வலம்புரியில் நடந்த தாக்குதல்: அர்ச்சுனாவின் முகநூல் பதிவுக்கு எதிராக 500 மில்லியன் மானநஸ்ட்ட வழக்கு !

பா உ அர்ச்சுனா இராமநாதன் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் மார் 10 இல் மற்றுமொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பா உ அர்ச்சுனாவும் – கௌசல்யாவும் உணவருந்திக் கொண்டிருந்த போது வம்புசெய்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட ரட்ணம் சிறிகரன் என்ற ஜேர்மன் புலம்பெயர் தமிழர் வழக்குப் பதிவு செய்துள்ளார். இது ஊசி அர்ச்சுனாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவாதி பாலச்சந்திர தினேஸ் 59 வயது ரட்ணம் சிறிகரன் சார்பில் வழக்கைப் பதிவு செய்தள்ளார்.

வலம்புரி சம்பவத்தில் ரட்ணம் சிறிகரன் மற்றும் அவருடைய கார்ச் சாரதி வலம்புரியில் உணவருந்திக் கொண்டிருந்த அர்ச்சுனாவையும் கௌ;சல்யாவையும் அணுகியதும் அது வாக்கு வாதமாகி கார்ச்சாரதியை அர்ச்சுனா சாப்பாட்டு பிளேட்டினால் தாக்கியதும் தெரிந்ததே. அதன் பின்னர் அர்ச்சுனாவும் அவரால் தாக்கப்பட்ட சாரதியும் சமாதானமாகப் போய்விட்டார்கள்.

ஆனால் சம்பவத்திற்குப் பின் பெப்ரவரி 12 இல் அர்ச்சுனா முகநூலில் வெளியிட்ட பதிவில் ரடணம் சிறிகரன் கிரிமினல் செயற்பாடுகளில் தொடர்புடையவர் என்றும் நிதிமோசடிகளில் ஈடுபட்டவர் என்றும் அர்ச்சுனா குற்றம்சாட்டியிருந்தார். அத்தோடு ரட்ணம் சிறிகரனின் மனைவி மற்றும் அவரின் மகளின் படத்தையும் வெளியிட்டு இருந்தார். தன்னுடைய நன்மதிப்பைக் குறைக்கும் இச்செயலுக்காகவே ரட்ணம் சிறிகரன் 500 மில்லியன் இலங்கை ரூபாய் நஸ்ட்ட ஈடு கோரியுள்ளார். அத்தோடு தன்னைப் பற்றி எழுதியவற்றை முகநூலில் இருந்து நீக்க வேண்டும், பொதுத்தளத்தில் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும், மீண்டும் இவ்வாறான பொய்யான விடயங்களைப் பரப்ப மாட்டேன் என எழுத்து மூலமாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ரட்ணம் சிறிகரன் கோரியுள்ளார்.

ரட்ணம் சிறிகரன் வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கும் உதவிகள் வழங்கி வருபவர் என்றும் சம்பவத்திற்கு முன்தினமும் அவர் உதவி செய்த பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டவர் என்றும் தெரியவருகின்றது.

இச்சட்ட நடவடிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு அர்ச்சுனாவுக்கு 14 நாட்கள் உள்ளது. மார்ச் 10 இல் இக்கடிதம் அர்ச்சுனாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது எனத் தெரியவருகின்றது. அர்ச்சுனா ஒரு கௌரவ பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் இவ்வழக்கு முக்கியத்துவம் பெற வாய்ப்புள்ளது.

அர்ச்சுனா – கௌசல்யா கூட்டுக்கு தமிழ் மக்களுடன் இருந்த தேன்னிலவு கசக்க ஆரம்பித்துவிட்டது !

அர்ச்சுனா – கௌசல்யா கூட்டுக்கு தமிழ் மக்களுடன் இருந்த தேன்னிலவு கசக்க ஆரம்பித்துவிட்டது !
வருகின்ற உள்ளுராட்சித் தேர்தலில் அர்ச்சுனா – கௌசல்யா ஊசிக்கூட்டை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. சாளினி, சங்கவி, சுவஸ்திகா எனப் பெண்களை விபச்சாரிகள் எனப் பிரச்சாரம் செய்து அவர்களின் நிர்வாணப் படங்களை முகமூடி போட்டுக்கொண்டு வெளியிட்ட அர்ச்சுனா – கௌசல்யா ஊசிக்கூட்டணியின் பிரச்சார ஊடகமாக மாறியுள்ளது ஊழல் ஒழிப்பு அணி வன்னி. இந்தக் கூட்டுக்குள் இருக்கும் மற்றுமொருவர் லண்டனில் வாழும் அர்ச்சுனா அடியான் – ஊசி அடியான். இவர்கள் பெண்கள் மீது நடத்திய மும்முனைத் தாக்குதல்கள் சமூகத்தில் முன்னுக்கு வருகின்ற பெண்களின் நடத்தை மீது களங்கத்தை ஏற்படுத்துவது, அவர்களை மிரட்டிப் பணிய வைப்பது இல்லையேல் கடைசி ஆயதமாக அவர்களை நிர்வாணமாக்கிய படங்களை வெளியிடுவது. இதற்கு மாநகர முதல்வராக போட்டியிடும் கௌசல்யாவும் உடந்தையாக உள்ளார்.
மூகமூடி அணிந்து கொண்டு இந்த இழிசெயலில் ஈடுபடும் ஊழல் ஒழிப்பு அணி வன்னியை ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிடுபவர்கள் என்று சான்றிதழையும் கௌசல்யா வழங்கியுள்ளார். அர்ச்சுனாவின் பிரச்சாரப் பீரங்கியான ஊழல் ஒழிப்பு வன்னி யிடம் தன்னைப் பற்றியும் எழுதச் சொன்னதாக சொல்லி பெருமைப்படுகின்றார் அர்ச்சுனா. நீங்களே நடத்தும் முகமூடி வலைத்தளத்திற்கு நீங்களே என்னைப் பற்றியும் எழுதுங்கோ என்று கேட்பீங்களாம். அவர்கள் அதற்கு கும்பிடு போடுவார்களாம். யாழ் மக்கள் எத்தினை பேர் தான் காதில பூ வைப்பீர்கள். எத்தனைதரம் தான் வைப்பீர்கள்.
தற்போது இந்த ஊசிக் கூட்டுத் தொடர்பில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழ் தேசியக் கட்சிகள் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யுத்தத்திற்குப் பின்னான 15 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்ததால் தான் சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து கதாநாயகனாகத் தோண்றிய அர்ச்சுனாவை மக்கள் நம்ப வேண்டி வந்தது. ஆனால் ஊசி அர்ச்சுனா தான் எவ்வளவு ஆபத்தானவர் என்பதை பெண்களுக்கு விபச்சாரப் பட்டம் வழங்கி வாக்களித்த யாழ் மக்களின் முகத்தில் கரி பூசிவிட்டார். அதனை ஒருவர் இவ்வாறு விபரிக்கின்றார்.