27

27

பெண்களுக்கு எதிராக யாழ் மையவாத ஆணாதிக்க சக்திகள் ஓரணியில் திரள்கின்றன ! ஆனால் முறத்தால் விரட்டப் போகின்றனர் எம் தமிழ் பெண்கள் !

பெண்களுக்கு எதிராக யாழ் மையவாத ஆணாதிக்க சக்திகள் ஓரணியில் திரள்கின்றன ! ஆனால் முறத்தால் விரட்டப் போகின்றனர் எம் தமிழ் பெண்கள் !
மூத்த ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களுடனான உரையாடல்

 

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசா எங்கிலும் பாலஸ்தீனியர்கள் போராட்டம் !

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசா எங்கிலும் பாலஸ்தீனியர்கள் போராட்டம் !

ஹமாஸ் அமைப்பு காசாவை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பாலஸ்தீனத்தில் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.

காசா மக்களைப் பாதுகாக்க ஹமாஸ் விரும்பினால் அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டம் போரை நிறுத்த கோரி வடக்கு காசாவின் பல்வேறு பகுதிகளிலும் பரவுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருந்து நிராகரிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு !

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருந்து நிராகரிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு !

 

யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன வழக்கு தொடர்ந்துள்ளன.

தமிழ் மக்கள் கூட்டணியினால் வழங்கப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய கூற்றில் தவறு உள்ளதாக கூறி அந்த பெண் வேட்பாளரை பட்டியலில் இருந்து நீக்கியமையால், தேவையான பெண் பிரதிநிதித்துவம் இல்லை என மாநகர சபைக்கான வேட்பு மனுவை தேர்தல்கள் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது என குறிப்பிட்டு, ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் ஊடாக உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையில், முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் முதல்வர் வேட்பாளராக கொண்டு களமிறங்கிய தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வெப்பநிலை திடீர் அதிகரிப்பு !

யாழில் வெப்பநிலை திடீர் அதிகரிப்பு !

 

யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளமையால் உடல் வெப்பத்தை தணிக்க கூடிய நீராகாரங்களை அதிகமாக அருந்துமாறு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் என். சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை அண்மையில் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு இருவர் மரணமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்படுவது மீனவர்கள் தான் – இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பு !

பாதிக்கப்படுவது மீனவர்கள் தான் – இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பு !

 

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வந்த ஐவர் கொண்ட குழு – இலங்கை மீனவ மீனவ பிரதிநிதிகளுடன் வவுனியாவில் கலந்துரையாடியிருந்தனர் .

மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசமட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுத்து நிரந்தர தீர்வை எட்ட வேண்டும் என கலந்துரையாடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்று நடைமுறைப்படுத்தாமையால் வரை தமிழ்நாட்டிலும் வடமாகாணத்திலும் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள, வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் அன்னலிங்கம் இந்திய மீனவர்களுடன் வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பு திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கோப்பாய் அபிவிருத்தி குழு கூட்டம் – அடக்கி வாசித்த எம்.பி இராமநாதன் அர்ச்சுனா 

கோப்பாய் அபிவிருத்தி குழு கூட்டம் – அடக்கி வாசித்த எம்.பி இராமநாதன் அர்ச்சுனா

கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில், வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, விவசாயம், கல்வி, நீர்ப்பாசனம் சம்பந்தமான வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், பிரதேச செயலாளர், மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அடுத்தடுத்து நல்லூர் பிரதேச செயலக கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஆகியவற்றில் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா பலத்த குழப்பங்களை ஏற்படுத்தியிருந்த போதும் கூட கோப்பாய் அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா அமைதி காத்ததுடன், முக்கியமான விடயங்களை நீங்கள் முன்வைப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என எம்.பி அர்ச்சுனாவை நோக்கி எம்.பி ரஜீவன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வியாழேந்திரன் கைது – பட்டாசு வெடித்து இளைஞர்கள் கொண்டாட்டம்!

வியாழேந்திரன் கைது – பட்டாசு வெடித்து இளைஞர்கள் கொண்டாட்டம்!

 

கடந்த வருடம் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கியவருக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம், வியாழேந்திரன் கொழும்பு புதுக்கடை பகுதியில் வைத்து இலஞ்ச உழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்குறித்த வழக்கு தொடர்பில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மண் அகழ்விற்கு அனுமதி பெற்றுதருவதாக வர்த்தகர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் மற்றும் பிரதேச அமைப்பாளர் ஆகிய இருவரையும் மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப்பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இதனிடையே முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் கைதினை தொடர்ந்து சில இளைஞர்கள் மட்டக்களப்பு நகர மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு வெடி கொழுத்தி கொண்டாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவீனமயப்படுத்தப்படும் இலங்கையின் முன்பள்ளிகள் – அமைச்சர் சாவித்திரி

நவீனமயப்படுத்தப்படும் இலங்கையின் முன்பள்ளிகள் – அமைச்சர் சாவித்திரி
அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவான பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை அறிமுகப்படுத்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் முன்பள்ளிகளுக்காக தேசிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு இணையாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தற்போது நாட்டில் 13 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளும் பதிவு செய்யப்படாத மூவாயிரம் முன்பள்ளிகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் முன்பள்ளி கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக கல்வியமைச்சின் பங்களிப்புடன் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 09 மாகாணங்களிலும் உள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் ஒரே கொள்கையின் கீழ் இதனை நடைமுறைப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

நமது தேசிய நல்லிணக்க செயன்முறையை பிரித்தானியா சிக்கலாக்கியுள்ளது – இலங்கை வெளிவிவகார அமைச்சு !

நமது தேசிய நல்லிணக்க செயன்முறையை பிரித்தானியா சிக்கலாக்கியுள்ளது – இலங்கை வெளிவிவகார அமைச்சு !

 

நான்கு இலங்கையர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடையானது ‘ ஒருதலைபட்ச ‘ நடவடிக்கை எனவும் , இலங்கையின் தேசிய நல்லிணக்க செயல்முறையை இது பாதிக்கும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய இராச்சியம் தடைவிதித்த 4 இலங்கையர்களில் மூவர் இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் இராணுவத் தளபதிகளாவர். இதற்குப் பொறுப்பானவர்களுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகத் நமது தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்யப்பட்ட உறுதிமொழியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடுகளின் இத்தகைய ஒருதலைபட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயன்முறைக்கு உதவாததுடன், அதற்கு மாறாக செயன்முறையை மேலும் சிக்கலாக்குகிறது. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டு வழிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கடந்த கால மனித உரிமை மீறல்கள் உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள்மூலம் கையாளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

4.4: இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் , இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் நேற்றையதினம் இது தொடர்பில் தெரிவித்தார் .

 

4.5: இதேவேளை, இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர்கள் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடைகளை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

4.6: மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று கோருகின்ற பிரித்தானியாவே மனித உரிமைகளைப் போட்டு மிதித்து காஸாவில் இனப்படுகொலைக்கு உதவியளித்து வருகின்றது. இலங்கையின் 30 ஆண்டு கால யுத்தம் எண்ணற்ற போர்க்குற்றங்களுக்கு வித்திட்டது. அதில் சம்பந்தப்பட்ட இலங்கை இராணுவம் , விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதக்குழுக்கள் மிக மோசமான யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்தன. ஆனால் இப்போர்க்குற்றங்கள் தண்டிக்கப்படுவதில்லை என்பது பெரும்பாலும் எழுதப்படாத ஒரு சட்டமாகவே சர்வதேச சமூகத்தில் இருந்து வருகின்றது.

 

4.7: ஈராக், அப்கானிஸ்தான், உக்ரைன் – அமெரிக்கா, பிரித்தானியா, இஸ்ரேல், ரஷ்யா என எந்த நாட்டு இராணுவமும் தங்கள் நாட்டு இராணுவத்தை இதுவரை தண்டிக்கவில்லை. இலங்கையும் தண்டிக்கப் போவதில்லை. இதுவே யதார்த்தம். இதில் அண்மைய எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படப் போவதுமில்லை. மீண்டுமொரு யுத்தக் குற்றம் நிகழாத அளவுக்கு அரசியலை முன்னெடுப்பதே சிறந்த வழி.

 

போரை நடத்தியவன் நானே. போர்க் குற்றங்களில் யாரும் ஈடுபடவில்லை – முன்னாள் ஜனாதிபதி மகிந்த 

போரை நடத்தியவன் நானே. போர்க் குற்றங்களில் யாரும் ஈடுபடவில்லை – முன்னாள் ஜனாதிபதி மகிந்த

 

விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கையின் முன்னாள் படைத்தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்தகரெனகொட மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோருக்கு எதிரான எந்த குற்றச்சாட்டுகளும் எங்கும் நிரூபிக்கப்படவில்லை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மகிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையின் அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த நான்தான், விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரை நடத்த முடிவு செய்தேன். தாக்குதலில் ஈடுபட்டிருந்த போது இராணுவம் அந்த முடிவை செயல்படுத்தியது. போரின் போது பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நடந்ததாக பிரித்தானிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை நான் கடுமையாக நிராகரிக்கிறேன். எனவே, இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் கடமைகளைச் செய்த ஆயுதப் படை வீரர்களை குறிவைத்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் அழுத்தங்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நிற்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

புலிகளை வென்றதை வைத்து மகிந்தவும் ஏனைய எதிர்க்கட்சிகளும் தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கடிகொடுக்க நேரம் பார்த்து இருந்தனர். அதற்கான வாய்ப்பை பிரித்தானிய அரசின் தடையுத்தரவு அவர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. அதே போல் மாறி மாறி இனவாதம் பேசி அரசியல் நடத்துவதற்கு தடையாக உள்ள தேசிய மக்கள் சிக்தியை கவிழ்ப்பதற்கும் தமிழ் தேசியக் கட்சிகளும் சிங்கள பேரினவாதக் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து இனவாதத்தை தூண்டிவிட்டு தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை கவிழ்க்கலாம் என பல்வேறு முயற்சிகளையும் எடுக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தல், உள்ளுராட்சித் தேர்தலில் மண் கவ்விய சிங்கள தமிழ் தேசியவாதக் கட்சிகளுக்கு உள்ள ஒரே துருப்புச் சீட்டு உள்ளுராட்சி சபை. வாயில் வந்தது எல்லாம் பேசி களமாடுகின்றனர். மே ஆறு பலருக்கும் பல கட்சிகளுக்கும் இறுதி ஊர்வலமாக அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.