நமது தேசிய நல்லிணக்க செயன்முறையை பிரித்தானியா சிக்கலாக்கியுள்ளது – இலங்கை வெளிவிவகார அமைச்சு !

நமது தேசிய நல்லிணக்க செயன்முறையை பிரித்தானியா சிக்கலாக்கியுள்ளது – இலங்கை வெளிவிவகார அமைச்சு !

 

நான்கு இலங்கையர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடையானது ‘ ஒருதலைபட்ச ‘ நடவடிக்கை எனவும் , இலங்கையின் தேசிய நல்லிணக்க செயல்முறையை இது பாதிக்கும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய இராச்சியம் தடைவிதித்த 4 இலங்கையர்களில் மூவர் இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் இராணுவத் தளபதிகளாவர். இதற்குப் பொறுப்பானவர்களுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகத் நமது தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்யப்பட்ட உறுதிமொழியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடுகளின் இத்தகைய ஒருதலைபட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயன்முறைக்கு உதவாததுடன், அதற்கு மாறாக செயன்முறையை மேலும் சிக்கலாக்குகிறது. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டு வழிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கடந்த கால மனித உரிமை மீறல்கள் உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள்மூலம் கையாளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

4.4: இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் , இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் நேற்றையதினம் இது தொடர்பில் தெரிவித்தார் .

 

4.5: இதேவேளை, இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர்கள் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடைகளை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

4.6: மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று கோருகின்ற பிரித்தானியாவே மனித உரிமைகளைப் போட்டு மிதித்து காஸாவில் இனப்படுகொலைக்கு உதவியளித்து வருகின்றது. இலங்கையின் 30 ஆண்டு கால யுத்தம் எண்ணற்ற போர்க்குற்றங்களுக்கு வித்திட்டது. அதில் சம்பந்தப்பட்ட இலங்கை இராணுவம் , விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதக்குழுக்கள் மிக மோசமான யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்தன. ஆனால் இப்போர்க்குற்றங்கள் தண்டிக்கப்படுவதில்லை என்பது பெரும்பாலும் எழுதப்படாத ஒரு சட்டமாகவே சர்வதேச சமூகத்தில் இருந்து வருகின்றது.

 

4.7: ஈராக், அப்கானிஸ்தான், உக்ரைன் – அமெரிக்கா, பிரித்தானியா, இஸ்ரேல், ரஷ்யா என எந்த நாட்டு இராணுவமும் தங்கள் நாட்டு இராணுவத்தை இதுவரை தண்டிக்கவில்லை. இலங்கையும் தண்டிக்கப் போவதில்லை. இதுவே யதார்த்தம். இதில் அண்மைய எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படப் போவதுமில்லை. மீண்டுமொரு யுத்தக் குற்றம் நிகழாத அளவுக்கு அரசியலை முன்னெடுப்பதே சிறந்த வழி.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *