04

04

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படும் எனப் பொய்ப்பரப்புரை !

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படும் எனப் பொய்ப்பரப்புரை !

வெளிநாடுகளில் தொழில் செய்யும் இலங்கை தொழிலாளர்களால் பணம் அனுப்புவதற்கு வரி விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறி செய்தித்தாள்களில் தவறான தகவல்கள் பரவி வருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கணணித் தொழில்நுட்பத்தினூடாக இலங்கையில் இருந்துகொண்டு சர்வதேச நாடுகளுக்கு தங்களது சேவையை ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஏனைய தொழிலாளர்கள் போன்று 15 வீதம் வரையான வருமான வரி அறவிடப்படும் என்ற அறிவிப்பை சில ஊடகங்கள் வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கும் வரி அறிவிடப்படும் என பொய்ப்பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்.

2025 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் அனுப்புவதற்கு 15% வரி விதிக்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தித்தாள் தெரிவித்துள்ளது. 2025 பட்ஜெட் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்த நேரத்தில், இது பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக எனக்கும் அரசாங்கத்திற்கும் தீங்கு விளைவிக்கும் முயற்சியாகும் எனவும் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

யானைகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட ரயில் சேவை நேர அட்டவணை !

யானைகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட ரயில் சேவை நேர அட்டவணை !

சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்கும் படி அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ் வழக்கு விசாரணைக்கு வர முன்னரே ரயில்வே திணைக்களம் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் மட்டக்களப்பு பாதையில் தொடங்கும் ரயில் கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

அரசியல் தலையீடின்றி மனிதப் புதைகுழி சுயாதீன விசாரணைகள் !

அரசியல் தலையீடின்றி மனிதப் புதைகுழி சுயாதீன விசாரணைகள் !

யாழ். அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான நீதித்துறையின் செயற்பாடுகளுக்கு அநுர அரசாங்கம் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சித்துப் பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசாங்கம் நீதியான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கருத்து வெளியிட்டமை தொடர்பில் அமைச்சரிடம் எழுப்பப்பட்ட வினாவுக்கு பதிலளித்த போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் ஆறு வார காலங்களில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க வாசுதேவா தெரிவித்துள்ளார். இரண்டாவது அறிக்கையில் அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட இலக்கத்தகடுகள் ஆடைகளில் பொறிக்கப்பட்ட இலக்கங்கள் மற்றும் ஏனைய விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலக்கத் தகடுகளுக்குரியவர்களின் உறவினர்கள் யாராவது முன்வந்தால் இறந்தவர்களை நாங்கள் இலகுவாக இனங்காண முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு உள்ளூராட்சி சபையில் தமிழ்ப் பிரதிநித்துவத்தை அதிகரிக்க வேண்டும் !

கொழும்பு உள்ளூராட்சி சபையில் தமிழ்ப் பிரதிநித்துவத்தை அதிகரிக்க வேண்டும் !

கொழும்பு தமிழர்களின் நீண்ட கால கோரிக்கைக்கையான தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தொடர்பில் சுமந்திரனிடம் சிறப்பு செயல்த்திட்டம் உள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளைத் தலைவர் சி. இரத்தினவடிவேல் தெரிவித்தார்.

வருகிற உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கட்சியின் செயற்பாட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இவ் விடயம் குறித்து எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்த போது, தற்போது நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாகவும், கொழும்புவாழ் தமிழ் மக்களால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும் கட்சியினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

வாள்வெட்டு உள்ளிட்ட சமூக சீரழிவுகளுக்கு எதிராக கிழக்கில் மக்கள் போர்க்கொடி !

வாள்வெட்டு உள்ளிட்ட சமூக சீரழிவுகளுக்கு எதிராக கிழக்கில் மக்கள் போர்க்கொடி !

மட்டக்களப்பின் ஆரையம்பதி பகுதியில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தை இல்லாமல் செய்ய வேண்டியும், கடந்த மாதம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கான நிதியினை வழங்கக்கோரியும், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று பெப்ரவரி 02 ஆம் திகதி மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்றது.

ஆரையம்பதி விளையாட்டு கழக உறுப்பினர்கள் மீது வாள் வெட்டு சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு கடுமையான தண்டனையை பிரதேச செயலாளர் பெற்றுத் தர வேண்டும் எனவும் போலீசார் சரியான முறையில் நீதி பெற்றுத்தரவில்லை எனவும், இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை மண்முனைப்பற்றில் உள்ள பொதுமக்கள், விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மேற்கொண்டிருந்தன. அப்போது வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமாரவுக்கு என மகஜர் ஒன்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

அண்மையில் கிழக்கின் பல பகுதிகளிலும் பெருகி வரும் மதுபான கடைகளை எதிர்த்தும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது

பாதாள உலக குற்றங்களுக்கு முடிவுகட்ட என்பிபி அரசாங்கம் தீவிரம் !

பாதாள உலக குற்றங்களுக்கு முடிவுகட்ட என்பிபி அரசாங்கம் தீவிரம் !

கடந்த காலங்களில் நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்த போது பாதாள உலக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அதிகரித்திருந்தன. இந்தக் குழுக்களை டுபாய், இந்தியா மற்றும் இத்தாலி போன்ற வெளிநாடுகளிலிருந்து, இதன் தலைவர்கள் இயக்குகின்றனர். சமீபத்தில் நீதிமன்றத்தில் சுட்டுக்கொள்ளப்பட்ட பாதாள உலகத்தைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்யும் ஒப்பந்தம் டுபாயிலிருந்தே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இப்படியான பாதாள உலக கும்பல்களின் தகவல் தொடர்பு வலையமைப்புக்கள் கண்காணிக்கும் பொறிமுறையொன்று அமைக்கபடவுள்ளது.

பாதாள உலக கும்பல்களை கண்காணிக்க பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட 5,000 புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதாள உலக குற்றக் கும்பல்களின் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளை கண்காணித்து தினசரி சிறப்பு பகுப்பாய்வு அறிக்கை ஜனாதிபதி அநுரவிடம் கையளிப்பார்கள் என அரசாங்கத் செய்தித் தொடர்பாளர் ஊடாக தெரியவந்துள்ளது.

 

புதுக்குடியிருப்பில் மட்டும் 27 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை !

புதுக்குடியிருப்பில் மட்டும் 27 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை !

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பை அண்டிய பகுதிகளில் மட்டும் 27 இரகசிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மன்னகண்டல் முதல் வள்ளிபுனம் வரை இந்த முற்றுகை இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் காய்ச்சிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தப்பிச் சென்று விட்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஊழல் ஒழிப்பு அணி வன்னியும் தொடர்ச்சியாக கசிப்பு , போதைப் பொருள், வாள்வெட்டு மற்றும் ஆயுக்கடத்தல் சம்பந்தமாக வெளிப்படுத்தி வருகின்றது.

தர்மபுரம் பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத நடவடிக்கைகளின் பின்னணியில் கிளிநொச்சி நடப்பு பாராளுமன்ற உறுப்பினர் மீதும் குற்றம் சாட்டப்படுகின்றது.

இந்த விடயம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்திருந்தது. முல்லைத்தீவில் அதீத படையினர் பிரசன்னத்திற்கு மத்தியிலும் கசிப்பு வியாபாரம் கோலோச்சுவதாக தமிழரசுக் கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றத்தில் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அ

நாட்டில் எரிபொருள் பிரச்சினையில்லை ! கமிஷன் பிரச்சினைதான் உள்ளது ! நாட்டின் நிதிக் கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலரைத் தொடுகின்றது !

நாட்டில் எரிபொருள் பிரச்சினையில்லை ! கமிஷன் பிரச்சினைதான் உள்ளது ! நாட்டின் நிதிக் கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலரைத் தொடுகின்றது !

நாட்டில் எரிபொருள் பிரச்சினையில்லை. கமிஷன் பிரச்சினையே உள்ளது. அதற்காகவே விநியோகஸ்தர்கள் காலிமுகத்திடலில் மூன்றுநாட்களாக முற்றுகையிட்டுள்ளனர். தங்களுக்கு வரவேண்டிய கமிஷன் வழங்கப்படவில்லை என்றே விநியோகஸ்தர்கள் கெம்பியுள்ளனர். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விநியோகஸ்தர்களுக்கு வழங்கிய கொமிஷனை ரத்து செய்ததால் இவர்கள் அந்தக் கொமிஷனைக்கோரி எரிபொருளுக்கான கோரிக்கையை வைக்காமல் நாட்டில் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரசாங்கத்தை பணிய வைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அது சாத்தியமாகுமா அல்லது அரசாங்கம் இராணுவத்தை அனுப்பி விநியோகத்தை மேற்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த விநியோகஸ்தர்கள் 1400 பேர் 37 பில்லியன் ரூபாயை சட்டவிரோதமாக பகிர்ந்துகொண்ட தாக குற்றம்சாட்டியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்விநியோகஸ்தர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வுத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் ஊழல் மற்றும் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பு, விநியோகஸ்தர்கள் பொதுமக்களை துன்புறுத்தி சட்டவிரோதமாக கொமிஷனை அறவிடுவதாக புகார் செய்துள்ளனர்.

இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசு இருக்கும் வரை எரிபொருள் பிரச்சினை ஏற்படுவதற்கு வழியில்லை என்றே பொருளாதார சுட்டிகள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி என்பன இலங்கையின் பொருளாதாரச் சுட்டிகளில் திருப்தியடைந்துள்ளன. தற்போது இலங்கையின் அந்நியச் செலவாணி கையிருப்பு 6.4 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. இது அடுத்த ஆண்டு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் தேசிய மக்கள் சக்தி அரசில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பே இல்லை என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

அத்துமீறும் இந்திய மீனவர்களை பா உ சிறிதரன் பார்வையிட்டார் ! பாதுகாக்கும் படி பாஜாக தமிழகத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை ! பாதிக்கப்படும் இலங்கைத் தமிழ் மீனவர்களை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிடுகின்றது !

அத்துமீறும் இந்திய மீனவர்களை பா உ சிறிதரன் பார்வையிட்டார் ! பாதுகாக்கும் படி பாஜாக தமிழகத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை ! பாதிக்கப்படும் இலங்கைத் தமிழ் மீனவர்களை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிடுகின்றது !

இலங்கையின் வடக்கில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிட்டுவிடு உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்குகின்றன. ஆனால் தமிழகத்தின் பாஜாக தலைவர் அண்ணாமலை அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் வரும் மீனவர்களை நடுக்கடலில் வைத்து கைது செய்வதாகக் கூறி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அவ்வாறு கைது செய்யப்படுபவர்களை உடனடியாக நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் அண்ணாமலை வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் அத்துமீறும் இந்திய மீனவர்கள், தங்கள் பொருளாதாரத்தை அழிக்கிறார்கள் என்று போராடிய போது அவர்களைக் கண்டுகொள்ளாத பா உ எஸ் சிறிதரன் அத்துமீறிய போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை யாழ் சிறையில் சென்று பார்வையிட்டு அவர்களது நலன்களை விசாரித்து அறிந்தார்.

அத்துமீறி வந்து வடக்கின் மீன்வளத்தை அழிக்கும் இந்திய மீனவர்களுக்கு அங்குள்ள கட்சிகள் பெரும் ஆதரவை வழங்குகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களைப் பற்றி தமிழ் தேசியக் கட்சிகள் மௌனமாகவே இருந்து வருகின்றன. பாராளுமன்றத்திலோ, மாகாணசபையிலோ, உள்ளுராட்சி சபைகளிலோ பன்மைத்துவ அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாததும் அதற்குக் காரணமாக உள்ளது என்கிறார் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த். தமிழ் தேசிய அரசியலை சைவ வெள்ளாள மேட்டுக்குடி ஆண்களே பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஏனைய சமூகங்களின் வலியை இந்த தமிழ் தேசியவாதிகளால் உணரமுடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கிடையே நேற்று எழுவைதீவு அனலைதீவு கடற்பரப்பில் 200 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் காரைநகர் மற்றும் மன்னார் பேசாலையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வடக்கிற்கான கேரளா கஞ்ஞா மற்றும் போதைப்பொருட்களின் நுழைவாயிலாக வடக்கு கடற்பரப்பு உள்ளது. இந்திய மீனவர்களே அதனை இலங்கைக்கு கொண்டுவருகின்றனர் என்பதும் தற்போது உறுதியாகி உள்ளது.

வடக்கின் தமிழர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகின்ற போதும் தமிழ் தேசியத் தலைமைகள் இது விடயத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க மறுத்துவருகின்றனர். கடந்த வியாழக்கிழைமை வடக்கு மீனவர்கள் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் தமிழகத்தில் ராமேஸ்வரத்திலும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2024இலிருந்து 535 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

வடக்கு மீனவர்கள் விடயத்தில் தற்போது தேசிய மக்கள் சக்தியினர் மட்டுமே அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர். கிளிநொச்சி நீதமன்றமும் தண்டனைகளை அபராதங்களை சற்று கடுமையாக்கி வருகின்றது. தமிழரசுக் கட்சியின் பா உ ரவிகரன் மீனவர்கள் விடயத்தில் தனித்துக் குரல் எழுப்பியுள்ளார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராமுகமாகவே உள்ளனர்.

வடக்கு மீனவர்களின் பிரச்சினையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிபேதமில்லாமல் இந்திய அரசுக்கு அழுத்தங்களை வழங்கி வடக்கு மீனவர்களின் பிரச்சிகைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இது விடயத்தில் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் பிரச்சினையை சரியானமுறையில் இனம் கண்டுள்ளார். அவருடைய கூற்றுப்படி தமிழகத்தில் உள்ள அப்பாவி மீனவர்களைப் பயன்படுத்தி தமிழக அரசியல் செல்வாக்குடையவர்களும் பெரும் பணமுதலைகளும் லாபமீட்டுவதாகத் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இந்திய கடற்படை இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதற்கு முடிவுகட்ட வேண்டும். கேரளா கஞ்சா வடகடற்பரப்பிற்குள் நுழைவதற்கு முடிவு கட்ட வேண்டும்.