ஏறுமுகத்தில் இலங்கையின் பொருளாதாரம் – என்பிபி ஆட்சி வலுப்பெறுகின்றது !
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட வேகமாக உயர்வடைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்தது, இது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் வலுவான உள்நாட்டு செயல்பாட்டைக் குறிப்பதாக ப்ளூம்பெர்க் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2024 டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4% உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத் துறை கடந்த செவ்வாயன்று தெரிவித்திருந்தது. முன்னதாக பொருளாதார வல்லுநர்களால் கணிக்கப்பட்ட 5.3% விரிவாக்கத்தை விட இது அதிகம் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட கடன் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை வலுப்படுத்த உதவுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்தப் பொருளாதார மீட்சியைச்சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதியம், தொழிற்சங்கங்கள் நாட்டின் பொருளாதார மீட்சியைக் கருத்தில் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் ரூபாயின் பெறுமதியும் அதிகரித்துள்ளது. பொருளாதாரச் சுட்டிகள் அனைத்தும் இலங்கையின் புதிய அரசு ஸ்தீரத்தன்மையுடன் செயற்படுவதையே எடுத்துக் கொட்டுகின்றது. தற்போதைய அரசின் ஆட்சியில் மீண்டும் பொருளாதார நெருக்கடியோ, அல்லது எரிபொருளுக்கு வரிசையில் நிற்கும் நிலையோ ஏற்பட வாய்ப்பில்லை என்றே பொருளாதார ஆய்வாளர்கள் எதிர்வுகூறுகின்றனர்.