2010

2010

ரூ. 7 கோடி பெறுமதியான 10 நெல் களஞ்சியசாலைகள் – உலக உணவு அமைப்பு வழங்கியது

paddy.jpgகொள்வனவு செய்யும் நெல்லை களஞ்சியப்படுத்த சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான 10 களஞ்சியசாலைகளை உலக உணவு அமைப்பு இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் வேண்டுகோளின் பேரிலேயே மேற்படி களஞ்சியசாலைகள் கிடைத்துள்ளன. இத்தகைய பெறுமதிமிக்க களஞ்சிய சாலைகள் இலங்கைக்கு கிடைத்திருப்பது இது முதல் முறையாகும்.

அதிக நெல் அறுவடை கிடைக்கும் அம்பாறை, அக்கரைப்பற்று, பொலன் னறுவை ஆகிய பிரதேசங்களில் இந்த களஞ்சியசாலைகள் அமையவுள்ளன. இந்த களஞ்சியசாலைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கிலோ நெல்லை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தி வைக்க முடியும். பாகங்களாக இலங்கைக்கு கொண்டு வரப்படும் இந்த களஞ்சிய சாலைகளை தேவையான இடங்களில் அமைத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறான மேலும் சில களஞ்சியசாலைகளை தந்துதவுமாறு அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இந்தியாவிடமும் கேட்டுள்ளார். அவை கூடிய விரைவில் இங்கு வந்து சேரும்.

உருளைக்கிழங்கு மீதான மேலதிக வரி நீக்கம்

potatoes.gifஇறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கின் மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தக பொருட்கள் மீதான வரி எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் நீக்கப்படும்.

கிலோவுக்கு 30 ரூபா வரையிலான மேற்படி வரி உள்ளூர் கிழங்கு அறுவடை சந்தைக்கு வரும் வரை மட்டுமே விதிக்கப் பட்டிருந்தது. வடக்கு, நுவரெலியா மற்றும் வெலிமடை ஆகிய அறுவடை பிரதேசங்களில் இருந்து சந்தைக்கு வரும் நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதியுடன் மேற்படி வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கேற்ப எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் இறக்குமதி உருளைக் கிழங்கு மீதான விற்பனை பண்டங்கள் வரி மீண்டும் கிலோவுக்கு 10 ரூபா வரை குறைக்கப்படும்.

இடம்பெயர்ந்தோருக்கு உதவுவதே முக்கிய நோக்கம் – நிருபமாராவ்

nerupama.jpgகடந்த காலத்தை மறந்து விட்டு எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள் என்று யாழ்ப்பாண மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ், கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் குடாநாட்டு மக்கள் கூறுபவற்றை செவிமடுக்கவும் காயங்களை ஆற்றுப்படுத்தவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்.நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது; கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விவாதிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு எதிர்காலம் குறித்துச் சிந்தியுங்கள்.

கடந்த காலங்களில் இடம்பெற்றவை எதனையும் நான் நிராகரிக்கவில்லை. இதேவேளை உங்களது நலன்புரி நடவடிக்கைகளுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதை நீங்கள் உணர வேண்டும். கடந்த காலங்கள் குறித்து சிந்திப்பதற்கு நேரமில்லை. உங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துச் சிந்தியுங்கள் என்று நான் உங்களை வலியுறுத்திக் கேட்கிறேன்.

இந்தியா உங்களது நெருக்கமான அயல்நாடு, நட்பு நாடு, கடந்த காலங்களில் பல விடயங்கள் நடந்திருக்கலாம். அதனை மறந்து எதிர்காலம் குறித்துச் சிந்தியுங்கள். இவ்வாறான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் எவையும் உங்களது சிறந்ததொரு எதிர்காலத்திற்கு உதவப்போவதில்லையெனத் தெரிவித்தார்.

அதிகாரி மரத்தில் கட்டப்பட்ட சம்பவம் மேர்வின் சில்வா குற்றமற்றவர் சு.க. ஒழுக்காற்று குழு தீர்மானம்

gggg1.jpgகளனி யாவில் சமுர்த்தி அதிகாரி ஒருவர் மரத்தில் கட்டப்பட்ட சம்பவம் தொடர்பாகவிசாரணை நடத்திய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா குற்றமற்றவர் என்று தீர்மானித்துள்ளது.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு தனது அறிக்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம்கையளிக்கவுள்ளது. டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்க தவறியமைக்காக சமுர்த்தி அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டி தண்டனை வழங்கிய சம்பவத்திற்கு மேர்வின் சில்வா பொறுப்பு என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியம் எதுவும் அவருக்கு எதிராக இல்லை என்று சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக்குழு கூறியுள்ளது.

கிராமத்தில் பாரம்பரியமாக வழங்கப்படும் தண்டனை தொடர்பாக உதாரணம் காட்டும் விதத்தில் தன்னைத்தானே மரத்தில் கட்டிவைக்க விரும்பியிருந்ததாக சமுர்த்தி அதிகாரி கூறியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தமது கடமையிலிருந்தும் ஏனையவர்கள் தவறி விடக்கூடாது என்பதை வெளிப்படுத்த இவ்வாறு செய்து காண்பித்ததாக அந்த அதிகாரி கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தன்னிச்சையாகவே அவர் மரத்தில் தன்னை கட்டியிருந்ததாக குழுவானது அறிக்கையில் தெரிவித்திருப்பதாக அததெரண இணையத்தளம் நேற்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருக்கிறது.

கிடைத்திருக்கும் ஆதாரங்களை பரிசீலனைக்கெடுத்து கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய குற்றம் எதனையும் மேர்வின் சில்வா இழைத்திருக்கவில்லை என்று குழுவானது தீர்மானித்திருப்பதாக சுகாதார அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் ஜயகொடி மறைவுக்கு பிரதமர் அனுதாபம்

luxman_jayakodi.jpgஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான லக்ஷ்மன் ஜயக்கொடியின் மறைவுச் செய்தியை கேட்டு மிகுந்த சோகமுற்றதாக பிரதமர் தி.மு.ஜயரட்ன கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான லக்ஷ்மன் ஜயக்கொடி மறையும் வரை அக்கட்சியை கைவிடவில்லை. பணத்துக்காக கட்சியை காட்டிக்கொடுக்கவும் இல்லை என்பதை பெருமையுடன் கூறவேண்டும். கட்சியில் பல பதவிகளை வகித்த அவர் கட்சியின் முன்னேற்றத்துக்காக மட்டுமே செயற்பட்டவர் என்பதை மறந்துவிடக் கூடாது என்று அந்த அனுதாப செய்தியில் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

உத்தேச அரசியலமைப்பு திருத்தம்: ஜனநாயகம், இறைமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது – தமிழ்க்கட்சிகளுடனும் பேச்சு

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஜனநாயகத்திற்கோ மக்களின் இறைமைக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படாது. எதிர்க் கட்சி மற்றும் ஐ.ம.சு.மு. வில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. இதற்கு ஐ.தே.க. தனது ஆதரவை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அரசியலமைப்பில் கட்டமைப்பு ரீதியான திருத்தங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும். இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஐ.ம.சு.முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

1978 ஆம் ஆண்டு யாப்பினூடாக கடந்த 32 வருட காலமாக பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் புதிய யாப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு தேவையானவாறே இதில் திருத்தம் செய்யப்படுகிறது.

அபிவிருத்திப் பணிகளுக்குள்ள தடைகள் இதனூடாக நீக்கப்பட்டு அரசியல் ஸ்திர நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாப்புத் திருத்தம் செய்தால் அது அரசாங்கத்தின் முடிவாக அமையும் என ஐ.தே.க. ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். அதலபாதாளத்தில் விழுந்துள்ள நிலையில் ஐ.தே.க இவ்வாறு கூறுவது நகைப்புக்குரியதாகும். உத்தேச அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐ.தே.க ஆதரவு வழங்க வேண்டும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டார்.

கண்டி யாழ்ப்பாணம் ஏ9 வீதியை புனரமைக்க சீனா 350 கோடி டொலர்

a9.jpgகண்டி யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் 32 கிலோமீற்றர் நீளப் பாதையை அபிவிருத்தி செய்வதற்கு 350 கோடி டொலர்களை (3.5 பில்லியன்) சீனா வழங்கவுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கிணங்க வட மாகாணத்தில் சீன நிதியுதவியுடனான பாரிய வீதிப் புனரமைப்பு திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் அநேகமான பகுதிகளை உள்ளடக்கியதாக இத்திட்டம் அமைவதுடன், நீண்ட காலமாக பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவியாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கமுவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான வீதியானது நவீனமயப்படுத்தப்படும். அத்துடன் இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்பருத்தித்துறை வீதி,புத்தூர்மீசாலை வீதி, யாழ்ப்பாணம்பளை வீதி என்பனவும் புனரமைக்கப்படவுள்ளது.

மேலும் முல்லைத்தீவு கொக்கிளாய்புல்மோட்டை வீதி, ஒட்டுசுட்டான்நெடுங்கேணி வீதி, முல்லைத்தீவுபுளியங்குளம் வீதிகளும் வெவ்வேறான திட்டங்களின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன. இதற்கான மொத்த செலவினத்தில் 85% சீன அரசு வழங்கவுள்ளது. மீதி 15% செலவினத்தை இலங்கை அரசு செலவிடும்.

அரசியலமைப்புத் திருத்த நகல்வரைபை பரிசீலனைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம்

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்புத் திருத்த யோசனைகளடங்கிய ஆவணத்தை உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டது. இந்தச் சட்டமூலத்தை ஏற்றுக்கொண்ட 5 நீதியரசர்கள் குழாமின் தலைவரான நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க நீதிமன்றத்தின் இறுதித் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரு தடவைகளுக்கு மட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் நீக்கப்படுவதையும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பிரசன்னமாகி இருக்கவேண்டும் என்ற ஏற்பாடுகளையும் உள்ளடக்கியதாக நகல்வரைபு இருப்பதாக சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

நீதியரசர்கள் ஷிரானி பண்டாரநாயக்கா, கே.ஸ்ரீபவன், பி.ஏ.இரட்நாயக்கா, எஸ்.ஐ. இமாம், ஆர்.கே.சுரேஷ் சந்திர ஆகிய நீதியரசர்கள் குழாமே உத்தேச திருத்தங்கள் அரசியலமைப்புக்கு இசைவானதாக உள்ளதா என்பதை பரிசீலிக்கவுள்ளது.

சு.க.வின் 59 வது மாநாடு நாளை அலரிமாளிகையில்

mini.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 ஆவது மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை (2 ஆம் திகதி) அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார்.

மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநா ட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. கடந்த 59 வருடங்களில் 4 பேர் கட்சிக்கு சிறந்த தலைமைத்துவம் அளித்தனர். கட்சியின் 59 வருட வரலாற்றில் அதிகூடுதலாக இம்முறை 118 சு.க. உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர் என்றார்.

மூன்று லட்சம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன

l-m.jpgவடக்கு கிழக்கில் புதைக்கப்பட்ட மூன்று லட்சம் கண்ணி வெடிகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்