13

13

ஹைத்தியில் பயங்கர பூகம்பம்- ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கக்கூடும் என அச்சம்

haiti-earthquake.jpgகரீபியன் தீவு நாடான ஹைத்தியில் இன்று காலை 7.3 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் அதிபர் மாளிகை, ஐ.நா.அலுவலகம், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.

இதில் இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பல இடங்களில் மக்கள் இடிபாடுகளில் சிக்கி அபயக்குரல் எழுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் உயிர் சேதம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மீட்புப் படையினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

haiti-earthquake.jpgஅமெரிக்காவுக்கு கிழக்கே உள்ள தீவு நாடான ஹைத்தியை உலுக்கியுள்ள இந்த நலநடுக்கம், அருகில் இருக்கும் கியூபாவின் சான்டியாகோ உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஐநா அமைதி நடவடிக்கைகளுக்காக ஹைத்திக்கு சென்றிருந்த 950 இலங்கை ராணுவப்படை வீரர்களை நிலநடுக்கத்திற்கு பின்பு தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்தது. பின்னர் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் உதயநாயணக்கரா அறிவித்துள்ளார்.

சிறிலங்காவில் வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழருக்கு அக்கறை குறைவு.: சுரேன் சுரேந்திரன்

Suren Surendiran (சுரேன் சுரேந்திரன் – பிரித்தானிய தமிழர் பேரவையின் முன்னால் தலைவர். தற்போது உலகத் தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர். பிரித்தானிய தேசிய நாளிதலான தி கார்டியன் பத்திரிகையில் http://www.guardian.co.uk/commentisfree/2010/jan/08/tamils-election-video-war-crimes  ஜனவரி 8ல் என்ற தலைப்பில் சுரேன் சுரேந்திரன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.)

கடந்த வியாழக்கிழமை ஜ நா இன்  நீதிக்கு எதிரான படுகொலைக்கான சிறப்பு வல்லுனர் பிலிப் அல்ஸ்ரன் அவர்கள் பக்கசார்பற்ற சுதந்திர போர் குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஜனவரி மாதம் 2009 கைதிகளை சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்யும் போது எடுத்ததாக வெளியான காணொளி பதிவு உண்மையானது என அறிவித்திருந்தார்.

இந்த அறிக்கையை சிறீலங்கா அரசாங்கம் வழமை போல் உண்மையாது இல்லை என மறுத்துள்ளது. அத்துடன் அல்ஸ்ரன் அவர்கள் பக்கசார்பாக நடக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். எந்த விசாரணை என்றாலும் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா மற்றும் முன்னை நாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இரண்டு முக்கிய வேட்பாளர்கள் உட்படுத்தப்பட வேண்டும்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கா ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக செயல் பட்டதால் பகல்பொழுது சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவரை எவரும் இந்த கொலைக்காக தண்டிக்கப்படவில்லை. அத்துடன் இப்படுகொலையில் அரச தரப்பிற்க்கும் பங்குண்டு என சந்தேகிக்க படுகின்றது. ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று குறிப்பிட்டதுடன் கனடாவின் நசனல் போஸ்ற்க்கு அளித்த பேட்டியில் தான் சிறீலங்கா முற்றிலும் சிங்கள மக்களுக்கு சொந்தமானது ஆனால் அங்கே சிறுபான்மை மக்கள் இருக்கின்றார்கள் நாங்கள் அவர்களை எங்களுடைய மக்களாகவே கருதுகின்றோம். அவர்கள் எங்களுடன் இருக்கலாம் ஆனால் அவர்கள் தேவையில்லாத கோரிக்கைகள் வைக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். இக்கருத்து இனவாதத்தை தூண்டுவதாக பொதுவாக கருதப்படுகிறது.

மற்றவர்களுடன் சேர்த்து இவர்கள் இருவருமே  2006ம் ஆண்டு முதல் 2009 மே மாதம் வரை 80 000கும் மேற்பட்ட போரளிகளும் பொதுமக்களும் படுகொலை செய்ய காரணமானவர்கள்.

தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சியில் நடைபெறும் மனித உரிமை மீறல்களும், அரச விதிவிலக்கு நடைமுகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் வரிச்சலுகையை நிறுத்த உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நீதிக்கு எதிரான படுகொலைகள் ஆட்கடத்தல்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. எட்டு வரையிலான ஊடகவியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி பல ஆயுத தாங்கிய ஒட்டுக்குழுக்கள் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னனியில் வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் வாக்கு சரிபாதியாக பிரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே தமிழ் மக்களின் வாக்கு பதிவுகளில் தான் வெற்றி தங்கியிருப்பதாக கருதப்படுகின்றது.

எனினும் 7 மாதங்களுக்கு முன்பு ஈடேறிய போரினால் தங்கள் சொந்த உறவுகளையும், நிலங்களையும்,  வீடு வாசல்களை இழந்த தமிழ் மக்கள் தேர்தலுக்கு தயாராக இல்லை. அவர்கள் இராணுவம்  மற்றும் ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழுக்களின் கண்காணிப்பின் கீழ் பயத்துடன் வாழ்கின்றனர். அத்துடன் மனித உரிமை மீறல்கள் சர்வசாதாரணமாக நடைபெறும் சூழலில் வாழ்கிறார்கள்.

1977 ஆம் ஆண்டு ஜனநாயக முறையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு சுதந்திரத்தனி நாட்டிற்கான கோரிக்கையை பெருமளவில் ஆதரித்து வாக்களித்தனர். ஆறாம் திருச்சட்டத்தை நடமுறைபடுத்தியதின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட பேச்சு சுதந்திர சூழலில் கூட பல தேர்தல்களில் ஈடுபட்டுள்ளார்கள்.  அடக்கப்பட்ட பேச்சு உரிமையினால் கடும் வெறுப்படைந்த தமிழ் மக்கள் இதன் பின்பு இதுபோல் பல தேர்தல்களை மேற்கொண்டனர்.

இனப்பிரச்சினையின் தீர்வை கருத்தில் கொண்டு சுதந்திரம் கிடைத்து கடந்த 62 ஆண்டு காலமாக தமிழ் தலைவர்கள்  நல்லெணத்துடன் சிங்கள தலைவர்களுடன் பல ஒப்பந்தங்களில் கைசாத்திட்டுள்ளனர். இவ்வரிசையில் இறுதியாக சர்வதேச மட்டத்தில் கைச்சாத்திட்ட ஒப்பந்தம் 2002ம் ஆண்டு கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தம். இவ்வொந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களும் சிங்கள கட்சிகளால் ஒரு பட்சமாக நிராகரிக்கப்பட்டு கிழித்தெறியப்பட்டவை. தற்போது பொன்சேகா பிரதான தமிழ் கட்சியுடன் ஓர் ”ஒப்பந்தத்தில்” கைச்சாத்திட்டுள்ளார். இவ் ”ஒப்பந்ததில்” வடக்கு கிழக்கை ஒன்றினைப்பதாக கூறியுள்ளார் என்பது உத்தியோக பட்டற்ற செய்தி. முன்னைய ஒப்பந்தமான இந்தோ லங்கா ஒப்பந்தம் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் கூட தாமத்திக்காமல் சிங்கள இனவாத்தை தூண்டும் வகையில் தான் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான வடக்கு கிழக்கு ஒன்றிணைவதை ஒரு போதும் ஏற்க்க மாட்டேன் என அறிக்கை விட்டுள்ளார்.

”சரித்திரம் மீண்டும் திரும்புகிறதா என எண்ணத்தோன்றுகிறது.”

சில குறுகிய கால சலுகைகளுக்காக நல்லெண்ணத்துடன் தமிழ் தலைவர்களால் முன்னைய கால ஒப்பந்தங்கள் போல கைச்சாத்திடப்பட்டதே இவ்வொப்பந்தமும் ஆகும். தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவரின் விடுதலைக்காக போராடிய ஆபிரிக்க தேசிய அமைப்பின் (ANC) தலைவர்கள் சர்வதேச அழுத்தினால் சில குறுகிய கால சலுகைகளுக்காக தங்களுடைய நீண்டகால விடுதலை குறிக்கோள்களை அடைவு வைத்திருந்தார்கள் என்றால் இன்றும் தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர் தங்கள் சொந்த நிலத்தில் இரண்டாம் தர பிரையைகளாக இருந்திருப்பர்.

மேலும் சந்தேகம் எழுகிறது இந்த புதிய ஒப்பந்ததில் சிங்கள இனத்திற்க்காக கையொப்பம் இட்ட சரத் பொன்சேகா தான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக கூறி உள்ளார் அச்சந்தர்ப்பத்தில் அவருக்கு இவ் ஒப்பந்ததை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விடும். மேலும் அவருடைய உத்தியோகபூர்வமான தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ் ஒப்பந்தத்தில் இருக்கும் பல கருத்துக்களை உள்ளடக்கவில்லை. அது மட்டும் அல்ல சரத் பொன்சேகாவை இத்தேர்தலில் பிரதான இரு சிங்கள கட்சிகள் ஆதரித்தாலும் ஒரு கட்சியே இவ் ஒப்பந்ததில் கைச்சாத்திட்டுள்ளது.

தற்போதைய தமிழ் தலைவர்களை தேசதுரோகிகள் என சரித்திரம் எடைபோடாது என்பதே பலரின் எதிர்பாப்பாகும்.

மக்ஸ் லேர்னர் சொன்னது போல “இரண்டு அரக்கர்களில் குறைவான கொடூரம் கொண்டவனை தேர்ந்தெடுக்கும் பொழுது மறக்க கூடாதது அவனும் ஒரு அரக்கன் என்பதை“.

முக்கோண கிரிக்கெட் தொடர்: கோப்பையை வெல்வது யார்? இந்தியா – இலங்கை இன்று பலப்பரீட்சை

catak.jpg3 நாடுகள் கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது. “லீக்” ஆட்டத்தின் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டி இன்று 13ம் திகதி நடக்கிறது. சமீப காலமாக இரு அணிகளும் தொடர்ந்து விளையாட்டி வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

தற்போது நடைபெற்று வரும் 3 நாடுகள் போட்டியில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா ஒரு ஆட்டத்திலும் இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த 3 நாடுகள் போட்டியில் இந்திய அணி இலங்கை இறுதிப்போட்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டம்பெற்றது.

தற்போதைய இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்து இருப்பதால் கோப்பையை கைப்பற்றும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பலமே துடுப்பாட்டம்தான். வீரட்கோலி, காம்பிர், கப்டன் தோனி, ரெய்னா ஆகியோர் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த 2 போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் ஷேவாக் இன்று இறுதிப் போட்டியில் விளையாடுவார். அவர் அணிக்கு திரும்புவது மேலும் துடுப்பாட்ட பலத்தை அதிகரிக்கும்.

கடந்த 2 ஆட்டத்தில் நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார். சுதிப் தியாகியின் பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தியாகி இடம் பெற்றால் நெஹ்ரா அல்லது ஸ்ரீசாந்த் நீக்கப்படலாம். கடைசி “லீக்” ஆட்டத்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட ஜாகீர்கான் இடம் பெறுவார். முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங்கு 2 ஆட்டத்தில் ஓய்வு கொடுப்பட்டது.

அவருக்குப் பதிலாக இடம்பெற்ற அமித் மிஸ்ரா இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்பஜன்சிங்குக்குதான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியா வுக்கு எல்லா வகையிலும் இலங்கை அணி சவா லாகத் திகழும் அதிரடி துடுப்பாட்ட வீரர் டில்சான் அந்த அணியின் துருப்பு சீட் டாக உளளார். அவர் களத்தில் இருக்கும் வரை இலங்கையின் ஸ்கோரை கட்டுப்படுத்த முடியாது. கப்டன் சங்கக்கார தொடக்க வீரர் தரங்க ஆகியோரும் அதிரடியாக ஆடக் கூடியவர்கள் சமரவீர, முன்னாள் கப்டன் ஜயவர்தன, பெரேரா ஆகியோரும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். பந்து வீச்சில் வெலகெதர ரந்தீவ் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளுமே பலம் பொருந்தியவை என்பதால் இன்று இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாகரனின் தாயாரும் மாமியாரும் விரும்பினால் இந்தியா செல்ல முடியும் – ஜனாதிபதி ராஜபக்ஷ

velu.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரும் மாமியாரும் (மனைவியின் தாயார்) விரும்பினால் இந்தியாவிற்குச் செல்ல முடியும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“இந்தியா இணங்கினால் அவர்கள் இந்தியாவிற்குப் போக முடியும் என்று வெளிநாட்டு நிருபர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பிரபாகரனின் தாயார் பார்வதிபிள்ளையும் மாமியார் திருமதி ஏரம்புவும் தமது எதிர்காலம் தொடர்பான திட்டம் எதனையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஆயினும் பிரபாகரனின் தாயாரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் பிரபாகரனின் உறவினரான இராஜேந்தினும் இலங்கை அரசாங்கத்தைக் கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

மரணமடைந்த பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளையின் பூதவுடலுக்கு மரியாதையுடன் இறுதிக்கிரியை இடம்பெற்றுள்ளதாக ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்தவார முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இறுதிக்கிரியையின் போது பார்வதியும் திருமதி ஏரம்புவும் சமுகமளித்திருந்ததாகவும் 300 இற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாகவும் தமக்குக் கூறப்பட்டதாக ஜனாதிபதி கூறியதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்தது.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு மாவை அவசர கோரிக்கை

Mavai_Senathirajahமிக நீண்டகாலமாக விசாரணையுமின்றி விடுதலையுமின்றி சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களை இனியாவது விடுதலை செய்ய அரசு முன்வரவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.மாவை சேனாதிராஜா அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் 600 க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் கடந்த எட்டு நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள நிலையிலேயே நீதி மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவுடன் நேற்றுக் காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மாவை சேனாதிராஜா அவரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

186 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் விடுதலை

fishing.jpgதமிழகம் மற்றும் ஆந்திரா கரையோர பகுதிகளில் கைதான இலங்கை மீனவர்கள் 186 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2009 ஓகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி சென்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த 186 பேரும் சென்னை மற்றும், விசாகபட்டினம் பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். கடற்றொழில் அமைச்சர் பீளிக்ஸ் பெரேரா இந்திய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுக்களின் பயனாக மேற்படி 186 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு ள்ளனர்.

விடுதலையான 186 மீனவர்களும் அவர்கள் பயணம் செய்த 35 ஆழ்கடல் வள்ளங்களுடன் இன்று இலங்கை கடல் எல்லையூடாக அழைத்து வரப்படுகின்றனர். மிரிஸ்ஸ, தெவிநுவர, தங்கல்ல, வென்னப்புவ, திருகோணமலை ஆகிய பகுதிகளிலிருந்து இவர்கள் கடற்றொழிலுக்காக சென்றுள்ளனர்.

பிரிட்டனில் இஸ்லாமிய அமைப்புக்குத் தடை

000.jpgபயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பிரிட்டனில் உள்ள முஸ்லிம் அமைப்பான இஸ்லாம்-போர் – யூ கே என்னும் அமைப்பை பிரிட்டிஷ் அரசாங்க தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அல் முகஜிறூன் என்பது உட்பட அந்த அமைப்பின் ஏனைய அனைத்துப் பெயர்களுக்கும் இந்தத்தடை பொருந்தும்.

இந்தத் தடைக்கான எந்த காரணத்தையும் குறிப்பிடாத பிரிட்டனின் உட்துறைச் செயலர் அலன் ஜோண்சன், தடை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றான போதிலும், பயங்கரவாதத்தை சமாளிக்க அது அவசியமான ஒரு அதிகாரம் என்று அவர் விபரித்துள்ளார்.

இந்த அமைப்பின் தலைவரான அஞ்சும் சௌத்ரி தமக்கு வன்செயல்களுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ளார்.தமது ஆதரவாளர்கள் தடை செய்யப்பட்ட பெயரின் கீழ் இயங்கமாட்டார்கள் என்றும், ஆனால், இஸ்லாத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

திருக்கேதீஸ்வர புனரமைப்பு: முதற்கட்ட நடவடிக்கை சிவராத்திரிக்கு முன் பூர்த்தி

koneswaram-kovil.jpgதிருக் கேதீஸ்வரம் தேவஸ் தான வீதி புனரமைப்பு, உட்கட்டமைப்பு வேலைகளின் முதற்கட்ட நடவடிக்கைகளை சிவராத்திரி தினத்துக்கு முன்னதாக பூர்த்தி செய்யுமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி பணிப்புரை வழங்கியுள்ளார். கேதீஸ்வரம் ஆலயப்பகுதி புனித பூமி பிரதேசமாக புனரமைப்பு செய்யப்படுவ துடன் இதற்கென 270 மில்லியன் ரூபாவை அரசு செலவிட்டுள்ளது. ஆலய புனரமைப்பு, வேலைகள் கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமாகின.

மடுக்கோயிலுக்கு அடியார்கள் 24 மணி நேரமும் சென்று வழிபடுவதைப் போன்று பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான கேதீஸ்வரத்தானின் ஆலயத்திற்கும் 24 மணி நேரமும் அடி யார்கள் சென்று வருவதற்கான நட வடிக்கைகளும் மேற் கொள்ளப் பட்டு ள்ளன.

தபால் மூல வாக்களிப்பு சுமுகம்

sri_election.jpgஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நேற்றுக்காலை ஆரம்பமானது. பொலிஸ் மற்றும் முப்படையினர் உட்பட தபால் மூல வாக்களிப்புக்கு தகுதிபெற்றவர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டதாக பொலிஸ் மற்றும் இராணுவப் பேச்சாளர்கள் தெரிவித்தனர்.

தபால் மூல வாக்களிப்புகள் இன்றும் நடைபெறுகிறது. தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற அனைவரும் தமக்குரிய கடமை நிலையங்களில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதியின் பிரகாரம் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. பொலிஸ் தலைமையகம் உட்பட நாட்டிலுள்ள 427 பொலிஸ் நிலையங்களிலும் நேற்றுக்காலை வாக்களிப்புகள் நடைபெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருனாரட்ண தெரிவித்தார்.

இதேபோன்று இராணுவத் தலைமையகம், பலாலி படைத் தலைமையகம் உட்பட அனைத்து முப்படைத் தலைமையகங்கள், முகாம்களிலும் தபால்மூல வாக்குப் பதிவுகள் நடைபெற்றதாகவும் இன்றும் தபால் மூல வாக்குப் பதவுகள் நடைபெறும் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற எவரேனும் வசதியீனம் காரணமாகவோ, அல்லது வேறேதும் விசேட காரணமாகவோ, நேற்றோ, இன்றோ வாக்களிக்க வருகைதராவிடின் இயன்றளவு விரைவாக அவ்வாறானவர்களுக்கு வாக்களிக்க வசதிகளை செய்து கொடுத்து வாக்களித்ததன் பின்னர் தபால் மூல வாக்களிப்பு உறைகளை காப்புறுதி அஞ்சல் மூலம் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்க அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன் நேற்றும் இன்றும் தபால் மூல வாக்குப் பதிவுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையிலும் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் முன்னிலையில் வாக்களிப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 4 இலட்சத்து 58 ஆயிரத்து 154 பேர் விண் ணப்பித்திருந்தனர். இவர்களுள் 4 இலட்சத்து 1,118 பேர் தகுதி பெற்றிருந்தனர். 57,036 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் வடக்கு மீள்நிர்மாணத்திற்கு ரூபா 40 ஆயிரம் கோடிஜனாதிபதி ராஜபக்ஷ அறிவிப்பு

mahinda.jpgஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் இரு வாரங்களே உள்ள நிலையில்,அதிகளவில் சுயாட்சிக் கோரிக்கையை முன்வைத்திருக்கும் தமிழர்களுக்குப் பல சலுகைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வந்திருக்கிறார். சிறுபான்மைத் தமிழ் சமூகமானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமான பங்களிப்பைச் செலுத்தக்கூடிய நிலையில், அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

சட்டவாக்க சபையில் தீர்மானங்களை எடுப்பதற்கு தமிழர்களுக்கு அதிகளவுக்கு பாக்கியம் உள்ளதாகவும் நீண்டகால கோரிக்கையான அதிகாரப்பகிர்விற்கு தீர்வு காண்பதற்குமான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு நிருபர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை குறிப்பிட்டது.

யுத்தத்தின் முடிவானது நெருக்கடி முடிவடைந்துவிட்டதென அர்த்தப்படாது. தமிழர்களின் தேவைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் தேவை எனக்கு உள்ளது என்று அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.

புதிய சட்டவாக்க ஏற்பாடுகளில் சிறுபான்மைத் தமிழருக்கு அதிகளவு பிரதிநிதித்துவம் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.இவை எல்லாவற்றுக்கும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அத்துடன், சர்வசன வாக்கெடுப்பு மூலம் மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சாதாரணமான மக்கள் அமைதியாக வாழ விரும்புகின்றனர். ஆனால், அரசியல் தீர்வுக்கான கோரிக்கையும் தேவையும் அங்குள்ளது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதேவேளை, 40 ஆயிரம் கோடி ரூபாவை வடக்கை புனரமைக்க செலவிடப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த 40 ஆயிரம் கோடி ரூபாவில் (4 மில்லியன் டொலர்) அரசின் நிதியும் உதவி வழங்குவோரின் நிதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ரயில் பாதைகள், மின்சக்தி,நீர்ப்பாசன உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக 2010 இல் இந்தத் தொகை செலவிடப்படும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கிழக்கு அபிவிருத்திக்கு 3 ஆண்டுகளில் செலவிடுவதற்காக 3 பில்லியன் டொலர்களுக்கான (30 ஆயிரம் கோடி ரூபா) தொகைக்கு நாம் ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்