19

19

முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களை 500 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து விரும்பும் துறையில் தொழிற்பயிற்சி

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் அனைவரையும் அவர்கள் முன்னெடுக்க விரும்பும் துறைகளின் அடிப்படையில் 500 பேர்களாகப் பிரித்து, அவர்களுக்கு சொந்த இடங்களுக்கு அருகில் புனர்வாழ்வு வழங்க தீர்மானித்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.

இவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவத ற்காக யாழ்ப்பாணத்தில் 4 இடங்களும், வவுனியாவில் 5 இடங்களும், வெலிக்கந்தையில் 3 இடங்களும், திருகோணமலையில் 3 இடங்களும், மட்டக்களப்பில் 4 இடங்களுமாக 20 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் மெனிக்பாமில் உள்ள நலன்புரி முகாம்களில் 4 புனர்வாழ்வு நிலையங்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார். வவுனியா பம்பைமடுவில் ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அனைவரும் 500 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடித் துறை, விவசாயத் துறை, கணனிசார் துறை, மிருகவளர்ப்பு, தையல் துறை என பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டு, இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களில் பலர் முன்னர் மீன்பிடித் துறை, விவசாயத் துறை போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டவர்களாவர்.

சிறுவயதில் புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டதால் கற்க முடியாமல் போனவர்களில் தொடர்ந்து படிக்க விரும்புவோருக்கு கற்பிப்பதற்கும் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதவிர இவர்களுக்கு ஆங்கிலமொழி கற்பிக்கப்ப டுவதோடு இசை, நடனம் ஆகிய துறைகளிலும் ஈடுபட வசதிகள் அளிக்கப்படுவதாக ஆணையாளர் கூறினார். புனர்வாழ்வு பெறும் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, சிலருக்கு வெளிநாட்டில் தொழில் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

புனர்வாழ்வு செயற்பாடு முடிந்தபின் இவர்களுக்கு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று தாம் பயிற்சி பெற்ற துறையில் ஈடுபட சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளது. புனர்வாழ்வு பெற்றுவரும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள், எதிர்காலம் பற்றி நம்பிக்கையுடனும் சிறந்த மன நிலையுடனும் உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

புனர்வாழ்வு செயற்பாடு முடிந்த பின்னர் ஒவ்வொரு நபரினதும் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்ட பின் ஜனாதிபதி நியமிக்கும் நீதிபதிகள் குழுவின் சிபார்சின்படி விடுவிக்கப்பட உள்ளனர்.

தற்பொழுது 10, 832 பேர் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். இவர்களில் 2,500க்கும் அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர். 2,500க்கும் அதிகமானவர்கள் கிளிநொச்சியையும், 2,000க்கும் அதிகமானவர்கள் முல்லைத்தீவையும், சுமார் 1,000 பேர் வவுனியாவையும், சுமார் 500 பேர் மட்டக்களப்பையும், 500க்கும் அதிகமானவர்கள் மன்னாரையும், சுமார் 500 பேர் திருகோணமலையையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகா இன்று புலி ஆதரவாளர்களின் கைப்பொம்மை – அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுகிறார்

dalas_alahapperuma.jpgஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளை அழிப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா இன்று ஆயுதமற்ற புலி ஆதரவாளர்களின் கைப்பொம்மையாகிவிட்டார். எனவே, எதிர்வரும் 26 ஆம் திகதியை இந்த நாட்டு மக்கள் தீர்க்கமானதும் உணர்வுபூர்வமானதுமான தினமாகக் கருதி செயற்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளரும், போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொழும்பு மாகவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:

கடந்த மே மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நாட்டில் தமிழ் பெண்கள் சல்வார் அணிந்துகொண்டு பஸ்களில் பயணம் செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது. எனினும் அந்த நிலைமையை எமது ஜனாதிபதி மாற்றியுள்ளார்.  எதிர்வரும் 27 ஆம் திகதி வரப்போகின்ற தேர்தல் முடிவு குறித்து எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எமது ஜனாதிபதி பாரிய வெற்றியை ஈட்டுவார். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

முதலாவதாக சுயாதீன மற்றும் வெளிநாட்டு அமைப்புக்களால் செய்யப்பட்டுவரும் கருத்து கணிப்புக்களில் ஜனாதிபதி முன்னிலையில் இருக்கின்றார். இரண்டாவது காரணமாக ஜனாதிபதியின் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அதிக கூடிய மக்கள் வெள்ளத்தை பாருங்கள். நாளுக்குநாள் மணிக்கு மணி மக்கள் திரண்டுவருகின்றனர். மூன்றாவதாக இரண்டு வேட்பாளர்களினதும் கொள்கைப் பிரடகனங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொடர்பில் மக்கள் தெளிவுடன் இருக்கின்றனர்.

உதாரணமாக எதிரணி வேட்பாளர் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதாக அறிவித்ததும் எமது கொள்கை பிரகடனத்திலும் அதிகரித்த சம்பள உயர்வை அறிவிக்கவேண்டும் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். ஆனால் தற்போதைய பொருளாதார கட்டமைப்பில் 2500 ரூபாவே வழங்க முடியும் என்றும் அதுவே யதார்த்தமானது என்றும் ஜனாதிபதி கூறிவிட்டார். மறுநாள் தபால் மூல வாக்களிப்பை வைத்துக்கொண்டு இவ்வாறு கூறி ஜனாதிபதி தனது சிறந்த தலைமைத்துவ பண்பை வெளிக்காட்டினார்.

நான்காவது விடயமாக தொழில்சார் நிபுணர்கள் எமது தூண்டுதல் இல்லாமல் ஜனாதிபதிக்காக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஐந்தாவது விடயமாக இரண்டு வேட்பாளர்களினதும் வார்த்தை பிரயோகங்களை பார்க்கவேண்டும்.

எதிரணி வேட்பாளர் தகுதியற்ற வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்து வருகின்றார். கடந்த காலங்களில் ஐந்து ஜனாதிபதி தேர்தல்கள் நாட்டில் நடைபெற்றன. ஆனால் தற்போது போன்ற வார்த்தை பிரயோகங்கள் இடம்பெறவில்லை. அதிகாரத்தை எடுப்பதற்கு முயற்சிக்கும்போதே இவ்வாறு நடந்துகொள்ளும் ஒருவர் அதிகாரத்தை எடுத்தால் என்ன நடக்கும்?

கடந்த மாகாண சபை தேர்தல்களில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூட தனது கட்சியை மிகவும் ஒழுக்கமான முறையில் வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டினார்.

ஆறாவது விடயமாக அபிவிருத்தி தொடர்பான கொள்கைகளை அவதானிக்கவேண்டும். எமது ஜனாதிபதியிடம் தெளிவான கொள்கைகள் இருக்கின்றன. ஆனால் எதிரணிடம் எந்த தெளிவான வேலைத்திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. இன்று எதிரணி வேட்பாளர் ஆயுதமற்ற புலி ஆதரவாளர்களின் பொம்மையாக மாறிவிட்டார்.

ஒருகாலத்தில் ஈழம் குறித்து எண்ணங்களுடன் இருந்தவர்கள் கடந்த மே 19 ஆம் திகதியுடன் அதனை கைவிட்டனர். ஆனால் தற்போது மீண்டும் அந்த எண்ணங்களை மீட்டுகின்றனர்.

வரலாற்றில் என்றுமில்லாதவாறு இன்று தமிழ்த் தலைமைகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளன. இது ஆரோக்கியமான நிலைமையாகும். சேறுபூசும் கலாசாரத்தை இரண்டு தரப்பினரும் கைவிடவேண்டும்.

எந்த அடிப்படையுமின்றி சில இணையதளங்கள் இன்று ஜனாதிபதி மீது சேறுபூசுகின்றன. ஏன் அவர்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறையிடவில்லை? பாராளுமன்றத்தில் ஏன் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவில்லை?

கடந்த மே மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நாட்டில் தமிழ் பெண்கள் சல்வார் அணிந்துகொண்டு பஸ்களில் பயணம் செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது. ரயிலில் செல்ல முடியாது. அனைவரும் சந்தேகக்கண்டுகொண்டு பார்த்தனர். அரசியல்வாதிளாகிய நாங்களும் ஊடகங்கள் முன் வந்து பொதிகள் தொடர்பில் கவனமாக இருக்குமாறு கோரினோம். எனினும் அந்த நிலைமையை எமது ஜனாதிபதி மாற்றியுள்ளார். அது தொடர்பில் தமிழ் மக்களுக்கு தெரியும். தமிழ் மக்கள் சிந்தித்து முடிவெடுப்பார்கள்.

எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கனடா பத்திரிகை ஒன்றுக்கு தமிழ் மக்கள் தொடர்பில் கூறிய கருத்துக்கள் உங்களுக்கு தெரியும். மேலும் யுத்தம் முடிந்ததும் அதிகாரப்பகிர்வு தேவையில்லை என்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் தேவையற்றது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் உடனடியாக விடுவிப்பு

பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மலையக இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் கைதிகளின் கோவைகளைத் துரிதமாக ஆராய்ந்து, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக சட்ட மா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி 83 மலையக இளைஞர்கள் தாமதமின்றி விடுவிக்கப்படவுள்ளனர். ஜனாதிபதியிடம் இ.தொ.கா. விடுத்த வேண்டுகோளின் பேரில், இதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியு ள்ளார்.

கொட்டகலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான முக்கியஸ்தர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியிருக்கின்றார்.

இந்த சந்தர்ப்பத்தில், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்க ளின் பெற்றோரும் சமுகந்தந்து, தமது பிள்ளைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந் தனர்.

கைதிகளின் விபரங்களை அமைச்சர் தொண்டமான் ஜனாதிபதியிடம் கையளித்தார். இந்நிலையில் சிறு சிறு தவறுகளுக்காகக் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை பாரிய குற்றச்சாட்டுகளைப் புரிந்தவர்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்து அவர்களைப் பிணையில் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.

பயங்கரவாத தடைச் சட்டம், அவசர காலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட சுமார் அறுநூறு இளைஞர்கள் வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் இம்மாத இறுதிக்குள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்ட மா அதிபர் திணைக் களம் மேலும் தெரிவித்தது. ஏற்கனவே 390 கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வட பகுதியில் இணக்கச் சபைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

வட பகுதியில் இணக்கச் சபைகளை ஆரம்பிக்க நீதிமற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரதேசத்துக்கு இணக்க சபையை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு ஆசிய மன்றத்தின் ஆணையாளர் அலு வலகம் அனுசரணை வழங்கியுள்ளது.

வட பகுதியில் இதுவரை காலம் இடம்பெற்று வந்த யுத்த சூழ்நிலை காரணமாக அங்கு இணக்க சபைகளை ஆரம்பிக்க முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

”சிவாஜிலிங்கம், சிறிகாந்தா அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது என வெளியான செய்தி மோசடியானது” ரெலோ தலைவர்

Selvam Adaikalanathan TNA_TELOஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் அண்மிக்க அண்மிக்க தேர்தல் பிரச்சாரங்கள் சேறடிப்புப் பிரச்சாரங்களாகவும் மாறி வருகின்றது. இரு பிரதான வேட்பாளர்களும் தங்கள் கொள்கையினதும் நன்மதிப்பின் அடிப்படையில் வாக்கு கேட்பதற்குப் பதிலாக மற்றவரின் பலவீனத்திலும் மற்றவரை குற்றம்சாட்டுவதன் மூலமும் தங்களைப் பலப்படுத்த முயல்கின்றனர். இந்த சேறடிப்புப் போட்டியில் தமிழ் ஊடகங்களும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. இதன் ஒரு வெளிப்பாடாக சுயேட்சையாகத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் அவர் அங்கம் வகித்த ரெலோ அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மோசடியான செய்தி பரவலாக வெளியிடப்பட்டுள்ளது.

‘தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செயலளார் பிரசன்னா ஆகியோர் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்’ என அச்செய்திகள் தெரிவிக்கின்றன. ‘குறித்த இருவரும் கட்சியின் அனைத்து பதவி நிலைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்’ என்றும் அச்செய்தி தெரிவிக்கின்றது. இச்செய்தி கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகையொன்றிலும் அதனைத் தொடர்ந்து இணைய ஊடகங்களிலும் பிரித்தானியத் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

‘கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தீர்மானித்தமை தொடர்பில் அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்கியமை காரணமாக ஸ்ரீகாந்தா கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்’ என்றும் அச்செயிதியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பெரும்பாலும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் இந்த ஊடகங்கள் எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு கிடைக்கும் வாக்குகளைத் தடுப்பதற்காகவே இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக லண்டனில் உள்ள எம் கெ சிவாஜிலிங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பாக ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்ட போது இச்செய்தி முற்றிலும் மோசடியானது எனத் தெரிவித்தார். இச்செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் அதனை வெளியிடுவதற்கு முன் தன்னுடன் அச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தவறி இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். இத்தவறான செய்தி தொடர்பான அறிக்கை விரைவில் ரெலோ அமைப்பினரால் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.

ரெலோ இயக்கத்தினுள் பிளவை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான முயற்சிகளை வன்மையாகக் கண்டித்த அவர் ரெலோ அமைப்பின் பழமையான திருமலை மாவட்ட லெற்றர் ஹெட்டில் எழுதப்பட்டு தனது கையொப்பத்தை இட்டு அனுப்பப்பட்ட அறிக்கையை ஆதாரமாகக் காட்டியே இச்செய்தி வெளியிடப்பட்டதாகவும்  அக்கையொப்பம் தன்னுடையதல்ல அது மோசடியானது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முன்வந்த போதும் பெரும்பாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் தயங்குகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரவு சரத் பொன்சேகாவுக்கும் இன்னுமொரு பிரிவு மகிந்த ராஜபக்சவுக்கு மறைமுகமாகவும் மற்றுமொருபிரிவு சுயேட்சை வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றது.

இம்மோசடிச் செய்தி எம் கெ சிவாஜிலிங்கத்தின் மீதான ஒரு சேறடிப்பு முயற்சியாகவே அமைந்துள்ளது.

கனடியத் தமிழ் காங்கிரஸை ஆட்டுவிக்கும் யாழ் மையவாதம் : தமிழ் காங்கிரஸ் அங்கத்தவர்

David_Poopalapillaiகனடியத் தமிழர்கள் மத்தியில் அறியப்பட்ட டேவிட் பூபாளபிள்ளையை கனடியத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து நிறுத்த இப்போது ஒரு பிரிவு முயல்வாதாகவும் அதற்கான இறுதிக்கட்டப் பேச்சுக்களில் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் இயக்குனர் சபையுடன் மேற்படி பிரிவு ஈடுபட்டு ள்ளதாகவும் தெரியவருகின்றது. இதற்கான காரணம் யாதெனில் டேவிட் பூபாளபிள்ளையே வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்காமல் கனடியத் தமிழ்க் காங்கிரஸைத் தடுத்தார் என்ற குற்றச்சாட்டாகும். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நேரு குணரத்தினத்தின் துணைவரான சேந்தன் நடராஜாவும் இன்னும் சில அவர்களது சகாக்களும் டேவிட் பூபாளபிள்ளையை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தெரியவருகின்றது.

இது பற்றித் அறியவருவதாவது வட்டுக்கோட்டை வாக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் தருமாறு நேரு குணரத்தினம் கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவரான டாக்டர் சிறீரஞ்சனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் டாக்டர் சிறீரஞ்சன் இயக்குனர் சபையுடன் கதைத்துவிட்டு இதற்கு தாங்கள் உடன்பட முடியாது என்று தெரிவித்தார். மேற்படி முடிவானது டேவிட் பூபாளப்பிள்ளையினது முடிவ மட்டுமல்ல. அது காங்கிரஸின் இயக்குனர் சபையால் எடுக்கப்பட்ட முடிவு. அந்த இயக்குநர் சபையில் டேவிட் பூபாளபிள்ளை ஒரு அங்கத்துவர் இல்லை.

கனடியத் தமிழ் காங்கிரஸை பின்னின்று இயக்கும் நேரு குணரத்தினத்தின் இந்த முடிவுக்குக் காரணம் மட்டக்களப்பைச் சேர்ந்த டேவிட் பூபாளபிள்ளை வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு எதிரானவர் என்பதல்ல. இது ஒரு பிரதேச வாதமே தவிர வேறொன்றுமில்லை. டேவிட் பூபாளப்பிள்ளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர். அவருடன் சிறையில் இருந்த பலரும் இன்று மேற்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்கின்றனர். அவர்கள் டேவிட் பூபாளப்பிள்ளையை அறிந்து வைத்துள்ளனர். ஆனால் அவரை நிறுத்தினால் மட்டுமே தமிழ் காங்கிரஸை இயக்க முடியும் என நேரு குணரத்தினம் அழுத்தம் கொடுப்பதாக கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேவிட் பூபாளப்பிள்ளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அதற்கும் மேலாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுத்து வந்தவர். 2003 மார்ச்சில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தனக்கிருந்த விமர்சனங்களை வெளிப்படுத்தியும் இருந்தார். இவ்வாண்டு நடுப்பகுதிவரை இடம்பெற்ற யுத்தத்திலும் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் தனது விமர்சனத்தை வெளிப்படுத்தி இருந்தார் டேவிட் பூபாளப்பிள்ளை.

ஏற்கனவே மேலோங்கி இருந்த யாழ் மையவாதம் கருணாவின் பிளவிற்குப்பின் பிரதேசவாதத்தைக் கக்கியது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மட்டக்களப்பு மக்களையும் போராளிகளையும் சந்தேகக் கண்ணுடன் பார்த்த யாழ் மையவாதம் அவர்கள் தங்கள் கருத்துடன் முரண்பட்டால் அல்லது விமர்சனங்களை முன்வைத்தால் உடனடியாக அவர்களுக்கு துரோகிப்பட்டம் சூட்டத் தயங்குவதில்லை. இது டேவிட் பூபாளப்பிள்ளைக்கு மட்டும் ஏற்பட்ட அனுபவமும் அல்ல.
 
நேரு குணரத்தினம் புலம்பெயர்ந்த யாழ் மையவாதத்தின் ஒரு எச்சம். உலகத் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்ட போது நேரு குணரத்தினத்தை காண முடியவில்லை. நேரு குணரத்தினத்திற்கு உள்ள ஒரே தகுதி வீரகத்தி மணிவண்ணன் எனப்படும் புலிகளின் வெளிநாட்டுப்பிரிவு கஸ்ரோவுடன் ஒன்பதாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தவர் என்பது மட்டுமே. 1981ம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கு தனது தந்தையுடன் சென்ற நேரு குணரத்தினம் 1983ல் சென்னை லயோலாக் கல்லூரியில் 2 வருடங்கள் படித்தார். 1986ல் கனடாவிற்குப் புலம்பெயர்ந்தவர்.

எனக்கு திரு. நக்கீரன் தங்கவேலு தனிப்பட்ட ரீதியில் எழுதிய கடிதத்தில் தாங்கள் வைத்திருந்த கனடியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பே 1998ல் அரசியல் காரணங்களிற்காக தமிழ்க் காங்கிரஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பபட்டதாக எனக்குத் தெரிவித்திருந்தார்.

ஆனால் நான் இதனைத் தீர விசாரித்ததில் மேற்படி கனடியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பில் தர்மலிங்கம் மாஸ்ரர், தங்கவேலு ஐயா போன்றோர் பொறுப்பாக இருந்த காலத்தில் அதன் நிகழ்ச்சிகளிற்காக நேருவிடம் கொடுக்கப்பட்ட நிதிக்கான கணக்கு வழக்கு கொடுக்கப்படாததே அதை நிறுத்தியதற்குக் காரணம் என்பதை சம்பந்தப்பட்டவர்களே தெரிவித்தார்கள்.

மேற்படி அமைப்பினhல் பெரியளவில் நடத்தப்பட்ட 1998 இராப்போசன விருந்து நடத்துவதற்காக 50,000 முற்பணமாக நேருவால் பெறப்பட்டதாகவும், அந்த விருந்திற்கு 65 டொலர்கள் பிரகாரம் 700 மேற்பட்ட டிக்கட் விற்கப்பட்டு மண்டபம் நிறைந்த விருந்தாக இது நடந்ததாகவும் அத்தோடு விளம்பரத்தாரர்களிடம் இருந்து பணம் பெற்றப்பட்டதாகவும் ஆனால் முற்பணமாக வேண்டப்பட்ட பணமோ அல்லது அந்த விருந்திற்காக செய்யப்பட்ட கணக்கு வழக்கோ 2003ம் ஆண்டு வரை நேரு தரவில்லையென்று அப்போதைய நிதிப்பொறுப்பாளர் தெரிவித்தார்.

அதேபோல இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமான சர்வதேச மாநாட்டை நடத்துவதற்கென 36,000 டொலர்கள் பெறப்பட்டதாகவும் இந்த மாநாட்டிற்கென பெறப்பட்ட நிதிக் கணக்குகளையோ அல்லது விளம்பர அனுசரணைகளையோ 2003ம் ஆண்டு வரை சமர்ப்பிக்கவில்லையென்றும், வொண்டர் லாண்டில் இடம்பெற்ற தமிழர் நாள் நிகழ்வுகளிற்கு வாங்கப்பட்ட முற்பணம் ஏதும் திருப்பித் தரப்படவில்லையென்றும் இதுவே அந்த கனடியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பைக் கலைத்து கனடியத் தமிழ்க் காங்கிரஸை உருவாக்க உண்மையான காரணம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தார்கள்.

கணக்குக் கேட்டு நெருக்கடி கொடுத்த கணக்காளரும் நிதிப்பொறுப்பாளரும் கஸ்ரோவால் அவரது வெளிநாட்டுப் பொறுப்பாளர்களாலும் நிறுத்தப்பட நேரு தனது வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்றே அவர்கள் கூறினார்கள். இதனை நிரூபிப்பதற்கு நிதிப்பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் தங்காள் தயாரென்கிறார்கள். இல்லையென்பதற்கு நக்கீரன் ஐயா போன்றோர் தயாரா?

நேரு குணரத்தினம் போன்றவர்களிள் புற அழுத்தங்களுக்கு கனடியத் தமிழ் காங்கிரஸ் பணிந்து டேவிட் பூபாளப்பிள்ளையை வெளியேற்றினால் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் பிரதேசவாதத்தை ஆதரிக்கும் வடக்கு கிழக்குத் தமிழர்களைப் பிரித்தாழ முயற்சிக்கும் ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு எம் போன்றவர்களின் உறுப்புரிமையை இழக்கும்.

வன்முறைகளுடன் சூடுபிடித்துள்ள ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் – புன்னியாமீன்

sarath-jaffna.jpgmahinda_jaffna.jpgஆறாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 26ஆந் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களப் பரீட்சையில் இறங்கியுள்ள இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையில் தேர்தல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துவருவதை அவதானிக்க முடிகின்றது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமிருக்கும் இந்நிலையில் (ஜனவரி 18 வரை) தேர்தல் தொடர்பில் 694 முறைப்பாடுகள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளதாக குற்றவியல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்திருந்தார். இதில் சந்தேகநபர்கள் தெரியாத முறைப்பாடுகள் 387 உம் சந்தேகநபர்கள் தெரிந்த முறைப்பாடுகள் 307ம் அடங்கும். சந்தேகநபர்கள் தெரிந்த முறைப்பாடுகளில் 123 முறைப்பாடுகள் விசாரித்து முடிக்கப்பட்டு விட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு இதுவரை 4 பாரதூரமான சம்பவங்களாக உக்கம, புத்தளம், வாரியபொல குருநாகல், வெலகெர ஆகிய பகுதிகளில் 4 பேர் தேர்தல் வன்முறைகளால் கொல்லப்பட்டுள்ளனர். முதலாவது அரசியல் படுகொலை ஜனவரி 12ஆந் திகதி இலங்கையின் தென்மாகாணத்தில் தங்காலை பகுதியில்  இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றின் மீது துப்பாக்கிச் சு10டு நடத்தப்பட்டதால் குசுமாவதி என்பவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 8 பேர் காயமடைந்தனர். குசுமாவதியின் மரணம் குறித்து கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ குசுமாவதி தனது கட்சி ஆதரவாளர் என்றும்,  இக்கொலைச் சம்பவமானது மிலேச்சத்தனமான நடவடிக்கை எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த முதலாவது கொலையைப் புரிந்தது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் என குற்றஞ் சுமத்தப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 17ஆந் திகதி இரண்டாவது அரசியல் தேர்தல் வன்முறை கொலையும் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றுக்கு சென்றுகொண்டிருந்த ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆனந்த சமன்குமார என்ற 19 வயதுடைய இளைஞன்; கொல்லப்பட்டார். இந்த இளைஞன் ஆனமடுவ,  தெனிங்கலவைச் சேர்ந்தவராவார். இந்த இளைஞனுக்கு அஞ்சலிச் செலுத்த ஐக்கிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் வாரியபொலவில் ஜனவரி 18ஆம் திகதி அதிகாலையில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். தேர்தல் வன்முறையில் இது 3வது கொலையாகும். இச்சம்பவத்தில் எச். எம். தம்மிக்க ஹேரத் (33) என்பவரே கொல்லப்பட்டார். வாரியபொல பிரதேசத்தில் சம்பவ தினம் பத்து பேர் சேர்ந்து தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வேளை மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த குழுவினர் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் மீது தடிகளால் தாக்கியுள்ளனர் எனவும் இதன்போதே தம்மிக்க ஹேரத் என்பவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

பலிக்குப் பலி வாங்கும் இத்தேர்தல் வன்முறைக் கலாசாரத்தில் 18ஆம் திகதி இரவு நேரத்தில் பிரதி அமைச்சர் ஜெயரத்தின ஹேரத்தின் குருநாகல், வெலகதர பிரதேசத்திலுள்ள வீட்டுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அலுவலகத்தின் மீது கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் அமைச்சரின் சாரதி டி.எம் சுரங்க இந்திரஜித் (27) உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறாக நாளுக்குநாள் வன்முறைக் கலாசாரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதுவரை நடந்த 4 கொலைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் இருவரும், பொதுவேட்பாளரின் ஆதரவாளர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும்,  இரண்டு கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான வாய்ப் பேச்சி மோதலாக மாத்திரம் அன்றி ஆயுதப் பிரயோகங்களாகவும் அதிகரித்து  வருகின்றன. கிரெனைட் வீச்சுக்கள், கைத்துப்பாக்கிப் பிரயோகங்கள் போன்றனவும், கடந்த ஒரு வாரத்துக்குள் அதிகரித்து வருகின்றன. கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்படுதல்,  காரியாலயங்கள் தாக்கப்படுதல்,  என்பன சாதாரண நிகழ்வுகளாக இடம்பெறத் தொடங்கியுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். வாகனங்கள்,  வீடுகள் போன்ற உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. மக்களின் ஜனநாயக உரிமைகளில் வன்முறையும் ஒன்றா என்று ஐயப்படும் வகையில் இவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. தேர்தல் காலங்களில் வன்முறை கலாசாரங்கள் மூன்றாம் உலக நாடுகளுக்கு பொதுவானவை.  

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் தொடர்பான வன்முறை முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் பொலிஸார் கூறுகின்றனர். சகல முறைப்பாடுகள் தொடர்பாகவும் 289 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதில் அதிகமானோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 164 பேர் இன்னும் கைது செய்யப்படவுள்ளனர். இதேநேரம், கடந்த 13 ஆம் திகதி பொலநறுவையில் ஆளும் தரப்பு,  எதிர்த் தரப்பு கட்சி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட வேண்டிய 21 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹக்கம பகுதியில் பிரசாரக் கூட்டமொன்றிற்கு சென்று கொண்டிருந்த பஸ்லொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. வாரியபொல பிரசார சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்த ஒருவர் மீது 6 மோட்டார் சைக்கிள்களில் வந்து தாக்கி அந்நபரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான 6 சந்தேகநபர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கூறியுள்ளனர்.

தேர்தல் காலத்தில் வன்முறைகள் உருவாகுவதை  எக்காரணத்தையிட்டும் எச்சமூகத்தாலும் அனுமதிக்க முடியாது. வன்முறைகள் தலைதூக்காத விதத்தில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள்  வழங்கியுள்ள போதிலும் கூட அந்த அறிவுறுத்தல்கள் உறுதியானவையாக உள்ளனவா என்பது கேள்விக்குறியே. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ‘தேர்தல் சட்டங்களை பாதுகாப்பதற்கு எவரும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை” என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க விசனம் வெளியிட்டுள்ளார். தேர்தல் செயலகத்தில் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் உத்தரவுகள் உதாசீனப்படுத்தப்படுவதாகவும்,  இந்த நிலைமையின் கீழ் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச ஊடகங்களை கண்காணிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த அதிகாரியின் பணிப்புரைகளை குறித்த ஊடகங்கள் பின்பற்றுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரச ஊடகங்கள் தொடர்ந்தும் உத்தரவுகளை மீறிச் செயற்பட்டால் குறித்த அதிகாரியை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு அரச உத்தியோகத்தர்கள் 17 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைய செயற்பட வேண்டும் என்ற போதிலும் எவரும் அதனைப் பின்பற்றுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் வன்முறையில் ஈடுபடுவோர் எவராக இருப்பினும் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையாளர் விசேட அதிகாரங்களைக் கொண்டவராக விளங்குகிறார். தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு சுமுகமாக நடை பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பணிப்புரைகளை வழங்கும் அதிகாரம் அவருக்குண்டு.

தேர்தல் தொடர்பான சிறு சிறு சம்பவங்களைக் கூட பெரிதுபடுத்தும் விதத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்குவதாக தேர்தல் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்விடயத்தில பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டுமென்பதே அத்தகைய அமைப்புகளுக்கு தேர்தல் ஆணையாளர் கூறியிருக்கும் அறிவுரை ஆகும். சிறு வன்முறைச் சம்பவங்களைப் பெரிதுபடுத்துவது ஊடகங்களுக்கும் அழகல்ல.

தேர்தல் கடமையைப் பொறுத்த வரை எமது தேர்தல் ஆணையாளர் அனைத்துத் தரப்பினரதும் பாராட்டைப் பெற்றவராக விளங்குகிறார். கூடுதலான தேர்தல்களை கச்சிதமாக நடத்தி முடித்த நிர்வாகத்திறன் மிகுந்தவர் அவர். எதுவித பக்கச்சார்புமற்ற விதத்தில் தேர்தல்களை நடத்துவதென்பது மிகுந்த பொறுப்பு மிக்கதாகும். இப்போது நடைபெறவிருக்கும் தேர்தலிலும் தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகள் கடுமையானதாகவே அமைந்திருக்கும் என எதிர்பார்க்க முடியும்.

ஜனநாயக நாடொன்றில் ஆட்சியைத் தீர்மானிப்பதற்காக உரிமை  மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களது சுயசெயற்பாடுகளுக்குப் பங்கம் விளைவித்தல் என்பது ஜனநாயக உரிமை மீறலாகும். தெற்காசியாவிலே கல்வியறிவில் முன்னணியில் உள்ள எமது இலங்கை இவ்விடயத்தையும் கவனத்தில் எடுத்தல் வேண்டும்.  வன்முறைகள் வாயிலாக எதனையும் சாதித்துவிட முடியாதென்பது யதார்த்தமும் உண்மையாகும்.

மறுபுறமாக தேர்தல் தொடர்பான விதிமுறைகளை மீறிச் செயற்படுவதோ அல்லது வன்முறைகளில் ஈடுபடுவதோ ஆரோக்கியமான நடவடிக்கைகளல்ல. இதுபோன்ற நடவடிக்கைகளால் சாதாரண மக்கள் மத்தியில் வெறுப்பும் அதிருப்தியுமே உருவாகும். வன்முறையில் சம்பந்தப்படுவோர் இதனை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். வன்முறைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தினுள் எதுவிதமான மனமாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. அதற்கு மாறாக மக்களிடமிருந்து வெறுப்பையே சம்பாதித்துக் கொள்ள முடியும். தற்போது இலங்கையிலும் இதுவே ஏற்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும் : 06 – புன்னியாமீன் –

sri-lanka.jpgதொடர்ச்சி….

13 அபேட்சகர்கள் போட்டியிட்ட நான்காவது ஜனாதிபதித் தேர்தல்

நான்காவது ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் 1994.11.10ம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்திக்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். ஆனால், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே 4வது ஜனாதிபதித் தேர்தலுக்குரிய அறிவித்தல் விடுக்கப்பட்டது. (ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை 4 ஆண்டுகள் பூரணப்படுத்திய பின்பு ஜனாதிபதி விரும்பின் இடைக்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அதிகாரம் அவருக்குண்டு.

4வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 1999.11.16ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படுமெனவும், 199.12.21ம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும்,  ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பணிப்புரையின் படி பதில் தேர்தல் ஆணையாளர் அவர்களினால் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இந்த அறிவித்தலின்படி ஸ்ரீலங்கா ஜனநாயகக் குடியரசின் 5வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெப்பதற்கான 4வது ஜனாதிபதித் தேர்தலில் பின்வரும் அபேட்சகர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

1. ஜனாப் அப்துல் ரஸ்ஸாக் அப்துல் றசூல்
சின்னம் : தாரசு
ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி
2. திரு. அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தனா சின்னம்
சின்னம்: வண்ணத்திப்பூச்சி
கட்சி : மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி
3. திரு. ஆரியவங்ச திசாநாயக்க
சின்னம் : கழுகு
கட்சி : ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
4. திரு. மெஸ்டியகே தொன் நந்தன குணதிலக
சின்னம் : மணி
கட்சி : மக்கள் விடுதலை முன்னணி
5. திரு. கமல் கருணதாச
சின்னம் : லந்தர் விளக்கு
கட்சி : மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி
6. திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
சின்னம் : நாற்காலி
கட்சி : பொதுஜன ஐக்கிய முன்னணி
7. திரு. டெனிசன் எதிரிசூரிய
சின்னம் : கத்தரிக்கோல்
கட்சி : சுயேட்டை
8. திரு. மஹிமன் ரஞ்சித்
சின்னம் : அலுமாரி
கட்சி : சுயேட்டை
9. திரு. ரணில் விக்கிரமசிங்க
சின்னம் : யானை
கட்சி : ஐக்கிய தேசியக்கட்சி
10. திரு. ராஜீவ விஜேசிங்க
சின்னம் : புத்தகம்
கட்சி : லிபரல் கட்சி
11. திரு. வாசுதேவ நாணயக்கார 
சின்னம் : மணிக்கூடு
கட்சி : இடதுசாரி ஜனநாயக முன்னணி
12. திரு. ஹட்சன் சமரசிங்க
சின்னம் : வானொலி
கட்சி : சுயேட்டை
13. திரு. விஜேதுங்க முதலிகே ஹரிச்சந்திர விஜேதுங்க
சின்னம் : விமானம்
கட்சி : சிங்களயே மகசம்மத பூமிபுத்திர கட்சி

நிமயனப் பத்திரம் தாக்கல் செய்ததை நோக்கும் போது 3 ஜனாதிபதித் தேர்தல்களையும் விட அதிகமான அபேட்சகர்கள் நியமனப்பத்திரம் தாக்கல் செய்தது இதுவே முதற்தடவை. இங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மூலமாக 10 வேட்பாளர்களும், சுயேட்சையாக 3 வேட்பாளர்களும் நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். (முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் திரு. குமார் பொன்னம்பலம் வேட்பாளராக நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இந்த அடிப்படையில் நோக்கும் போது ஜனாப் அப்துல் றசூல் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலொன்றில் போட்டியிட்ட 2வது சிறுபான்மை அபேட்சகராகின்றார்.

4வது ஜனாதிபதித் தேர்தலில் 13 அபேட்சகர்கள் போட்டியிட்ட போதிலும் கூட போட்டி மும்முனைப் போட்டியாகவே (பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி) இடம்பெறுமென பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்த நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியால் பலத்த தாக்கமொன்றினை ஏற்படுத்த முடியவில்லை. முன்னணிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான நேரடி மோதலாகவே இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. அதேநேரத்தில் மேற்படி இரண்டு கட்சிகளும் தவிர ஏனைய கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை இழக்கும் என்ற நிலை பரவலாகப் பேசப்பட்டது.

4வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்
மேல்மாகாணம்.

கொழும்பு மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   474,310 (49.18%)
ரணில் விக்கிரமசிங்க    425,185 (44.08%)
நந்தன குணதிலக   44,009  (4.56%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    8,209  (0.85%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,319  (0.14%)
ராஜீவ விஜேசிங்க    1,376  (0.14%)
வாசுதேவ நாணயக்கார    5,000  (0.52%)
டெனிசன் எதிரிசூரிய    1,370  (0.14%)
அப்துல் ரசூல்     1,980  (0.21%)
கமல் கருணாதாச    783  (0.08%)
ஹட்சன் சமரசிங்க     355  (0.04%)
ஆரியவங்ஸ திசாநாயக்க    329  (0.03%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  309  (0.03%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 993,731 (74.32%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   29,197 (2.94%)
செல்லுபடியான வாக்குகள்  964,534 (97.06%)
மேலதிக வாக்குகள்  49,125       

கம்பஹா மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   532,796 (56.58%)
ரணில் விக்கிரமசிங்க     353,969 (37.59%)
நந்தன குணதிலக   40,742  (4.32%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    4,753  (0.50%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,495  (0.16%)
ராஜீவ விஜேசிங்க    1,165  (0.12%)
வாசுதேவ நாணயக்கார    2,102  (0.22%)
டெனிசன் எதிரிசூரிய    1,549  (0.16%)
அப்துல் ரசூல்     1,354  (0.14%)
கமல் கருணாதாச    878  (0.09%)
ஹட்சன் சமரசிங்க     420  (0.04%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    386  (0.04%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  280 (0.03%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 962,387 (78.31%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   20,768 (2.16%)
செல்லுபடியான வாக்குகள்  941,619 (97.84%)
மேலதிக வாக்குகள்  178,827      

களுத்துறை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   281,217 (52.88%)
ரணில் விக்கிரமசிங்க     217,423 (40.88%)
நந்தன குணதிலக   23,770  (4.47%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    2,721  (0.51%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,279  (0.24%)
ராஜீவ விஜேசிங்க    1,028  (0.19%)
வாசுதேவ நாணயக்கார    1,003  (0.19%)
டெனிசன் எதிரிசூரிய    1,133  (0.21%)
அப்துல் ரசூல்     796  (0.15%)
கமல் கருணாதாச    608  (0.11%)
ஹட்சன் சமரசிங்க     386  (0.07%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    216  (0.04%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  229  (0.04%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 543,605 (79.62%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   11,796 (2.17%)
செல்லுபடியான வாக்குகள்  531,809 (97.83%)
மேலதிக வாக்குகள்  63,794      

மத்திய மாகாணம்

கண்டி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   308,187 (50.29%)
ரணில் விக்கிரமசிங்க     276,360 (45.10%)
நந்தன குணதிலக   15,512  (2.53%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    3,280  (0.54%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,775  (0.29%)
ராஜீவ விஜேசிங்க    1,614  (0.26%)
வாசுதேவ நாணயக்கார    1,065  (0.17%)
டெனிசன் எதிரிசூரிய    1,369  (0.22%)
அப்துல் ரசூல்     1,706  (0.28%)
கமல் கருணாதாச    749  (0.12%)
ஹட்சன் சமரசிங்க     639  (0.10%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    265  (0.04%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  290 (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 629,871 (79.28%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   17,060 (2.71%)
செல்லுபடியான வாக்குகள்  612,871 (97.29%)
மேலதிக வாக்குகள்  31,827

மாத்தளை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    111,232  (51.42%)
ரணில் விக்கிரமசிங்க     91,944 (42.51%)
நந்தன குணதிலக   7,924  (3.66%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    902  (0.42%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   951  (0.44%)
ராஜீவ விஜேசிங்க   860  (0.40%)
வாசுதேவ நாணயக்கார   308  (0.14%)
டெனிசன் எதிரிசூரிய   747  (0.35%)
அப்துல் ரசூல்     550  (0.25%)
கமல் கருணாதாச    343  (0.16%)
ஹட்சன் சமரசிங்க     261  (0.12%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    139  (0.06%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 149 (0.07%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 222,482 (77.74%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,171 (2.77%)
செல்லுபடியான வாக்குகள்  216,310 (97.23%)
மேலதிக வாக்குகள்  19,288

நுவரெலியா மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    147,210 (46.88%)
ரணில் விக்கிரமசிங்க     152,836 (48.88%)
நந்தன குணதிலக   5,879  (1.87%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,021  (0.33%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,698  (0.54%)
ராஜீவ விஜேசிங்க    1,567  (0.50%)
வாசுதேவ நாணயக்கார    812  (0.26%)
டெனிசன் எதிரிசூரிய    1,116  (0.36%)
அப்துல் ரசூல்     531  (0.17%)
கமல் கருணாதாச    555  (0.18%)
ஹட்சன் சமரசிங்க     413  (0.13%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    176  (0.06%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன   176  (0.06%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 322,987 (81.21%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   8,997 (2.79%)
செல்லுபடியான வாக்குகள்  313,990 (97.21%)
மேலதிக வாக்குகள்  5,626

தென் மாகாணம்

காலி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    281,154 (54.91%)
ரணில் விக்கிரமசிங்க     195,906 (38.26%)
நந்தன குணதிலக   27,257  (5.32%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,592  (0.31%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,227  (0.24%)
ராஜீவ விஜேசிங்க    907  (0.18%)
வாசுதேவ நாணயக்கார    952  (0.19%)
டெனிசன் எதிரிசூரிய    968  (0.19%)
அப்துல் ரசூல்     651  (0.13%)
கமல் கருணாதாச    663  (0.13%)
ஹட்சன் சமரசிங்க     357  (0.07%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    175  (0.03%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  210  (0.04%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 521,735 (78.98%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   9,716 (1.86%)
செல்லுபடியான வாக்குகள்  512,019 (98.14%)
மேலதிக வாக்குகள்  85,248

மாத்தறை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    205,685 (54.32%)
ரணில் விக்கிரமசிங்க     139,677 (36.89%)
நந்தன குணதிலக   26,229  (6.93%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,539  (0.41%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,042  (0.28%)
ராஜீவ விஜேசிங்க    997  (0.26%)
வாசுதேவ நாணயக்கார    670  (0.18%)
டெனிசன் எதிரிசூரிய    891  (0.24%)
அப்துல் ரசூல்     639  (0.17%)
கமல் கருணாதாச    543  (0.14%)
ஹட்சன் சமரசிங்க     332  (0.09%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    192  (0.05%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  202 (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 387,221 (75.06%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   8,583 (2.22%)
செல்லுபடியான வாக்குகள்  378,636 (97.78%)
மேலதிக வாக்குகள்  66,008

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    120,275 (47.41%)
ரணில் விக்கிரமசிங்க     95,088 (37.48%)
நந்தன குணதிலக   33,739  (13.30%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    733  (0.29%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   700  (0.28%)
ராஜீவ விஜேசிங்க    729  (0.29%)
வாசுதேவ நாணயக்கார    483  (0.19%)
டெனிசன் எதிரிசூரிய    691  (0.27%)
அப்துல் ரசூல்     346  (0.14%)
கமல் கருணாதாச    421  (0.17%)
ஹட்சன் சமரசிங்க     192  (0.08%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    160  (0.06%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன   121  (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 259,053 (73.84%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,375 (2.07%)
செல்லுபடியான வாக்குகள்  253,678 (97.84%)
மேலதிக வாக்குகள்  25,187

வட மாகாணம்

யாழ்ப்பாண மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    52,043  (46.65%)
ரணில் விக்கிரமசிங்க     48,005 (43.03%)
நந்தன குணதிலக   413  (0.37%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    818  (0.73%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,873  (1.68%)
ராஜீவ விஜேசிங்க    1,368  (1.23%)
வாசுதேவ நாணயக்கார    3,394  (3.04%)
டெனிசன் எதிரிசூரிய    831  (0.74%)
அப்துல் ரசூல்     1,041  (0.93%)
கமல் கருணாதாச    487  (0.44%)
ஹட்சன் சமரசிங்க     552  (0.49%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    340  (0.30%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  403 (0.36%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 117,549 (19.18%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,981 (5.09%)
செல்லுபடியான வாக்குகள்  111,568  (94.91%)
மேலதிக வாக்குகள்  4,038

வன்னி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    16,202  (25.84%)
ரணில் விக்கிரமசிங்க     43,803 (69.87%)
நந்தன குணதிலக   482  (0.77%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    93  (0.15%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   420  (0.67%)
ராஜீவ விஜேசிங்க    456  (0.73%)
வாசுதேவ நாணயக்கார    444  (0.71%)
டெனிசன் எதிரிசூரிய    234  (0.37%)
அப்துல் ரசூல்     306  (0.49%)
கமல் கருணாதாச    83  (0.13%)
ஹட்சன் சமரசிங்க     69  (0.11%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    40  (0.06%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  58  (0.09%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 64,180  (31.23%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,490 (2.32%)
செல்லுபடியான வாக்குகள்  62,690  (97.68%)
மேலதிக வாக்குகள்  27,601

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    58,975  (34.66%)
ரணில் விக்கிரமசிங்க     104,100 (61.19%)
நந்தன குணதிலக   290  (0.17%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    250  (0.15%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,528  (0.90%)
ராஜீவ விஜேசிங்க    1,838  (1.08%)
வாசுதேவ நாணயக்கார    884  (0.52%)
டெனிசன் எதிரிசூரிய    784  (0.46%)
அப்துல் ரசூல்     750  (0.44%)
கமல் கருணாதாச    331  (0.19%)
ஹட்சன் சமரசிங்க     234  (0.14%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    78  (0.05%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  89  (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 173,878 (64.35%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,747 (2.15%)
செல்லுபடியான வாக்குகள்  170,131 (97.85%)
மேலதிக வாக்குகள்  45,125

திகாமடுல்லை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    149,593 (55.59%)
ரணில் விக்கிரமசிங்க     109,805 (40.80%)
நந்தன குணதிலக   4,068  (1.51%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    344  (0.13%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,275  (0.47%)
ராஜீவ விஜேசிங்க    1,193  (0.44%)
வாசுதேவ நாணயக்கார    473  (0.18%)
டெனிசன் எதிரிசூரிய    823  (0.31%)
அப்துல் ரசூல்     663  (0.25%)
கமல் கருணாதாச    519  (0.19%)
ஹட்சன் சமரசிங்க     171  (0.06%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    93  (0.03%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  80 (0.03%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 273,649 (79.59%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,549 (1.66%)
செல்லுபடியான வாக்குகள்  269,100 (98.34%)
மேலதிக வாக்குகள்  39,788

திருகோணமலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    56,691  (44.96%)
ரணில் விக்கிரமசிங்க     63,351 (50.25%)
நந்தன குணதிலக   2,307  (1.83%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    218  (0.17%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   735  (0.58%)
ராஜீவ விஜேசிங்க    713  (0.57%)
வாசுதேவ நாணயக்கார    476  (0.38%)
டெனிசன் எதிரிசூரிய    477  (0.38%)
அப்துல் ரசூல்     599  (0.48%)
கமல் கருணாதாச    245  (0.19%)
ஹட்சன் சமரசிங்க     128  (0.10%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    72  (0.06%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  69  (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 128,723 (63.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,642 (2.05%)
செல்லுபடியான வாக்குகள்  126,081 (97.95%)
மேலதிக வாக்குகள்  6,660

வடமேல் மாகாணம்

குருநாகலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    377,483 (50.76%)
ரணில் விக்கிரமசிங்க     326,327 (43.88%)
நந்தன குணதிலக   27,354  (3.68%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    2,704  (0.36%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,889  (0.25%)
ராஜீவ விஜேசிங்க    1,660  (0.22%)
வாசுதேவ நாணயக்கார    1,011  (0.13%)
டெனிசன் எதிரிசூரிய    1,672  (0.22%)
அப்துல் ரசூல்     1,355  (0.18%)
கமல் கருணாதாச    872  (0.12%)
ஹட்சன் சமரசிங்க     578  (0.08%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    314  (0.04%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  301  (0.04%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 758,791 (77.37%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   15,272 (2.01%)
செல்லுபடியான வாக்குகள்  743,579 (97.99%)
மேலதிக வாக்குகள்  51,156

புத்தளம் மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    141,725 (51.47%)
ரணில் விக்கிரமசிங்க     121,615 (44.17%)
நந்தன குணதிலக   7,876  (2.86%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    614  (0.22%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   741  (0.27%)
ராஜீவ விஜேசிங்க    599  (0.22%)
வாசுதேவ நாணயக்கார    445  (0.16%)
டெனிசன் எதிரிசூரிய    589  (0.21%)
அப்துல் ரசூல்     481  (0.17%)
கமல் கருணாதாச    308  (0.11%)
ஹட்சன் சமரசிங்க     164  (0.06%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    88  (0.03%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  94 (0.03%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 281,117  (69.57%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,778 (2.06%)
செல்லுபடியான வாக்குகள்  275,339 (97.94%)
மேலதிக வாக்குகள்  20,110

வடமத்திய மாகாணம்

அநுராதபுர மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    189,073 (54.14%)
ரணில் விக்கிரமசிங்க     139,180 (39.86%)
நந்தன குணதிலக   14,612  (4.18%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    902  (0.26%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,176  (0.34%)
ராஜீவ விஜேசிங்க    1,065  (0.30%)
வாசுதேவ நாணயக்கார    394  (0.11%)
டெனிசன் எதிரிசூரிய    963  (0.28%)
அப்துல் ரசூல்     670  (0.19%)
கமல் கருணாதாச    600  (0.17%)
ஹட்சன் சமரசிங்க     271  (0.08%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    166  (0.05%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  129  (0.04%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 356,150 (77.50%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,949 (1.95%)
செல்லுபடியான வாக்குகள்  349,201 (98.50%)
மேலதிக வாக்குகள்  49,893

வடமத்திய மாகாணம்

பொலநறுவை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   88,663  (51.55%)
ரணில் விக்கிரமசிங்க     72,598 (42.21%)
நந்தன குணதிலக   8,020  (4.66%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    381  (0.22%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   541  (0.31%)
ராஜீவ விஜேசிங்க    542  (0.32%)
வாசுதேவ நாணயக்கார    165  (0.10%)
டெனிசன் எதிரிசூரிய    392  (0.23%)
அப்துல் ரசூல்     240  (0.14%)
கமல் கருணாதாச    247  (0.24%)
ஹட்சன் சமரசிங்க     116  (0.07%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    65  (0.04%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  37 (0.02%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 175,158 (98.20%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,151 (1.80%)
செல்லுபடியான வாக்குகள்  172,007 (79.25%)
மேலதிக வாக்குகள்  16,065

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   167,000 (46.33%)
ரணில் விக்கிரமசிங்க     172,884 (47.97%)
நந்தன குணதிலக   12,023  (3.34%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,177  (0.14%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,499  (0.42%)
ராஜீவ விஜேசிங்க    1,652  (0.46%)
வாசுதேவ நாணயக்கார    589  (0.16%)
டெனிசன் எதிரிசூரிய    1,254  (0.34%)
அப்துல் ரசூல்     915  (0.25%)
கமல் கருணாதாச    554  (0.15%)
ஹட்சன் சமரசிங்க     495  (0.14%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க   203  (0.06%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  194 (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 371,400 (80.00%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   10,979 (2.06%)
செல்லுபடியான வாக்குகள்  360,421 (97.04%)
மேலதிக வாக்குகள்  5,884

மொனராகலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    92,049  (51.07%)
ரணில் விக்கிரமசிங்க     73,695 (40.89%)
நந்தன குணதிலக   10,456  (5.80%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    481  (0.27%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   816  (0.45%)
ராஜீவ விஜேசிங்க    860  (0.48%)
வாசுதேவ நாணயக்கார    288  (0.16%)
டெனிசன் எதிரிசூரிய    678  (0.38%)
அப்துல் ரசூல்     215  (0.12%)
கமல் கருணாதாச    336  (0.19%)
ஹட்சன் சமரசிங்க     145  (0.08%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    126  (0.07%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன   100  (0.06%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 184,406 (79.98%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,161 (2.26%)
செல்லுபடியான வாக்குகள்  180,245 (97.74%)
மேலதிக வாக்குகள்  18,354

சப்ரகமுவ மாகாணம்

கேகாலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   210,185 (51.30%)
ரணில் விக்கிரமசிங்க     176,376 (43.05%)
நந்தன குணதிலக   14,997  (3.66%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,730  (0.42%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,262  (0.32%)
ராஜீவ விஜேசிங்க    1,209  (0.30%)
வாசுதேவ நாணயக்கார    703  (0.17%)
டெனிசன் எதிரிசூரிய    1,134  (0.28%)
அப்துல் ரசூல்     814  (0.17%)
கமல் கருணாதாச    481  (0.12%)
ஹட்சன் சமரசிங்க     416  (0.10%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    169  (0.04%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  204 (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 417,816 (78.10%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   8,136 (1.95%)
செல்லுபடியான வாக்குகள்  409,680 (98.05%)
மேலதிக வாக்குகள்  33,809

இரத்தினபுரி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   250,409 (52.13%)
ரணில் விக்கிரமசிங்க     202,621 (42.28%)
நந்தன குணதிலக   16,482  (3.43%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,392  (0.29%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,811  (0.38%)
ராஜீவ விஜேசிங்க    1,687  (0.35%)
வாசுதேவ நாணயக்கார   2,007  (0.42%)
டெனிசன் எதிரிசூரிய    1,475  (0.31%)
அப்துல் ரசூல்     757  (0.16%)
கமல் கருணாதாச    727  (0.15%)
ஹட்சன் சமரசிங்க     490  (0.10%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    247  (0.05%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  259 (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 489,402 (82.14%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   9,038 (1.85%)
செல்லுபடியான வாக்குகள்  480,364 (98.15%)
மேலதிக வாக்குகள்  47,788

இறுதித் தேர்தல் முடிவுகள்.

சந்திரிக்கா குமாரதுங்க   4,312,157 (51.12%)
ரணில் விக்கிரமசிங்க     3,602,748 (42.71%)
நந்தன குணதிலக   344,173  (4.08%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    35,854  (0.43%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   27,052  (0.32%)
ராஜீவ விஜேசிங்க    25,085  (0.30%)
வாசுதேவ நாணயக்கார   23,668  (0.28%)
டெனிசன் எதிரிசூரிய    21,119  (0.25%)
அப்துல் ரசூல்     17,359  (0.21%)
கமல் கருணாதாச    11,333  (0.13%)
ஹட்சன் சமரசிங்க     7,184  (0.09%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க     4,039  (0.05%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன     3,983 (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 8,635,290 (73.31%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  199,536 (2.31%)
செல்லுபடியான வாக்குகள்  8,435,754 (97.69%)

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)

4,217,877

குறைந்த பட்ச வாக்குகளை விட திருமதி சந்திரிக்கா குமாரதுங்க  அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்    

94,280

இரண்டாம் இடத்தைப் பெற்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

709,409