14

14

தமிழர்கள் சமாதானத்தைப் பெற மேயர் ரொபின் வேல்ஸ் பொங்கல் வாழ்த்து!!!

Mayor_and_Cllr_Pongal_14Jan10”இலங்கைத் தமிழர்களுக்கு கடந்த ஆண்டு மிகுந்த நெருக்கடியான ஆண்டு. எதிர்வரும் ஆண்டுகளில் அவர்கள் சமாதானத்தைப் பெறவேண்டும்” என நியூஹாம் மேயர் ரொபின் வேல்ஸ் இன்று தெரிவித்தார். லண்டனில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரே மேயரான ரொபின் வேல்ஸ் இன்று (டிசம்பர் 14) நியூஹாமில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார். இன்றைய நிகழ்வில் நியூஹாம் பிரதான வீதியான ஹைஸ்ரீற் நோத்தில் உள்ள அலங்கார விளக்குகளை ஏற்றி வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உலகிலேயே அதிகமாக பல்வேறு இனத்தவர்கள் இணைந்து வாழ்கின்ற  நகரமாக நியூஹாம் உள்ளது எனக் குறிப்பிட்ட மேயர் இங்குள்ள 86 வீதமான மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதாகக் குறிப்பிட்டார். தமிழ் மக்கள் நியூஹாமிற்கு வழங்கியுள்ள பங்களிப்பையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த மேயர் இன்றைய பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் ஏற்பாட்டாளரான கவுன்சிலர் போல் சத்தியநேசன் உரையாற்றுகையில் தமிழ் மக்கள் பிரித்தானியாவுக்கு கணிசமான அளவில் வர ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகின்றது என்றும் நியூஹாம் தமிழ் மக்களுக்கு இருப்பிடம் வழங்கவில்லை அவர்களுக்கு உன்னதமான வீடாகி உள்ளது என்று தெரிவித்தார். தமிழ் மக்கள் இதுவரை அனுபவித்த துயரங்கள் நீங்கி எதிர்காலத்தில் அவர்கள் சமாதானத்துடன் வாழ்வதற்கு வழியேற்படும் என அவர் தெரிவித்தார்.

Mayor_Pongal_14Jan1075 பேர்வரை கலந்துகொண்ட இந்நிகழ்வின் இறுதியில் பொங்கல் சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டது. ஐரோப்பாவிலேயே பல்லினங்கள் நெருக்கமாகவும் பெரும்பான்மையாகவும் வாழும் நகரமாக நியூஹாம் அமைந்துள்ளது. வீதியால் பயணித்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பொங்கல் சிற்றுண்டிகளைச் சுவைத்து மகிழ்ந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்ற போதும் தனிப்பட்ட கோபதாபங்களுடன் சில விசமத்தனமான பிரச்சாரங்களும் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் மீறியும் இந்நிகழ்வு இடம்பெற்று வருவது இதன் சிறப்பம்சம். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டு தனக்கு 5 தொலைபேசி அழைப்புகளிற்கு மேல்வந்ததாக கலந்துகொண்ட ஒரு வர்த்தகர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்  ”நாங்கள் எல்லாவற்றிற்கும் எதிராகவே செயற்பட்டு பழகிவிட்டோம். இப்போது பொங்கலுக்கும் எதிராக நோட்டிஸ் விடுகிற அளவுக்கு வந்துவிட்டோம்” எனச் சலிப்புடன் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு எதிராக விடப்பட்ட துண்டுப் பிரசுரம்:

நியூஹாம் வாழ் தமிழ் உறவுகளே!
உங்களுக்குத் தெரிந்தவை தான்
முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய
மரண ஓலங்கள்
உயிர்ப்பலிகள்
கற்பழிப்புகள்
பொருளாதாரத் தகர்ப்புகள்
இன்றும் முட்கம்பித் தடுப்பு முகாமில்
ஏதும் இன்றி நிற்கதியாகத்
தவிக்கும் தமிழ் உறவுகள்…..

தொப்புள் கொடி உறவுகளே!
இவைகளை நாம் எளிதில் மறந்துவிட முடியுமா?
இன்றைய காலகட்டத்தில் இனம்சார்ந்த குதூகல வைபவங்கள் எங்களுக்கு வெறுப்பெற்றவில்லையா?

இந்த நிலையில் தமிழ் தேசியத்திற்கு தொடர்ச்சியாகத் துரோகம் இழைப்பவர்களால் 14.01.2010 இல் பொங்கல் விழா என்ற பெயரால்  நடைபெறவுள்ள கொண்டாட்டம்  எங்களுக்கு அவசியம் தானா?

இனமான உணர்வுடன்  நிதானமாகச் சிந்திக்கும் ஒவ்வொரு தமிழரும் இந்தக் கொண்டாட்டத்தை பகிஸ்கரிப்பார்கள் என்பது நிச்சயம்.

சிந்தியுங்கள் அன்பான
நியூஹாம் தமிழ் உறவுகளே!

இதற்குப் பின்னாலுள்ள நபர்கள் தங்கள் சுய விளம்பரத்திற்காக தமிழ் மக்களின் அவலங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகக் குற்றம்சாட்டிய கவுன்சிலர் போல் சத்தியநேசன் இவ்வாறான சமூகப் பீடைகள் தவிர்க்க முடியாமல் ஒவ்வொரு சமூகத்திலும் காணப்படுவதாகவும் இவர்களை உதறிக்கொண்டு சமூகம் தன் பயணத்தைத் தொடரும் என்றும் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இன்றைய பொங்கல் நிகழ்வில் நியூஹாம் வர்த்தகர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சமய ஸ்தாபனங்கின் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

._._._._._.

ஈஸ்ற்ஹாமில் 10வது ஆண்டாக பொங்கல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன

Paul_Sathyanesan_Cllrதமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற நகரமான ஈஸ்ற்ஹாமில் 10வது ஆண்டாக பொங்கல் விளக்குகள், வியாழக்கிழமை 14ம் திகதி மாலை 4 மணிக்கு ஏற்றப்பட உள்ளன. மத வேறுபாடுகளுக்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் ஒன்றாகக் கொண்டாடும் விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் அமைந்துள்ளது. ஈஸ்றஹாம் பொங்கல் விழாவின் போது ஈஸ்ற்ஹாம் நகரபிதா தெருவிளக்குகளை ஏற்றி வைப்பார்.

கடந்த 10 ஆண்டுகளாக ஈஸ்ற்ஹாம் நகரசபையின் அணுசரனையுடன் கவுன்சிலர் போல் சத்தியநேசன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றார். வழமை போல் இம்முறையும் இந்து கிறிஸ்தவ இஸ்லாம் மதப் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில கலந்து சிறப்பிப்பார்கள் என கவுன்சிலர் சத்தியநேசன் தெரிவித்தார்.

ஈஸ்ற்ஹாம் மகாலட்சுமி ஆலயம் முன்பாக உள்ள தெரு வெளியில் மக்கள் ஒன்றாகக் கூடி மேளவாத்தியத்துடன் நகரபிதாவால் தெருவிளக்குகள் ஏற்றி வைக்கப்படும். அனைத் தொடர்ந்து நகரபிதாவினதும் மற்றும் சிலரினதும் சிற்றுரைகளும் இடம்பெற்று பொங்கல் சிற்றுண்டிகள் பரிமாறப்படும்.

இவ்வாண்டும் வழமைபோன்று இலங்கையிலும் உலகிலும் சமாதானத்தை வேண்டி இப்பொங்கல் விளக்குகளை ஏற்றி வைப்போம் என ஏற்பாட்டாளர் கவுன்சிலர் போல் சத்தியநேசன் தெரிவித்தார்.

சென்ற ஆண்டில் நாட்டில் நிலவிய யுத்தநிலையைக் காரணம் காட்டிச் சிலர் இந்நிகழ்வை இடைநிறுத்த முற்பட்ட போதும் சமாதானத்துக்காக நடாத்தப்படும் இந்நிகழ்வை கவுன்சிலர் சத்தியநேசன் தொடர்ந்தும் நடாத்தி வருகின்றார்.

இந்நிகழ்வு சிறிய அளவில் இடம்பெற்றாலும் உலகத் தமிழர்களின் உழைக்கு மக்களின் இந்நிகழ்வை ஐரோப்பிய நாடோன்றில் தொடர்ச்சியாக நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் தொடர்பாக கவுன்சிலர் சத்தியநேசன் வெளியிட்ட பொங்கல் செய்தியில் ”உலகத் தமிழர்களின் தினமான பொங்கல் நாளில் சமாதானமும் அமைதியும் மலர்ந்து அனைவரும் இன்புற்றிருக்க அனைவருக்கும் எனது தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!!”  எனத் தெரிவித்துள்ளார்.

ததேகூ உறுப்பினர்கள் நாடு திரும்பியதும் அறிக்கை சமர்ப்பிப்பு

tna-article-5.pngதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் நால்வர் இன்று புதுடில்லியில் இந்திய அரசுத் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுகின்றனர். நாளை சென்னை திரும்புவர். மறுநாள் கொழும்பு திரும்பிய பின்னர் இந்திய பேச்சுக்கள் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடுவர் என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன்தினம் மாலையும்,ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று விடியற்காலையிலும் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர். நேற்று புதன்கிழமை முன்னிரவு சென்னையிலிருந்து அவர்கள் நால்வரும் புதுடில்லி சென்றனர்.

இன்று புதுடில்லியில் இந்திய அரசுத் தலைவர்களையும் மூத்த அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்து இலங்கைத் தமிழர் நிலைமை, தற்போதைய இலங்கையின் அரசியல் போக்கு ஆகியவை குறித்துப் பேசுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று புதுடில்லி வெளிவிவகார அமைச்சின் ‘சவுத் புளொக்’ கில் பல தரப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் நாளை காலையில் அவர்கள் சென்னை திரும்புவார்கள் என்றும் அதன் பின்னர் அடுத்த நாள் சனிக்கிழமை அவர்கள் கொழும்பு வருவார்கள் என்றும் கூறப்பட்டது.

தாம் கொழும்பு திரும்பிய பின்னர் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக இலங்கைத் தமிழ் மக்களுக்கு சில விடயங்களைத் தெளிவுபடுத்தி விளக்கும் வகையில் விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

 வீரகேசரி 1/14/2010

ஹைட்டி பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது

haiti-earthquake.jpgகரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டி தீவுகளில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சம் பேர்களையும் கடந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் இறந்த உடல்கள் சிக்கியுள்ளன. மேலும் இடிபாடுகளில் எவ்வள்வு பேர் உயிருடன் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.

சேதமும், உயிர்ழப்பும் கற்பனைக்கு எட்ட முடியாத அளவில் உள்ளதால் ஏழை நாடான ஹைட்டியிற்கு ஐ.நா. ரூ. 500 கோடி நிவாரணம் அளித்துள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குவியல் குவியலாக பிணங்கள் சாலைகள் எங்கும் குவிக்கப்பட்டுள்ளன.

ரிக்டர் அளவு கோலில் 7.3 என்று பதிவான இந்த நில நடுக்கத்தில் நாடாளுமன்ற கட்டிடம் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டிடங்கள் தரைமட்டமாயின. பல நாடுகளிலிருந்தும் மீட்புப் பணிகளும், உதவிகளும் ஹைட்டி நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றன.

அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம்: சரத் பொன்சேகாவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு

sa.jpgஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நேற்று உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய மாற்று முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி சரத் கோங்ஹாகே இந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அமெரிக்க பிரஜையாக இருக்கும் சரத் பொன்சேகா, ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பது அடிப்படை உரிமை மீறல் என அறிவிக்கும்படி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தகுதியற்றவரென தெரிவிக்குமாறு கோரி வேட்புமனு தாக்கல் செய்யும் போது தாம் எதிர்ப்பு தெரிவித்தவேளை, அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் அவர் இதில் குறிப்பிட்டுள்ளார்.

இவ் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது சட்டத்துக்கு முரணானது எனத் தெரிவிக்குமாறும் சரத் பொன்சேக்கா இதற்கு தகுதியற்றவரென தெரியப்படுத்துமாறும் சரத் கோங்ஹாகே இந்த மனுவில் கேட்டுள்ளார்.

தமது மனு மிகவும் முக்கியமானது என்பதால் கூடிய விரைவில் இதுபற்றி விசாரணை செய்து முடிக்குமாறு மனுதாரர் கேட்டுள்ளார்.

சரத் பொன்சேக்காவின் வேட்புமனு வழங்கப்பட்டது மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது தொடர்பில் பொன்சேக்கா மற்றும் தேர்தல் ஆணையாளர் அரசியல் அமைப்பில் 12 (4) சரத்தின்படி தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கும்படியும் சரத் கோங்ஹாகே தனது மனுவில் கோரியுள்ளார்.

வவுனியா அபிவிருத்திப் பணிகள் அரச அதிபர் தலைமையில் மீளாய்வு

வவுனியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்காகவும் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தலைமையில் நாளை (15) வவுனியா செயலகத்தில் கூட்டமொன்று நடைபெறுகின்றது.

இந்தக் கூட்டத்தில், 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை மீளாய்வு செய்வதுடன், 2010ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுமென அரச அதிபர் தெரிவித்தார். வவுனியா நகர் முழுவதற்கும் குடிநீரை விநியோகிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இரண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வவுனியா வடக்குப் பிரதேசத்திற்கும் குடிநீர்த் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஏ-பீ தரத்திலான சகல பாதைகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. புளியங்குளம், நெடுங்கேணி- ஒட்டுசுட்டான் பாதை அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பமாகின்றன. நெலுக்குளம்-நேரியகுளம், செட்டிக்குளம் பாதையும் அபிவிருத்தி செய்யப்படுகிறது என்றும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

Wikramabahu Karunaratnaஜனாதிபதி தேர்தலும்! தமிழ் மக்களும்!

முள்ளிவாய்க்கால் அவலங்களுக்குப் பின்பு நடைபெறும் முக்கியமான தேர்தல் இது. இதில் கலந்து கொள்ளும் ஆர்வம் தமிழ் மக்கள் மத்தியில் அறவே இல்லை. இனப்படுகொலையை ஏவியவனும், அதனை கனகச்சிதமாக செய்து முடித்தவனும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு, தமிழ் மக்களிடம் ஆதரவு தேட வந்துள்ளார்கள். சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட வேண்டிய போர்க் குற்றவாளிகள் இவர்கள். இவர்களை நீதியின் முன்னிறுத்துவதற்கு காலம் எடுக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் இவர்கள் இருவரையும் நிராகரிப்பதன் மூலமாக இவர்கள் தொடர்பான தமது அபிப்பிராயத்தை அனைத்து உலகத்திற்கும் தெரியும்படி செய்தாக வேண்டாமா?

இந்த இரண்டு இன ஒழிப்பாளர்களுள் குறைந்த தீமை செய்தவர் யார் என்று யோசிப்பதற்கு இதுவொன்றும் பட்டிமன்றமல்ல. ஒரு தேசத்தின் எதிர்காலம் பற்றிய நிர்ணயமான கட்டம் இது. இந்த இரண்டு கசாப்புக் கடைகாரருக்கும் ஆதரவு தேட எம்மத்தியில் இருக்கும் குண்டர் படைகள் வேறு ஜனநாயக வேடமிட்டு வலம் வருகின்றன. சரி இப்போதாவது தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கு இருவரில் எவரிடமாவது தீர்வு இருக்கிறதா என்று பார்த்தால், அப்படிப்பட்ட ஒரு விடயம் தொடர்பாக பேசவே பயப்படும் கோழைகள் இவர்கள். அதுமட்டுமல்ல கடந்த காலத்தில் தேசிய பிரச்சனையை உருவாக்கிவிட்டவர்களே இந்த இரண்டு கட்சிகளும்தான். சரி இப்போதாவது தமிழ் மக்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாக, ஜனநாயகபூர்வமாக முன்வைக்க முடியுமா என்றால் அதற்கும் உரிமைகள் அற்ற நிலைமை!

இருவருமே அயோக்கியர்கள் என்று கூறும் மக்களைப் பார்த்து தமிழ் பச்சோந்திகள் கூறுகிறார்கள். ‘தந்திரோபாயமாக’ வாக்களிப்பதாம் என்று! தந்திரோபாயம் என்ற பெயரில் நாம் கடந்த காலத்தில் செய்தவற்றை திரும்பிப் பார்க்கும் நேரம் இது.
 
1977 ம் ஆண்டு தேர்தலிலேயே எம்மில் பலருக்கு கூட்டணியின் வேடம் தெரிந்தே இருந்தது. ஆனாலும், தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு என்ற வாதம் எம்மை கட்டிப் போட்டிருந்தது. அத்தோடு கிழக்கிலும் வன்னியிலும் சிங்கள் கட்சிகள் வந்தால் நிலைமை மோசமாகிவிடுமோ என்ற பயம் இன்னும் பலரை வேறு திசையில் சிந்திக்க விடாமல் தடுத்தது.

1982 இல் ஜே. ஆருக்கு எதிராக கொப்பேகடுவவை ஆதரிக்க கோரப்பட்டோம். தேர்தல் தருணத்தில் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு போனார் அமிர்தலிங்கம். உள்ளூர் பத்திரிகைகள், தலைவர் ஜே. ஆருக்கு வாக்கு போடச் சொன்னதாக மோசடி செய்தன.

சமாதானப் புறா சந்திரிகாவின் வருகையை ஆதரிக்குமாறு கேட்கப்பட்டோம். சந்திரிகா வந்தார். இரண்டு தவணைகள் பதவி வகித்தார். போனார். தமிழர் பிரச்சனையோ இன்னமும் மோசமாகி விட்டிருந்தது.

ரணிலை தோற்கடிப்பதற்காக பணத்தை வாங்கிக் கொண்டு தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகளை மொத்தத்தில் புலிகள் ஏலம் விட்டார்கள். தமது சவக்குழியை தாமே தோண்டிக் கொண்டார்கள்.

கடந்த காலங்களில் தந்திரோபாயத்தின் பேரால் வாக்களிக்கக் கோரியவர்கள் அதன் விளைவுகளுக்கு ஒருபோதும் பொறுப்பெடுத்ததும் கிடையாது. இப்போது இன்னோர் தடவையும் எந்தவிதமான சங்கடமும் இன்றி, தந்திரோபாயமாக வாக்களிக்கும்படி கேட்கப்பட்டுள்ளோம். இரண்டு பிரதான வேட்பாளர்களும் தேசிய பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை என்பது திட்டவட்டமாக தெரிந்த பின்பும் நாம் ஏன் இந்த கானல் நீருக்கு பின்னால் எமது சக்தியை செலவளிக்க வேண்டும்.

Wikramabahu Karunratnaகடந்த காலத்தில் சிங்கள இடதுசாரிகளது இனவாதம் குறித்தும், அவர்கள் தமிழ் மக்களது உரிமைகள் பற்றி பாராமுகமாக இருந்ததாகவும் திரும்பத் திரும்ப குற்றஞ்சாட்டும் நாம், எமது மனச்சாட்சியை தொட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையிலேயே சிங்கள் இடதுசாரிகள் யாருமே தமிழ் மக்களது உரிமைகளில் அறவே கரிசனை காட்டவில்லையா? இல்லை காட்டினார்கள்! ஆனால் அவர்கள் வெல்லமாட்டார்கள் என்பதால் அவர்கள் எமக்கு கவர்ச்சியானவர்களாக இருக்கவில்லை. அத்தோடு தமிழ் வலதுசாரித் தலைமை உண்மைகளை தெரிந்து கொண்டே தமது வர்க்க நலன்கள் காரணமாக தமிழ் மக்களை தவறாக வழிநடத்தினார்கள். எமக்கு தேவைப்பட்டதெல்லாம் வெல்லும் ஒரு குதிரை! ஆனால் அப்படிப்பட்ட ஒரு குதிரைக்கு இனவாதம் என்ற தீனி தேவைப்பட்டது என்பதை நாம் கவனிக்கத் தவறினோம். நாம் அற்புதங்களை எதிர்பார்த்தோம். மீண்டும் தோல்விகளையே சந்தித்தோம்!

வெளிப்படையாகவே தமிழரது பிரிந்து போகும் உரிமை உட்பட சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுக்கும் ஒரு நேர்மையான இடதுசாரி வேட்பாளரை ஒடுக்கப்பட்ட நாமே ஆதரிக்கவில்லையானால், எப்படி இன்னொரு சிங்கள முற்போக்கு சக்தி தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்க முன்வரும்? அதுவும் சிங்கள பேரினவாத அலைக்கு எதிராக நீச்சல் போட்டுக் கொண்டு!

தமிழ் மக்கள், சிங்கள் மக்களோடு ஐக்கியப்பட்டோ அல்லது தனியாக பிரிந்து போவதன் மூலமாகவோ தமது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வது என்பது, தென்னிலங்கையில் முற்போக்கு ஜனநாயக சக்திகள் பலம் பெறுவதிலேயே பெரிதும் தங்கியுள்ளது. ஆதலால் நாம் உடனடியான தேர்தல் வெற்றி என்ற இலக்கைக் கடந்து சரியான சக்திகளை இனம் கண்டு, அவர்கள் பலத்தில், எண்ணிக்கையில் சிறியவர்கள் ஆனாலும் சரியான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருப்பார்களானால், அவர்களை ஆதரிக்க துணிந்து முன்வர வேண்டும். ‘சொற்பமே ஆயினும் சிறந்ததே நன்று’ என்பதை நாம் மறக்கலாகாது. இப்படியாக நாம் கொடுக்கும் ஆதரவுகள் தாம் எதிர்காலத்தில் தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் படிப்படியாக பலம் பெறவும், இன்னும் பலர் வெளிப்படையாக வந்து தமிழர் உரிமைக்கான போராட்டத்தை ஆதரிக்கவும் வழி வகுக்கும். இப்போது நாம் செய்வது எமது எதிர்கால வெற்றிக்கான அரசியல் முதலீடாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். நீண்ட கால நோக்கில் சிந்திக்காத எவருமே விடுதலையை வென்றெடுக்க மாட்டார்கள் என்பதை நாம் புலிகளது தோல்வியில் இருந்து கற்றுக் கொண்டாக வேண்டும்.

அந்த வகையில் நீண்ட காலமாக, பல்வேறு நெருக்கடிகளையும் மீறி தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்திற்கு துணிச்சலாக முகம் கொடுத்துவரும் நவ சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த தோழர் விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு செய்துள்ளது. இது இவர் கடந்த காலத்தில் ஆற்றிய பங்களிப்புகள் இப்படிப்பட்ட ஒரு ஆதரவைப் பெறுவதற்கு இவரை தகுதியானவராக ஆக்குகிறது. மற்றும் எதிர்காலத்தில் ஆற்றக்கூடிய தமிழ் மக்களின் உரிமைக்கு ஆதரவான செயற்பாடுகளுக்கு தமிழ் மக்களது ஆதரவானது உரமாக அமையட்டும்.

தோழர் விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் கடந்த காலத்தில் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நாம் அறிவோம். தென்னிலங்கையைச் சேர்ந்த முற்போக்கு சக்திகள் என்ற வகையில் சிறீலங்கா அரசின் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய தமிழ் மக்களின் தலைமை என்ற வகையில்  விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்ததில் எவ்வித தவறும் இருப்பதாக நாம் கருதவில்லை. வேறு முற்போக்கு சக்திகள் களத்தில் இல்லாத நிலையில் விடுதலைப் புலிகளை ஆதரிக்க மறுத்திருப்பது என்பது இன்னொரு விதத்தில் சிங்கள பேரினவாதத்திற்கு துணையாக செயற்படுவதாகவே அர்த்தப்பட்டிருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்கிறோம்.

அதே வேளை இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் இன அழிப்பு யுத்தத்தை நடத்தியவர்களுடன் கைகோர்த்து நிற்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை இன்னமும் அடையவில்லை என்பதை இந்த இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் எதிராக வாக்களிப்பதன் மூலமாக தமிழ் மக்கள் வெளிப்படுத்தியாக வேண்டியுள்ளது.  அத்தோடு வாக்களிக்காமல் விடுவது என்பது கள்ள வாக்களிப்புக்களுக்கும் மற்றும் பலவித தேர்தல் மோசடிகளுக்கும் வழிவகுக்கலாம் என்பதால், தேர்தலில் வாக்களிக்குமாறும் நாம் தமிழ் மக்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

• முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல, புதிய தொடக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் எமது வாக்களிப்பு அமையட்டும்.

• தமிழ் வலதுசாரி தலைமைகளின் ஏகபோகத்திற்கு முடிவு கட்டுவோம்.

• அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் சிங்கள முற்போக்கு, ஜனநாயக சக்திகளுடன் கைகோர்ப்போம்.

மே 18 இயக்கம்.
முடிவல்ல, புதிய தொடக்கம்.

அசாத்சாலி, சதுராணி ஜனாதிபதிக்காக பிரசாரம்

sri-lankan-election-01jpg.jpgகொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி பிரபல சிங்கள திரைப்பட நடிகை வசந்தி சதுராணி ஆகியோர் நேற்று முதற்தடவையாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் பிரசார மேடையில் தோன்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

கொழும்பு, பொரல்லையில் மேல் மாகாண சபை உறுப் பினர் திலங்க சுமதிபாலவின் ஏற்பாட்டில் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவின் தலைமையில் கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவர்கள் தோன்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து உரை யாற்றினர்.

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும் :05 – புன்னியாமீன் –

sri-lankan-election.jpgதொடர்ச்சி….

பிரதான அபேட்சகர்களுள் ஒருவர் கொலை செய்யப்பட்ட 3ஆவது ஜனாதிபதித் தேர்தல்

3வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 1994 அக்டோபர் மாதம் 07ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படுமெனவும், 1994 நவம்பர் 09ம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும் உத்தியோகபூர்வமான அறிவித்தல் ஜனாதிபதி திரு. விஜயதுங்க அவர்களின் பணிப்புரையின்படி தேர்தல் ஆணையாளர் திரு. ஆர். கே. சந்திரானந்த டி சில்வா அவர்களினால் 1994 செப்டெம்பர் 17ம் திகதி விடுக்கப்பட்டது.

இந்த அறிவித்தலின்படி ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிஸக் குடியரசின் 4வது நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் பின்வரும் அபேட்சகர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

1. திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி)
2. திரு. நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி)
3. திரு. காமினி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி)
4. திரு.ஏ.கே. ரணசிங்க (சுயேட்சை)
5. திரு.ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி)
6. திரு. ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை)

தேர்தலின்போது இவர்களுக்கு வழங்கப்பட்ட சின்னங்கள் முறையே

1. நாற்காலி
2. மலர்ச்செடி 
3. யானை
4. அன்னப்பறவை
5. விமானம்
6. மேசை

நியமனப்பத்திரம் ஏற்றுக் கொள்ளப்பட்டதிலிருந்து தேர்தல் நடைபெறும் தினம் வரை முக்கிய நிகழ்வுகள்:

1. அபேட்சகர் கொலை

தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த திரு. காமினி திசாநாயக்க அவர்கள் 1994 அக்டோபர் 23ம் திகதி நள்ளிரவு 12.17 அளவில் கொழும்பு தொட்டலங்க (பாலத்தோட்டை) நாகலம் வீதியில் அமைந்துள்ள பொதுச் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு தமது இருக்கையை நோக்கிச் செல்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் கொலை செய்யப்பட்டார்.

இக்குண்டு வெடிப்பின்போது 3 குழந்தைகளுக்குத் தந்தையான 52வயதுமிக்க திரு. காமினிதிசாநாயக்கவுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் டாக்டர் காமினி விஜேசேகர, முன்னாள் அமைச்சர்களான திரு. வீரசிங்க மல்லிமாராட்சி, திரு. ஜி. எம். பிரேமச்சந்திர உட்பட சுமார் 62 மனித உயிர்கள் பலியாக்கப்பட்டன. (பலத்த காயங்களுக்கு உட்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற  2வது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டவரும்,  ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவரும், முன்னைய மேல்மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. ஒஸி அபேகுணவர்தனா அவர்கள் 1994 நவம்பர் 09ம் திகதி காலமானார்)

இத்துக்கரமான சம்பவத்தையடுத்து ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல் தொடர்பான 1981ம் ஆண்டு 15ம்  இலக்க பாராளுமன்ற சட்டமூலத்தின் 22ம் உறுப்புரையின் (1) (2) (3) உட்பிரிவுகளுக்கமைய 3 தினங்களுக்குள் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளர் 1994 ஒக்டோபர் 24ம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியைக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து 1994 ஒக்டோபர் 25ம் திகதி ஜனாதிபதி திரு. டீ.பீ. விஜயதுங்க தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான ‘சிரிகொத’ வில் அவசரக்கூட்டமொன்று கூட்டப்பட்டது.

கட்சியின் 42 பிரதானிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதி அபேட்சகர்களாக திரு. காமினிதிசாநாயக்க அவர்களின் மனைவி திருமதி வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க அவர்களின் பெயரும், முன்னைய பிரதம மந்திரி திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டன.

2 பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டமையினால் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களையடுத்து ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஒரு விசேட கமிட்டிக்கு விடப்பட்டது. இந்த விசேட கமிட்டியில் தலைவராக டீ.பீ. விஜேதுங்க மற்றும் உறுப்பினர்களாக திருவாளர்கள் விஜேபால மென்டிஸ், பெஸ்டஸ் பெரேரா,  எம்.எச்.மொகம்மட்,  டிரோன் பெர்னாண்டோ, ஏ.ஸீ.எஸ். ஹமீத், சுசில் முனசிங்க, தஹம் விமலசேன, அனுரபண்டாரநாயக்க, ஹெரல்ட் ஹேரத், ஹென்றி ஜயமஹ, கே.என். சொக்ஸி ஆகிய 12 உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.

இவ்விசேட குழு திருமதி வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது எனத் தீர்மானித்தது. இத்தீர்மானத்தை கட்சியின் நிர்வாகக் குழு ஏகமனதாக அனுமதித்துள்ளதென கொழும்பு 7 ஸ்ரீமத் மாக்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுசில் முனசிங்க அவர்களினால் 1994.10.26ம் திகதி காலையில் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மகாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இம்முடிவினை கட்சியின் தற்காலிக செயலாளர் திரு. தஹம் விமலசேன அவர்களினால் அதே தினத்தில் தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

1981ம் ஆண்டு 15ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலத்தின் 22 (2) உறுப்புரையின்படி தேர்தல் ஆணையாளர் பெற்றுள்ள அதிகாரங்களுக்கமைய திருமதி வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க அவர்கள் ஐக்கியத் தேசியக் கட்சியின் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். இந்த உத்தியோகபூர்வமான அறிவித்தல் 1994 ஒக்டோபர் 27ம் திகதி தேர்தல் ஆணையாளரினால் விடுக்கப்பட்டது. அத்துடன், திட்டமிட்டபடி 1994 நவம்பர் 09ம் திகதி நாடுபூராவும் காலை 7.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை தேர்தல் நடத்தப்படுமெனவும் உறுதிப்படுத்தப்பட்டது.

2. அபேட்சகர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளல்

3வது ஜனாதிபதித் தேர்தலில் அபேட்சகர் திரு. நிஹால் கலப்பதி அவர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்டமை இத்தேர்தலின் மற்றுமொரு முக்கிய அம்சமாகும்.

நிறைவேற்று அதிகாரமிக்க அதாவது தனி அதிகாரமிக்க ஜனாதிபதிமுறை ஒழிக்கப்படமெனவும், அதேநேரம், தனிப்பட்ட ஒரு நபருக்கு அதிகாரம் வழங்கப்படுவதைத் தடுத்து பாராளுமன்றத்தக்கும் பூரணபொறுப்புச் சொல்லக்கூடிய ஒரு நிர்வாக முறை ஏற்படுத்தப்படுமெனவும் பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளரும், பிரதம மந்திரியுமான திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் மக்களுக்கு உறுதியளித்து எழுத்து மூலமாக அறிவிப்பாராயின் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி வேட்பாளர் திரு. நிஹால் கலப்பதி அவர்கள் 1994.10.20ம் திகதியன்று பொதுசனத் தொடர்பு சாதனங்களினூடாக பகிரங்கமாக அறிவித்தல் விடுத்தார்.

இந்த சவாலை திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் ஏற்றுக் கொண்டார். 1995ம் ஆண்டு ஜுலை 15ம் திகதிக்கு தற்போதைய அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படுமெனவும், மாற்றியமைக்கப்படும் அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம், கொண்ட ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்படுமெனவும் 1994.10.21ம் திகதி இலங்கை ரூபவாஹினியில் இடம்பெற்ற விசேட பேட்டியில் குறிப்பிட்டார். 1994.10.19ம் திகதி பதுளை சேனநாயக்கா விளையாட்டரங்கில் பொதுக்கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதவி நீக்கப்பட்ட வேண்டியதன் அவசியத்தை விரிவாக முறையில் இவர் ஏற்கனவே விளக்கியிருந்தார். சந்திரிக்கா குமாரதுங்கவின் இந்நிலைப்பாட்டால் திருப்தியடைந்த கலப்பதி அவர்கள் 1994.10.27ம் திகதியன்று தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

3வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்

மேல்மாகாணம்

கொழும்பு மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   557,708 (64.82 %)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)    1,819  (0.21%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  288,741 (33.56%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 3,533  (0,41%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 6,059  (0.70%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2)  2,526  (0.29%)
  
பதியப்பட்ட வாக்குகள்  1,235,959 
செல்லுபடியான வாக்குகள்  860,386 (98.17 %) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   16,060 (1.83%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 876,446 (70.91%)

கம்பஹா மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   550,654 (64.74%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,832  (0.22%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  288,608 (33.93%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 2,711  (0.32%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  3,694  (0.43%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   3,019  (0.35%)
  
பதியப்பட்ட வாக்குகள்  1,140,808 
செல்லுபடியான வாக்குகள்  850,518 (98.48%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   13,137 (1.52%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 863,655 (75.71%)

களுத்துறை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   295,686 (61.47%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,388  (0.29%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  178,466 (37.10%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,398  (0.39%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,868  (0.39%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   2,213  (0.46%)
  
பதியப்பட்ட வாக்குகள்  646,199  
செல்லுபடியான வாக்குகள்  481,019 (98.50%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   7,309 (1.50%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 488,328 (75.57%)

மத்திய மாகாணம்

கண்டி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   320,110 (56.64%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,370  (0.24%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  235,519 (41.68%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,752  (0.31%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  2,618  (0.46%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   3,748  (0.66%)
  
பதியப்பட்ட வாக்குகள்  726,192   
செல்லுபடியான வாக்குகள்  565,117 (97.55%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   14,179 (2.45%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 579,296 (79.77%)

மாத்தளை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   121,449 (60.98%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   680  (0.34%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  73,324  (36.82%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 608  (0.31%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  992  (0.50%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   2,111  (1.06%)
  
பதியப்பட்ட வாக்குகள்  250,816    
செல்லுபடியான வாக்குகள்  199,164 (97.40%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,317 (2.60%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 204,481 (81.53%)

நுவரெலியா மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   168,929 (57.14%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,044  (0.35%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P)  116, 928  (39.55%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,083  (0.37%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,332  (0.45%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   6,314  (2.14%)
  
பதியப்பட்ட வாக்குகள்  386,668    
செல்லுபடியான வாக்குகள்  295,630 (96.15%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   11,840 (3.85%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 307,470 (79.52%)

தென் மாகாணம்

காலி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   285,398 (61.40%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,487  (0.32%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  173,282 (37.28%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,179  (0.25%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,584  (0.34%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   1,885  (0.41%)
  
பதியப்பட்ட வாக்குகள்  632,412     
செல்லுபடியான வாக்குகள்  464,815 (98.49%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   7,112 (1.51%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 471,927 (74.62%)

மாத்தறை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   227,865 (64.69%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,397  (0.40%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  118,224 (33.56%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,134  (0.32%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,564  (0.44%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   2,055  (0.58%)

பதியப்பட்ட வாக்குகள்  503,470     
செல்லுபடியான வாக்குகள்  352,239 (98.40%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,731 (1.60%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 357,970 (71.10%)

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   132,873 (61.52%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,685  (0.78%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  77,735  (35.99%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 750  (0.35%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,538  (0.71%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   1,414  (0.65%)

பதியப்பட்ட வாக்குகள்  326,913     
செல்லுபடியான வாக்குகள்  215,995 (98.18%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,013 (1.82%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 220,008 (67.30%)

வட மாகாணம்

யாழ்ப்பாண மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   16,934  (96.35%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   25  (0.14%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க   (U.N.P)  223  (1.27%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 16  (0.09%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  36  (0.20%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   341  (1.94%)
  
பதியப்பட்ட வாக்குகள்  596,366     
செல்லுபடியான வாக்குகள்  17,575  (99.20%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   141  (0.80%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 17,716  (2.97%)

வன்னி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   33,585  (85.30%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   118  (0.30%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  4,493  (11.41%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 77  (0.20%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  96  (0.24%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   1,003  (2.55%)

பதியப்பட்ட வாக்குகள்  178,697      
செல்லுபடியான வாக்குகள்  39,372  (98.30%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   681  (1.70%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 40,053  (22.41%)

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   144,275 (87.30%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   484  (0.29%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  14,812  (8.93%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 381  (0.23%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  349  (0.21%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   5,028  (3.03%)

பதியப்பட்ட வாக்குகள்  261,897     
செல்லுபடியான வாக்குகள்  165,779 (98.42%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,664 (1.58%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 168,443 (64.32%)

திகாமடுல்லை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   168,289 (72.36%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   574  (0.25%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  59,074  (25.40%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 496  (0.21%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  471  (0.20%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   3,677  (1.58%)

பதியப்பட்ட வாக்குகள்  312,006       
செல்லுபடியான வாக்குகள்  232,581 (98.47%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,621 (1.53%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 235,202 (75.70%)

திருகோணமலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   77,943  (71.62%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   324  (0.30%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  28,006  (25.74%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 195  (0.18%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  279  (0.26%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   2,074  (1.91%)

பதியப்பட்ட வாக்குகள்  184,090       
செல்லுபடியான வாக்குகள்  108,821 (98.44%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,726 (1.56%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 110,547 (60.05%)

வடமேல் மாகாணம்

குருநாகலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   403,838 (59.36%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,842  (0.27%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  266,740 (39.21%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,714  (0.25%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  2,211  (0.32%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   3,999  (0.59%)

பதியப்பட்ட வாக்குகள்  876,591       
செல்லுபடியான வாக்குகள்  680,344 (98.48%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   10,511 (1.52%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 690,855 (78.81%)

புத்தளம் மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   165,795 (62.65%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   625  (0.24%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  95,211  (35.98%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 591  (0.22%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  617  (0.23%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   1,796  (0.68%)

பதியப்பட்ட வாக்குகள்  380,872       
செல்லுபடியான வாக்குகள்  264,635 (98.26%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,689 (1.74%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 269,324 (70.71%)

வடமத்திய மாகாணம்

அநுராதபுர மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   200,146 (63.99%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,083  (0.35%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  107,342 (34.32%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 678  (0.22%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,014  (0.32%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   2,534  (0.81%)

பதியப்பட்ட வாக்குகள்  406,926       
செல்லுபடியான வாக்குகள்  321,797 (98.05%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,205 (1.95%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 319,002 (78.39%)

பொலநறுவை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   88,907  (59.08%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   469  (0.31%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  59,287  (39.40%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 258  (0.17%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  428  (0.28%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   1,126  (0.75%)

பதியப்பட்ட வாக்குகள்  200,192       
செல்லுபடியான வாக்குகள்  150,475 (97.43%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,966 (2.57%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 154,441 (77.15%)

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   182,810 (55.27%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,372  (0.41%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  139,611 (42.21%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,387  (0.42%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,745  (0.53%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   3,847  (1.16%)

பதியப்பட்ட வாக்குகள்  435,260       
செல்லுபடியான வாக்குகள்  330,772 (95.91%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   14,093 (4.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 344,865 (79.23%)

மொனராகலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   96,620  (63.20%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   824  (0.54%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  52,026  (34.03%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 556  (0.36%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  877  (0.57%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   1,966  (1.27%)

பதியப்பட்ட வாக்குகள்  199,391       
செல்லுபடியான வாக்குகள்  152,867 (97.46%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,977 (2.54%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 156,846 (78.66%)

சப்பிரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   257,265 (58.07%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,279  (0.29%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  177,924 (40.16%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,235  (0.28%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,877  (0.42%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   3,451  (0.78%)

பதியப்பட்ட வாக்குகள்  554,607       
செல்லுபடியான வாக்குகள்  443,031 (98.31%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   7,595 (1.69%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 450,626 (81.25%)

கேகாலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   211,676 (56.06%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,028  (0.27%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  159,707 (42.30%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,020  (0.27%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,402  (0.37%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   2,759  (0.73%)

பதியப்பட்ட வாக்குகள்  500,947       
செல்லுபடியான வாக்குகள்  377,592 (98.14%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   7,139 (1.86%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 384,731 (76.80%)

மூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் 1994

இறுதித் தேர்தல் முடிவுகள்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   4,709,205 (62.28%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  2,715,283 (35.91%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   58,886  (0.78%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  32,651  (0.43%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 22.752   (0.30%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   22,749 (0.30%)

பதியப்பட்ட வாக்குகள்  10,937,279       
செல்லுபடியான வாக்குகள்  7,561,526 (98.03%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   151,706 (1.97%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 7,713,232 (70.52%)

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
   
 3,780,763

குறைந்த பட்ச வாக்குகளை விட சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்    

 928,442

இரண்டாம் இடத்தைப் பெற்ற வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க அவர்களை விட சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
 
 1,993,922

தொடரும்…