கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி பிரபல சிங்கள திரைப்பட நடிகை வசந்தி சதுராணி ஆகியோர் நேற்று முதற்தடவையாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் பிரசார மேடையில் தோன்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
கொழும்பு, பொரல்லையில் மேல் மாகாண சபை உறுப் பினர் திலங்க சுமதிபாலவின் ஏற்பாட்டில் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவின் தலைமையில் கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவர்கள் தோன்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து உரை யாற்றினர்.