14

14

தமிழ் இளைஞர் கடலில் அடித்துக் கொலை: சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் சேவையில் இடைநிறுத்தம்

Bambalappitty_Police_Brutalityபம்பலப்பிட்டி கடற்கரையில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸ் திணைக்களம் உச்ச சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.

மன்னார்- கருங்கண்டல் பிரதேசத்தில் நேற்று ஏர்பூட்டு விழா – அமைச்சர் ரிஷாத், ஆளுநர் சந்திரசிறி அதிதிகள்

வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மன்னார் மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கருங்கண்டல் பிரதேசத்தில் ஏர்பூட்டு விழா நேற்று இடம்பெற்றது. மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஏர்பூட்டு விழாவை உத்தி யோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த வைபவத்தில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மாந்தைப் பிரதேசத்தில் மீளவும் குடியேறிய மக்கள் விவசாய நடவடி க்கைகளை மேற்கொள்வதற்கு இங்குள்ள 4 ஆயிரம் விவசாய நிலங்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருப் பதுடன், மானிய விலையில் உரம் மற்றும் விதை நெல் என்பனவற்றை அரசாங்கம் வழங்கவிருப்பதாகவும் இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

மாந்தை பிரதேசத்தில் 2600 குடும்பங்கள் வாழ்ந்த போதிலும் தற்போது 1600 குடும்பங்கள் மாத்திரமே அரசாங்கம் மீள்குடியமர்த்தியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தற்போது கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை துரிதப்படுத்த ப்பட்டுள்ளன. எனவே, அவை முடி வடைந்ததும் எஞ்சியுள்ள குடும்பங்களை மீள்குடியேற்ற இருக்கிறோம்.

இங்கு ஆரம்பிக்கப்படும் விவசாய நடவடிக்கைகளுக்காக கட்டுக்கரைக் குளம் பிரதேசத்திலிருந்து நீரைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.