மட்டக்களப்பு – உறுகாமம் குளத்தருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டெடுத்த மர்மப் பொருள் வெடித்ததில் சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களே பாதிக்கப் பட்டனர். இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
12 வயதுடைய செல்வராசா நிரோஷன் மற்றும் அவரது சகோதரரான 10 வயது சிவசங்கர் என்பவர்களே காயமடைந்தவர்கள்.