மதுபான சாலைகளுக்கு எதிராக விளக்குமாறுடன் போராட்டித்தில் குதித்த பெண்கள் !
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய பொதுமக்கள் பெரிய நீலாவணை பகுதியில் புதிய மதுபானசாலை வேண்டாம் என விளக்குமாற்றுடன் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சியில் மதுபோதையில் வந்தத டிப்பர்சாரதி மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பத்தினை மோதி இருவர் மரணித்ததற்கு முன் தினம் கிளிநொச்சியில் மதுபாண சாலைகளை மூடச்சொல்லி ஒரு போராட்டம் மேற்கொள்ளப்பட்டமை தெரிந்ததே.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாங்கள் போராட்டம் மேற்கொண்ட போது அன்று திறக்கப்பட இருந்த மதுபான சாலையை அப்பொழுது மூடினார்கள். ஆனால் இப்பொழுது மீண்டும் திறப்பதற்கு ஏற்பாடு நடைபெறுகிறது.எனவே எங்களுக்கு இவ்வாறான மதுபானசாலை வேண்டாம் என நீலாவணையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.
கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு முன்னேற்பாடாக 500 பேருக்கு மேற்பட்ட நீலாவணை பொதுமக்கள் ஒன்றுகூடி நீலாவணையில் அமைக்கப்பட்ட மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார் கோடீஸ்வரன். கடந்த அரசாங்கம் வழங்கிய மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதாக தற்போதுள்ள அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
பா.உ கோடீஸ்வரனின் கருத்துக்கு பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, அரசாங்கம் புதிதாக மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கவில்லை, வழங்கப் போவதுமில்லை. சட்டரீதியில் வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும். அனுமதிப்பத்திரம் சட்டரீதியில் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அது சட்டரீதியான ஆவணமாகும். பலவந்தமான முறையில் செயற்பட முடியாது என தெரிவித்தார்.









