விமான நிலையத்தில் பா உ சிறிதரனுக்கு ஏற்பட்ட தாமதத்திற்கு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கா மன வருத்தம் !

விமான நிலையத்தில் பா உ சிறிதரனுக்கு ஏற்பட்ட தாமதத்திற்கு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கா மன வருத்தம் !

பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்தின் கொள்கை அல்லது விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது அவதானத்துடன் பயன்படுத்தப்படும் என அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பா.உ. சிறீதரன்; அண்மையில் இந்தியாவுக்கு பயணம் செய்தபோது, குடிவரவு அதிகாரிகள் பயணத் தடையை காரணம் காட்டி அவரின் பயணத்தை தடை செய்ய முற்பட்டதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டி இருந்ததுடன் அத்தகைய தடைக்கு நீதிமன்ற உத்தரவு தேவை என்றும் வாதிட்டிருந்தார்.

குறித்த விடயத்துக்கு பதிலளித்த சபைத்தலைவர் பிமல் ரத்நாயக்க, இது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிறிதரன் எம்.பி.க்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் தெரிவித்த சபைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியதுடன் அங்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவானது எனவும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *