2025

2025

மண் விடுதலைக்குப் பின் பெண் விடுதலை என்றோம் ஆனால் மண்ணும் விடுதலை பெறவில்லை பெண்ணும் விடுதலை பெறவில்லை ! : மகளீர் தின உரையாடல்

மண் விடுதலைக்குப் பின் பெண் விடுதலை என்றோம் ஆனால் மண்ணும் விடுதலை பெறவில்லை பெண்ணும் விடுதலை பெறவில்லை ! : மகளீர் தின உரையாடல்

போராளியும் பெண் ஆளுமையுமான தமிழ் கவியுடன் தேசம்நெற் கங்கா ஜெயபாலன் கலந்துரையாடுகின்றார்

 

தமிழ் தேசியக் கட்சிகளின் இருத்தலுக்கான அச்சுறுத்தலாக மாறியுள்ள உள்ளுராட்சி தேர்தல் !

தமிழ் தேசியக் கட்சிகளின் இருத்தலுக்கான அச்சுறுத்தலாக மாறியுள்ள உள்ளுராட்சி தேர்தல் !

வரும் உள்ளுராட்சித் தேர்தல் தமிழ் தேசியக் கட்சிகளின் வேர்களையே பிடுங்கிவிடுமா ? என்ற அச்சத்தில் தமிழ் தேசியம் தனது இருத்தலுக்கான அச்சுறுத்தலை உணர ஆரம்பித்துள்ளது. மக்களோடு அந்நியப்பட்டுள்ள தமிழ் தேசியக் கட்சிகளுக்கு தாங்கள் மக்கள் மத்தியிலிருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டுள்ளனர் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியவில்லை.

தங்களுடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ளாத தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஆட்சிமாற்றம் நிகழும் தங்களுக்கொரு எதிர்காலம் அமையும் என்று முட்டாள்தனமாக நம்பி மிக மோசமான முடிவைச் சந்தித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலில் இருந்து எதனையும் கற்றுக்கொள்ளாத தமிழ் தேசியம் அவர்களின் பிணங்களில் ஒட்டுண்ணிகளாக வளர்ந்தது. கடந்த 15 வருடங்களாக புலித்தோலைப் போர்த்துக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு முந்திய மிதவாதத் தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் எவ்வாறு குறும்தமிழ் தேசியவாத அரசியல் பேசினார்களோ அதேபோல் இன்றைய அரசியல் தலைவர்களும் அதனையே பேசினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அன்றைக்கு எதற்காக அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களைச் சுட்டுக்கொன்றார்களோ அதனையே தான் அல்லது அதற்கும் மேல் மோசமான அரசியலையே தமிழீழ விடுதலைப் புலிகளினதும் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் பெயரிலும் இன்றைய தமிழ் தேசிய அரசியல்வாதிகள் செய்கின்றனர். இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அன்றைய சிந்தனையோடு இருந்திருந்தால் பா உறுப்பினர்கள் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.

தமிழ் மக்களை வாயால் வடைசுட்டு தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்ற கருதும் வலதுசாரி குறும் தமிழ் தேசியவாதம் கடந்த காலத்திலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு தமிழ் மக்களின் அபிலாசைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ் மக்கள் கிளிநொச்சியில் விவசாய இரசாயணங்கள் கலந்த தண்ணீரை குடிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் மலசலம் கலந்த கிணற்றுத் தண்ணீரைக் குடிக்கின்றனர். அவர்களுக்கு குழாய்நீர் வழங்க நிதி; ஒதுக்கப்பட்டது. பா உ சிறிதரனுக்கு வாக்களித்தவர்களுக்கு சுத்தமான குடிநீர் கூட இல்லை. ஆனால் பா உ சிறிதரனுக்கு யாழ் நகரில் ஒரு வீடு கொழும்பில் ஒரு வீடு வாங்கியுள்ளார். தமிழ் மக்கள் வலதுசாரி குறும் தமிழ் தேசியவாதிகளின் ஏமாற்று வித்தைகளை நன்கு படித்துவிட்டார்கள்.

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தாங்கள் கைகாட்டுபவர்களுக்கு மக்கள் வாக்களிப்பர் என்று கனவு கண்டனர். அதற்குப் பின் நடந்த பொதுத் தேர்தலின் போது கூட தாங்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதைக் கூட அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. 10 ஆசனங்கள் தருவார்கள் தாங்கள் தான் தமிழ் பெரும் தேசியக் கட்சி என்று கற்பனைக் கோட்டையில் மிதந்தனர்.

இவர்கள் மீதான நம்பிக்கையீனம் தேசிய மக்கள் சக்தியின் பெரும் முதலீடானது. தேர்தலுக்கு முன்பிருந்தே தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தியது. தமிழ் தேசியம் அவழ்த்துவிட்ட வலதுவாரி குறும் தேசியவாத கருத்துகளுக்கு மக்கள் செவிசாயக்கவில்லை. அவர்களின் பாரம்பரிய ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் தமிழ் மக்கள் நிராகரித்தனர். தேசம்நெற் எதிர்வு கூறியது போல் தேசிய மக்கள் சக்தி இறுதிப் பெரும்பான்மையைப் பெற்றதுடன் வடக்கு கிழக்கில் ஏழுஆசனங்களைப் பெற்றது. தற்போது தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கின் பட்டி தொட்டி எங்கும் தன்னுடைய கிளைகளைப் பரப்பியுள்ளது.

ஒன்பது கட்சிக் கூட்டணி ஆரம்பத்திலேயே சில்லு சகதிக்குள் சிக்குண்ட நிலையில் நின்ற இடத்திலேயே சில்லுச் சுற்றுகின்றது. அதனைத் தூக்கிவிடக் கூடியவர்கள் யாரும் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட, முகவரியற்ற ஆய்வாளர் வி சிவலிங்கத்தின் மொழியில் சொன்னால் உதிரிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த ஒன்பது கட்சிக் கூட்டமைப்பில் தனித்துவமும் வாங்கு வங்கியும் உள்ள ஒரே கட்சி சமத்துவக் கட்சி. ஒற்றுமைக்காக அழைக்கும் போது தனித்து நிற்கமுடியாததால் வேறு வழியில்லாமல் இணைந்துள்ளனர். ஏனைய எட்டுக் கட்சிகளின் பாவ மூட்டைகள் கடந்த அரசியல் காலத்தில் செய்த ஊழல் மோசடிகளால் நிறைந்துள்ளது. இதனைத் தனித் தனியாக எழுதினால் அதற்கு தனிக்கட்டுரை எழுத வேண்டும். அதனால் ஏற்கனவே சங்கு களவாடப்பட்டு விட்டது, லைக்கா சுபாஸ்கரன் சங்கூதுகின்றார் என்றெல்லாம் பல விமர்சனங்கள் உண்டு. இந்த நிலையில் கொள்கையற்ற உதிரிகள் தேர்தல் வெற்றிக்காக மட்டும் உள்ளுராட்சித் தேர்தலில் ஊதுகின்ற சங்கிங்கு மக்கள் காதுகொடுப்பார்களா?

போகின்ற போக்கி உள்ளுராட்சித் தேர்தல் வலதுசாரி குறும்தேசியவாதிகளாகிப் போன தமிழ் தேசியவாதிகளுக்கு ஊதப்படும் கடைச்சிச் சங்காக அமையப் போகின்றது. தேசிய மக்கள் சக்தி தென்பகுதியில் உள்ளுராட்சி சபைகளை வென்றெடுப்பதைக் காட்டிலும் வடக்கில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மக்கள் மத்தியில் அதிக பிரசன்னத்தைக் கொண்டிராத தமிழ் தேசியவாதம் ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் அதீத பிரசன்னத்தை கொண்டிருக்கின்றது. அதனால் ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி தமிழ் ஊடகப் பரப்பிலும் சமூக வலைத்தளத்திலும் குறிப்பிடத்தக்க பிரசன்னத்தை கொண்டிருக்கவில்லை.தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களிலும் சமூகவலைத் தளங்களிலும் இருந்து தூரமாகவே உள்ளனர். அவர்ளை மக்கள் அணுகக் கூடிய அளவுக்கு ஊடகங்களால் அணுக முடியாத நிலையொன்றுள்ளது. துரதிஸ்டவசமாக தற்போது பாரம்பரிய ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் சொல்லிக் கேட்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை. அதனால் உள்ளுராட்சி சபையில் தேசிய மக்கள் சக்தி அலை வாக்குகளை அள்ளிச் செல்லவே வாய்ப்புள்ளது.

ஆனால் அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். நீண்டகாலத்தில் தேசிய மக்கள் சக்தி மக்கள் மட்டுமல்ல ஊடகங்களும் அணுகவும் கேள்வி கேட்கவும் வழிகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பிராந்திய ஊடகங்களும் அணுகும் வழிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

யாழ் வளிமண்டலம் மாசடைகின்றது – மேன்முறையிட்டு நீதிமன்றில் முறைப்பாடு !

யாழ் வளிமண்டலம் மாசடைகின்றது – மேன்முறையிட்டு நீதிமன்றில் முறைப்பாடு !

யாழ் வளிமண்டலம் மாசடைவதைக் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் பணித்துள்ளார். முன்னர் யாழ் மாவட்டத்தில் குடியிருந்த டொக்டர் உமா சுகி நடராஜா மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைத்த முறைப்பாடு தொடர்பிoooooல் சட்டமா அதிபர் மார்ச் 6 இல் மாசடைகலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சுக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்தியாவில் இருந்து வருகின்ற மாசும் சேர்ந்து யாழ் மாவட்டத்தின் வளிமண்டலத்தை மேலும் மாசடைய வைப்பதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையை அடுத்து யாழ் மாவட்டத்தின் வளிமண்டலம் தொடர்ச்சியாக ஒரு மாதகாலம் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான ரவீந்திரநாத் டாபரே, யாழ் விளிமண்டலத்தில் மாசுப்பொருட்கள் அதீத அளவில் காணப்படுவதை சுட்டிக்காட்டியிருந்தார்.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த துணைப் பொதுச் சட்டத்தரணி, அரசாங்கம் நாடு தழுவிய ரீதியில் வளிமண்டல மாசடைதலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரிவு படுத்த உள்ளதாகத் தெரிவித்தார். அதற்குள் யாழ் மாவட்டமும் அடக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்கு கணிசமான நிதி தேவைப்படுவதாகவும் அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

ஆண்டுக்கு 2 சத வீதமான குழந்தைகள் பாதிப்போடு பிறக்கின்றனர் !

ஆண்டுக்கு 2 சத வீதமான குழந்தைகள் பாதிப்போடு பிறக்கின்றனர் !

இலங்கையில் பிறக்கின்ற 50 குழந்தைகளில் ஒரு குழந்தை பாதிப்போடு பிறக்கின்றது என்கிறார் சமூக மருத்து நிபுணர்களின் அமைப்பின் தலைவர் மருத்துவ கலாநிதி கபில ஜெயரட்னே. ஆண்டுக்கு இரண்டு வீதமான 4,000 முதல் 5,000 குழந்தைகள் பாதிப்போடு பிறப்பதாக மருத்துவ கலாநிதி ஜெயரட்னே தெரிவிக்கின்றார். இலங்கையில் ஆண்டுக்கு 247,000 குழந்தைகள் பிறக்கின்றனர். பாதிப்போடு பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இதய சம்பந்தமான பிரச்சினைகளோடே பிறக்கின்றனர். உலக பிறப்புக் குறைபாட்டு தினத்தை நினைவுகூரும் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மருத்துவ கலாநிதி ஜெயரட்னே இத்தகவல்களை வெளியிட்டார்.

வடக்கில் தொழில் துறைகளை துரிதமாக வளர்த்தெடுக்க அமைச்சுக் குழு யாழ் விஜயம் !

வடக்கில் தொழில் துறைகளை துரிதமாக வளர்த்தெடுக்க அமைச்சுக் குழு யாழ் விஜயம் !

யுத்தத்தால் கைவிடப்பட்ட தொழில்துறைகளை மீண்டும் இயக்குவதில் தேசிய மக்கள் சக்தி அரசு தீவிரம் காட்டி வருகின்றது. நான்கு தசாப்தங்களுக்கு முன் கைவிட்ப்பட்ட யாழ் சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயணத் தொழிற்சாலைகளை, அச்சுவேலி கைத்தொழில் பேட்டை என்பவற்றை மீளக் கட்டியெழுப்புவது பற்றி ஆராய கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் கொண்ட குழுவினர் யாழ் வந்திருந்தனர். இவர்களோடு வடக்கு ஆளுநர் நா. வேதநாயகன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறீ பவானந்தராஜா, க. இளங்குமரன் மற்றும் மாவட்ட அரச அதிபர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

பாலியல் வன்கொடுமை புரிந்த ஆசிரியர் கைது !

பாலியல் வன்கொடுமை புரிந்த ஆசிரியர் கைது !

 

பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்தில் எட்டு பாடசாலை மாணவிகளை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் கணித ஆசிரியர் ஒருவர் அரலகங்வில பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைதாகியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

இதேமாதிரியான ஒரு சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்திலும் பதிவாகியிருந்தது. அம் மாவட்டத்தின் பாடசாலை ஒன்றின் கணித பாட ஆசிரியர் தச்துதன் தன்னுடைய தனியார் வகுப்பிற்கு மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை அம்பலமாகி கைது செய்யப்பட்டார். இதனை தேசம்நெற் அப்போது பகிரங்கப்படுத்தியிருந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஓர் சில மாதங்களிலேயே தன்னுடைய பின்னணி மற்றும் செல்வாக்கினை பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பி விடுதலையாகி விட்டார். இப்போது மீண்டும் ஆசிரியர் சேவையில் உள்ளார். அவருடைய தனியார் வகுப்புகளுக்கு பெண் பிள்ளைகளை பெற்றோர் தொடர்ந்தும் அனுப்பிக் கொண்டு தான் உள்ளனர். இந்த விடயத்தில் கூட பாதிக்கப்பட்ட பெண் மாணவிகளின் நடத்தையே விமர்சிக்கப்பட்டது.

பாடசாலை ஆசிரியர்கள் தொடங்கி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வரை பல இடங்களில் சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாமல் அதிகார துஸ்பிரயோகம் செய்து தம்மிடம் கற்கும் மாணவிகள் மீது பாலியல் சுரண்டல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பி விடுகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சமூகத்தின் பார்வை மற்றும் மனப்பாங்கும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது .

பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழியை சுமத்தும் நிலை தான் இன்றுவரை காணப்படுகிறது.

இதேவேளை நேற்றைய தினம் சாவகச்சேரியில் மகளிர் தின நிகழ்வில் பங்கேற்றிருந்த வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் பாலியல் சுரண்டல்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டையில் குறைவில்லாமல் தொடரும் வாள்வெட்டு ! 

வட்டுக்கோட்டையில் குறைவில்லாமல் தொடரும் வாள்வெட்டு !

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அத்துடன், வாள்வெட்டினை மேற்கொண்ட சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மைய வருடங்களில் வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன.,வாள்வெட்டு குழுக்கள் பொலிஸாரின் துணையுடன் தைரியமாக உலா வருவதாகவும் மக்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் பொலிசாரால் தாக்கப்பட்டு ஒருவர் மரணமடைந்திருந்தார். இதேவேளை கடந்த ஆண்டு வாள்வெட்டு குழுவின் தாக்குதலுக்கு அஞ்சி கடற்படை முகாமில் தஞ்சமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் வட்டுக்கோட்டை பகுதிக்கு அருகில் வைத்து இராணுவத்தினரின் கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கிளீன் சிறிலங்கா திட்டத்திற்குள் கிளீன் வட்டுக்கோட்டையையும் உள்ளடக்க வேண்டும் என வட்டுக்கோட்டை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வவுனியாவில் இரட்டை கொலை சந்தேகநபர்களுக்கு பிணை ! 

வவுனியாவில் இரட்டை கொலை சந்தேகநபர்களுக்கு பிணை !

வவுனியா தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு தகுந்த காரணங்கள் இல்லை என்று பிணை வழங்க வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலின் போது பெற்றோல் ஊற்றி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் எரித்து கொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பிணை மறுப்புக்கு விசேட காரணங்கள் முன்வைக்கப்பட வில்லை. அதனால் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதவில்லை என்று கூறி குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என உத்தரவிட்டார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் போது குற்றவாளிகள் தப்பிக்கின்றனர் – வடக்கு ஆளுநர் கவலை !

பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் போது குற்றவாளிகள் தப்பிக்கின்றனர் – வடக்கு ஆளுநர் கவலை !

 

பெண்களின் உரிமைகளை மதிப்பதற்கு ஒவ்வொருவரும் தயாராகினால் சமூக மாற்றம் தானாகவே ஏற்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்திய சர்வதேச மகளிர் தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போது தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்களும், வன்முறைகளில் ஈடுபடுபவர்களும் சட்டத்தின் பிடியிலிருந்தும், மேலதிகாரிகளின் உதவிகளுடன் தப்பிக்கும் நிலைமையும் காணப்படுகின்றது எனவும் அப்போது அவர் கவலை தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான இத்தகைய செயற்பாடுகளை இல்லதொழிக்க அனைவரும் ஓரணியில் கைகோர்த்து குரல் எழுப்ப வேண்டும் எனவும் ஆளுநர் அறைகூவல் விடுத்தார். பெண்களின் உரிமைகள் இன்றும் மறுக்கப்படுவதனால்தான் மகளிர் தினத்தை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம் என்று கூறிய ஆளுநர் இன்று பெண்கள் சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் குறிப்பாக வேலைத்தளங்கள் மற்றும் பாடசாலைகள் என எங்கும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். சமூக மாற்றம் என்பது நாம் அனைவரும் பெண்களை மதிக்கும் போது தானாக வரும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இணக்க அரசியல் சாபக்கேடு இல்லை என்கிறார் மகிந்தவின் கிளி அமைப்பாளர் மதனவாசன்

இணக்க அரசியல் சாபக்கேடு இல்லை என்கிறார் மகிந்தவின் கிளி அமைப்பாளர் மதனவாசன்

பேரம்பேசும் சக்தியாக இல்லாமல் ஆட்சியில் பங்களராக தமிழர்கள் இருக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கிளி அமைப்பாளராக பொறுப்பேற்ற மதனவாசன் தமிழ்மக்களுக்கு ஆலோசனை. இளையோர் தங்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். எதிர்ப்பு அரசியல் மட்டுமே எமது அரசியல் என்பதை கைவிட்டு இணக்க அரசியலில் இணைய வேண்டும் என்று மேலும் கூறினார். ப. மதனவாசன் அண்மையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.