27

27

16 வயதுக்கு குறைந்த மலையகத்தவர்களை பணிக்கமர்த்துவதை தடுக்க கடும் நடவடிக்கை

00000court.jpgமலைய கத்தில் உள்ள 16 வயதுக்குக் குறைந்தவர்களைப் பணியாட்களாக அமர்த்துவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நீதி, சட்ட மறு சீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

இது தொடர்பாக, நடைமுறையில் உள்ள சட்டங்களை இறுக்கமாக அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

அதேநேரம், மலையகத்திலிருந்து வந்து கொழும்பில் பணிப்பெண்களாகப் பணியாற்றுவோரின் பாதுகாப்பையும், மனித உரிமையையும் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்வதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் 16 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களைத் தொழிலில் அமர்த்தக் கூடாதென சட்டம் உள்ளது. ஆனால், மலையகத்துச் சிறார்களைச் சிலர் கொழும்பில் வீட்டு வேலைக்குக் கூட்டிச் செல்வது தொடர்ந்து வருகிறது. இவ்வாறானவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி கூறினார்.

இதேவேளை, முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென்று பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கொட்டகலையில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் அமைச்சர் வலியுறுத்தினார்.

சங்கத்தின் உதவிச் செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து பேசிய பிரதி அமைச்சர், ஐக்கியப்பட்டு குரல் கொடுக்க வேண்டிய வியடங்களை தனிப்பட்ட அரசியல் லாபம் கருதி குரல் கொடுக்க முயற்சித்தால் எமது உரிமைக்குரல் நசுக்கப்படும். மலையக மக் களின் நலனுக்காக சேவை செய்கின்றோம் என்கின்றவர்கள் ஐக்கியப்பட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

கூட்டு ஒப்பந்தத்தில் மக்களின் உணர்வுகள் உள்ளடக்கப்படல் வேண்டும். திருத்தங்கள் செய்யப்பட்டவைகளாக எல்லோரினாலும் அங்கீகரிக்கப்பட்டதாக அது இருக்க வேண்டும்.

இரகசியங்கள் இருக்கக் கூடாது. மக்களின் நலனுக்கு காலத்திற்கு ஏற்ற விதமாக ஒப்பந்தங்கள் அமைய வேண்டும் என்று குறிப்பிட்டதுடன்,

வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லும் எமது மக்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் மனித உரிமைக்குமான சட்டதிட்டங்களை நாம் உருவாக்க முயற்சி செய்வோம். அடிப்படை சட்ட சம்பந்தமான செயலமர்வுகளை விரைவில் மலையகமெங்கும் எமது அமைச்சின் ஊடாக செய்ய தீர்மானித்துள்ளேன் என்றார். இக்கூட்டத்தில் அமைப்பாளர் டி. மாதவன் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் வீ. பாலேந்திரன் மற்றும் பலரும் உரையாற்றினர்.

அரசாங்க ஊழியர்களுக்கென மேலும் 10 ஆயிரம் வீடுகள்

sarath-amunugama.jpgஅரசாங்க ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 1500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 10,000 வீடுகளை நிர்மணித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத்அமுனுகம தெரிவித்தார்.

நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள 1500 வீடுகளைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஹபராதுவ மற்றும் வெகுனகொட பகுதிகளில் இவ் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த கட்ட வீடுகள் களனி, ஹோமாகம, ராகமை, கண்டி குண்டசாலையிலும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இவ்வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் அரச ஊழியர்கள் முதலில் மொத்த விலையில் ஐந்து வீதத்தைச் செலுத்தி வீட்டைப் பெற்றுக்கொள்வதுடன் மிகுதி அவர்களது சம்பளத்திலிருந்து மாதாந்தத் தவணை மூலம் பெறப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமை ச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இதனைக் குறிப்பிட்ட அமைச்சர் அமுனுகம இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,  அரச ஊழியர்களுக்கு வீடுகளை அமைத்து வழங்கும் திட்டம் மீள புதிதாக ஆரம்பிக்க ப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மலேசியன் கம்பனியொன்றின் நிதியுதவியுடன் ஹபராதுவை மற்றும் வெருனகொட பகுதி களில் மாடி வீடுகளாக சகல வசதிகளை யும் கொண்ட 1500 எழில் மிகு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விபரங்கள் தேசிய பத்திரிகைகளில் விளம் பரமாக வெளியிடப்பட்டுள்ளன. நடைமுறையிலுள்ள வீட்டு விலைகளைப் போலன்றி குறைந்த விலையில் அரசாங்க ஊழியர்களுக்காகவே இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகளைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளுக்காக விசேட குழுவொன்று நிய மிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளுக்கான விண் ணப்பங்களை அக்குழு பரிசீலித்து பெயர்களை சிபார்சு செய்யும். அந்த சிபாரிசிற்கிணங்க வீடுகள் பகிர்ந்தளிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் இளைஞர்களைப் போன்று சிங்களவர்களும் கொல்லப்படுகின்றனர் – ரணில் விக்கிரமசிங்க

அன்று தமிழ் இளைஞர்கள் கொழும்பில் கொல்லப்பட்ட போது அவர்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் என கூறிய அரசாங்கம், இன்று பொலிஸாரின் உதவியுடன் சிங்கள இளைஞர்களையும் கொலை செய்து வருகின்றது.  இது பற்றி ஜனாதிபதியும் அரசாங்கத் தரப்பினரும் என்ன சொல்லப் போகின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.

அநுராதபுரம் இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்ற “சுதந்திரத்துக்கான அரங்கு’ கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு வினா எழுப்பினார்.

சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,  இன்று மக்களுக்கு சுதந்திரமாகக் கருத்துகளைக் கூட கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊடக அடக்குமுறை முன்னர் ஒரு பொழுதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

அன்று ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் ஊடக அடக்குமுறை நடைபெறுவதாக குரலெழுப்பி வந்த மஹிந்த ராஜபக்ஷ இன்று அவர் ஜனாதிபதியானதும் இவ்வாறு நடந்து கொள்வது வேடிக்கையாகவுள்ளது. 

அரச ஊழியர்களுக்கு இவ்வருடம் சம்பள உயர்வு இல்லை : எரிசக்தி அமைச்சர்

electricity.jpgஅரசாங்க ஊழியர்களுக்கு இந்த வருடத்தில் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாதென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

யுத்தம் மற்றும் உலக பொருளாதார நெருக்கடியின் காரணமாக 2009ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வுகளை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் காரணமாக இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ள நேரிட்டதாகவும் இதனால் சம்பள உயர்வுகளை வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மீது பற்றுடையோர் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை மின்சாரசபை ஊழியர் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும், உரிய பதில் கிடைக்காதவிடத்து பணிப் பகிஷ்கரிப்பு காலம் நீடிக்கப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் பணிப் பகிஷ்கிரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜமால்தீனின் கொலையுடன் தொடர்பு; இரு சந்தேகநபர்கள் சுட்டுக்கொலை -அதிரடிப்படையுடனான மோதலில் சம்பவம்

nimal_madiwaka.jpgமட்டக் களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பணிப் பாளர் பொலிஸ் அத்தியட்ச கர் ஜமால்தீனின் படுகொலை சம்பவத்து டன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கல்முனை துறைநீலாவணை களப்புப் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து களப்புப் பகுதிக்கு அண்மித்துள்ள காட்டில் மறைந்திருந்த சந்தேக நபர்களை பிடிப்பதற்காக சென்ற போது இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதன் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பதில் தாக்கு தல்களிலேயே இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி, மகஸின்கள் மற்றும் ரவைகளை மீட்டெடுத்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட இரு சந்தேகநபர்களில் ஒருவர் கந்தப்பிள்ளை அல்லது கந்தகுடி என்ற பெயருடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மற்றவரின் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்-முஸ்லிம் மக்கள் உறவில் அங்காடி வியாபாரம் முக்கியத்துவமிக்கது: யு.எல்.எம்.முபீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையிலான உறவில் அங்காடி வியாபாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.முபீன் கூறினார்.  புனித ரமழானை முன்னிட்டு காத்தான்குடி அங்காடி வியாபாரிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உதவிப் பொருட்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“மட்டக்களப்பு மாவட்டததைப் பொறுத்த வரை தற்போது தமிழர்களும் முஸ்லிம்களும் விரும்பிய இடங்களுக்குச் சுதந்திரமாக சென்றுவரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது குறித்து சகலரும் மகிழ்ச்சியடைய வேண்டும். இப்படியான சூழ்நிலை காரணமாக எமது மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைவதோடு இனங்களிடையே உறவும் வலுப்பெற்று வருகின்றது.

அங்காடி வியாபாரிகைளப் பொறுத்த வரை எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தற்போது தமிழ்க் கிராமங்களில் எல்லாம் சென்று வியாபாரம் செய்யும் போது அவர்களுக்கிடையிலான உறவையும் பேணி வருகின்றார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். சங்கத்தின் ஆலோசகர் ஏ.எல்.எம். பலுலுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்க உறுப்பினர்களான சுமார் 500 பேருக்கு பல்வேறு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பன்றிக்காய்ச்சலால் 90 ஆயிரம் பேர் பலியாகலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை

10092009.jpgஅமெரிக் காவில் தற்போது நிலவும்  குளிர் காலத்தில், பன்றிக்காய்ச்சல் நோய்; பல பகுதிகளுக்கும் பரவி, 20 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படலாம்; என்றும் இதனால் 90 ஆயிரம் பேர் பலியாகலாம் என்றும் வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா 2009-பன்றிக் காய்ச்சல் நோய்க்கான ஆயத்தம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தாண்டின் இறுதியில் ஆறு கோடி முதல் 12 கோடி வரையிலான அமெரிக்கர்களுக்கு, பன்றிக் காய்ச்சல் நோய் தொற்று அறிகுறிகள் போன்று தோன்றலாம். 10 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான அமெரிக்க மக்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படலாம். பன்றிக் காய்ச்சல் நோயால், 30 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பேர் வரை பலியாகலாம். இவர்களில் பெரும்பாலானவர்கள், 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பர். இவை அனைத்தும் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இவை அனைத்தும் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. பிரிட்டனுடன் ஒப்பிடும் போது,  அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறைவாகவே உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி விசாரணைகள் அற்ற தமிழ்பேசும் அரசியற் கைதிகள்: சோதிலிங்கம் ரி

Prision photo

கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் தம்மை விசாரணை செய் அல்லது விடுதலை செய் என கோரி இலங்கை சிறைச்சாலைகளுக்குள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடாத்துகின்றனர்

வன்னி யுத்த நடவடிக்கைகளுக்கு முன்னர் வட- கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அல்லது புலிகள் என சந்தேகிக்கப்படும் அரசியற் கைதிகள் அண்ணளவாக 1200 பேர் வரையில் இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு குறிப்பிடத்தக்கோர் பல வருடங்களாக சிறையில் உள்ளனர்.

இவர்களில் பெரும்பான்மையானோர் இன்றுவரை நீதி விசாரணைக்காக எடுத்துச் செல்லப்படாமலேயே (ரிமான்ட் கைதிகளாக) தடுத்து வைக்கப்பட்டுள்னர். இவர்கள் தம்மை ‘விசாரணை செய்’ அல்லது ‘விடுதலை செய்’ என்ற தமது போராட்டங்களை தமது சார்பில் எடுத்துச் சொல்ல யாரும் அக்கறை அற்றவர்களாகவும் உள்ளனர் என்றும், இப்படி சிறைகளில் உள்ள பலர் தாம் எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்கள் என்றும் தம்மீது குற்றங்கள் இருப்பின் நிரூபித்து தண்டனை வழங்கலாம் என்றும் அதைவிடுத்து தம்மை நீதி விசாரணைகள் இன்றி தடுப்புக்காவல் சிறையில் அடைத்திருப்பது இலங்கை அரசின் மனிதாபமற்ற செயல் என்றும் கண்டிக்கின்றனர். இலங்கை அரசு தம்மை தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே மனிதாபிமானமற்ற முறையில் நடாத்துவதாகவும் கருத்து கூறுகின்றனர்.

சிறைகளில் உள்ள போராளிகளில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அல்லது விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தவர்கள் என பலதரப்பட்டவர்களும் அடங்குவர். இச்சந்தேக நபர்கள் கிட்டத்தட்ட 1200 பேர்வரையில் வன்னி யுத்தத்திற்கு முன்பு கைசெய்யப்பட்டவர்கள் இவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது இலங்கை இராணுவம் கைது சென்று விசாரணையின் பின்னர் கொன்றுவிட்டது இன்னும் சிலர் இவர்களில் பலர் சயனைட் உட்கொண்டு மடிந்து போயினர் என்று கருதப்படுபவர்கள் இலங்கை சிறைச்சாலையிலும் தடுப்பு முகாமிலும் இராணுவ பொலீஸ் முகாம்களிலுமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிறு பகுதியினர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டவர்களுமாக சிறைச்சாலைகளிலும் உள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் J வாட்டில் 68 பேரும், G செல்லில் 75 பேரும், பெண்கள் பிரிவில் பெண்கள் 53 பேரும் CRP மகசீன் சிறையில் 159 பேருமாக உள்ளனர். G செல்லில் உள்ளவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டு பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற கைதிகளில் பலர் 10வருடங்கள், 12வருடங்கள், 15வருடங்கள் சிறைத்தண்டனை பெற்று தண்டனை அனுபவித்துக் கொண்டும் உள்ளனர்

இதைவிட அநுராதபுரம் சிறைச்சாலைகளில் 200க்கு மேற்ப்பட்டோரும் யாழ்ப்பாண சிறையில் 250 க்கு அதிகமானோரும், அவர்களுடன் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்தோருமாக 400 பேர்வரையிலும், பூசா தடுப்பு முகாமில் 330க்கு மேற்ப்பட்டோரும் உள்ளனர். இதைவிட சிறைச்சாலை ஆணையாளரின் கட்டுப்பாடல்லாத CID, DID, NIB போன்ற இராணுவ, பொலீஸ், உளவுப்பிரிவினரின் தடுப்பு முகாம்களிலும் என பரவலாக 1500 பேர்வரையிலான தமிழ் பேசும் அரசியற் கைதிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்னர்.

(புலிகளுடனான முள்ளி வாய்க்கால் வரையில் நடைபெற்ற வன்னி இறுதி யுத்தத்தில் யுத்தத்தின்போது கைது செய்யப்பட்டவர்களும், பின்னர் வன்னி அகதி முகாம்களில் தெரிவு செய்து கைது செய்ப்படுபவர்களும் ,இறுதி யத்தத்தின்போது கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களும், சரணடைந்தவர்களும் உட்பட IDP முகாம்களில் தம்மிடம் பதிவு செய்யும்படி கேட்டுவிட்டு புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி இந்த கட்டுரையில் சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும்.)

சிறைக் கைதிகளில் 75 சதவிகிதத்தினர் 2003ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டுவரையிலான காலப்பகுதிகளில் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு எடுத்து வரப்பட்ட விடுதலைப்புலிகள் என்ற சந்தேக நபர்களே. இவர்களில் மீதி 25 சதவிகிதத்தினர் 7வருடங்கள், 10வருடங்கள், 20வருடங்கள் 12 வருடங்களாக நீதிவிசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களேயாவர். இந்தக் கைதிகள் பலர் சித்திரவதைகளினால் ஏற்ப்பட்ட காயங்களுடனும் மனநோயாலும் பாதிப்படைந்தவர்களாகவே உள்ளனர். இவர்கள் தாம் இந்த சிறைகளிலேயே வாழ்ந்து மடிந்து போயிடுவோம் என்று எதிர்பார்க்கின்றனர்.

இந்த சிறைகளில் உள்ள பெண்கள் சிலர் கைதுசெய்யப்படும்போது கர்ப்பமாக இருந்தவர்கள். இவர்கள் சிறையில் இருக்கும் போதே குழந்தைகள் பிறந்தும் இக் குழந்தைகள் தற்போது 23 மாதம், 20 மாதம் மற்றும் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தைகளாக உள்ளனர். இக்குழந்தைகள் தமது தாய்களுடன் நீதி மன்றத்திற்கு வரும் காட்சிகளை பலர பார்த்த்துள்ளனர். இந்த குழந்தைகள் ஏன் சிறைகளில் வாழவேண்டும் என்பதை பலரும் கவலையுடன் தெரிவித்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சில கர்ப்பிணிப் பெண்கள் இவர்களின் கணவன்மார்களுடன் கைது செய்யப்பட்டவர்கள். கணவர்மார் சிறைச்சாலையின் ஆண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தத்தம் குடும்பங்களுடன் சந்தித்து கலந்துரையாட ஒவ்வொரு கிழமையும் அனுதிக்கப்படுகின்றனர்.

இந்தக் குற்றமற்ற குழந்தைகள் சிறையில் அடைக்கபட்டுள்ளது சட்டவிரோதமானது தானே என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகருமான நிஹால் ஜெயசிங்கேயிடம் கேட்டபோது ‘தாயே குழந்தையின் பாதுகாவலர் என்றும் குழந்தைகளை பிரித்தெடுத்து தனியே பராமரிக்கும் சட்டமுறைகளும், அதற்குரிய சமூக வசதிகளும் அரசிடம் இல்லை என்பதால் இந்தக் குழந்தைகள் தாயுடன் சிறையில் இருப்பது தவிர்க்க முடியாதது’ என்றும் பதிலளித்தார்.

சிறையிலுள்ள குடும்பங்களுக்கு அவர்களது உறவினர்கள் நண்பர்கள் உணவுப் பொருட்கள் பால்மாப் பொருட்கள் கொண்டுவந்து கொடுக்க சிறைச்சாலை அனுமதித்த போதிலும் யாரும் கொண்டுவந்து கொடுக்கத் துணிவதில்லை. காரணம் கொண்டுவந்து கொடுப்பவர்களும் புலிகளாக இனம் காணப்படுவர் அல்லது அவதானிக்கப்படுவர் அல்லது அவர்களும் காணாமல் போய்விடுவர் என்ற பயமேயாகும். இதற்கு உதாரணமாக சில உறவினர்கள் காணாமல் போயுள்ளதாக இந்த தமிழ் அரசியல் கைதிகள் தேசம் நெற்றுக்கு தெரிவிக்கின்றனர்.

தம்மை ‘விசாரணை செய்’ அல்லது ‘விடுதலை செய்’ என்ற அடிப்படையில் தற்போது போராட்டங்களை நடாத்தம் இந்த அரசியற் கைதிகள் முன்பும் பல தடவைகள் பல உண்ணாவிரத போராட்டங்கள் செய்துள்ளனர். இந்தப் போராட்டங்கள் எதுவித பலனும் அற்றுப்போயுள்ளன. இந்த உண்ணாவிரதப் போராட்டங்கள் பற்றி தமிழ்ச்சமூகம் குறிப்பாக புலம் பெயர் சமூகம் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை என்பதையும் இச்சிறைகளில் உள்ள பல முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இப் போரட்டங்களின் பின்னர் தம்மை ஜநா மனிதஉரிமைகள் குழு 2007 டிசம்பர் மாதம் 9ம் திகதி சிறைகளுக்கு வந்து பார்வையிட்டனர் எனினும் அவர்களை விசாரணை செய்ய அல்லது விடுதலை செய்ய ஏற்பாடுகள் செய்வதாகவும் 3 மாத காலங்களுக்குள் பதில் தருவதாக உறுதி மொழியும் கொடுத்துச் சென்றனராயினும் இதுவரையில் ஜநா மனித உரிமைகள் குழுவிடமிருந்து எந்த பதிலும் தமக்குக் கிடைக்கவில்லை என்று கருத்துக்களை தெரிவித்தனர்.

தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பல வகையான சித்திரவதைக்குள்ளாவதாகவும் இன்றும் இவர்கள் விசாரணைக்காக எடுத்துச் செல்லப்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது. இது பற்றி நிஹால் ஜெயசிங்கேயிடம் விசாரித்தபோது ‘ரிமான்ட்டில் உள்ளவர்களும் சிறைச்சாலைகளில் தண்டனை பெற்ற கைதிகளும் வெளியே எடுத்துச் சென்று விசாரணைகள் மேற்கொள்வதற்கு இலங்கை சட்டவியலில் இடம் இல்லை என்றும் இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்காது’ என்றும் தெரிவித்தார். நீதிமன்றம் அனுமதி வழங்காமல் சிறையிலிருந்து யாரையும் இலங்கை பாதுகாப்புப் பிரிவினர் எடுத்துச்செல்ல சிறைச்சாலை நிர்வாகம் சிறைச்சாலை ஆணையாளர் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

சிறைச்சாலை நிர்வாகத்தில் உள்ள கைதிகள் தமக்கு மூன்று வேளை உணவு தரப்படுவதாகவும், மூன்று வேளையும் சோறு தரப்படுவதாகவும் கூறினர். காலையில் சோறு சம்பல் சொதியுடனும், மதியத்திலும் இரவிலும் சோறு இரண்டு அல்லது மூன்று கறிகளுடன் தரப்படுவதாகவும், இதில் கிழமையில் ஒருநாள் கோழிக்கறியும் கிழமையில் ஒருநாள் மீன்கறியும், ஞாயிற்றுக்கிழமைகளில் பிரியாணியும் தரப்படுவதாயும் கூறினர்.

தமது போராட்டங்களில் என்றும் எதுவுமே சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக செய்ய முடியாது என்றும் இப்படி சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக செய்தால் தமக்கு தரப்படும் உணவுகள் வசதிகள் குறைக்கப்பட்டு விடும் என நிர்வாகம் தெரிவித்துள்ளதாயும் கூறினர்.

அதேவேளை இந்த தமிழ் அரசியல்கைதிகள் கடந்த தமது சிறைக்கால வரலாற்றில் தைப்பொங்கல், புதுவருடம், மாவீரர் தினம், நத்தார் போன்ற தினங்களை கொண்டாடுவதாயும் தெரிவிக்கின்றனர். இதற்கான வசதிகளை சிறைச்சாலை நிர்வாகமே செய்து தருவதாயும் கூறிய இவர்கள் தாம் வாழும் போதே இப்படியான வாழ்க்கையை தவறவிடக் கூடாது என்பதிலும் தாம் இனிமேல் தமது சாதாரண வாழ்க்கை கிடைக்குமா, என்ற ஆதங்கத்துடன் தாம் வாழும் போதே வாழ்ந்து விடவேண்டும் என்ற மனத்துடன் இந்த சிறைகளில் வாழ்வதையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

சிறைச்சாலை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் பேசும் அரசியல் கைதிகள் தமக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் தரப்படுவதாயும் அத்துடன் ரேடியோ தொலைக்காட்சி போன்ற உபகரணங்கள் தரப்பட்டுள்ளதாயும் தாம் IBC Tamil ன் தாயகம் உறவுப்பால நிகழ்ச்சியினை அரச ஒலிபரப்பு தடை இடையூறுகளுக்கு ஊடாகவும் கேட்கக் கூடியதாக இருந்ததாயும் தெரிவித்தனர்.

இந்த சிறையிலுள்ள இன்னும் சிலர் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட முடியாத இயக்கம் எவ்வளவு பிரச்சினைகளை எதிர் நோக்கினாலும் ஒரு சிறிய பகுதியினரான புலிகளின் செயற்ப்பாட்டிலிருந்து அது மீண்டும் பரந்து வியாபித்து எழும் என்ற அதீத நம்பிக்கையுடன் வாழ்கின்றதையும் நான் உணர்ந்து கொண்டேன்.

பலர் சித்திரவதைகளில் ஏற்ப்பட்ட வடுக்களினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி மனித உரிமைகள் அமைப்புக்களோ சர்வதேச தமிழர் அமைப்புக்களோ எந்தவித அக்கறையும் காட்டவில்லை என்பதையும் இவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் தம்மீது வைக்கப்பட்டுள்ள குற்றங்களை நீதிமன்றம் விசாரிக்க அல்லது தம்மை விடுதலை செய்யவும் தம்மீது செய்யப்பட்ட சித்திரவதைகள் மனித உரிமை மீறல்கள் பற்றியும் கவனம் எடுத்து தமக்கு புலம்பெயர் தமிழர்கள் தமக்கு உதவ வேண்டும் என்றும் இந்த கைதிகள் கோருகின்றனர்.

புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தமது நிலைபற்றியும் சர்வதேச அமைப்புக்கள் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றியும் முதல் தடவையாக முன்வைக்கபபடும் இந்த பதிவை புலம் பெயர் சமூகம் கவனமெடுத்து செயற்ப்படும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த சிறைச்சாலைகளில் உள்ள பல தமிழ் அரசியல்க்கைதிகள் பலர் தமக்கு தேவையான உடுபுடவைகள் துணிகள் போதாமையால் அவதியுறுவதாகவும் குறிப்பாக பெண்களுக்குரிய ஆடைகள் பற்றாக்குறை உள்ளதும் கவனத்தில் எடுத்து உதவிகள் அளிக்கப்பட வேண்டிய தேவையில் உள்ளனர்.

வட-கிழக்கிலுள்ள மக்களின் அன்றாட தேவைகளை இந்த யுத்தம் நாசம் செய்துள்ளதாலும் தமது சாதாரண வாழ்வையே வாழமுடியாது தவிப்பதாலும் மக்கள் வேறு விடயங்களில் அக்கறை எடுத்துக் கொள்ளாமலேயே வாழ்கின்றனர். மேலும் மக்களின் பேச்சுச் சுதந்திரம் உட்பட பல சுதந்திரங்கள் விடுதலை இயக்கங்களாலும் அரசினாலும் கட்டுப் படுத்தப்பட்டிருந்தது இந்த உணர்விலிருந்து இன்று வரையில் தமிழ் மக்கள் விடுபடவில்லை அல்லது விடுபட முடியாது காரணிகள் தொடர்ந்தும் உள்ளன.

வட கிழக்கு மக்கள் புலிகளைப் பற்றி எது சரி பேசினாலே தான் புலிஎன அடையாளம் காணப்பட்டு கொல்லப்படுவேன் என எதிர்பார்க்கும் நிலை இருக்கையிலும் சிறையிலுள்ள தமது உடன் பிறப்புக்கள் உறவினர்கள் பற்றி அக்கறை காட்டினாலே தமது உயிருக்கு ஆபத்து என்ற நிலைப்பாட்டில்- அவர்கள் எப்படி சிறையிலுள்ள புலிகளுக்காக கருத்துக்களை முன்வைக்க அல்லது போராட முடியும்.

புலம் பெயர் நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும் முக்கியமாக நிதி சேகரிப்பு பிரச்சாரங்கள் ஆர்ப்பாட்டங்களில் காட்டும் அரசியல் அக்கறையை இக்கைது செய்யப்பட்ட புலிப்போராளிகளில் காட்டமுடியாமைக்கு புலிகளினால் உருவாக்கப்பட்ட கலாச்சாரமே முக்கிய காரணமாகும். அதாவது சிறை சென்றவர்கள் இயக்க விதிப்படி சயனைட் சாப்பிட்டு தன்னை மாய்த்துக் கொள்ளாத- எமது இரகசியங்களை அரசுக்கு கொடுத்தவர்கள் என்ற கருத்துக் கொண்ட கலாச்சாரமே.

சிறையிலுள்ள போராளிகள் தாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாகவும் தாம் அக்கறையில்லாமல் கைவிடப் பட்டவர்களாகவும் தாம் என்றோ ஒருநாள் இலங்கை அரசினால் கொல்லப்படுவோம் என்ற உணர்வுடனும் வாழ்கின்றனர். இன்னும் சிலர் தாம் விடுதலை செய்யப்படின் வெளிநாடுகளுக்கு செல்லும் நோக்குடனும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஈடுபட விருப்பமும் கொண்டுள்ளனர். அதேசமயத்தில் மற்றைய தமது சக கைதிகளுக்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தி பேச முடியாத நிலையிலும் உள்ளனர். தாம் துரோகிகள் என்றோ அல்லது கருணா ஆதரவாளர்கள் என்றோ பார்க்கப்படும் அல்லது பிரச்சினைகள் எழுந்துவிடும் என்ற அச்சமே இதற்கு காரணமாகும்.

நிவாரணக் கிராமங்களுக்கு மேலும் 100 வைத்தியர்களும் 200 தாதியர்களும் நியமனம்!

nimalsiripaladasilva.jpgவடக்கு நிவாரணக் கிராமங்களில் பணியாற்ற மேலும் 100 வைத்தியர்களும் 200 தாதியர்களும் அடுத்த மாதம் 15 ஆம் திகதி அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,

வடக்கு நிவாரணக் கிராமங்களில் விசேட வைத்தியர்கள் உட்பட 75 வைத்தியர்களும் 90 தாதியர்களும் தற்பொழுது கடமையாற்றி வருகின்றனர். இங்கு தங்கியுள்ள மக்களுக்கு இப்போது சிறந்த வைத்திய வசதிகள் வழங்கப்பட்டு வருவதானால் நிவாரணக் கிராமங்களில் மரண வீதம் குறைந்துள்ளது.

இத்தாலி மற்றும் ஜெர்மன் நாடுகளின் உதவியில் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் இயங்கி வரும் செட்டிக்குளம் தள வைத்தியசாலை அமைச்சரவை அனுமதியுடன் அரசுடமையாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். 

தன்சானியாவில் ஷியாம்லால் கொலை செய்யப்பட்டுள்ளார்-ஐ.நா.வின் பேச்சாளர் தகவல்

தன்சானியாவின் அருஷா நகரில் அண்மையில் தமது வீட்டில் இறந்துகிடக்க காணப்பட்ட ஷியாம்லால் ராஜபக்ஷ, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பேச்சாளர் மிசேல் மொன்ராஸ் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகனான ஷியாம்லால் இறக்கும் போது ருவாண்டாவுக்கான ஐக்கிய நாடுகள் சர்வதேச குற்றவியல் விசாரணை சபையில் வழக்குரைஞராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மரணம் குறித்து, தன்சானியா, இலங்கை ஆகிய இருநாட்டு அதிகாரிகளும் விசாரணை செய்து வருகிறார்கள் என்று மொன்ராஸ் தெரிவித்தார்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கு இன்னமும் அறிவிக்கப்படாததால் விசாரணை முடிவுகள் பற்றிய விபரங்களை தம்மால் வெளியிட முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.