இலங் கையில் எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கும் கியூபா நாட்டு பக்ரியா நுண்ணங்கியொன்றைப் பாவிப்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையும் இந்நாட்டில் 2100 பேர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகினர். இவர்களில் 80 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் நோய் பரவுவதைத் தடுப்பு பிரிவு அறிவித்திருக்கின்றது.
இந்நாடடில் வருடா வருடம் எலிக்காய்ச்சலுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளாவதும், பலர் உயிரிழப்பதும் அண்மைக் காலம் முதல் இடம்பெறுகின்றது. இந்த அச்சுறுத்தலிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பத ற்காகவே எலிக்காய்ச்சல் நோய்க் காரணியைக் கட்டுப்படுத்தவும் கியூபநாட்டில் பயன்படுத்தப்படும் பக்aரியா நுண்ணங்கியைப் பாவிப்பது தொடர்பாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இந்நாட்டில் டெங்கு வைரஸ் காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபநாட்டு பி.ரி.ஐ பக்aரியாவைப் பாவிப்பதற்குத் தேவையான நிபுணத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொடுக்கவென அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் இருவர் கொழும்புக்கு வருகை தந்திருந்தனர். இவர்கள் கியூபாவில் எலிக்காய்ச்சலும் மற்றொருவகை பக்aரியாவைப் பாவித்துக் கட்டுப்படுத்தப்பட்டி ருக்கின்றது. அதனால் தேவைப் படும் பட்சத்தில் அப்பக்aரியா
நுண்ணங்கி தொடர்பாகவும் நிபுணத்துவ ஆலோசனை பெற்றுத்தர முடியும் என்று கூறியுள்ளனர். இதனடிப்படையில் இங்கும் எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு பக்aரியா நுண்ணங்கியைப் பாவிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நாட்டில் மாத்தளை, கொழும்பு, கம்பஹா, குருநாகல், கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வருடா வருடம் அதிகமானோர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகின்றனர்.
மழைக் காலம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதால் தங்கள் பாதங்களில் காயங்களுடன் இருப்பவர்கள் காயங்கள் குணமடை யும் வரையும் வயல் வேலையிலும், இரத்தினக்கல் அகழ்வு மற்றும் கால்வாய் பணிகளிலும் ஈடுபட வேண்டாமென சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.
அதேநேரம் வயல், இரத்தினக்கல் அகழ்வு இடங்கள், வடிகான்களில் தொழில் புரிபவர்கள் எலிக்காய்ச்சலை தவிர்ப்பதற்கான மாத்திரைகளை பிரதேசத்தில் கடமைபுரியும் மருத்துவ அலுவலகர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சின் அதிகாரியொருவர் கேட்டுக்கொண்டார்.