அரசாங்க ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 1500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 10,000 வீடுகளை நிர்மணித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத்அமுனுகம தெரிவித்தார்.
நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள 1500 வீடுகளைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஹபராதுவ மற்றும் வெகுனகொட பகுதிகளில் இவ் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த கட்ட வீடுகள் களனி, ஹோமாகம, ராகமை, கண்டி குண்டசாலையிலும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இவ்வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் அரச ஊழியர்கள் முதலில் மொத்த விலையில் ஐந்து வீதத்தைச் செலுத்தி வீட்டைப் பெற்றுக்கொள்வதுடன் மிகுதி அவர்களது சம்பளத்திலிருந்து மாதாந்தத் தவணை மூலம் பெறப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமை ச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இதனைக் குறிப்பிட்ட அமைச்சர் அமுனுகம இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, அரச ஊழியர்களுக்கு வீடுகளை அமைத்து வழங்கும் திட்டம் மீள புதிதாக ஆரம்பிக்க ப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மலேசியன் கம்பனியொன்றின் நிதியுதவியுடன் ஹபராதுவை மற்றும் வெருனகொட பகுதி களில் மாடி வீடுகளாக சகல வசதிகளை யும் கொண்ட 1500 எழில் மிகு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விபரங்கள் தேசிய பத்திரிகைகளில் விளம் பரமாக வெளியிடப்பட்டுள்ளன. நடைமுறையிலுள்ள வீட்டு விலைகளைப் போலன்றி குறைந்த விலையில் அரசாங்க ஊழியர்களுக்காகவே இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகளைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளுக்காக விசேட குழுவொன்று நிய மிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளுக்கான விண் ணப்பங்களை அக்குழு பரிசீலித்து பெயர்களை சிபார்சு செய்யும். அந்த சிபாரிசிற்கிணங்க வீடுகள் பகிர்ந்தளிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.