வடக்கு நிவாரணக் கிராமங்களில் பணியாற்ற மேலும் 100 வைத்தியர்களும் 200 தாதியர்களும் அடுத்த மாதம் 15 ஆம் திகதி அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,
வடக்கு நிவாரணக் கிராமங்களில் விசேட வைத்தியர்கள் உட்பட 75 வைத்தியர்களும் 90 தாதியர்களும் தற்பொழுது கடமையாற்றி வருகின்றனர். இங்கு தங்கியுள்ள மக்களுக்கு இப்போது சிறந்த வைத்திய வசதிகள் வழங்கப்பட்டு வருவதானால் நிவாரணக் கிராமங்களில் மரண வீதம் குறைந்துள்ளது.
இத்தாலி மற்றும் ஜெர்மன் நாடுகளின் உதவியில் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் இயங்கி வரும் செட்டிக்குளம் தள வைத்தியசாலை அமைச்சரவை அனுமதியுடன் அரசுடமையாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.