March

March

அத்துமீறும் இந்திய மீனவர்களை பா உ சிறிதரன் பார்வையிட்டார் ! பாதுகாக்கும் படி பாஜாக தமிழகத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை ! பாதிக்கப்படும் இலங்கைத் தமிழ் மீனவர்களை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிடுகின்றது !

அத்துமீறும் இந்திய மீனவர்களை பா உ சிறிதரன் பார்வையிட்டார் ! பாதுகாக்கும் படி பாஜாக தமிழகத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை ! பாதிக்கப்படும் இலங்கைத் தமிழ் மீனவர்களை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிடுகின்றது !

இலங்கையின் வடக்கில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிட்டுவிடு உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்குகின்றன. ஆனால் தமிழகத்தின் பாஜாக தலைவர் அண்ணாமலை அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் வரும் மீனவர்களை நடுக்கடலில் வைத்து கைது செய்வதாகக் கூறி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அவ்வாறு கைது செய்யப்படுபவர்களை உடனடியாக நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் அண்ணாமலை வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் அத்துமீறும் இந்திய மீனவர்கள், தங்கள் பொருளாதாரத்தை அழிக்கிறார்கள் என்று போராடிய போது அவர்களைக் கண்டுகொள்ளாத பா உ எஸ் சிறிதரன் அத்துமீறிய போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை யாழ் சிறையில் சென்று பார்வையிட்டு அவர்களது நலன்களை விசாரித்து அறிந்தார்.

அத்துமீறி வந்து வடக்கின் மீன்வளத்தை அழிக்கும் இந்திய மீனவர்களுக்கு அங்குள்ள கட்சிகள் பெரும் ஆதரவை வழங்குகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களைப் பற்றி தமிழ் தேசியக் கட்சிகள் மௌனமாகவே இருந்து வருகின்றன. பாராளுமன்றத்திலோ, மாகாணசபையிலோ, உள்ளுராட்சி சபைகளிலோ பன்மைத்துவ அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாததும் அதற்குக் காரணமாக உள்ளது என்கிறார் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த். தமிழ் தேசிய அரசியலை சைவ வெள்ளாள மேட்டுக்குடி ஆண்களே பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஏனைய சமூகங்களின் வலியை இந்த தமிழ் தேசியவாதிகளால் உணரமுடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கிடையே நேற்று எழுவைதீவு அனலைதீவு கடற்பரப்பில் 200 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் காரைநகர் மற்றும் மன்னார் பேசாலையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வடக்கிற்கான கேரளா கஞ்ஞா மற்றும் போதைப்பொருட்களின் நுழைவாயிலாக வடக்கு கடற்பரப்பு உள்ளது. இந்திய மீனவர்களே அதனை இலங்கைக்கு கொண்டுவருகின்றனர் என்பதும் தற்போது உறுதியாகி உள்ளது.

வடக்கின் தமிழர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகின்ற போதும் தமிழ் தேசியத் தலைமைகள் இது விடயத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க மறுத்துவருகின்றனர். கடந்த வியாழக்கிழைமை வடக்கு மீனவர்கள் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் தமிழகத்தில் ராமேஸ்வரத்திலும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2024இலிருந்து 535 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

வடக்கு மீனவர்கள் விடயத்தில் தற்போது தேசிய மக்கள் சக்தியினர் மட்டுமே அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர். கிளிநொச்சி நீதமன்றமும் தண்டனைகளை அபராதங்களை சற்று கடுமையாக்கி வருகின்றது. தமிழரசுக் கட்சியின் பா உ ரவிகரன் மீனவர்கள் விடயத்தில் தனித்துக் குரல் எழுப்பியுள்ளார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராமுகமாகவே உள்ளனர்.

வடக்கு மீனவர்களின் பிரச்சினையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிபேதமில்லாமல் இந்திய அரசுக்கு அழுத்தங்களை வழங்கி வடக்கு மீனவர்களின் பிரச்சிகைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இது விடயத்தில் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் பிரச்சினையை சரியானமுறையில் இனம் கண்டுள்ளார். அவருடைய கூற்றுப்படி தமிழகத்தில் உள்ள அப்பாவி மீனவர்களைப் பயன்படுத்தி தமிழக அரசியல் செல்வாக்குடையவர்களும் பெரும் பணமுதலைகளும் லாபமீட்டுவதாகத் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இந்திய கடற்படை இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதற்கு முடிவுகட்ட வேண்டும். கேரளா கஞ்சா வடகடற்பரப்பிற்குள் நுழைவதற்கு முடிவு கட்ட வேண்டும்.

 

அர்சுனாவின் பாராமன்ற ஆசனம் பறிபோக வாய்ப்பு ! சித்தார்தன் பா உ ஆக வாய்ப்பு !

அர்சுனாவின் பாராமன்ற ஆசனம் பறிபோக வாய்ப்பு ! சித்தார்தன் பா உ ஆக வாய்ப்பு !

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்புரமை தொடர்பில் போடப்பட்டுள்ள பொதுநல வழக்கு பா உ அர்ச்சுனாவுக்கு எதிராக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் தன்னுடைய வேலையை ராஜினாமாச் செய்யாமல் தேர்தலில் போட்டியிட்டமையால் அது விதிமுறைகளுக்கு முரணாணது எனக் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையிலேயே அர்ச்சுனா இவ்வழக்கில் உறுப்புரிமையை இழப்பார் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அர்ச்சுனா தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த போது அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் அது அவர் பணியிலிருந்து நீக்கப்படவில்லை.

இதற்கிடையே தான் தனது பா உ பதவியை தனக்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்ற கௌசல்யா நரேனுக்கு வழங்கப் போவதாக ஒரு பதிவை அர்ச்சுனா வெளியிட்டார். அதனை சில ஊடகங்கள் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியிட்டு இருந்தன.

பா உ அர்ச்சுனாவுக்கு எதிரான பொதுநல வழக்கு அர்ச்சுனாவுக்கு எதிராக அமைந்தால் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழப்பது மட்டுமல்ல அவருடைய சுயேட்சைக் குழுவும் முடக்கபடும். ஏனெனல் அச்சுயேட்சைக்குழுவின் தலைவராக இராமநாதன் அர்ச்சுனாவே உள்ளார். அதனால் கௌசல்யா நரேனுக்கு அந்த உறுப்புரிமை வழங்கப்பட மாட்டாது.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதற்கு அடுத்தநிலையில் உள்ள கட்சிக்கே அந்த உறுப்புரிமை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்படியானால் ஜனநாயத் தேசியக் கூட்டமைப்பில் உள்ள புளொட் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கே அந்த உறுப்புரிமை செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

ஒன்பது கட்சி உள்ளுராட்சிக் கூட்டணி ஏழு கட்சிகளாக குறுகியது !

ஒன்பது கட்சி உள்ளுராட்சிக் கூட்டணி ஏழு கட்சிகளாக குறுகியது !

 

ஒன்பது கட்சிகள் இணந்து உருவாகிய உள்ளுராட்சிக் கூட்டணியில் போட்டியிடுவதில்லை என வடக்கு மாகாணசபையில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட பொன் ஐங்கரநேசன் தலைமையிலான பசுமைக்கட்சி அறிவித்துள்ளது. அதேபோல் பாலியல் காமுகர் பிரேமானந்தாவை வணங்கி வந்த தமிழ் மக்கள் கூட்டணியும் தனித்துப் போட்டியிடப் போவதாக கட்சியின் பிரதிநிதி சட்டத்தரணி மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

பசுமைக் கட்சியும், தமிழ் மக்கள் கூட்டணியும் வெளியேறியதற்குப் பின்னால் அவர்களுக்கு நிதி வழங்கும் புலம்பெயர் சக்திகளே பின்நிற்பதாகத் தெரிய வருகின்றது. இக்கட்சிகள் தேர்தலை களத்தில் உள்ள மக்களோடு அடையாளப்படுத்தி போட்டியிடுவதற்கு மாறாக புலத்திலிருந்து நிதி வழங்குபவர்களை மையமாக வைத்து கட்சிகளை சுயேட்சைக்குழுக்களை உருவாக்குவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றது.

பருத்தித்துறையில் கள்ளமணல் டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு !

பருத்தித்துறையில் கள்ளமணல் டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு !

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கள்ள மணல் ஏற்றிச் சென்ற டிப்பரை பொலிஸார் சோதனைக்காக மறித்தனர். கட்டளையை மதிக்காது டிப்பர் தொடர்ந்து பயணித்த போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பருத்தித்துறை பொன்னாலை வீதியில் நேற்று March 02 ஆம் திகதி காலையில் இடம்பெற்றுள்ளது. டிப்பரில் பயணித்த ஒருவர் காயமடைந்து பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னுமொருவர் தப்பியோடி விட்டார். தப்பியோடியவர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார். சம்பந்தப்பட்ட டிப்பர் தர்மபுரத்தில் வழமையாக கள்ள மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

ஊழல் ஒழிப்பு அணி வன்னி சமீபத்தில் தர்மபுரம் கிளிநொச்சி கனிய வள மோசடியில் ஈடுபடுவதாக சில பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மீதும் தொழில் அதிபர் பெருமாள் கபில்ராஜ் மீதும் அவரின் குழுவினர் மீதும் புகார் புகார் கூறியிருந்தனர். இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டியது பொலிஸாரின் கடமை. வெறுமனே சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அவதூறாக கடந்து செல்லக் கூடாது. அதற்கமைய பிடிப்பட்டிருக்கின்ற டிப்பர் மூலம் மணல் மாபியாக்களை வெளிக் கொணரலாம். சில மணல் மாபியாக்கள் தமிழ் அரசியல் வாதிகளின் பின்னால் ஒழிந்துள்ளார்கள் எனவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

யாழில் ஜஸ் போதையுடன் போதை மாத்திரையும் சேர்ந்தது

யாழில் ஜஸ் போதையுடன் போதை மாத்திரையும் சேர்ந்தது

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவரை யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 1600 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களை வழிமறித்து சோதனையிட்ட போது அவர்களிடம் போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டது.

இருவரையும் பொலிஸார் கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் பாடசாலை மாணவர்கள், மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும். பாடசாலைகள் இவ்விடயத்தில் சிறப்பு செயல்த்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

பஸ்க்கு காத்திருந்த தமிழ் பெண், லண்டன் ஹரோ விபத்தில் மரணம் !

பஸ்க்கு காத்திருந்த தமிழ் பெண், லண்டன் ஹரோ விபத்தில் மரணம் !
சென்ற திங்கட் கிழமை பெப்ரவரி 24 இல் லண்டன் ஹரோவில் நடந்த விபத்தில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெஸ்பரோ வீதியில் நிகழ்த இந்த விபத்தில் 46 வயதான சித்திரா வான்முகநாதன் உயிரிழந்துள்ளார். ஒரு கார், பஸ் மற்றும் பாதசாரிகள் மூவர் விபத்துக்குள்ளாகி உள்ளனர். ஒரு 30 வயதுப் பெண்ணும் ஒரு 12 வயதுச் சிறுமியும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவசர மருத்துவ வாகனம் மற்றும் முதலுதவியாளர்கள் விபத்து ஸ்தலத்திற்கு விரைந்து காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போதும் சத்திரா வான்மீகநாதனைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
குற்றவியல் விசாரணை அதிகாரி சார்ஜன்ட் போல் ஜக்சன், விசாரணைகள் தொடர்வதாகவும் இதனை நேரில் பார்த்தவர்கள் அல்லது சம்பவம் ஏதாவது கமராக்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அவற்றை தந்து உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்ட கார் ஓட்டுனர், உயிராபத்தை ஏற்படுத்தும் விபத்தில் காரை ஓட்டினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இரவு 9: 17 அளவில் வெம்பிளியில் உள்ள தன் வீட்டுக்குச் செல்ல 395 ஆம் இலக்க பஸ்க்கு காத்திருந்த சித்திரா மற்றும் பஸ்க்கு நின்றவர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியுள்ளது. என்எச்எஸில் வேலை செய்து வந்த இவரது திடீர் மரணம் குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

யாழில் போதைப் பொருளுக்கு எதிரான புனர்வாழ்வு மையம் அமைக்கப்பட வேண்டும் ! பா உ சிறிபவானந்தராஜா

யாழில் போதைப் பொருளுக்கு எதிரான புனர்வாழ்வு மையம் அமைக்கப்பட வேண்டும் ! பா உ சிறிபவானந்தராஜா

 

யாழ் மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளதை நீதி அமைச்சு முப்படைகளின் துணையோடு கட்டுப்படுத்த வேண்டும். போதைவஸ்தால் பெருமளவு யாழ் மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் யாழில் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு முகாம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என இன்று நடைபெற்ற குழநிலை விவாதத்தில் யாழ் மாவட்ட பா உ சிறி பவானந்தராஜா நீதி அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். அவர் பேசிக்கொண்டிருக்கின்ற போதே யாழ் சுதுமலையில் மிகப்பெரும் தொகையான போதைப்பொருள் படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை சுதந்திரமடைந்தது முதல் ஆட்சிக்கு வந்தவர்கள் நீதியின்பால் செயற்படாமல் இனவாதங்களைத் தூண்டி நாட்டில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் அழித்துள்ளனர். எங்களுடைய ஆட்சியில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் இனிமேல் இனங்களிடேயேயான ஒற்றுமையைச் சீர்குலைக்க விடமாட்டோம் என சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.

அவர் தனது உரையில் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட வேண்டும், நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும், மனிதப்புதைகுழிகள் பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் போன்ற விடயங்களையும் தனது உரையில் வலியுறுத்தினார்

அவர் மேலும் தெரிவிக்கையில் வன்முறைக்குளுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் யாழ் சிறைச்சாலையில் 200 வரையானோர் பணிக்கு தேவையான போதும் 120 வரையானோரே உள்ளனர் என்றும் இந்த வெற்றிடங்களை நிரப்புமாறும் பா சிறிபவானந்தராஜா கேட்டுக்கொண்டார். மேலும் மல்லாகம் நீதிமன்றத்துக்கு இன்னுமொரு நீதிபதியின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ் நுனிப் புல் மேயும் சட்டத்தரணிகள் வைஷ்ணவிக்கு உமாகரனுக்கு தளபதி கேர்ணல் கிட்டு அன்றே வழங்கிய பதில்

யாழ் நுனிப் புல் மேயும் சட்டத்தரணிகள் வைஷ்ணவிக்கு உமாகரனுக்கு தளபதி கேர்ணல் கிட்டு அன்றே வழங்கிய பதில் !

 

மார்ச் முதலாம் திகதி லண்டன் மெய்வழி ஊடகத்தின் சாம் பிரதீபனுக்கு வழங்கிய நேர்காணலில் பாலியல் குற்றவாளியான பெண்களை அவமதிக்கும் நாம் தமிழர் கட்சி சீமானின் வழிநின்று பெரியாரை அரசியல் நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகின்றார். ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அறவழி  கூடத் தெரியாதவர் போல் நேர்காணலில் பதிலளிக்கும் சட்டத்தரணி வைஷ்ணவி பெயரளவில் தமிழ் தேசியம் பற்றி கதைத்த போதும் சாதிய ஒடுக்குமுறைக்கு பெண் அடிமைத்தனத்தை மேற்கொள்பவர்களோடு தன்னை இனம்காட்டி வருகின்றார்.

சட்டத்தரணி வைஷ்ணவிக்கு ஒருபடி மேலே சென்று சீமானுக்கு கற்றுக்கொடுத்ததே தான்தான் என்று கருக்கலைப்பைப் பற்றியல்ல, புளகாங்கிதம் அடைபவர் சட்டத்தரணி உமாகரன்

பெரியாரைப் பற்றி 2009க்கு முன்பு ஈழத்தமிழர்கள் பேசியிருக்கிறார்களா என்று படுமுட்டாள்தனமாகக் கேள்விகட்கும் அளவுக்குதான் யாழ் பல்கலைக்கழகத்தில் கற்ற சட்டத்தரணி வைஷ்ணவியின் அறிவு இருக்கின்றது. இந்தப் பட்டம்பெறாத சாதராணர்கள் பலருக்கே மிகத் தெரிந்த விடயங்கள் கூட சட்டத்தரணி வைஷ்ணவிக்கு விளங்கவில்லை. 1989 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியான கிட்டு ஆரம்பக் கல்வியைத் தாண்டாதவர், ஆனால் சட்டத்தரணி வைஷ்ணவி சட்டத்தரணி உமாகரன் போல் கவர்ச்சிக்காக தமிழ் தேசியத்தை போர்த்திக்கொள்ளாதவர், பெரியாரைப் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடுவதைக் கேட்கலாம்:

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கோரியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ரகுராமிற்கு ஆதரவாகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கு எதிராகவும் ஐபிசி யில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தன்னுடைய சொந்த நலன்களுக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களை போதைப்பொருள் பாவனையாளர்கள் என கலைப்பீடாதிபதி ரகுராம் சித்தரித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் பாணியில் ஒரு ஒலிப்பதிவையும் வெளியிட்டு இருந்தார். இவ்வாறு ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் இல்லாமல் ஒடுக்குபவர்களின் பக்கம் நிற்கும் இந்த வலதுசாரித் தமிழ் தேசியவாதிகள் தமிழ் தேசியத்தின் புற்றுநோயாகப் பரவி வருகின்றனர்.

ஒரு பெண்ணை ஏழு தடவை கருக்கலைப்புச் செய்ய வைத்து ஏமாற்றிய நாம் தமிழர் சிமானின் கருத்துக்களை தலையில் தூக்கிகொண்டாடுகின்றார் சட்டத்தரணி வைஷ்ணவி. மாறாக யாழ் தாவடியில் சீமானுக்கும் அம்பேக்காருக்கும் சிலை எழுப்பப் போவதாகச் சபதம் போட்டுள்ளார் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்.

வைஷ்ணவி தமிழர்கள் பற்றியும், தமிழர்களின் விடுதலை போராட்டம் பற்றியும் 2010இற்குப் பின் சீமானிடம் மேய்ந்துவிட்டு பன்றியோடு சேர்ந்த கன்றும் பவ்வி உண்ணும் என்பது போல் கருத்துக்களை கக்கி வருகின்றார். மிக மோசமான இனவாதத்தை கக்குகின்றார். பெரியாரை தெலுங்கர் என்கின்றார். பெரியார் தமிழர்களைக் காடையர் என்று கூறிவிட்டார் என்று கதறுகின்றார்.

பிரானிஸில் சுஜூகூல் என்பவரை சிலர் தாக்கியதும் அதனை புலம்பெயர் ஈழத்தமிழ் காடையர்கள் தாக்கினார்கள் என்று எழுதுகின்றோம். குனடா தெருத்திருவிழாவை சிலர் குழப்பிய போது கனடிய ஈழத்தமிழ் காடையர்கள் தெருத் திருவிழாவை குழப்பியதாக எழுதுகின்றோம். 1983ல் நடந்த இனக்கலவரத்தை சிங்கள காடையர்கள் தமிழர்களைத் தாக்கினர் என்று எழுதுகின்றோம்.

அதே போல் பெரியார் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள காடைத்தனங்களைக் கண்டு பொங்கியெழுந்தை, பாலியல் லஞ்சம் கேட்கும் கலாநிதிகளுக்கு வக்காளத்து வாங்கும் வைஷ்ணவி கொதிப்பது ஆச்சரியமல்ல.

சட்டத்தரணி வைஷ்ணவியினதும் அவர் போன்ற குறையறிவுடைய சீமானின் கருத்துக்களால் சீக்குப் பிடித்தவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கேர்ணல் கிட்டு மிகத் தெளிவான பதிலை அளித்துள்ளார். கேர்ணல் கிட்டு தமிழீழ விடுதலை இயக்கம் உட்பட ஏனைய இயக்கங்களை அழித்ததில் முன்நின்றவர். ஆனால் பிரித்தானியாவிற்கு வந்த பின் அரசியல் ரீதியாக தன்னை வளர்த்துக் கொண்டதுடன் ஏனைய அமைப்புக்களையும் சந்தித்து உரையாடி நல்லுறவை ஏற்படுத்த முற்பட்டவர். இந்த மாற்றங்களை அவர் தமிழ் நெற்றுக்கு வழங்கிய நேர்காணலிலும் காணலாம்.

உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் – நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் !

உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் – நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் !
 உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான வசதிகள் நீதிமன்றத்துக்கு வழங்கப்படுமென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார நேற்றையதினம் பாராளுமன்ற அமர்வின் போது தெரிவித்தார்.
அங்கு நீதியமைச்சர் ஹர்ஷண மேலும் உரையாற்றிய போது,
சட்டத்தின் ஆட்சிக்கு அமைய நாட்டை நிர்வகிப்பது எமது பிரதான இலக்காகும். சட்டத்தின் ஆட்சி மலினப்படுத்தப்படுகின்ற நிலையில் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. ஆகவே நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகும்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்ட நீதிமன்ற கட்டட அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்படும். நீதிதுறை சுயாதீனமான முறையில் செயற்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியும் என்றார்.

ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை மீட்டெடுத்தார் – முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன

ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை மீட்டெடுத்தார் – முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கம் கடுமையான சூழ்நிலையில் பல புதிய சட்டங்களை இயற்றியதால் தான் நாடு இன்று பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது என்று முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடுமையான சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவால் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டதால் தான் நாடு இன்று பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 90 சட்ட வரைபுகள் குறித்த குழுக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள. ஆகவே அவற்றை சட்டமாக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
நீதிமன்ற கட்டமைப்பு முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பபட வேண்டும். இதற்கு குறைந்தது 3.2 பில்லியன் ரூபா செலவாகும் என்ற மதிப்பிடப்பட்டது. தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அது சாத்தியமற்றது என்பதை அறிவோம்.இருப்பினும் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாட்டை கட்டம் கட்டமாக முன்னெடுக்க வேண்டும். என தெரிவித்தார்.