2025

2025

போலி ஆவணங்களை வைத்து தையிட்டு விகாரை காணியை உரிமை கோருகின்றனர் !

போலி ஆவணங்களை வைத்து தையிட்டு விகாரை காணியை உரிமை கோருகின்றனர் !

 

யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதியில் வசிப்பவர்கள் போலியான ஆவணங்களை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சானக சம்பத் மதுகொட நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த எம்.பி சானக, வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் பெளத்த விகாரை மற்றும் தொல்பொருள் சின்னங்களை பிரச்சினைக்குரியதாக்கி அதனூடாக அரசியல் செய்கிறார்கள். வடக்கு மாகாணத்தில் 600 இடங்கள் தொல்பொருள் மையங்களாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த இடங்களை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரித்து, தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இதுவரையில் உறுதியான தீர்வு முன்வைக்கப்படவில்லை. இந்த விகாரை 1956 ஆம் ஆண்டு நகர திட்ட வரைபடத்தில் திஸ்ஸ விகாரை உள்ளடக்கப்பட்டுள்ளது. திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் விசேட குழுவை நியமிக்க வேண்டும். இந்த விகாரையை அண்மித்த பகுதிகளிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களை அகற்ற வேண்டும். ஆகவே இந்த பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும்” என்றார்.

இதேவேளை, தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் விகாரையை அகற்ற வேண்டும் என ஒட்டுமொத்தமாக கேட்டால் , அது நிச்சயமாக அகற்றப்படவே வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன் அண்மையில் தெரிவித்திருந்தமையம் குறிப்பிடத்தக்கது.

 

ரமலான் நோன்புக் காலத்தில் இஸ்ரேல் மீண்டும் ஹாசாவில் வான்வெளி தாக்குதல் !

ரமலான் நோன்புக் காலத்தில் இஸ்ரேல் மீண்டும் ஹாசாவில் வான்வெளி தாக்குதல் !

 

இஸ்ரேல் ஹமாஸ் போராளிகளுக்கிடையிலான முதல் கட்ட போர்நிறுத்த ஒப்பந்த காலப்பகுதி முடிவடைந்து விட்டது. இரண்டாம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இழுபறியில் உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் மேற்கொண்ட வான்வெளி கொடூர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் இத்தாக்குதலில் ஹமாஸ் தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் இம்மாதத்தில் இஸ்ரேல் வேண்டுமென்றே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

மேலும் கடந்த இரண்டு வாரங்களாக ஹாசா பகுதிக்குள் உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல மனித உரிமைகள் அமைப்புக்கள் இத்தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றன. இஸ்ரேலை உடனடியாக போர் நிறுத்தத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்கள் கைது !

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்கள் கைது !

கெஸ்பேவ உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெஸ்பேவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் நிவுன்கம மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட்டலந்த படுகொலையோடு தமிழர் படுகொலையும் விசாரிக்க வேண்டும் !

பட்டலந்த படுகொலையோடு தமிழர் படுகொலையும் விசாரிக்க வேண்டும் !

படலந்த வதைமுகாமிற்கு மூன்று மாதங்களில் வெளிச்சம் பாய்ச்சிய அனுர தரப்பு தமிழர் மீது நடைபெற்ற படுகொலைகளை விசாரிக்குமா… ? ஜி.ஸ்ரீநேசன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் பட்டலந்த வதைமுகாம் பற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புகள் 1956 இல் இருந்து ஆரம்பித்து 2009 வரை நடைபெற்றன. தற்போது தமிழர் பண்பாட்டு அழிப்புகள் நடைபெறுகின்றன. வடக்கு, கிழக்கில் குறிப்பாக 1978 தொடக்கம் 2009 இற்கு இடைப்பட்ட பயங்கரவாத தடைச்சட்ட, அவசர காலச் சட்ட ஆட்சியில் வடக்கு கிழக்கில் பட்டலந்த வதைமுகாமையும் மிஞ்சிய பல வதை முகாம்கள் மற்றும் கொலை முகாம்கள் காணப்பட்டன அவற்றில் தமிழர்கள் வகை தொகையின்றி சித்திரவதைகள் மற்றும் பாலியல்வதைகள் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவற்றை ஆராய்ந்து நீதி வழங்கும் தகுதி கடந்தகால அரசாங்கங்களுக்கு இருக்கவில்லை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஜேவிபி சகாக்கள் கொல்லப்பட்டதால் பட்டலந்த வதைகள் கொலைகளை விசாரிக்க முன்வந்துள்ளன.

ஆனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட வதைகள், கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டதை விசாரணை நடாத்தி நீதி வழங்கும் சம தருமம் தேசிய மக்கள் சக்திக்கு இருக்குமா? என்ற ஐயம் தமிழர்களுக்கு உண்டு. பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சிங்களப் படையினர் என்பதாலும் இந்த சந்தேகம் தமிழர்களுக்கு கனதியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

29 சதவீத பாடசாலை மாணவர்கள் பாடசாலை இடைவிலகல் !

29 சதவீத பாடசாலை மாணவர்கள் பாடசாலை இடைவிலகல் !

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி தலைமையில் சர்வதேச பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 நடைபெற்ற இந்த ஆய்வுகளின் படி, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் 17.7 வீதமானோர் ஆரோக்கியமற்ற பானங்களை அருந்துவதுடன் இவர்களில் பெரும்பாலானோர் ஆண் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆண், பெண் மற்றும் வயதுக்கமைய ஒரு சிகரெட் அல்லது இரண்டு சிகரெட்டுக்களை பயன்படுத்திய அல்லது பயன்படுத்த முயற்சித்த மாணவர்களின் எண்ணிக்கை 12.8 வீதமாக பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் விகிதம் கணிசமானளவு அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது. இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் !

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டு இந்த மாதத்திற்குள் இறுதித் தீர்வு எட்டப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் அல்லது ஒரு மாதத்தில் தாக்குதலுக்கான உண்மையான நீதியை நிலைநாட்ட முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும் நல்லாட்சி அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்கத் தவறிவிட்டது. எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, அது எல்லாவற்றையும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது . நாம் பாதியிலேயே விசாரித்துவிட்டு வழக்குப் பதிவு செய்ய முடியாது. நாம் முழுமையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முறையாக நடத்தப்படும், ஆதாரங்கள் தொகுக்கப்படும், மேலும் அது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதியுடன் 6ஆவது ஆண்டு நிறைவு தினத்துக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் நாம் வீதியில் இறங்குவதற்கு பின்னிற்க மாட்டோம்” என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

சட்டவிரோத மீன்பிடியில் உள்நாட்டு மீனவர்கள் – அமைச்சர் சந்திரசேகர் !

சட்டவிரோத மீன்பிடியில் உள்நாட்டு மீனவர்கள் – அமைச்சர் சந்திரசேகர் !

 

சட்டவிரோத மீன்பிடி தடுத்து நிறுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் எமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதுபோல, உள்நாட்டிலுள்ள சிலரும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிக்கின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழிலை நவீனமயமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆழ்கடல் மீன்பிடிக்காக கப்பல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு வெளிநாடுகள் முன்வந்துள்ளன. அதனூடாக ஆழ்கடல் மீன்பிடி ஊக்குவிக்கப்படும் என்றார்.

சட்டத்தின் ஆட்சி மூலம் இலங்கையில் ஒரு நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியும் – ஜனாதிபதி அனுர !

சட்டத்தின் ஆட்சி மூலம் இலங்கையில் ஒரு நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியும் – ஜனாதிபதி அனுர !

 

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல் மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் .

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என குறிப்பிட்ட ஜனாதிபதி, அதனை நிலைநாட்டாமல் இலங்கையில் ஒரு நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியாது என்றார் .

7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! திருப்பி அனுப்பாமல் அபிவிருத்தி நிதியை பயன்படுத்தவும் !

7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! திருப்பி அனுப்பாமல் அபிவிருத்தி நிதியை பயன்படுத்தவும் !

 

வடக்கிற்கான அபிவிருத்தி நிதியை வினைத்திறனாக பயன்படுத்துங்கள் என அரசாங்க அதிகாரிகளிடம் ஆளுநரும், கடற்தொழில் அமைச்சரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்திற்கு 7,328 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த நிதி பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் அதிகூடிய பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். மக்களின் மீள்குடியமர்வு, விவசாயம், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இடையூறாக இந்த இரு திணைக்களங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்திரசேகரன், மாகாணசபைக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துத் திணைக்களங்களும் ஒருங்கிணைந்து இதைச் செலவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் வருகைதரும் நிலையில் அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை அதிகாரிகள் வழங்கவேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

எம்.பி அரச்சுனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் நலிந்த ! பம்முகிறார் அர்ச்சுனா !

எம்.பி அரச்சுனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் நலிந்த ! பம்முகிறார் அர்ச்சுனா !

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சபாநாயகர் சில நடவடிக்கை எடுப்பார் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மனித உரிமைகள் வழக்கறிஞர் ஸ்வஸ்திகா அருள்லிங்கத்திற்கு எதிராக பாலியல் ரீதியான இழிவான கருத்தை வெளியிட்டதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என கூறியுள்ளார்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தான் அப்படி கூறவில்லை என மறுத்து வருகின்றார். பெண்ணியவாதியும் மனித உரிமைவாதியுமான சட்டத்தரணி சுவாஸ்திகா அருணலிங்கத்தை அரசியல் விபச்சாரி, பல ஆண்களோடு திரிகிறார், விபச்சாரி என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிந்த அவர் தற்போது பம்முகின்றார். எம்பி அர்ச்சுனா சட்டத்தரணி ஸ்வதிகாவை “அரசியல் விபச்சாரி” என பாலியல் ரீதியாக பாராளுமன்றத்தில் சொல்லவில்லை என்று மழுப்பல் கதை சொல்கின்றார். தனது முகநூலில் வசை பாடியதை நாசுக்காக மறைக்கின்றார்.

கடந்த பாராளுமன்ற அமர்வில் வட்டக்கச்சியை சேர்ந்த இளம்பெண் “ சாளினியையே” எம்பி அர்ச்சனா விபச்சாரம் செய்கிறார் என ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விடயம் தொடர்பில் எம்பி அர்ச்சுனா மீது சபாநாயகர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாளினியின் பெயர் ஹன்சாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனப் பெண்ணிய வாதிகள் கோரி வருகின்றனர்.

பா உ அர்ச்சுனாவின் இழிவான நடத்தைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட முத்த தமிழ் பத்திரிகையாளரான முன்னாள் தினக்குரல் ஆசிரியர் வீரகத்த தனபாலசிங்கம் லண்டன் ஊடகவியலாளர் எம்என்எம் அனஸ்க்கு வழங்கிய நேர்காணலில் பா உ அர்ச்சுனாவை கண்டித்துள்ளதுடன் இவர் உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் எதிர்வு கூறியுள்ளார்.