க. பொ. த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்ப மானதுடன் ஆறாயிரம் பேர் இதற்கென ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 25 ஆம் திகதி வரை இவ்வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் தொடருமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.
நாடளாவிய 15 நகரங்களிலுள்ள 20 நிலையங்களில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் இதற் கென ஆறாயிரம் பேரை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், வினாத்தாள் திருத்தும் முதலாம் கட்ட நடவடிக்கைகள் ஆகஸ்ட் 30 ஆம் ஆரம்பமாகி நேற்று முன்தினம் 13 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் க. பொ. த. உயர்தரப் பரீட்சை வினாத் தாள் திருத்தும் நடவடிக்கைகள் இரண்டு மாதங்கள் தாமதமடைந்தன. இதற்கு சில ஆசிரிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகளே காரணம் எனத் தெரிவித்த அவர், இம்முறை சகல ஆசிரியர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனால் இம்முறை பரீட்சை முடிவுகளை குறிப்பிட்ட தினத்தில் வெளியிட முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.