அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பெல்ஜியம் வீராங்கனை லிஸ்டர்ஸ் சம்பியன் பட்டம் பெற்றார். அதன் விபரம் வருமாறு:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்றுக் காலை நடந்தது. இதில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கிம்கிலிஸ்டர்ஸ் (பெல்ஜியம்), 9ம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) மோதினார்கள்.
கிலிஸ்டர்சின் தாக்குதல் ஆட்டத்துக்கு கரோலினால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. கிலிஸ்டர்ஸ் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று சம்பியன் பட்டம் பெற்றார்.
அவர் கைப்பற்றிய 2வது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு 2005 ஆம் ஆண்டு அமெரிக்க பகிரங்க பட்டத்தை வென்று இருந்தார்.