25

25

சம்பியன் கிண்ணம் – நான்காவது ஆட்டம். England won by 6 wickets

120909sanath-jayasuriya.jpgஐ.சி.சி சம்பியன் கிண்ணத்துக்கான பி பிரிவில் இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி பகல் இரவு ஆட்டமாக தென்னாபிரிக்க நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இப் போட்டியின் ஸ்கோர் விபரங்களையும் உடனுக்குடன் தொகுத்துத் தர தேசம் நெட் விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளது

Friday, September 25, 2009
Played at New Wanderers Stadium, Johannesburg
Start time 2:30 pm, 12:30 GMT {Srilanka time 6.00 pm)

England team
AJ Strauss*, JL Denly, OA Shah, PD Collingwood, EJG Morgan, MJ Prior†, LJ Wright, SCJ Broad, GP Swann, G Onions, JM Anderson 

Sri Lanka team
TM Dilshan, ST Jayasuriya, KC Sangakkara*†, DPMD Jayawardene, SHT Kandamby, TT Samaraweera, AD Mathews, KMDN Kulasekara, M Muralitharan, SL Malinga, BAW Mendis 

Umpires Aleem Dar (Pakistan) and BF Bowden (New Zealand)
TV umpire AL Hill (New Zealand)
Match referee J Srinath (India)
Reserve umpire SJA Taufel (Australia)

Sri Lanka innings (50 overs maximum)

 Sri Lanka innings (50 overs maximum)
 TM Dilshan  c Morgan b Anderson  2
 ST Jayasuriya  c †Prior b Onions  0
 KC Sangakkara*†  c Strauss b Onions  1 
 DPMD Jayawardene  lbw b Anderson  9 
 TT Samaraweera c Collingwood b Broad 30
 SHT Kandamby  run out (†Prior/Wright)  53 
 AD Mathews  c †Prior b Wright  52 
 KMDN Kulasekara  not out  17  
 M Muralitharan  b Broad  18
 SL Malinga  b Broad  0 
 BAW Mendis  c Strauss b Anderson  5
 47.3 caught Strauss 212/10
 
 Extras (lb 4, w 21) 25     
      
 Total (10 wickets; 47.3 overs) 212 (4.46 runs per over)
Fall of wickets1-7 (Jayasuriya, 1.5 ov), 2-7 (Dilshan, 2.3 ov), 3-17 (Jayawardene, 4.6 ov), 4-17 (Sangakkara, 5.2 ov), 5-81 (Samaraweera, 19.5 ov), 6-163 (Kandamby, 37.4 ov), 7-176 (Mathews, 40.5 ov), 8-197 (Muralitharan, 43.2 ov), 9-197 (Malinga, 43.3 ov), 10-212 (Mendis, 47.3 ov) 
        
 Bowling  
 JM Anderson 9.3 2 20 3
 G Onions 10 0 58 2
 SCJ Broad 10 0 49 3
 LJ Wright 6 0 34 1 
 PD Collingwood 8 0 24 0
 GP Swann 4 0 23 0 

England innings (target: 213 runs from 50 overs)
 AJ Strauss*  c Kandamby b Kulasekara  9
 JL Denly  lbw b Kulasekara  5 
 OA Shah  c †Sangakkara b Muralitharan  44 
 PD Collingwood  b Malinga  46 
 EJG Morgan  not out  62  
 MJ Prior†  not out  28
 Extras (lb 7, w 11, nb 1) 19     
      
 Total (4 wickets; 45 overs) 213 (4.73 runs per over)
Did not bat LJ Wright, SCJ Broad, GP Swann, G Onions, JM Anderson 
Fall of wickets1-9 (Denly, 3.5 ov), 2-19 (Strauss, 7.3 ov), 3-82 (Collingwood, 19.5 ov), 4-158 (Shah, 34.5 ov) 
        
 Bowling O M R W Econ  
 SL Malinga 9 0 43 1
 KMDN Kulasekara 9 1 42 2
 AD Mathews 8 2 26 0  
 BAW Mendis 9 0 35 0  
 M Muralitharan 10 0 60 1
 
Match details
Player of the match PD Collingwood (England)

ஆசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன் பட்டத்தை சீனா கைப்பற்றியது.

1509fiba-news203a.jpgசென்னை யில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சீனா 91-71 என நடப்புச் சாம்பியன் கொரியாவை வீழ்த்தியது. இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடந்த 3 முறையும் சீனாவை கொரியா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்த சீனா, கொரியா,  ஜப்பான் ஆகியவை செக். குடியரசில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இப்போட்டியில் இந்தியா 6-வது இடம் பிடித்ததுடன் அந்த அணியின்; கீது அன்னா ஜோஸ் 132 புள்ளிகள் குவித்து,  அதிக புள்ளிகள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.

அவருக்கு அடுத்தபடியாக லெபனான் வீராங்கனைகள் சான்டெலே டெனிஸ் ஆன்டர்சன் 118 புள்ளிகளும்,  சடா நாசர் 101 புள்ளிகளும் குவித்துள்ளனர். இறுதி ஆட்டத்தின்போது,  அரங்கில் குழுமியிருந்த சீன,  திபெத் ஆதரவாளர்கள் எதிரெதிர் கோஷங்களை எழுப்பினர். இதனால்,  இரு குழுவினரிடையே 2 முறை கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு சமாதானப்படுத்தி வேறு இடங்களில் இரு குழுவினரையும் உட்கார வைத்தனர்

இன்றும் 10 குடும்பங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பு

101009displacedidps.gifவவுனியா இடைத் தங்கல் முகாமிலிருந்து அம்பறை மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு அக்கறைப்பற்று இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களில் மேலும் 10 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் இன்று அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமையும் நேற்று வியாழக்கிழமையும் பலர் இவ்வாறு குடியமர்த்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

பேலியகொடையில் லொறி-தனியார் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : 25 பேர் காயம்

250909accident.jpgஇன்று காலை 6.45 மணியளவில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த லொறி ஒன்றும் கொழும்பு- மூதூர் இடையிலான தனியார் பஸ் ஒன்றும் மோதி பேலியகொடை நுகத்தன்ன சந்தியில் விபத்துக்குள்ளாயின.  இதனிடையே மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்தில் சிக்கிக் கொண்டது.

விபத்து தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. பேலியகொட பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் 25 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பஸ் சாரதியும் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்வைன்: ஒரே நாளில் 13 பேர் பலி- இந்தியாவில் 277 ஆக உயர்வு

16-swine-flu.jpgபன்றி காய்ச்சலுக்கு நேற்று மட்டும் ஒரே நாளில் 13 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 5, மகாராஷ்டிராவில் 4, கர்நாடகாவில் 3, உத்தரகண்டில் 1 பேர் பலியாகியுள்ளனர். இந்தியா முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 277 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று மட்டும் இந்த நோய் சுமார் 283 பேருக்கு பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 113 பேருக்கு தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களில் 65 பேர் பள்ளி மாணவர்கள் என்பதலா டெல்லியில் பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

அறிக்கையில் காலதாமதம் – ஆளும்தரப்பும் எதிர்தரப்பும் சபையில் பெரும் சர்ச்சை

26parliament.jpgஎதிர்க் கட்சியினர் சபையில் சமர்ப்பிக்கவிருந்த பத்து நிமிட அறிக்கையொன்றுக்கு ஆளுந்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 20 நிமிடங்கள் சர்ச்சை ஏற்பட்டது. குறித்த அறிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு காலம் தாமதித்துச் சமர்ப்பித்ததால், அதனை சபையில் முன்வைக்க அனுமதிக்க முடியாதென ஆளுந்தரப்பின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேரா, 20 நிமிடங்கள் தாமதமாகி குறித்த அறிக்கையைப் பல்வேறு கேள்வித் தொடர்களைக் கொண்டதாகக் கையளித்திருப்பதால் அதனை இன்று (24) (நேற்று) சமர்ப்பிக்க முடியாதென அமைச்சர் குணவர்தன மறுப்பு தெரிவித்தார்.

அமைச்சரின் கூற்றை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார, ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி.  நாளைய தினம் (இன்று) அறிக்கையைச் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்தார். இதனால் ஆளுந் தரப்பினருக்கும் எதிர்க் கட்சியினருக்குமிடையில் சுமார் 20 நிமிடம் சர்ச்சை உருவானது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இல்லை கேள்விக் கணைகளைத் தொடுக்கவில்லை. ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்டுள்ளோம்.  ‘ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 400 கோடி ரூபாய் இலாபத்தில் இயங்கிய நிலையிலிருந்து, 900 கோடி நட்டமடையும் அளவுக்குச் சென்றது ஏன்? என்றுதான் கேட்கிறோம்” என்றார்.

இதன்போது குறுக்கீட செய்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்தடிச்சாட்டில், அந்த அறிக்கையில் உள்ள கேள்வியைக் கூறிவிட்டார்.  அவர் சபையைத் தவறாக வழிநடத்துகிறார்.  இதற்கு இடமளிக்க முடியாது” என்றார்.

இவ்வாறு மாறிமாறி ஒழுங்குப் பிரச்சினைகளும், தர்க்கங்களும் சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றன. ஈற்றில், எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்குப் பதில் பெற்றுத்தர முடியுமென்று தெரிவித்த அமைச்சர் தினேஷ், இவ்வாறு முறைகேடாக ஜோசப் மைக்கல் பெரேரா செயற்பட்டால் எதிர்க்கட்சித் தலைவரின் சார்பில் கேள்வி கேட்க அவரை அனுமதிப்பது தொடர்பாக மீள் பரிசீலணை செய்யவேண்டி வருமென்றும் எச்சரித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை வோல்டர் கெலின் மன்னார் விஜயம்

210909walter-kalin.jpgஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் சிறப்பு பிரதிநிதியாக இலங்கை வந்துள்ள ஐநா அகதிகள் நலன்களுக்கான உயரதிகாரி வோல்டர் கெலின் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் பகுதிக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்கிறார். அங்கு அவர் மக்கள் மீள்குடியேறியுள்ள இடங்களைப் பார்வையிடுவார்.

அதன் பிறகு வவுனியாவிலுள்ள மெனிக் பார்ம் இடைத்தங்கல் முகாமுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார்.  மன்னார் மற்றும் வவுனியாவுக்கான தனது கள விஜயத்தை முடித்துக் கொண்டு எதிர்வரும் சனிக்கிழமையன்று கொழும்பு திரும்பும் அவர், மீண்டும் அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அகதிகளுக்கான அலுவலக அதிகாரியான எலிசபெத் டான் தெரிவித்தார்

உள்ளுராட்சி மன்ற சட்டத்தில் திருத்தம்

janakabandarathennakoon.jpgமாநகர சபை,  நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவை தொடர்பான சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் சமர்ப்பித்திருந்தார்.

மக்களுக்கு மேலும் நன்மை பயக்கக்கூடிய வகையில் மேலே குறிப்பிடப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை அதிகாரமிக்கதாக மாற்றியமைக்க இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

பெயரளவில் இருக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய சட்டத்திருத்தம் – பாராளுமன்றில் நேற்று நிறைவேற்றம்

viswa-999.jpgசெயல்பாட்டு அரசியலில் ஈடுபடாமல் பெயரளவில் இருக்கும் கட்சிகளின் பதிவை ரத்துச் செய்யும் வகையில் பாராளுமன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் நேற்று (24) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இந்தச் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையில், அரசியல் கட்சிகளின் கட்டமைப்பை ஜனநாயகப்படுத் துவதற்கு ஏதுவாக இந்தச் சட்டமூலம் வழிவகுக்குமெனத் தெரிவித்தார்.

விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் கட்சிகள் பெருகிவிட்டன. சுமார் 60 கட்சிகள் இருந்தும் 15 மட்டும்தான் செயற்படுகின்றன.

அரசியல் கட்சியொன்று நான்கு வருடங்கள் அரசியல் செயற்பாடுகளில் பங்குபற்றியிருப்பதுடன், கட்சியின் யாப்பு, நிர்வாகிகள், கணக்காய்வு அறிக்கை, விளக்கம் என்பவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தொடர்ச்சியாக இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களிலாவது போட்டியிட்டிருக்க வேண்டும். என்று தெரிவித்த அமைச்சர் வர்ணபால.

“அரசியல் கட்சிகளை பன்முகப்படுத்துவதற்குப் போதுமான ஏற்பாடுகள் தற்போதைய சட்டத்தில் இல்லை. கட்சிகளின் கூட்டமைப்பை ஜனநாயகமயப்படுத்த இந்த 1981ம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம் போதுமானதாக இல்லை. கட்சிகளின் அமைப்பை மேம்படுத்த, குறைபாடுகளை நீக்க வேண்டும்.

இது தொடர்பாக ஆராயவென 2006ம் ஆண்டு நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.  32 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழு பொருத்தமான திருத்தங்களைச் சமர்ப்பித்துள்ளது” என்றதுடன், “சில அரசியல் கட்சிகள் இனவாத ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் செயற்படுகின்றன. சில பிராந்திய மட்டத்திலேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான கட்சிகளை பன்முகப்படுத்தி ஒற்றுமைப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்த அமைச்சர், விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் கட்சிகள் தாக்கங்களை ஏற்படுத்தி வந்தன. ஒரு கட்சி ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தியாவில் ஒரு கட்சி ஆதிக்கம் இருக்கின்றது.  இந்திய அரசியலமைப்பு முறையில் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்துகின்றது. எமது நாட்டில் கட்சிப் போட்டி மிகவும் அதிகமாக உள்ளது. இது புதுவிதமான அரசியல் பரிமாணங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள கட்சிகளில், எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத கட்சிகள் கூட உள்ளன. இவை ஜனநாயக முறைக்கு எந்த வகையிலும் உதவுவதில்லை. அரசியல் முறைமைக்கு ஸ்திரமற்ற நிலையையே இவை ஏற்படுத்துகின்றன.” என்றும் கூறினார்.

பணத்திற்காகவும் அரசியலுக்காகவும் தாய்நாட்டை காட்டிக்கொடுக்க வேண்டாம். கைகள் விலங்குகளை ஏற்க நேர்ந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்கத் தயார் – ஜனாதிபதி

slpr080909.jpgதாய்நாட் டுக்கும் நாட்டு மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுப்பதற்காக கைகள் விலங்குகளை ஏற்க நேர்ந்தால் அதனை தாய்நாட்டின் சார்பில் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பணத்துக்காகவும் அரசியல் இலாபங்களுக் காகவும் தாய்நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண் டாமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

ஹக்மன நகரில் 554 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மக்கள்மயப்படுத்தும் நிகழ்வும், மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்ளை ஆதரிக்கும் மக்கள் பேரணிக் கூட்டமும் நேற்று ஹக்மன நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

30 வருட காலமாக எமது நாட்டைப் பீடித்திருந்த பயங்கரவாதத்தை எம்மால் முடிவுக்குக் கொண்டுவர முடிந்துள்ளது. பயங்கரவாதம் எமது முக்கிய தலைவர்களை மட்டுமன்றி நாட்டின் அறிஞர்கள், கல்விமான்கள் மற்றும் அப்பாவிப் பொதுமக்களையும் படுகொலை செய்தமையைக் குறிப்பிட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் எமது படையினர் 20,000 பேர் பலியானதுடன், பல்லாயிரக்கணக்கானோர் ஊனமுற்றுள்ளனர்.

நாட்டில் மூன்றில் ஒரு பகுதி உத்தியோகபூர்வமாக எழுதிக் கொடுக்கப்பட்டதுடன், அவ்வொப்பந்தம் மூலம் எமது முக்கிய அமைச்சர்களும் புலனாய்வுப் பிரிவினரும் படுகொலை செய்யப்பட்டனர். எமது ஆட்சிக் காலத்திலும் முக்கியமான சிரேஷ்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, த. மு. தசநாயக்க போன்றோர் கொல்லப்பட்டனர். நாட்டைத் துண்டாட நினைத்த பயங்கரவாதம் ஒழிக்க ப்பட்டுவிட்டது. இதனால் பாதிக்கப்பட்டு எம்மிடம் தஞ்ச மடைந்த மூன்று இலட்சம் மக்களுக்கும் இருப்பிடம், உணவு என சகல வசதிகளையும் நாம் பெற்றுக்கொடுத்து வருகிறோம்.

இவர்களுள் பிரபாகரனின் பெற்றோர், தமிழ்ச்செல்வனின் மனைவி, குடும்பத்தினரும் இருந்தனர். அத்துடன் பல புலி உறுப்பினர்களும் இருந்தனர். எனினும் எமது படையினர் அவர்களைக் கொன்றுவிடவில்லை. மாறாக பாதுகாத்தனர். மகன் செய்த தவறுக்காக தகப்பனைப் பழிவாங்க படையினர் முயலவில்லை.

ஊவா மாகாண தேர்தலில் வெற்றிபெற்று நான்கு மாதமே முடிவுற்ற நிலையில் தாய்நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகளில் சில சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. தாய்நாட்டுக்கு எதிராகவும் தாய் நாட்டைப் பாதுகாத்த படையினருக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சர்வதேசத்தின் முன்னிலையில் எம் தாய்நாட்டின் கீர்த்தியை களங்கப்படுத்த இச்சக்திகள் முயல்கின்றன. எமது படையினரை இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்த சாட்சியங்களைத் தேடுவதில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். சில பத்திரிகைகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அரசியலில் வங்குரோத்தடைந்த தலைவர்கள் இதற்கான அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

அரசுக்கு எதிர்க்கட்சியே தவிர நாட்டுக்கு எதிரான கட்சியாக இருந்து தாய் நாட்டுக்குத் துரோகம் செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது. இத்தகையோரிடம் பணத்திற்கும் அரசியல் இலாபத்திற்கும் தாய்நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். நாட்டு மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்துள்ள போதிலும் ஜனாதிபதியாகிய எனக்கும், படைத் தளபதிகள், பாதுகாப்புச் செயலாளர் உட்பட உயர் படை அதிகாரிகளுக்கும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை சகலரும் உணர வேண்டும். தாய்நாட்டை மீட்டு ஐக்கியப்படுத்தியமைக்கான பிரதி பலனாக நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றோம்.

யுத்தம் முடிந்து விட்டது. இனி யுத்தத்தைக் காரணம் காட்டி அபிவிருத்திகளை முன்னெடுக்காமல் இருக்க முடியாது. சர்வதேச நாணய நிதியத்தில் நாம் கடன் பெற்றுள்ளோம். இது புதிதான ஒன்றல்ல. நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன. துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என பல்வேறு பாரிய திட்டங்கள் நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகின்றன.

சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் பரிசீலிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில பத்திரிகைகள் சமூகத்தை சீர்குலைப்பதிலும் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதிலும் செயற்படுகின்றன.

நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லையென எவரும் கூற முடியாது. மற்றெல்லா மாகாணங்களையும் விட தென் மாகாண மக்களுக்கு பெரும் பங்குள்ளது. இந்நாட்டை ஒரே கொடியின் கீழ் கொண்டுவருவதும், உங்கள் பிள்ளைகளை எதிர்காலத் தலைவர்களாக உருவாக்குவதும் எமது நோக்கம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

தெற்கில் அமைதியான தேர்தல் நடைபெற வேண்டும். அதற்குச் சகலரதும் பங்களிப்பு அவசியம். வெற்றிலைக்கு வாக்களிப்பதுடன், உங்கள் மூன்று விருப்பு வாக்குகளையும் தவறாது நீங்கள் அளிப்பது அவசியம். தாய்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு உங்களது பூரண ஆதரவை வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.