மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவை தொடர்பான சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் சமர்ப்பித்திருந்தார்.
மக்களுக்கு மேலும் நன்மை பயக்கக்கூடிய வகையில் மேலே குறிப்பிடப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை அதிகாரமிக்கதாக மாற்றியமைக்க இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.