இன்று காலை 6.45 மணியளவில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த லொறி ஒன்றும் கொழும்பு- மூதூர் இடையிலான தனியார் பஸ் ஒன்றும் மோதி பேலியகொடை நுகத்தன்ன சந்தியில் விபத்துக்குள்ளாயின. இதனிடையே மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்தில் சிக்கிக் கொண்டது.
விபத்து தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. பேலியகொட பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் 25 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பஸ் சாரதியும் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.