பன்றி காய்ச்சலுக்கு நேற்று மட்டும் ஒரே நாளில் 13 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 5, மகாராஷ்டிராவில் 4, கர்நாடகாவில் 3, உத்தரகண்டில் 1 பேர் பலியாகியுள்ளனர். இந்தியா முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 277 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று மட்டும் இந்த நோய் சுமார் 283 பேருக்கு பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 113 பேருக்கு தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களில் 65 பேர் பள்ளி மாணவர்கள் என்பதலா டெல்லியில் பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.