29

29

அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

210909jail.jpgவிடுதலை செய்யப்பட வேண்டும் எனக்கோரி, அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இன்று மாலை கை விட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் அனுராதரபுரத்திற்கு விஜயம் செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்பே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி. சம்பியன் கிண்ணம் -New Zealand won by 4 wickets (with 137 balls remaining

270909n-s.bmpஇன்று ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத்துக்கான பீ பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. பகல், .இரவு ஆட்டமாக இப்போட்டி ஜோஹான்ஸ் பேர்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து அணி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று பீ பிரிவில்  அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

சொந்த மண்ணில் ஏமாற்றிய தென் ஆபிரிக்க அணி பரிதாபமாக வெளியேறி விட்டது. இன்றைய போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தினால் நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை பெறும். ஒருவேளை தோல்வி அடைந்தால் ஓட்ட விகித அடிப்படையில் இலங்கை அரையிறுதி வாய்ப்பை பெறலாம். எனவே இந்தப்போட்டி நியூசிலாந்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததுவோ அதே போல இலங்கைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

England 13/3 (5.1 ov)

New Zealand won the toss and elected to field
ICC Champions Trophy – 10th Match, Group B
Played at New Wanderers Stadium, Johannesburg (neutral venue)
29 September 2009 – day/night (50-over match)
       
 England innings (50 overs maximum)
 England innings
 AJ Strauss*  c †McCullum b Mills  0
 JL Denly  b Bond  5 
 OA Shah  c †McCullum b Bond  3
 PD Collingwood  c Taylor b Elliott  40 
 EJG Morgan†  c Taylor b Butler  9
 RS Bopara  lbw b Bond  30 
 LJ Wright  c †McCullum b Elliott  4
 SCJ Broad  c & b Elliott  1 
 GP Swann  c †McCullum b Elliott  11
 RJ Sidebottom c Taylor b Vettori 20
 JM Anderson not out 4
 Extras (b 4, lb 4, w 9, nb 2) 19

Total (all out; 43.1 overs) 146 (3.38 runs per over)
Fall of wickets1-0 (Strauss, 0.2 ov), 2-10 (Denly, 3.5 ov), 3-13 (Shah, 5.1 ov), 4-50 (Morgan, 18.2 ov), 5-80 (Collingwood, 23.6 ov), 6-90 (Wright, 25.6 ov), 7-95 (Broad, 27.1 ov), 8-109 (Swann, 31.2 ov), 9-117 (Bopara, 34.6 ov), 10-146 (Sidebottom, 43.1 ov)

Bowling
 KD Mills 10 2 19 1
 SE Bond 10 2 21 3
 JEC Franklin 6 0 31 0
 IG Butler 8 1 34 1
 GD Elliott 8 0 31 4
 DL Vettori 1.1 0 2 1

New Zealand innings (target: 147 runs from 50 overs)
 BB McCullum†  c Bopara b Broad  48 
 MJ Guptill  c Swann b Anderson  53 
 NT Broom  c †Morgan b Sidebottom  17 
 LRPL Taylor  c Swann b Broad  1 
 GD Elliott  c †Morgan b Broad  3 
 GJ Hopkins  c †Morgan b Broad  2
 DL Vettori*  not out  10  
 JEC Franklin  not out  2
 Extras (lb 7, w 4) 11     
      
 Total (6 wickets; 27.1 overs) 147 (5.41 runs per over)
Did not bat KD Mills, SE Bond, IG Butler 
Fall of wickets1-84 (McCullum, 12.3 ov), 2-113 (Guptill, 18.4 ov), 3-114 (Taylor, 19.1 ov), 4-118 (Elliott, 21.4 ov), 5-130 (Hopkins, 23.6 ov), 6-140 (Broom, 26.1 ov) 
        
 Bowling
 JM Anderson 10 0 53 1 
 RJ Sidebottom 6 0 32 1
 SCJ Broad 8.1 1 39 4
PD Collingwood 3 0 16 0 

Player of the match GD Elliott (New Zealand)
 

உலகத் தமிழ் மாநாடு ஜுன் இறுதிக்கு ஒத்திவைப்பு

260909tamilnadugovtlogo.jpgஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுவதாக இருந்த ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு ஜூன் மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு தொடர்பான ஆய்வரங்கக் கலந்தாய்வுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கோவையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழறிஞர்களும், ஆய்வாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். எனினும் ஆய்வுக் கட்டுரைகள் தயாரிக்கவும், பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும் கூடுதல் அவகாசம் கிடைத்தால் வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பெரும்பாலானோர் பங்கேற்க வாய்ப்புக் கிடைக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே போதுமான கால அவகாசம் எடுத்துக்கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்கி அளிக்கவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் பெருமளவில் கலந்துகொள்ளவும் வசதியாக 2010 ஜனவரி இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மாநாடு 2010 ஜுன் இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ நடைபெறத் தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்வது எனக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் தேர்தலில் ஏஞ்சலா மேர்கல் வெற்றி

290909jarmani.jpgஜேர்மனில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிபர் ஏஞ்சலா மேர்கலின் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது. 622 பாராளு மன்ற ஆசனங்களில் ஏஞ்சலா மேற்கலின் கிறிஸ்தவக் கட்சி 332 ஆசனங்களை வென்றுள்ளது.

55 வயதுடைய ஏஞ்சலா மேர்கல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். ஏனைய கட்சிகளுடன் கூட்டரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகளில் அவரின் கிஸ்தவக் கட்சி முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏஞ்சலா மேர்கலின் கட்சி 48 வீதமான ஆசனங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானிலுள்ள ஜேர்மன் படைகள் எதிர்கொள்ளும் சங்கடமான சூழல்களால் அதிபர் ஏஞ்சலா மேர்கலின் அரசாங்கம் கடும் விமர்சனங்களுக்குள்ளான போதும் தேர்தலில் எதிர்பார்த்ததைவிட கூடுதலான ஆசனங்களை வென்றுள்ளது.

தேர்தலின் மொத்த முடிவுகள் வெளியான பின்னர் ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்வது பற்றி இறுதி முடிவு எடுக்கப் படவுள்ளது. ஏற்கனவே அரசாங்கத்தில் அங்கம் வகித்த கட்சிகளுடனே மீண்டும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன

ராகுல் காந்திக்கு விடுதலைப் புலிகளால் மிரட்டல் – உளவுத்துறை

29-rahul.jpgவிடுதலைப் புலிகள்  அமைப்பில் எஞ்சியிருப்பவர்கலால் ராகுல் கந்திக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது என இந்திய இணையத்தளமொன்ற செய்தி வெளியிட்டிருந்தது.  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டாலும் கூட, எஞ்சியிருக்கும் புலிகளால், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதாம்.

ராகுல் காந்திக்கும், சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கம் நாட்டிலேயே உயர்ந்தபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மிரட்டல் காரணமாகவே, சமீபத்தில் தமிழகம் வந்திருந்தபோது சாலை மார்க்கமாக ராகுல் காந்தி பயணிக்கவில்லை. மாறாக ஹெலிகாப்டர்களை அதிகம் பயன்படுத்தினார்.

இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பிடமிருந்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் அதிக மிரட்டல்  உள்ளதாம்.

பிரிட்டிஷ் எதிரிகளை இந்தியாவில் தீர்த்துக்கட்ட ஏற்பாடு செய்யும் கூட்டம்

290909family.jpgபிரிட்டனில் வாழும் இந்தியர்கள், உறவுக்காரர்களிலும் தொழில் சகாக்களிலும் தமக்குள்ள எதிரிகளைத் தீர்த்துக்கட்டுவதற்கு, இந்தியா சென்று அங்கு பணத்துக்காக கொலை செய்யும் நபர்களை ஏற்பாடு செய்கிறார்கள் என்பது பிபிசி நடத்திய ஒரு புலனாய்வு செய்திச் சேகரிப்பில் தெரியவந்துள்ளது. இந்த எதிரிகள் பிரிட்டனிலிருந்து இந்திய துணைக்கண்டத்துக்கு செல்லும்போது அங்கே வைத்து கொலை செய்யப்படுகிறார்கள்.

பணத்துக்காக கொலை செய்யும் ஆட்கள் குறைந்த பணத்திற்கே கிடைப்பார்கள் என்பதாலும், மாட்டிக்கொள்கிற ஆபத்து குறைவு என்பதாலும், எதிரிகளை இந்தியாவில் வைத்துத் தீர்த்துக்கட்டுவதை பிரிட்டிஷ் இந்தியர்கள் தெரிவுசெய்கிறார்கள்.

இப்படியான குற்றங்களைச் செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள் என்பது அங்கு அரிதாகவே நடக்கிறது. கடந்த காலங்களில் இவ்வாறாக இந்தியாவில் ஆள் வைத்தது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உள்ளதாக இந்தியாவிலும் பிரிட்டனிலும் இவ்விஷயத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்துவருபவர்கள் நம்புகின்றனர்.

பிரிட்டனில் தீட்டப்பட்டு முக்கியமாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள இப்படியான கொலைச் சதிகளில் கவனிக்கப்படாமல், விஷயம் வெளியில் வராமலேயே சென்றுவிட்டுள்ளன என்று ஆர்வலர்கள் நம்புகின்றனர்.

ஆனால் இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு எண்ணிக்கை என்று கூறும் பஞ்சாப் பொலிசார், தமது பொலிஸ் அணியில் ஊழல் சகஜம் என்ற குற்றச்சாட்டையும் மறுக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல ஐக்கிய ராஜ்ஜிய அதிகாரிகளிடம் உதவிகளை நாடுகின்றனர். பிரிட்டிஷ் பிரஜைகள் கிட்டத்தட்ட ஆறு பேர் தில்லி மற்றும் பஞ்சாப் சென்றபோது காணாமல் போயுள்ளதாய் தற்போது தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக பிரிட்டனின் வெளியுறவுத்துறை அலுவலகம் கூறுகிறது.

கண்ணிவெடிகளின் மேல் அப்பாவிகளை தள்ளிவிட நாம் தயாரில்லை – ஜனாதிபதி

290909mahinda.jpgவன்னியில் அங்குலத்திற்கு அங்குலம் புதைக்கப்பட்டிருக்கும் நிலக் கண்ணி வெடிகளின் மேல் அப்பாவி மக்களைத் தள்ளிவிட நாம் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம், இந்த நாட்டை மீண்டும் அடகு வைப்பதற்கும், ஏலத்தில் விடுவதற்கும் நாம் ஒரு போதுமே இடமளியோம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

ரன்பிம (தங்கபூமி) காணி உறுதி வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இப்போது சிலருக்கு கோஷங்கள் எழுப்புவதற்கு விடயங்கள் இல்லாதிருக்கின்றது. அதனால் கடந்த காலத்தில் யுத்தம், மனித உரிமை குறித்து பேசியவர்கள் இன்று இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாகவும், அவர்களைத் துரிதமாக மீளக்குடியமர்த்துமாறும் கூறுகின்றனர்.

இந்த மக்களைப் புலிப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்தே எமது படை வீரர்கள் மீட்டெடுத்தனர். இம்மக்களைப் பாதுகாத்து அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவர்.

இம்மக்களைப் பராமரிப்பதற்காக நாளாந்தம் கோடிக்கணக்கான ரூபாக்களை செலவிடுவது அவர்களது வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அல்ல. எமக்கு அரசியலை விடவும் மக்களின் உயிர் முக்கியமானது.

அதனால் புலிகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் முழு உலகினதும் எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் அம்மக்களை நாம் விடுவித்தோம். இன்று இம்மக்களுக்காகப் பேசுபவர்கள் இம்மக்களைப் புலிகள் மனித கேடயங்களாகப் பாவித்ததை அன்று சர்வதேச சமூகத்தினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்களா? இல்லை. மாறாக எமக்கு கடனுதவி வழங்க வேண்டாம் என்று வங்கிகளிடமும், ஜி. எஸ். பி. பிளஸ் உதவியை நிறுத்துமாறுமே கூறி வந்தனர்.

அமைச்சர்களின் பாதுகாப்பு செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் : மங்கள சமரவீர

mangala2222.jpg“யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில்,  அமைச்சர்களுக்குப் பாதுகாப்புக்காக 50 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அதிகமான குண்டு துளைக்காத வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறைக்கப்பட வேண்டும்” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் எம்.பியுமான மங்கள சமரவீர தெரிவித்தார். இலங்கையில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பிலும் இதனால் நாட்டில் ஏற்படும் பாதுகாப்பு செலவினம் குறித்தும் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ராஜகிரிய ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி மக்கள் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்ல 2800 பேருக்கு அனுமதி – 5300 ஆக அதிகரிப்பது பற்றி பேச பெளஸி சவூதி விரைவு

இலங்கையில் இருந்து இம்முறை புனித மக்காவுக்கு யாத்திரை செல்வதற்காக 2800 பேருக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்தக் கோட்டா தொகையை 5300 ஆக அதிகரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பானவராகச் செயற்படும் அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி சவூதி அரேபியா சென்றுள்ளதாக முஸ்லிம் சமய விவகார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார்.

ஹஜ் ஏற்பாடு தொடர்பாக அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி கடந்த வெள்ளிக்கிழமை ஹஜ் முகவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன் போது ஹஜ் யாத்திரை தொடர்பிலான பல்வேறு பிரச்சினைகள் கோட்டா தொகை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

இம்முறை இலங்கையில் இருந்து சுமார் 5 ஆயிரம் யாத்திரிகர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா செல்வரென எதிர்பார்ப்பதாக பணிப்பாளர் தெரிவித்தார்.  இம்முறை இலங்கையில் இருந்து செல்ல 2800 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தொகை போதுமானது அல்ல எனவும் இதனால் மேலும் 2500 பேருக்கு மேலதிகமாக அனுமதி பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று தபால் மூல வாக்களிப்பு

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (29) நாளையும் (30) இடம்பெற உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. தென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 31,151 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்குச் சீட்டுகள் யாவும் அரச நிறுவன அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.