பிரிட்டிஷ் எதிரிகளை இந்தியாவில் தீர்த்துக்கட்ட ஏற்பாடு செய்யும் கூட்டம்

290909family.jpgபிரிட்டனில் வாழும் இந்தியர்கள், உறவுக்காரர்களிலும் தொழில் சகாக்களிலும் தமக்குள்ள எதிரிகளைத் தீர்த்துக்கட்டுவதற்கு, இந்தியா சென்று அங்கு பணத்துக்காக கொலை செய்யும் நபர்களை ஏற்பாடு செய்கிறார்கள் என்பது பிபிசி நடத்திய ஒரு புலனாய்வு செய்திச் சேகரிப்பில் தெரியவந்துள்ளது. இந்த எதிரிகள் பிரிட்டனிலிருந்து இந்திய துணைக்கண்டத்துக்கு செல்லும்போது அங்கே வைத்து கொலை செய்யப்படுகிறார்கள்.

பணத்துக்காக கொலை செய்யும் ஆட்கள் குறைந்த பணத்திற்கே கிடைப்பார்கள் என்பதாலும், மாட்டிக்கொள்கிற ஆபத்து குறைவு என்பதாலும், எதிரிகளை இந்தியாவில் வைத்துத் தீர்த்துக்கட்டுவதை பிரிட்டிஷ் இந்தியர்கள் தெரிவுசெய்கிறார்கள்.

இப்படியான குற்றங்களைச் செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள் என்பது அங்கு அரிதாகவே நடக்கிறது. கடந்த காலங்களில் இவ்வாறாக இந்தியாவில் ஆள் வைத்தது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உள்ளதாக இந்தியாவிலும் பிரிட்டனிலும் இவ்விஷயத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்துவருபவர்கள் நம்புகின்றனர்.

பிரிட்டனில் தீட்டப்பட்டு முக்கியமாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள இப்படியான கொலைச் சதிகளில் கவனிக்கப்படாமல், விஷயம் வெளியில் வராமலேயே சென்றுவிட்டுள்ளன என்று ஆர்வலர்கள் நம்புகின்றனர்.

ஆனால் இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு எண்ணிக்கை என்று கூறும் பஞ்சாப் பொலிசார், தமது பொலிஸ் அணியில் ஊழல் சகஜம் என்ற குற்றச்சாட்டையும் மறுக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல ஐக்கிய ராஜ்ஜிய அதிகாரிகளிடம் உதவிகளை நாடுகின்றனர். பிரிட்டிஷ் பிரஜைகள் கிட்டத்தட்ட ஆறு பேர் தில்லி மற்றும் பஞ்சாப் சென்றபோது காணாமல் போயுள்ளதாய் தற்போது தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக பிரிட்டனின் வெளியுறவுத்துறை அலுவலகம் கூறுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    நாட்டுக்குநாடு பொட்டர்கள் இருக்கதான் செய்கிறார்கள்;

    Reply