விடுதலைப் புலிகள் அமைப்பில் எஞ்சியிருப்பவர்கலால் ராகுல் கந்திக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது என இந்திய இணையத்தளமொன்ற செய்தி வெளியிட்டிருந்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டாலும் கூட, எஞ்சியிருக்கும் புலிகளால், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதாம்.
ராகுல் காந்திக்கும், சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கம் நாட்டிலேயே உயர்ந்தபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மிரட்டல் காரணமாகவே, சமீபத்தில் தமிழகம் வந்திருந்தபோது சாலை மார்க்கமாக ராகுல் காந்தி பயணிக்கவில்லை. மாறாக ஹெலிகாப்டர்களை அதிகம் பயன்படுத்தினார்.
இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பிடமிருந்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் அதிக மிரட்டல் உள்ளதாம்.
பல்லி
இது சிறிது கூடுதலான கற்பனைதான்,
இருந்தாலும் பாதுகாப்பாய் இருப்பது தப்பில்லைதான்,
jeeva
தேர்தலுக்கு முன்னதாக ஜோஜ் புஷ் தனது உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சரிடம் ”திரெற் லெவலை” அதிகரிக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தார் என்று அமைச்சர் புத்தகமாக எழுதி இருக்கிறார்.
அதுபோல தமிழ்நாட்டுக்கு வந்து ரஜனி ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், கருணாநிதி எல்லோரையும் குழப்பி காங்கிரஸ் இளைஞர் அணியை வம்பில் மாட்டி விட்டவர் இவர். கதையை திசை திருப்ப இந்தக் கதை! எதுக்கும் அவதானமாக இருங்க. நம்மட கஸ்ரகாலத்துக்கு எதாவது காச்சல் வந்தாலும் எங்கட தலையில தான் வரும்!
thurai
இன்னமும் விடுதலைப்புலிகளா?
ஈழத்தமிழர் விடுதலைக்கும் புலிகளின் அமைப்பிற்கும், புலத்தில் வாழும் புலிகளின் அமைப்புகளிற்கும், ஆதரவாளர்களிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. தமிழரின் அழிவில் வாழ்க்கை நடத்தும் புலத்துத் தமிழர்களிற்கும் அமைப்புகளிற்கும் பெயர் விடுதலையா? உலகத்தை ஏமாற்ரி வாழும் தமிழர்களிற்கு
உற்சாகத்தைக் கொடுப்பது சிங்கள அரசாங்கமும் தமிழ் அரசியல் வாதிகழுமேயாகும்.
அறிவின்மையும், சிந்தனை ஆற்ரலும் அற்ர தமிழினம் உள்ளவரை ஏமாற்ருக்காரரின் கை மேலோங்கியே இருக்கும். அதுவரை புலியின் பெயரும், மிரட்டல்கழும் வாழும்.
துரை