ஜேர்மனில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிபர் ஏஞ்சலா மேர்கலின் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது. 622 பாராளு மன்ற ஆசனங்களில் ஏஞ்சலா மேற்கலின் கிறிஸ்தவக் கட்சி 332 ஆசனங்களை வென்றுள்ளது.
55 வயதுடைய ஏஞ்சலா மேர்கல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். ஏனைய கட்சிகளுடன் கூட்டரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகளில் அவரின் கிஸ்தவக் கட்சி முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏஞ்சலா மேர்கலின் கட்சி 48 வீதமான ஆசனங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானிலுள்ள ஜேர்மன் படைகள் எதிர்கொள்ளும் சங்கடமான சூழல்களால் அதிபர் ஏஞ்சலா மேர்கலின் அரசாங்கம் கடும் விமர்சனங்களுக்குள்ளான போதும் தேர்தலில் எதிர்பார்த்ததைவிட கூடுதலான ஆசனங்களை வென்றுள்ளது.
தேர்தலின் மொத்த முடிவுகள் வெளியான பின்னர் ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்வது பற்றி இறுதி முடிவு எடுக்கப் படவுள்ளது. ஏற்கனவே அரசாங்கத்தில் அங்கம் வகித்த கட்சிகளுடனே மீண்டும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன