தென் மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (29) நாளையும் (30) இடம்பெற உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. தென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 31,151 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்குச் சீட்டுகள் யாவும் அரச நிறுவன அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.