வவுனியா நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழா நேற்று மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.
இங்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஐவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
பிரதான வைபவம் நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா சம்பந்தன் முன்னிலையில் இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
நகர சபைத் தலைவராக முன்மொழியப்பட்ட எஸ். என். ஜி. நாதன் உட்பட உப தலைவர் மு. முகுந்தரதன், ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இ. சிவகுமாரன், செ. சுரேந்திரன், ஐ. கனகசபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் லத்தீப் முனைவர் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற குழுத் தலைவர் சம்பந்தன் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
palli
வாழ்த்துக்கள் நீங்கள் வளர அல்ல,
இனியாவது மக்களுக்கு ஏதும் செய்ய முயற்ச்சி செய்ய, மனதோடு செய்யுங்கள் அந்தமக்கள் வாழட்டும்:
santhanam
எனி வாழ்த்ததான் முடியும் மண்டையில் போடமுடியாதே…….