வடமராட்சிக் கிழக்கு மக்களை மீள்குடியமர்த்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 28ம் திகதி பலாலி படைத்தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. யாழ். மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவும் யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு வடமராட்சிக் கிழக்கு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவது குறித்து ஆராயவுள்ளனர்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களிலும் வேறு பிரதேசங்களிலும் வசித்து வரும் வடமராட்சிக் கிழக்கு மக்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவர் என ஏற்கனவே யாழ். புடைத்ததளபதி வாக்குறுதியளித்திருந்தார். அத்துடன் அரசாங்க அதிபரும் ஏற்கனவே படைத்தளபதியிடம் இவ்விடயம் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில், நடைபெறவுள்ள கலந்துரையாடலில் வடமராட்சிக் கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் குறித்து முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
வடமராட்சிக்கழக்கு மக்கள் பெரும்பாலானவர்கள் கடற்றொலிலாளர்களாவர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து வாழ்வதால் இவர்கள் தொழில் வாய்ப்பின்றி பாதிப்புற்ற நிலையிலுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.