முள்ளி வாய்க்கால் துயரங்களை சித்தரிக்கும், ஓவியங்களை போர் முகங்கள் என்ற தலைப்பில் ஓவியர் புகழேந்தி தமிழகமெங்கும் காட்சிப்படுத்தி வருகின்றார். முதன் முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து வருகின்றது.
சென்னை பிரஞ்சு கலாச்சார நிறுவனமான அலயன்ஸ் பிரான்சிஸ் நிறுவனத்தில் இக் கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.