சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார். தனது குடும்பத்தினருடன் இவர் நேற்றிரவு யாழ்ப்பாணம் வருகை தந்தார். வரும் வழியில் கொடிகாமம் இராமாவில் அகதி முகாமிற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்தார். சுமார் 10 இலட்ச ரூபா பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் உபஉணவுப் பொருட்களையும் அம்மக்களுக்கு வழங்கி அம்மக்கள் மத்தியில உரைநிகழ்த்தினார். பின்னர் மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் சென்ற அவர் இரவுப் பொழுதை யாழ்.நகரில் கழித்தார். மேர்வின் சில்வாவுடன் கண்டி காலதன்னவில சிறீ மகாபத்திரகாளி ஆலய பூசகர் நயம்பதி ஆராச்சிலாகே காமினி ஆனந்தவும் வருகைதந்திருந்தார்.
சமுர்த்தி உத்தியோத்தர் ஒருவரை மரத்துடன் கட்டியதால் பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மேர்வின் சில்வா சனிமாற்றம் காரணமாகவே தனக்கு இந்நிலை ஏற்பட்டது என தெரிவித்திருந்தார். தற்போது யாழ்ப்பாணத்திற்கு பூசகர் ஒருவருடன் வருகை தந்திருக்கும் அவர் ஏதேனும் நேர்த்திகடனுக்காக வந்திருக்கலாம் என தென்னிலங்கை அரசியல் வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.