இன்று காலை போகம்பர சிறைச்சாலை கைதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறிப்பிட்ட கைதி சிறையிலிருந்து தப்பியோட முயற்சித்த வேளை சிறை காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
21
21
மேர்வின் சில்வாவுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையின் போது ஊடகங்கள் சாட்சியமாக பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்று ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போதே கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக நேரடியான முறைப்பாடுகள் எதுவும் கிடைத்திருக்கவில்லை. ஆயினும் ஊடகங்கள் சாட்சியமாக செயற்பட்டிருந்தன. ஒழுக்காற்று விசாரணையின் போது இவை பரிசீலனைக்கு எடுக்கப்படும். விசாரணையின் போது என்ன தீர்மானம் எடுக்கப்படுமோ அச்சமயம் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டவை முக்கியவிடயமாகக் கவனத்திற்கு எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டெங்கு ஒழிப்பு பிரசார நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லையென்ற குற்றச்சாட்டில் சமுர்த்தி அதிகாரி ஒருவரை மரத்துடன் முன்னாள் பிரதியமைச்சர் கட்டிவைத்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அவர் பிரதியமைச்சர் பதவியை இழந்ததுடன், சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை வெளியார் அடாத்தாகக் கைப்பற்றும் நிலைமை எதுவும் கிடையாதென மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். காணி உரிமையுள்ள மக்கள் உண்மையான உறுதிகளுடன் வருவார்களேயானால் அவர்கள் தமது சொந்தக் காணிகளில் குடியமர அனுமதிக்கப்படுவார்களென்றும் அதற்கு எந்தத் தடையும் இல்லையென்றும் அரசாங்க அதிபர் கூறினார்.
தமது சொந்தக் காணியை எவராவது அடாத்தாகக் கைப்பற்றியிருந்தால், பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தின் ஊடாக அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சிக்குத் தென் பகுதியிலிருந்து செல்லும் சிலர் மக்களின் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன், அவ்வாறான தகவல்களோ முறைப்பாடுகளோ தமக்குக் கிடைக்கவில்லையென்றும் குறிப்பிட்டார். கடந்த சமாதான முன்னெடுப்பு காலத்தில் காணிகளை விற்றவர்கள், அதற்கான உரிமை மாற்றத்தைக் காணி உறுதிகளில் மேற்கொள்ளத் தவறியிருக்கிறார்கள். இதனால் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவ்வாறு சிக்கல்களை எதிர் நோக்குபவர்கள் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அரச அதிபர் கூறினார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்தும் இன்னமும் மீளக்குடியமர முடியாமல் முகாமில் தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி வருவதாகக் குறிப்பிட்ட அரச அதிபர், அவர்கள் என்ன காரணத்தினால் மீளக்குடியமர முடியாதுள்ளார்கள் என்பதை ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.
கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முழுமைப் படுத்தப்படாமையினாலும் பாதுகாப்புக் காரணங்களாலும் சில குடும்பங்கள் மீளக்குடியமர்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தவிரவும், கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்துவதற்குத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட அரச அதிபர் தற்போது வெளி மாவட்டங்களில் தங்கியிருந்து மீளவும் வருபவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் கரைச்சி பகுதியில் 70 குடும்பங்கள் மீளக் குடியேறியதாகவும் தெரிவித்தார். கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் தற்போது சொந்த இடம் திரும்பி வருவதாகவும் அவர் சொன்னார்.
கிழக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகளின் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கென 42.3 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்குவதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிரன் தெரிவித்தார்.
அமைச்சர் முரளிதரனின் ஆலோசனைக்கமைய கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்துக்கு இணை யாக அந்த மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடனேயே இந்த 42.3 மில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சேதத்துக்குள்ளான 482 வீடுகளை மீண்டும் புதுப்பிப்பதற்காக 27.3 மில்லியன் ரூபாவும் குழாய்நீர் கிணறுகள், மற்றும் குடிநீர்க் கிணறுகளுக்கென 15 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளது என்றும் கருணா அம்மான் தெரிவித்தார்.
கல்குடா, வாகரை வடக்கு மற்றும் வாகரைமத்தி போன்ற பகுதிகளில் வீடுகளை புனரமைக்கும் திட்டத்துக்கும் போரதீவுபற்று, மண்முனை தென்மேற்கு, மண்முணை மேற்கு, ஏறாவூர்பற்று, கோரளைப்பற்று தெற்கு போன்ற பகுதிகளில் கிணறுகள், குழாய்க்கிணறுகள் திட்டத்துக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் ஊடாக மேற்குறிப்பிடப் பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் பிரதி அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்தார். இதே போன்று கிழக்கில் ஏனைய பகுதிகளிலும் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கும் இவ் வாறான திட்டம் விரைவில் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாடு பூராவும் பாதுகாப்புக் கடவைகள் அற்ற 569 ரயில்வே கடவைகளும் மூங்கில் தண்டுப் படலைகளுடனான 147 புகையிரத கடவைகளும் காணப்படுகின்றன. பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் காரணமாக 2009 ஆம் ஆண்டில் 66 விபத்துகள் நிகழ்ந்துள்ளன என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம கூறினார்.
2009 இல் பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் இடம் பெற்ற விபத்துக்களில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பான புகையிரதக் கடவை வழிகளை அமைப்பதற்கான பல திட்ட ங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புகை யிரதக் கடவைகளில் மின்சார மணிகள் அல்லது தன்னியக்க தடைகள் அமைக் கப்பட்டு வருகின்றன. பிரதானரயில் பாதையில் 11 உம் வடக்கு பாதையில் 7 உம் கரையோரப் பாதையில் 16 உம் புத்தளப் பாதையில் 17 உம் களனிவலி பாதையில் 11 உம் அமைக்கப்படுகின்றன.
வட பகுதியில் தலைமன்னாருக்கான பாதையை மீளமைக்கும் திட்டம், மாத்தறை-பெலியத்த ரயில் பாதை திட்டம் என்பவற்றின் போதும் பாதுகாப்பு கடவை களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.